Today Special Historical Events In Tamil | 19-10 | October 19
October 19 Today Special | October 19 What Happened Today In History. October 19 Today Whose Birthday (born) | October -19th Important Famous Deaths In History On This Day 19/10 | Today Events In History October-19th | Today Important Incident In History | ஐப்பசி 19 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 19-10 | ஐப்பசி மாதம் 19ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 19.10 Varalatril Indru Nadanthathu Enna| October 19 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 19/10 | Famous People Born Today October 19 | Famous People died Today 19-10.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 19-10 | October 19
சிலுவையின் புனித பவுல் திருவிழா நாளாக கொண்டாடப்படுகிறது.
அன்னை தெரேசா நாளாக கொண்டாடப்படுகிறது. (அல்பேனியா)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 19-10 | October 19
கிமு 202ல் சாமா நகரப் போரில், உரோமைப் படையினர் கார்த்திச் நகரக் காவலர்களின் தலைவர் அனிபாலை வென்றனர்.
1216ல் இங்கிலாந்தின் ஜான் மன்னர் இறக்க, அவரது ஒன்பது வயது மகன் மூன்றாம் என்றி ஆட்சிக்கு வந்தான்.
1453ல் பிரான்சியர்கள் பொர்தோ நகரைக் கைப்பற்றியதுடன் நூறாண்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1469ல் அரகொன் நாட்டு இளவரசன் இரண்டாம் பேர்டினண்டுக்கும் காஸ்டில் நாட்டின் இளவரசி முதலாம் இசபெல்லாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர் 1516 இல் எசுப்பானியா நாடு ஒருங்கிணைக்கப்பட வழிகோலியது.
1596ல் சான் பிலிப் என்ற எசுப்பானியக் கப்பல் சப்பான் கரையில் மூழ்கியது.
1781ல் வர்ஜீனியா, யோர்க்டவுன் நகரில் பிரித்தானியத் தளபதி கார்ன்வாலிசு பிரபுவின் பிரதிநிதிகள் சியார்ச் வாசிங்டனிடம் சரணடைந்தனர்.
1805ல் நெப்போலியப் போர்கள்: ஊல்ம் நகர சமரில் ஆஸ்திரியாவின் தளபதி மாக்கின் இராணுவம் நெப்போலியன் பொனபார்ட்டிடம் சரணடைந்தது. 30,000 கைதிகள் கைப்பற்றப்பட்டனர், 10,000 இறந்தனர்.
1812ல் பிரான்சின் நெப்போலியன் பொனபார்ட் மாஸ்கோவில் இருந்து பின்வாங்கினான்.
1813ல் செருமனியின் லைப்சிக் நகரில் நெப்போலியன் பொனபார்ட் பெரும் தோல்வியடைந்தான். ரைன் கூட்டமைப்பு முடிவுக்கு வந்தது.
1864ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் கனடாவில் இருந்து வேர்மொண்ட் மாநிலத்தின் சென் அல்பான்ஸ் நகரைத் தாக்கினர்.
1866ல் ஆஸ்திரியா வெனிட்டோ, மாந்துவா ஆகியவற்றை பிரான்சிடம் கையளித்தது. பிரான்சு உடனடியாகவே அவற்றை இத்தாலியிடம் கொடுத்தது.
1900ல் மேக்ஸ் பிளாங்க் கரும்பொருள் கதிரியல் விதியை (பிளாங்கின் விதி) கண்டுபிடித்தார்.
1912ல் இத்தாலி திரிப்பொலி நகரை உதுமானியரிடம் இருந்து கைப்பற்றியது.
1921ல் லிஸ்பன் நகரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து போர்த்துக்கல் பிரதமர் அந்தோனியோ கிராஞ்சோ உட்படப் பல அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர்.
1935ல் எதியோப்பியாவை இத்தாலி கைப்பற்றியதை அடுத்து உலக நாடுகளின் கூட்டணி இத்தாலி மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.
1943ல் 2,098 இத்தாலிய போர்க் கைதிகளுடன் சென்ற சின்ஃபிரா என்ற சரக்குக் கப்பல் கிரீட் நகரில் சௌதா குடாவில் கூட்டுப் படையினரால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
1943ல் காச நோய்க்கான இசுட்ரெப்டோமைசின் என்ற முதலாவது நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்து இரட்கர்சு பல்கலைக்கழகத்தில் பிரித்தெடுக்கப்பட்டது.
1944ல் இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்சில் தரையிறங்கின.
1944ல் குவாத்தமாலாவில் பத்தாண்டுகள் நீடித்த இராணுவப் புரட்சி ஆரம்பமானது.
1950ல் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தினர் திபெத்தின் காம்டோ நகரைக் கைப்பற்றினர்.
1950ல் சீனா கொரியப் போரில் இணைந்தது. பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் ஐநா படைகளை எதிர்க்க யாலு ஆற்றைத் தாண்டினர்.
1954ல் சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது.
1956ல் சோவியத் ஒன்றியமும் யப்பானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் 1945 ஆகத்து முதல் இரு நாடுகளுக்குமிடையே நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்தது.
1960ல் பனிப்போர்: அமெரிக்கா கம்யூனிசக் கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்தது.
1974ல் நியுவே நியூசிலாந்திடமிருந்து விடுதலைப் பெற்று சுயாட்சி மண்டலமாகியது.
1976ல் சிம்பன்சி உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது.
1983ல் கிரெனாடாவில் அக்டோபர் 14 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் பிரதமர் மோரிஸ் பிசொப் படுகொலை செய்யப்பட்டார்.
1986ல் மொசாம்பிக் அதிபர் சமோரா மேச்சல் உட்பட 33 பேர் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.
1987ல் அமெரிக்கக் கடற்படை பாரசீக வளைகுடாவில் இரண்டு ஈரானிய எண்ணெய்க் குதங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
1988ல் பிரித்தானிய அரசு சின் பெயின் மற்றும் அயர்லாந்து துணை இராணுவக் குழுக்கள் மீது வானொலி, தொலைக்காட்சித் தடை விதித்தது.
2000ல் பிபிசியின் யாழ்ப்பாண நிருபர் நிமலராஜன் துணை இராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்.
2001ல் 400 அகதிகளை ஏற்றிச் சென்ற இந்தோனேசியப் படகு கிறிஸ்துமஸ் தீவில் கவிழ்ந்ததில் 146 சிறுவர்கள், 142 பெண்கள் உட்பட 353 பேர் உயிரிழந்தனர்.
2003ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அன்னை தெரேசாவை முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்.
2005ல் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக சதாம் உசைனுக்கு எதிரான வழக்கு பக்தாதில் தொடங்கியது.
2009ல் தமிழ்நாதம், புதினம் ஆகிய ஈழச்சார்பு இணையத்தளங்கள் நிறுத்தப்பட்டன.
2013ல் புவெனஸ் ஐரிஸ் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 105 பேர் உயிரிழந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 19-10 | October 19
1862ல் பிரான்சியத் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளர்ருமான அகுஸ்தே லூமியேர் பிறந்த நாள். (இறப்பு-1954)
1888ல் நாமக்கல் கவிஞரான வெ. இராமலிங்கம் பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1972)
1895ல் அமெரிக்க வரலாற்றாளரும் மெய்யியலாளருமான லூயிசு மம்ஃபோர்டு பிறந்த நாள். (இறப்பு-1990)
1910ல் நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்க இயற்பியலாளரான சுப்பிரமணியன் சந்திரசேகர் பிறந்த நாள். (இறப்பு-1995)
1913ல் பிரேசில் கவிஞரான வினிசியசு டி மோரேசு பிறந்த நாள். (இறப்பு-1980)
1917ல் இந்தியக் கணிதவியலாளரான சரத்சந்திர சங்கர் சிறீகாந்த் பிறந்த நாள்.
1919ல் தமிழக அரசியல்வாதியான மன்னை நாராயணசாமி பிறந்த நாள்.
1924ல் வங்காள மொழிக் கவிஞரான நரேந்திர சக்ரவர்த்தி பிறந்த நாள். (இறப்பு-2018)
1931ல் ஆங்கிலேய உளவுப்புனைவு எழுத்தாளரான ஜான் லே காரே பிறந்த நாள்.
1942ல் அமெரிக்கத் தொழிலதிபரும் முதலீட்டாளரும் நூலாசிரியருமான ஜிம் ரோஜர்ஸ் பிறந்த நாள்.
1945ல் நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டிய-அமெரிக்க பொருளியலாளரான ஆங்கசு டீட்டன் பிறந்த நாள்.
1946ல் தமிழக அரசியல்வாதியான ரா. தாமரைக்கனி பிறந்த நாள். (இறப்பு-2005)
1955ல் ருவாண்டா அரசியல்வாதியும் இனப்படுகொலைக் குற்றவாளியுமான ஜீன் கம்பாண்டா பிறந்த நாள்.
1956ல் தமிழகத் தமிழறிஞரும் பேச்சாளரும் எழுத்தாளரும் நடிகருமான கு. ஞானசம்பந்தன் பிறந்த நாள்.
1961ல் இந்திய நடிகரான சன்னி தியோல் பிறந்த நாள்.
1962ல் நவஈழத்துத் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ரத்தினம் கேசவராஜன் பிறந்த நாள். (இறப்பு-2021)
1976ல் தென் கொரிய விண்வெளி வீரரான கோ சன் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 19-10 | October 19
1216ல் இங்கிலாந்து மன்னரான ஜான் இறப்பு நாள். (பிறப்பு-1167)
1745ல் அயர்லாந்து எழுத்தாளரான ஜோனதன் ஸ்விப்ட் இறப்பு நாள். (பிறப்பு-1667)
1867ல் பிரித்தானிய வானியலாளரான ஜேம்சு சவுத் இறப்பு நாள். (பிறப்பு-1785)
1936ல் சீன எழுத்தாளரான லூ சுன் இறப்பு நாள். (பிறப்பு-1881)
1937ல் நோபல் பரிசு பெற்ற நியூசிலாந்து-ஆங்கிலேய வேதியியலாளரான எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு இறப்பு நாள். (பிறப்பு-1871)
1950ல் அமெரிக்கக் கவிஞரான எட்னா செயிண்ட். வின்சென்ட் மில்லாய் இறப்பு நாள். (பிறப்பு-1892)
2000ல் யாழ்ப்பாண பிபிசி செய்தியாளரான நிமலராஜன் இறப்பு நாள்.
2001ல் இந்திய பொருளியல் வரலாற்றாசிரியரும் நூலாசிரியருமான தர்மா குமார் இறப்பு நாள். (பிறப்பு-1928)
2006ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான ஸ்ரீவித்யா இறப்பு நாள். (பிறப்பு-1953)
2011ல் இந்திய எழுத்தாளரான காக்கநாடன் இறப்பு நாள். (பிறப்பு-1935)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan