திருக்குறள் 1330 தமிழ் Thirukkural in Tamil திருக்குறள் தமிழ் Thirukkural 1330 Kural

திருக்குறள் 1330 தமிழ் : திருக்குறள் (Thirukkural in Tamil) எனக் குறிப்பிடப்படுவது (Thirukkural in Tamil) புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். திருக்குறளை இயற்றியவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். ஆவார் என்பது உண்மையாகும். திருக்குறள் நூலானது திருவள்ளுவனின் தற்சிந்தனை அடிப்படையில் தமிழ் மொழியில் இயற்றப்பட்டது என்பது தமிழுக்கு கிடைத்த பெருமையே ஆகும்.

Thirukkural in Tamil | Thiruvalluvar in Tamil | Thiruvalluvar Statue | thiruvalluvar biography in tamil

“தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்”

Thirukkural Story in Tamil | Thiruvalluvar Valkkai Varalaru, Thirukkural in Tamil Story, MP3 and PDF, Thiruvalluvar Statue

என்னும் கவிஞர் பாரதிதாசனின் கவி வரிகளுக்கு (Thirukkural Thiruvalluvar) அமைவாக தமிழை உயிர் மூச்சாகக் கொண்ட ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் ஒர் வரலாறு படைத்து, பார் போற்றும் ஒர் தெய்வப் புலவனாக எம் உயிருடன் உயிராக கலந்து விட்ட திருக்குறள் என்னும் புகழ் பெற்ற குறள் வெண்பாவை தமிழுக்கும் தமிழனுக்கும் விட்டு சென்ற என் பொய்யாமொழிப் புலவனாரை என்னென்று புகழ்வேன் என் உயிரே. குழந்தைக்கு உயிரான உணவாக தன் பாலை கொடுத்து தமிழையும் சேர்த்தூட்டிய என் தமிழ்த்தாயின் தமிழ் பாலை குடித்ததால் தமிழுக்கு படைத்தாரோ வள்ளுவர் இந்த முப்பால் என்னும் பெரும் படைப்பை.

திருவள்ளுவர் (Thiruvalluvar)

திருக்குறள் 1330 தமிழ், Thirukkural in tamil

Thiruvalluvar 1330 thirukkural songs: திருக்குறள் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகிய மூன்று பால்களை

திருவள்ளுவரால் இயற்றப்பட்ட‌ திருக்குறளானது உலகப் புகழ் பெற்ற இலக்கியங்களுள் ஒன்றாகும். திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் “முப்பால்” என்னும் பெயரோடு விளங்குகின்றது. திருக்குறள் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகிய மூன்று பால்களை கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்று விளங்குகின்றது. இது மிகச்சிறந்த‌ ஒரு வாழ்வியல் நூலாகும். மக்கள் தங்களின் அக மற்றும் புற வாழ்வில் இன்பத்துடனும், நலமுடனும் சுமூகமாக கூடி வாழ தேவையான அடிப்படைப் பண்புகளை எடுத்துரைப்பதாக விளக்குகிறது. திருக்குறளானது கடவுள் தொடங்கி காமம் வரை அனைத்தையும் உள்ளடங்கலாக கொண்டுள்ளது.

Thiruvalluvar Day, Thiruvalluvar Year, Thiruvalluvar Quotes, Thiruvalluvar Images, Thiruvalluvar Picture

மாந்தர்களுடைய‌ வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திறம்பட‌ திருக்குறள் கூறுவதால் அதற்கு சிறப்பு பெயர்கள் பல உள்ளன அவை : திருக்குறள், பொய்யாமொழி, உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, முப்பால், தமிழ் மறை, ஈரடி நூல், வான்மறை, வாயுறை வாழ்த்து, திருவள்ளுவம் என்ற பெயர்களை பெற்று விழங்குகின்றது. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் “உலகப் பொது மறை” என்றும் பெருமையாக‌ அழைக்கப்படுகிறது.

திருவள்ளுவர் பற்றிய முழுமையான வாழ்க்கை வரலாறு தமிழில்

முப்பால்களாகிய அறம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களை தன்னகத்தே கொண்டதாக விளங்குவதுடன் ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களை தன்னுள் அடக்கியுள்ளது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை என்பதனால் “குறள்’ என்றும் அதன் உயர்வு கருதி “திரு” என்ற அடைமொழியுடன் “திருக்குறள்” என்றும் இது பெயர் பெற்றது. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் திருக்குறள் மட்டுமே என்னும் பெருமையையும் இது பெற்றுள்ளது.

Thirukkural Thiruvalluvar:

திருக்குறளானது 133 அதிகாரங்களுங்களுடன் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பத்து குறள்கள் என்று மொத்தம் 1330 குறள்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இதன் பாட்டுக்களை எல்லா சார்பு மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் பாக்களின் விளக்க உரையினை கற்றறிந்த பலர் விளக்கி கூறி பொருள் படும் வகையில் எமக்கு தந்துள்ளனர். அந்த வகையில் பல மொழிகளில் பலரால் விளக்கங்கள் கூறப்பட்டாலும் பெரிதும் பயன்பாட்டில் உள்ளது இவர்களின் பொருள் விளக்கங்களாகும்.

Thiruvalluvar Temple Mylapore : திருவள்ளுவர் கோயில் மயிலாப்பூர்

Temple Mylapore valluvar

அந்த‌ வகையில் தமிழில்: திரு பரிமேலழகர், திரு மு.வரதராசனார், திரு மணக்குடவர், திரு மு.கருணாநிதி, திரு சாலமன் பாப்பையா, திரு வீ.முனிசாமி என்பவர்களும்..

ஆங்கிலத்தில்: Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew, Rev. John Lazarus, Mr F. W. Ellis என்பவர்களும் பொழிப்பு கூறி இருப்பது சிறப்பாகும்.

திருக்குறள் என்னும் பெரும் படைப்பின் நூற் பிரிவுகள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் பெரும் பிரிவில் அமைக்கப்பட்டுள்ளது.

அறத்துப்பாலானது பாயிரவியல் என்னும் பிரிவில் நான்கு அதிகாரங்களுடனும், இல்லறவியல் என்னும் பிரிவில் இருபது அதிகாரங்களும், துறவறவியல் என்னும் பிரிவின் கீழ் பதின்மூன்று அதிகாரங்களும் இறுதியாக ஊழியல் என்னும் பிரிவில் ஊழ் எனும் ஒரு அதிகாரமும் உள்ளடங்கலாக அமைக்கப்பட்டுள்ளது.

பொருட்பாலானது அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் உள்ளடங்கலாக அரசு இயல் எனும் பிரிவில் இருபத்துஐந்து அதிகாரங்களும், அமைச்சு இயலில் முப்பத்தி இரண்டு அதிகாரங்களும் அதாவது அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல் மற்றும் நட்பியல் எனும் பிரிவுகளில் உள்ளடங்கலாக கொண்டுள்ளது. ஒழிபு இயலாகிய குடியியலில் பதின் மூன்று அதிகாரங்களும் கொண்டுள்ளது.

திருவள்ளுவர் கற்சிலை, திருவள்ளுவர் வரலாறு, திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு, திருவள்ளுவர் பிறந்த ஆண்டு, திருவள்ளுவர் இறப்பு.

கடைசிப்பாலாகிய “இன்பத்துப்பால்” அல்லது “காமத்துப்பாலில்” களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்களாக உள்ளன. அவற்றில் களவியலில் ஏழு அதிகாரங்களும் கற்பியலில் பதினெட்டு அதிகாரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Thirukkural / Thiruvalluvar: ஆகமொத்தம் திருக்குறளை ஒன்பது இயல்களும் 133 அதிகாரங்களில் 1330 பாடல்களில் மொத்தமாக‌ 14000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார் என்பது சிறப்பம்சமாகும்.

திருக்குறள் ஓலைச்சுவடி. Palm Leaf Manuscripts of The Tirukkural

Thirukkural in tamil oolaisuvadi

திருக்குறளின் அதிகாரங்கள் மற்றும் அதன் அமைப்புக்களை கூட்டி வரும் எண் அமைப்பானது ஏழு (7) எனும் எண்ணுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இது தற்செயலாக நடைபெற்றதா? இல்லையா? என்பது பற்றி இன்றுவரை ஆய்வாளர்கள் ஆராய்ந்தும் எதனையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

திருக்குறளில் “தமிழ்” என்ற சொல் எங்கேயும் பயன்படுத்தப்படவில்லை என்பது இன்றுவரை ஆச்சரியமான ஒன்றாக‌ உள்ளது. திருக்குறளின் முதல் பெயர் முப்பால் என்பதாகும். திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் மொத்த எண்ணிக்கை 133 ஆகும். அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை 380. பொருட்பாலில் உள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை 700. காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை 250. மொத்த குறட்பாக்களின் எண்ணிக்கை 1330. குறள்பா அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது. ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால் ஆக்கப்பட்டு ஏழு சீர்களை கொண்டதாக உள்ளது. திருக்குறளில் உள்ள மொத்த‌ சொற்களின் எண்ணிக்கை 14,000 ஆகும். மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 42,194 ஆகும்.

தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் குறளில் இடம் பெறவில்லை. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து ஒள ஆகும். திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை குன்றிமணி மட்டுமே. ஒரே பழம் நெருஞ்சிப்பழம் மட்டுமே. குறளில் இடம்பெறும் இருமலர்கள் அனிச்சம் மற்றும் குவளை ஆகும். பனை மற்றும் மூங்கில் ஆகிய இரண்டு மரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன‌ . இருமுறை வரும் ஒரே அதிகாரம் “குறிப்பறிதல்”.

அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரெழுத்து “னி” ஆகும். இது “1705” தடவைகள் வருகின்றது. ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது “பற்று” ஆகும் இது ஆறு முறை வருகின்றது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்களாக “ளீ,ங” உள்ளன‌. திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் தமிழ் மற்றும் கடவுள் ஆகும் ஆனால் ஆதி பகவன் என்னும் சொல் கடவுளை குறிக்கிறது.

Thirukkural in tamil, Thiruvalluvar Death Date, திருக்குறள் தமிழ் திருவள்ளுவர் பற்றிய குறிப்புகள்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்டது 1812ம் ஆண்டு. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் தஞ்சையை சேர்ந்த‌ ஞானப்பிரகாசர் ஆவார். முதன் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர் என்றால் மிகையாகாது. உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் பரிமேலழகர் போற்றப்படுகிறார். முதன் முதலில் ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்தவர் ஜி.யு,போப் ஆவார். ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர். திருக்குறளானது நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது சிறப்பாகும். திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் ஒன்பது என்பது ஆச்சரியமாக உள்ளது.

கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது. எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் மட்டும் இடம்பெற்றுள்ளது. ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. இதுவரை 107 மொழிகளில் திருக்குறள் வெளிவந்துள்ளது. திருக்குறளில் முக்கியத்துவம் பெறும் எண் ஏழு ஆகும்.

1330 thirukkural thiruvalluvar

திருக்குறளில் திருவள்ளுவர் தனது காலத்திற்குறிய இலக்கிய மரபுகளை மீறியுள்ளதை எம்மால் இன்று வரை வியப்புடன் பார்க்க முடிகிறது. எந்தவொரு இடத்திலும் ஒரு இனத்தையோ அல்லது சாதியையோ, மதத்தையோ அல்லது மதப்பிரிவையோ, அரசையோ அல்லது ஆளும் வர்க்கத்தையோ அவர் குறிப்பிடவில்லை. யாரையும் உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ பேசவில்லை என்பது குறளின் மிகப்பெரிய சிறப்பம்சமாக காணப்படுகிறது.

திருக்குறள் தமிழ் நூலாக இருந்தாலும் தமிழ் என்ற சொல்லை குறள் நூலில் எங்கேயும் காணமுடியவில்லை. தமிழ் நூல் எனும் பெருமையை தவிர்த்து யாரும் தனி உரிமம் கூறமுடியவில்லை. தலைமகன் இல்லாதா நீதி நூல் என்றும் குறளை வகைப்படுத்தமுடியும். இருப்பினும் திருக்குறளின் அழியாப்புகழ் தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் மாத்திரம் சொந்தம் என்றால் மிகையல்ல.

இவ்வாறாக பல சிறப்பம்சங்களை கொண்டதாக திருக்குறள் விளங்குகின்றது.

1812 இல் முதன்முதலாக திருக்குறள் அச்சிடப்பட்டது.

thiruvalluvar statue history

அறத்துப்பால் (1-38)

பாயிரம்

 1. கடவுள் வாழ்த்து (Thirukkural Kadavul Vazhthu Chapter-1)
 2. வான் சிறப்பு (Thirukkural Vaan Sirappu Chapter-2)
 3. நீத்தார் பெருமை (Thirukkural Neethar Perumai Chapter-3)
 4. அறன் வலியுறுத்தல் (Thirukkural Aran Valiyuruthal Chapter-4)

இல்லறவியல்

 1. இல்வாழ்க்கை (Thirukkural Il Vazhkai Chapter-5)
 2. வாழ்க்கைத் துணைநலம் (Thirukkural Vazhkai Thunai Nalam Chapter-6)
 3. மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல் (Thirukkural Makkatperu Chapter-7)
 4. அன்புடைமை (Thirukkural Anbudaimai Chapter-8)
 5. விருந்தோம்பல் (Thirukkural Virunthombal Chapter-9)
 6. இனியவை கூறல் (Thirukkural Iniyavai Kooral Chapter-10)
 7. செய்ந்நன்றி அறிதல் (Thirukkural Seinandri Arithal Chapter-11)
 8. நடுவுநிலைமை (Thirukkural Naduvu Nilamai Chapter-12)
 9. அடக்கம் உடைமை (Thirukkural Adakkam Udaimai Chapter-13)
 10. ஒழுக்கம் உடைமை (Thirukkural Ozhukkam Udaimai Chapter-14)
 11. பிறன் இல் விழையாமை (Thirukkura Piranil Vizhayamai Chapter-15)
 12. பொறை உடைமை (Thirukkural Porai Udaimai Chapter-16)
 13. அழுக்காறாமை (Thirukkural Azhukkaaraamai Chapter-17)
 14. வெஃகாமை (Thirukkural Vegamai Chapter-18)
 15. புறங்கூறாமை (Thirukkural Purankooramai Chapter-19)
 16. பயனில சொல்லாமை (Thirukkural Payanila Sollamai Chapter-20)
 17. தீவினை அச்சம் (Thirukkural Theevinai Acham Chapter-21)
 18. ஒப்புரவு அறிதல் (Thirukkural Oppuravaridhal Chapter-22)
 19. ஈகை (Thirukkural Eegai Chapter-23)
 20. புகழ் (Thirukkural Pugazh Chapter-24)

துறவறவியல்

 1. அருள் உடைமை (Thirukkural Arul Udamai Chapter-25)
 2. புலால் மறுத்தல் (Thirukkural Pulal Maruthal Chapter-26)
 3. தவம் (Thirukkural Thavam Chapter-27)
 4. கூடா ஒழுக்கம் (Thirukkural Kooda Ozhukkam Chapter-28)
 5. கள்ளாமை (Thirukkural Kallamai Chapter-29)
 6. வாய்மை (Thirukkural Vaaimai Chapter-30)
 7. வெகுளாமை (Thirukkural Vegulamai Chapter-31)
 8. இன்னா செய்யாமை (Thirukkural Inna Seiyamai Chapter-32)
 9. கொல்லாமை (Thirukkural Kollamai Chapter-33)
 10. நிலையாமை (Thirukkural Nilaiyamai Chapter-34)
 11. துறவு (Thirukkural Thuravu Chapter-35)
 12. மெய் உணர்தல் (Thirukkural Mei Unarthal Chapter-36)
 13. அவா அறுத்தல் (Thirukkural Avaa Aruththal Chapter-37)

ஊழியல்

 1. ஊழ் (Thirukkural Oozh Chapter-38)

பொருட்பால் (39-108)

அரசியல்

 1. இறைமாட்சி (Thirukkural Iraimaatchi Chapter-39)
 2. கல்வி (Thirukkural Kalvi Chapter-40)
 3. கல்லாமை (Thirukkural Kallamai Chapter-41)
 4. கேள்வி (Thirukkural Kelvi Chapter-42)
 5. அறிவுடைமை (Thirukkural Arivudaimai Chapter-43)
 6. குற்றம் கடிதல் (Thirukkural Kuttram Kadithal Chapter-44)
 7. பெரியாரைத் துணைக்கோடல் (Thirukkural Periyarai Thunai Kodal Chapter-45)
 8. சிற்றினம் சேராமை (Thirukkural Sitrinam Seramai Chapter-46)
 9. தெரிந்து செயல்வகை (Thirukkural Therinthu Seyalvagai Chapter-47)
 10. வலி அறிதல் (Thirukkural Vali Arithal Chapter-48)
 11. காலம் அறிதல் (Thirukkural Kaalam Arithal Chapter-49)
 12. இடன் அறிதல் (Thirukkural Idanarithal Chapter-50)
 13. தெரிந்து தெளிதல் (Thirukkural Therinthu Thelithal Chapter-51)
 14. தெரிந்து வினையாடல் (Thirukkural Therinthu Vinaiyadal Chapter-52)
 15. சுற்றம் தழால் (Thirukkural Sutram Thazhal Chapter-53)
 16. பொச்சாவாமை (Thirukkural Pochavamai Chapter-54)
 17. செங்கோன்மை (Thirukkural Sengonmai Chapter-55)
 18. கொடுங்கோன்மை (Thirukkural Kodungonmai Chapter-56)
 19. வெருவந்த செய்யாமை (Thirukkural Veruvanda Seiyamai Chapter-57)
 20. கண்ணோட்டம் (Thirukkural Kannottam Chapter-58)
 21. ஒற்றாடல் (Thirukkural Otradal Chapter-59)
 22. ஊக்கம் உடைமை (Thirukkural Ukkam Udaimai Chapter-60)
 23. மடி இன்மை (Thirukkural Madiyinmai Chapter-61)
 24. ஆள்வினை உடைமை (Thirukkural Aalvinai Udaimai Chapter-62)
 25. இடுக்கண் அழியாமை (Thirukkural Idukkan Azhiyamai Chapter-63)

அமைச்சு இயல்

அமைச்சியல்

 1. அமைச்சு (Thirukkural Amaichu Chapter-64)
 2. சொல்வன்மை (Thirukkural Solvanmai Chapter-65)
 3. வினைத்தூய்மை (Thirukkural Vinai Thuimai Chapter-66)
 4. வினைத்திட்பம் (Thirukkural Vinaithitpam Chapter-67)
 5. வினை செயல்வகை (Thirukkural Vinai Seyal Vagai Chapter-68)
 6. தூது (Thirukkural Thoothu Chapter-69)
 7. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (Thirukkural Mannarai Sernthozhudhal Chapter-70)
 8. குறிப்பு அறிதல் (Thirukkural Kurippu Arithal Chapter-71)
 9. அவை அறிதல் (Thirukkural Avai Arithal Chapter-72)
 10. அவை அஞ்சாமை (Thirukkural Avai Anjaamai Chapter-73)

அரணியல்

 1. நாடு (Thirukkural Naadu Chapter-74)
 2. அரண் (Thirukkural Aran Chapter-75)

கூழியல்

 1. பொருள் செயல்வகை (Thirukkural Porul Seyal Vagai Chapter-76)

படையியல்

 1. படைமாட்சி (Thirukkural Padaimatchi Chapter-77)
 2. படைச்செருக்கு (Thirukkural Padaiserukku Chapter-78)

நட்பியல்

 1. நட்பு (Thirukkural Natpu Chapter-79)
 2. நட்பு ஆராய்தல் (Thirukkural Natpu Aaraithal Chapter-80)
 3. பழைமை (Thirukkural Pazhamai Chapter-81)
 4. தீ நட்பு (Thirukkural Thee Natpu Chapter-82)
 5. கூடா நட்பு (Thirukkural Kooda Natpu Chapter-83)
 6. பேதைமை (Thirukkural Pethamai Chapter-84)
 7. புல்லறிவாண்மை (Thirukkural Pullarivaanmai Chapter-85)
 8. இகல் (Thirukkural Igal Chapter-86)
 9. பகை மாட்சி (Thirukkural Pakaimaatchi Chapter-87)
 10. பகைத்திறம் தெரிதல் (Thirukkural pakaiththirandheridhal Chapter-88)
 11. உட்பகை (Thirukkural Utpakai Chapter-89)
 12. பெரியாரைப் பிழையாமை (Thirukkural Periyarai-Pizhaiyamai Chapter-90)
 13. பெண்வழிச் சேறல் (Thirukkural Pen Vazhi Cheral Chapter-91)
 14. வரைவில் மகளிர் (Thirukkural Varaivin Magalir Chapter-92)
 15. கள் உண்ணாமை (Thirukkural Kallunnaamai Chapter-93)
 16. சூது (Thirukkural Soothu Chapter-94)
 17. மருந்து (Thirukkural Marunthu Chapter-95)

குடியியல் | ஒழிபியல்

 1. குடிமை (Thirukkural Kudimai Chapter-96)
 2. மானம் (Thirukkural Maanam Chapter-97)
 3. பெருமை (Thirukkural Perumai Chapter-98)
 4. சான்றாண்மை (Thirukkural Sandranmai Chapter-99)
 5. பண்புடைமை (Thirukkural Panbu Udaimai Chapter-100)
 6. நன்றியில் செல்வம் (Thirukkural Nandriyil Selvam Chapter-101)
 7. நாண் உடைமை (Thirukkural Chapter-102)
 8. குடி செயல்வகை (Thirukkural Naan Udaimai Chapter-103)
 9. உழவு (Thirukkural Ulavu Chapter-104)
 10. நல்குரவு (Thirukkural Nalkuravu Chapter-105)
 11. இரவு (Thirukkural Iravu Chapter-106)
 12. இரவச்சம் (Thirukkural Iravacham Chapter-107)
 13. கயமை (Thirukkural Kayamai Chapter-108)

காமத்துப்பால் (109-133)

களவியல்

 1. தகையணங்குறுத்தல் (Thirukkural Thagai Ananguruthal Chapter-109)
 2. குறிப்பறிதல் (Thirukkural Kuripparithal Chapter-110)
 3. புணர்ச்சி மகிழ்தல் (Thirukkural Punarchi Magizhthal Chapter-111)
 4. நலம் புனைந்து உரைத்தல் (Thirukkural Nalam Punainthu Uraiththal Chapter-112)
 5. காதற் சிறப்பு உரைத்தல் (Thirukkural Kathal Sirapuraithal Chapter-113)
 6. நாணுத் துறவு உரைத்தல் (Thirukkural Naanuth Thuravuraithal Chapter-114)
 7. அலர் அறிவுறுத்தல் (Thirukkural Alararivuruthal Chapter-115)

கற்பியல்

 1. பிரிவாற்றாமை (Thirukkural Pirivatramai Chapter-116)
 2. படர் மெலிந்து இரங்கல் (Thirukkural Padar Melindirangal Chapter-117)
 3. கண் விதுப்பு அழிதல் (Thirukkural Kan Vithuppazhithal Chapter-118)
 4. பசப்பு உறு பருவரல் (Thirukkural Pasapparuparuvaral Chapter-119)
 5. தனிப்படர் மிகுதி (Thirukkural Thanippadar Miguthi Chapter-120)
 6. நினைந்தவர் புலம்பல் (Thirukkural Ninainthavar Pulambal Chapter-121)
 7. கனவு நிலை உரைத்தல் (Thirukkural Kanavu Nilai Uraithal Chapter-122)
 8. பொழுது கண்டு இரங்கல் (Thirukkural Poluthu Kandirangal Chapter-123)
 9. உறுப்பு நலன் அழிதல் (Thirukkural Uruppu Nalan Azhiththal Chapter-124)
 10. நெஞ்சொடு கிளத்தல் (Thirukkural Nenjodu Kilathal Chapter-125)
 11. நிறை அழிதல் (Thirukkural Niraiyalithal Chapter-126)
 12. அவர் வயின் விதும்பல் (Thirukkural Avarvayin Vithumbal Chapter-127)
 13. குறிப்பு அறிவுறுத்தல் (Thirukkural Kuripparivuruthal Chapter-128)
 14. புணர்ச்சி விதும்பல் (Thirukkural Punarchi Vithumbal Chapter-129)
 15. நெஞ்சொடு புலத்தல் (Thirukkural Nechodu Pulaththal Chapter-130)
 16. புலவி (Thirukkural Pulavi Chapter-131)
 17. புலவி நுணுக்கம் (Thirukkural Pulavi Nunukam Chapter-132)
 18. ஊடல் உவகை (Thirukkural Oodal Uvagai Chapter-133)

இவ்வாறாக திருக்குறள் என்னும் பெரும் படைப்பின் சிறப்புக்களை நாம் அறியக்கூடியதாக உள்ளது. நாம் கற்றவற்றை நமக்கும் பிறருக்கும் பயன்படும் வகையில் எம் வாழ்வில் கடைப்பிடித்து பிறருக்கும் கற்றுக்கொடுத்து பிறருக்கு ஓர் நல்ல‌ உதாரணமான எடுத்துக்காட்டானவர்களாக‌ வாழ்வோம்.

திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு

இவர் திருவள்ளுவர் ஆவார். இவர் திருக்குறளை இயற்றினார்.

Thiruvalluvar, திருக்குறள் 1330 தமிழ்

பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றியவர் தாம் திருவள்ளுவர் எனப்புகழ் பெற்ற தமிழ்ப்புலவர் வள்ளுவர். திருவள்ளுவருடைய‌ இயற்பெயர் மற்றும் வாழ்ந்த இடம் எது என்பன‌ உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகரில் உள்ள, மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும் முடிவில் ஒளவையாரின் துணையோடு மதுரையில் அரங்கேற்றியதாகவும் செவிவழி தகவல்களால் நம்பப்படுகிறது. திருவள்ளுவருடைய கவித்திறன் கண்டு, காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது ஒரே புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது.

ஆராட்சிகளின் மூலம் கிடைத்த தகவலின்படி சங்க கால புலவரான ஔவையார், அதியமான் மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்களாக‌ இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. சங்க கால புலவர் மாமூலனாரே திருவள்ளுவரை பற்றிய செய்தியை முதன் முதலில் குறிப்பிட்டுள்ளார். மாமூலனார் கி.மு 4 ஆம் நூற்றாண்டு செய்தியை கூறுவதால், திருவள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. ஆகையால் மாமூலனாருக்கு முன்பே ஔவையார் என்ற பெயருடைய மற்றொரு புலவர் இருந்திருக்கலாம் என்றே தெரியவருகிறது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை

Thiruvalluvar Statue

திருவள்ளுவர் திருக்குறளில் தனிப்பட்ட எந்த கடவுள்கள் குறித்தும் எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகளை நோக்குமிடத்து சமண சமய நீதி நெறிகளை ஒத்ததாக‌ உள்ளதால் திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். சமண மதம் என்பது தனிப்பட்ட எந்த ஒரு இறை நம்பிக்கையும் அற்றவர்கள் இவர்கள் கொள்கையை வழிபடுபவர்கள் ஆவார்கள். ஆனால் திருவள்ளுவரை திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர். வள்ளுவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். அழுக்காறாமை எனும் அதிகாரத்திலும், ஆள்வினையுடைமை எனும் அதிகாரத்திலும் திருவள்ளுவர் குறிப்பிடுவது தற்போது வழக்கில் இருக்கும் திருமகளின் தன்மையும், மூதேவியின் தன்மையும் ஒத்துப் போகின்றன. இதனால் அவர் சைவர் என நம்பப்படுகிறது.

திருவள்ளுவருக்கு பல சிறப்பு பெயர்கள் உள்ளன அவை: வள்ளுவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், மாதானுபங்கி, நாயனார், பொய்யில்புலவர், பொய்யாமொழிப் புலவர், தேவர், செந்நாப்போதர், மற்றும் பெருநாவலர் என்பனவாகும்.

இவரை,

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என பாரதியாரும்,

“வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே”

என பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் திருக்கோயில். (இக்கோவில் 16 ஆம் நூற்றாண்டடில் கட்டப்பட்டதாகும். இதனை 1970 களில் புதுப்பித்துள்ளனர்)

Thiruvalluvar temple,
திருக்குறள் 1330 தமிழ்

பலர் திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த முயற்சியை ஆரம்பித்தவர் கவிஞர் பாரதிதாசன் ஆவார். அவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இராமச்செல்வன் என்பவரின் உதவியுடன் ஓவியர் வேணுகோபால் சர்மாவைச் சந்தித்தார். மூவரும் சேர்ந்து திருவள்ளுவர் படத்தை உருவாக்க திட்டமிட்டனர். இதற்கான செலவுகளை இராமச்செல்வன் ஏற்றுகொண்டார். வேணுகோபால் சர்மா தான் வரைந்த படத்தை நாகேசுவரபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்தார். அப்போது காமராஜர், கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் இந்தப் படத்தைப் பார்வையிட்டு பாராட்டிச் சென்றனர்.

அதன் பிறகு அந்தப் படம், 1960 இல் கா. ந. அண்ணாதுரையால் காங்கிரஸ் மைதானத்தில் முதன் முதல் வெளியிடப்பட்டது. பின்பு மத்திய அரசால் தபால் தலையாகவும் வெளியிடப்பட்டது. 1964 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் வேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணைக் குடியரசுத் தலைவரான சாகிர் உசேன் திறந்து வைத்தார். வேணுகோபால் சர்மாவுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கப்பட்டது. தமிழக முதல்வரான அண்ணாதுரை இவருக்கு “ஓவியப் பெருந்தகை” என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். இதுவே நாம் காணும் திரு வள்ளுவரின் உருவம் தோன்றிய கதை.

1960இல் இந்திய அரசு வெளியிட்ட, திருவள்ளுவர் நினைவு அஞ்சல் தலை

Thiruvalluvar stamp,
திருக்குறள் 1330 தமிழ்

தமிழ்நாடு அரசு 133 அடி உயரம் கொண்ட‌ திருவள்ளுவர் சிலையை முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இந்த சிலையை வடிவமைத்தவர், பிரபல சிற்பி, கணபதி ஸ்தபதி என்பவர் ஆவார். சென்னையில் வள்ளுவரின் நினைவாக வள்ளுவர் கோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குறள் மண்டபத்தில் திருக்குறளின் 1330 குறள்களும் பொறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவிடமும் உள்ளது. 1960இல் இந்திய அரசு திருவள்ளுவரின் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது.

கன்னியாகுமரியிலுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை

thiruvalluvar statue height

திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் பெரிதும் போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் முன்மாதிரியாகவும் திகழ்கிறார்.

Thirukkural in Tamil: Thirukkural in tamil, Thiruvalluvar Death Date, திருக்குறள் தமிழ் திருவள்ளுவர் பற்றிய குறிப்புகள் திருவள்ளுவர் கவிதை மற்றும் திருவள்ளுவர் திருக்குறள் Thirukkural tamil Songs.

1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

வாழ்க தமிழ் வளர்க நம் பெருமை. பார் போற்றும் தமிழனாய் வாழ்ந்துவிடு. உன் தாய் மொழியை உன் சந்ததிக்கும் கற்றுக்கொடு.

அன்புடன்..
தொகுப்பு: எழுத்தாளர்: (தமிழ்பித்தன்)

Thirukkural meaning in English:
How many thirukkural are there, 133 thirukkural in online thirukkural and meaning in both tamil end english also you can access other resources in our website like thirukkural song download section and thirukural quotes

And also try our site search by these heading for your easiest.
kural tamil
thirukkural in tamil
thirukkural adhikaram
thirukkural pdf
thirukkural in tamil pdf
thirukkural in english
thirukkural vaan sirappu
thirukkural with meaning in tamil
thirukkural kathaigal
thirukkural in english pdf

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: