இன்றைய ராசி பலன் 21.09.2022 Today Rasi Palan 21-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்று 21-09-2022 புரட்டாசி மாதம் 04ம் நாள் புதன்கிழமை ஆகும். இன்று ஏகாதசி திதி இரவு 11.35 வரை பின்பு தேய்பிறை துவாதசி. பூசம் நட்சத்திரம் இரவு 11.47 வரை பின்பு ஆயில்யம். இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். இன்று பெருமாள் வழிபாடு செய்வது நல்லது. இன்று சுபமுகூர்த்த நாள். இன்று சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்: மதியம் 12.00-1.30, எம கண்டம்: காலை 07.30-09.00, குளிகன்: பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள்: காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷம் ராசிக்கு:

இன்று உறவினர்கள் மூலம் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

ரிஷபம் ராசிக்கு:

இன்று உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூரில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

மிதுனம் ராசிக்கு:

இன்று தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படும். சுபமுயற்சிகளில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். நண்பர்களின் உதவியால் பணப்பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

கடகம் ராசிக்கு:

இன்று பிள்ளைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணம் செல்வீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

சிம்மம் ராசிக்கு:

இன்று உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். தெய்வ வழிபாடு நல்லது.

கன்னி ராசிக்கு:

இன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

துலாம் ராசிக்கு:

இன்று உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

விருச்சிகம் ராசிக்கு:

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் பணப்பிரச்சினைகளை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும்.

தனுசு ராசிக்கு:

இன்று உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. எந்த செயலிலும் கவனம் தேவை.

மகரம் ராசிக்கு:

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணச்சுமை அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.

கும்பம் ராசிக்கு:

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் மூலம் சுபசெலவுகள் ஏற்படும். அரசு துறை சார்ந்தவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

மீனம் ராசிக்கு:

இன்று தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleOctober 17 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 17
Next articleOctober 18 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 18