Today Special Historical Events In Tamil | 18-10 | October 18
October 18 Today Special | October 18 What Happened Today In History. October 18 Today Whose Birthday (born) | October -18th Important Famous Deaths In History On This Day 18/10 | Today Events In History October-18th | Today Important Incident In History | ஐப்பசி 18 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 18-10 | ஐப்பசி மாதம் 18ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 18.10 Varalatril Indru Nadanthathu Enna| October 18 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 18/10 | Famous People Born Today October 18 | Famous People died Today 18-10.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 18-10 | October 18
புனித லூக்கா விழாவாக கொண்டாடப்படுகிறது.
அலாஸ்கா நாளாக கொண்டாடப்படுகிறது. (அலாஸ்கா, அமெரிக்கா)
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (அசர்பைஜான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 18-10 | October 18
320ல் கிரேக்க மெய்யியலாளர் பாப்பசு வலய மறைப்பு ஒன்றை அவதானித்தார்.
1009ல் எருசலேமின் திருக்கல்லறைத் தேவாலயம் என்ற கிறித்தவத் தேவாலயம் கலீபா அல்-அக்கீம் அல்லா என்பவரால் முற்றாக அழிக்கப்பட்டது.
1016ல் அசான்டன் சமருடன் குனூக் த்னது இங்கிலாந்து மீதான படையெடுப்பை முடித்துக் கொண்டான்.
1081ல் டிராச்சியம் நகரில் இடம்பெற்ற போரில் நோர்மானியர் பைசாந்தியரைத் தோற்கடித்தனர்.
1356ல் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பேசெல் நகரம் முற்றாக அழிந்தது.
1565ல் சப்பானுக்கும் மேற்குலத்திற்கும் இடையே முதலாவது கடற் சமர் இடம்பெற்றது. புக்குடா குடாவில் சப்பானின் மத்சூரா கடற்படையினர் போர்த்துக்கீசரின் வணிகக் கப்பல்களைக் கைப்பற்றுவதில் தோல்வியடைந்தனர்.
1648ல் அமெரிக்காவின் முதலாவது தொழிற்சங்கத்தை பாஸ்டன் செம்மார்கள் ஆரம்பித்தனர்.
1679ல் கண்டி அரசனால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் காப்டன் இராபர்ட் நொக்சு அங்கிருந்து தப்பி மன்னார் அரிப்பு என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார்.
1748ல் ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் முடிவுக்கு வந்தது.
1860ல் இரண்டாம் அபினிப் போர் முடிவுக்கு வந்த்து.
1867ல் உருசியப் பேரரசிடம் இருந்து அலாஸ்கா மாநிலத்தை ஐக்கிய அமெரிக்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது. இந்நாள் அலாஸ்கா நாள் எனக் கொண்டாடப்படுகிறது.
1898ல் ஐக்கிய அமெரிக்கா புவெர்ட்டோ ரிக்கோவை எசுப்பானியாவிடம் இருந்து கைப்பற்றியது.
1912ல் முதலாம் பால்கான் போர்: செர்பிய மன்னர் முதலாம் பீட்டர் தனது நாடு போரில் இறங்குகிறது என செர்பிய மக்களுக்கு அறிவித்தார்.
1921ல் சோவியத் ஒன்றியத்தில் கிரிமிய தன்னாட்சி சோவியத் சோசலிசக் குடியரசு அமைக்கப்பட்டது.
1922ல் பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
1929ல் கனடாவில் பெண்களும் மனிதர்கள் என சட்டபூர்வமாக எழுதப்பட்டது.
1944ல் சோவியத் ஒன்றியம் செக்கோசிலோவாக்கியாவை முற்றுகையிட்டு நாட்சி ஜெர்மனியிடம் இருந்து கைப்பற்றியது.
1945ல் வெனிசுவேலாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் அரசுத்தலைவர் இசாயசு மெதினா அங்கரீட்டா பதவியிழந்தார்.
1946ல் இலங்கையில் யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த இரவுத் தொடருந்து அனுராதபுரத்திற்கு அருகாமையில் இரத்மலை என்ற இடத்தில் தடம் புரண்டதில் நால்வர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர்.
1954ல் அமெரிக்காவின் டெக்சாசு இன்ஸ்ட்ருமெண்ட்சு நிறுவனம் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது.
1963ல் பெலிசேட் விண்வெளிக்கு சென்ற முதலாவது பூனை என்ற பெயரைப் பெற்றது.
1967ல் சோவியத் விண்கலம் வெனேரா 4 வெள்ளிக் கோளை அடைந்தது. வேறொரு கோளின் வளிமண்டலத்தை அளந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
1991ல் அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்து விலகியது.
1991ல் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது.
2004ல் சந்தனக் கடத்தல் வீரப்பன் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.
2006ல் ஈழப்போர்: காலி கடற்படைத்தளத்தில் கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் பல கடற்படைக் கலங்கள் அழிக்கப்பட்டன.
2007ல் கராச்சியில் முன்னாள் பாக்கித்தான் பிரதமர் பெனசீர் பூட்டோ மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 139 பேர் கொல்லப்பட்டனர், 450 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பூட்டோ காயமெதுவுமின்றி தப்பினார்.
2011ல் ஐந்தாண்டுகள் அமாசின் கைதியாக இருந்த இசுரேலிய இராணுவ வீரர் கிலாத் சாலித் விடுவிக்கப்பட்டார்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 18-10 | October 18
1130ல் சீன மெய்யியலாளரான சூ சி பிறந்த நாள். (இறப்பு-1200)
1859ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மெய்யியலாளரான என்றி பெர்குசன் பிறந்த நாள். (இறப்பு-1941)
1882ல் தமிழக புல்லாங்குழல் கலைஞரான பல்லடம் சஞ்சீவ ராவ் பிறந்த நாள். (இறப்பு-1962)
1910ல் இலங்கை அரசியல்வாதியான வி. நவரத்தினம் பிறந்த நாள். (இறப்பு-2006)
1915ல் இலங்கைத் துடுபாட்ட வீரரான மகாதேவன் சதாசிவம் பிறந்த நாள். (இறப்பு-1977)
1925ல் இந்திய அரசியல்வாதியான நா. த. திவாரி பிறந்த நாள். (இறப்பு-2018)
1950ல் இந்திய நடிகரான ஓம் பூரி பிறந்த நாள். (இறப்பு-2017)
1952ல் இலங்கைத் துடுப்பாளரான ரோய் டயஸ் பிறந்த நாள்.
1956ல் செக்-அமெரிக்க டென்னிசு வீராங்கனையான மார்ட்டினா நவரத்திலோவா பிறந்த நாள்.
1960ல் பெல்சிய நடிகரான ஜான் குளோட் வான் டாம் பிறந்த நாள்.
1965ல் இந்திய இசுலாமிய மதகுருவான சாகிர் நாயக் பிறந்த நாள்.
1973ல் அமெரிக்க ஊடகவியலாளரான ஜேம்ஸ் ஃபோலி பிறந்த நாள். (இறப்பு-2014)
1974ல் இந்திய நூலாசிரியரான அமீஷ் திரிபாதி பிறந்த நாள்.
1978ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான ஜோதிகா பிறந்த நாள்.
1978ல் தமிழகத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகரும் ஊடகவியலாளருமான செந்தில் குமார் பிறந்த நாள்.
1984ல் இந்திய நடிகையான பிரீடா பின்டோ பிறந்த நாள்.
1987ல் அமெரிக்க நடிகரான சாக் எப்ரான் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 18-10 | October 18
1417ல் திருத்தந்தையான பன்னிரண்டாம் கிரகோரி இறப்பு நாள். (பிறப்பு-1326)
1775ல் இத்தாலிய கிறித்தவ புனிதரும் திருப்பாடுகள் சபை நிறுவனருமான சிலுவையின் புனித பவுல் இறப்பு நாள். (பிறப்பு-1694)
1871ல் ஆங்கிலேயக் கணிதவியலாளரும் பொறியியலாளருமான சார்ல்ஸ் பாபேஜ் இறப்பு நாள். (பிறப்பு-1791)
1931ல் கிராமபோனைக் கண்டுபிடித்த அமெரிக்கரான தாமசு ஆல்வா எடிசன் இறப்பு நாள். (பிறப்பு-1847)
1934ல் நோபல் பரிசு பெற்ற எசுப்பானிய மருத்துவரான சான்டியாகோ ரமோன் கசல் இறப்பு நாள். (பிறப்பு-1852)
1966ல் கனடிய-அமெரிக்க தொழிலதிபரான எலிசபெத் ஆர்டன் இறப்பு நாள். (பிறப்பு-1878)
1985ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான கே. ஆர். ராம்சிங் இறப்பு நாள். (பிறப்பு-1915)
2004ல் சந்தனக் கடத்தல்காரரான வீரப்பன் இறப்பு நாள். (பிறப்பு-1952)
2015ல் விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவியான தமிழினி இறப்பு நாள். (பிறப்பு-1972)
2018ல் இந்திய அரசியல்வாதியான நா. த. திவாரி இறப்பு நாள். (பிறப்பு-1925)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan