April 01 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil April 01

0

Today Special Historical Events In Tamil | 01-04 | April 01

April 01 Today Special | April 01 What Happened Today In History. April 01 Today Whose Birthday (born) | April-1st Important Famous Deaths In History On This Day 01/04 | Today Events In History April 1st | Today Important Incident In History | சித்திரை 01 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 01-04 | சித்திரை மாதம் 01ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 01.04 Varalatril Indru Nadanthathu Enna| April 01 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 01/04 | Famous People Born Today 01.04 | Famous People died Today 01-04.

Today Special in Tamil 01-04
Today Events in Tamil 01-04
Famous People Born Today 01-04
Famous People died Today 01-04

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 01-04 | April 01

ஏப்ரல் முட்டாள்கள் நாளாக கொண்டாடப்படுகிறது.
மர நாளாக கொண்டாடப்படுகிறது. (தன்சானியா)
தேசிய நாளாக கொண்டாடப்படுகிறது. (சைப்பிரசு)
ஒடிசா நாளாக கொண்டாடப்படுகிறது. (ஒடிசா)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 01-04 | April 01

286ல் உரோமைப் பேரரசர் தியோக்கிளேத்தியான் தனது தளபதி மாக்சிமியனை துணைப் பேரரராக அறிவித்து, உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதிக்குப் பொறுப்பாக நியமித்தார்.
325ல் இளவரசர் சின் செங்தி தனது 4-வது அகவையில், சீனாவின் கிழக்கு யின் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
1545ல் பொலிவியாவில் பெருமளவு வெள்ளிப் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பட்டோசி என்ற நகரம் அமைக்கப்பட்டது.
1625ல் இடச்சு-போர்த்துக்கீசப் போர்: 52 எசுப்பானிய, போர்த்துக்கீசக் கப்பல்கள் பாகியா நகரை மீண்டும் கைப்பற்றப் போரில் இறங்கின.
1826ல் சாமுவேல் மோரி உள் எரி பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.
1867ல் சிங்கப்பூர் பிரித்தானியக் குடியேற்ற நாடாகியது.
1873ல் அட்லாண்டிக் என்ற பிரித்தானியாவின் நீராவிக் கப்பல் கனடாவில் நோவா ஸ்கோசியாவில் மூழ்கியதில் 547 உயிரிழந்தனர்.
1924ல் இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக இட்லருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. ஆனாலும் ஒன்பது மாதங்களில் அவர் விடுதலையானார்.
1933ல் செருமனியில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்சிகள் யூத வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்குமாறு ஒரு-நாள் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.
1933ல் ஆங்கிலேய துடுப்பாட்ட வீரர் வால்ட்டர் அமொண்ட் 336 நியூசிலாந்துக்கு எதிரான தேர்வுப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 336 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்தார்.
1935ல் இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
1937ல் ஏடன் பிரித்தானியாவின் குடியேற்ற நாடானது.
1939ல் எசுப்பானிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக இராணுவத் தலைவர் பிரான்சிஸ்கோ பிராங்கோ அறிவித்தார். கடைசி குடியரசுப் படையினர் சரணடைந்தனர்.
1941ல் ஈராக்கில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அப்தல்லாவின் அரசு கலைக்கப்பட்டது.
1944ல் இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கா தவறுதலாக சுவிட்சர்லாந்தின் சாபாசான் நகர் மீது குண்டுகளை வீசியது.
1945ல் இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படையினர் சப்பானின் ஒக்கினாவா தீவுகளில் இறங்கித் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1946ல் அலூசியன் தீவுகளில் நிகழ்ந்த 8.6 அளவு நிலநடுக்கம் காரணமாக அவாய் தீவுகளில் ஆழிப்பேரலை ஏற்பட்டு 157 பேர் உயிரிழந்தனர்.
1948ல் பரோயே தீவுகள் டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றது.
1949ல் சீன உள்நாட்டுப் போர்: மூன்றாண்டுகள் சண்டையின் பின்னர், சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி தேசியவாதக் கட்சியுடன் நடத்திய பேச்சுகள் தோல்வியில் முடிந்தன.
1955ல் சைப்பிரசில் கிரேக்கத்துடன் இணையும் நோக்கோடு பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.
1957ல் இந்தியாவில் 1 நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1958ல் இலங்கை இனக்கலவரம், 1958: கொழும்பு நகரில் தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகள் மீது தார் பூசப்பட்டன.
1960ல் டிரோசு-1 என்ற செயற்கைக்கோள் முதலாவது விண்வெளியில் இருந்து முதலாவது தொலைக்காட்சிப் படிமத்தை பூமிக்கு அனுப்பியது.
1970ல் அமெரிக்காவில் தொலைக்காட்சி, வானொலிகளில் 1971 சனவரி 1 முதல் புகைத்தலுக்கான விளம்பரங்களைத் தடை செய்யும் சட்டத்தை அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் அறிவித்தார்.
1971ல் வங்காளதேச விடுதலைப் போர்: வங்காளதேசத்தில் பாக்கித்தான் இராணுவம் 1,000 பொதுமக்களைப் படுகொலை செய்தது.
1973ல் புலிகள் பாதுகாப்புத் திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.
1976ல் ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜொப்ஸ், ஸ்டீவ் வாஸ்னியாக், ரொனால்டு வைன் ஆகியோரால் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.
1979ல் ஈரான் 99% மக்களின் ஆதரவான வாக்களிப்பின் மூலம் ஓர் இசுலாமியக் குடியரசாகியது. ஷாவில் அரசு முடிவுக்கு வந்தது.
1981ல் சோவியத் ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1997ல் ஏல்-பாப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்தது.
1999ல் நூனவுட் கனடாவின் பிராந்தியமானது.
2001ல் போர்க்குற்றங்களுக்காகத் தேடப்பட்டுவந்த யூகொசுலாவியாவின் முன்னாள் அரசுத்தலைவர் சுலோபதான் மிலோசெவிச் காவல்துறையினரிடம் சரணடைந்தார்.
2001ல் நெதர்லாந்து ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது.
2004ல் கூகிள் நிறுவனம் ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியது.
2006ல் ஈரான் மேற்கில் லோரிஸ் டான் மாகாணத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 66 பேர் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 01-04 | April 01

1578ல் ஆங்கிலேய மருத்துவரான‌ வில்லியம் ஆர்வி பிறந்த நாள். (இறப்பு-1657)
1621ல் சீக்கிய குருவான‌ குரு தேக் பகதூர் பிறந்த நாள். (இறப்பு-1675)
1815ல் செருமானியப் பேரரசின் 1வது அரசுத்தலைவரான‌ ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் பிறந்த நாள். (இறப்பு-1898)
1861ல் தமிழக அரசியல்வாதியான‌ டி. என். சிவஞானம் பிறந்த நாள். (இறப்பு-1936)
1878ல் இலங்கைத் தமிழறிஞரான‌ சி. கணேசையர் பிறந்த நாள். (இறப்பு-1958)
1889ல் இந்திய மருத்துவரும் செயற்பாட்டாளருமான‌ கேசவ பலிராம் ஹெட்கேவர் பிறந்த நாள். (இறப்பு-1940)
1907ல் இந்திய மற்றும் கருநாடக வீரசைவ ஆன்மிகத் தலைவரான‌ சிவக்குமார சுவாமி பிறந்த நாள். (இறப்பு-2019)
1908ல் அமெரிக்க உளவியலாளரான‌ ஆபிரகாம் மாசுலோ பிறந்த நாள். (இறப்பு-1970)
1912ல் இந்திய கத்தோலிக்க கர்தினாலான‌ ஜோசப் பாறேக்காட்டில் பிறந்த நாள். (இறப்பு-1987)
1917ல் தமிழகக் கவிஞரும் பத்திரிகையாளரும் கட்டுரையாளருமான‌ திருலோக சீதாராம் பிறந்த நாள். (இறப்பு-1973)
1920ல் சப்பானிய இயக்குநரும் நடிகருமான‌ டோஷிரோ மிபூன் பிறந்த நாள். (இறப்பு-1997)
1929ல் கருநாடக இசைக் கலைஞரான‌ டி. கே. கோவிந்த ராவ் பிறந்த நாள். (இறப்பு-2011)
1934ல் தமிழக சமூக செயற்பாட்டாளரான‌ டிராபிக் ராமசாமி பிறந்த நாள். (இறப்பு-2021)
1936ல் அசாமின் 14வது முதலமைச்சரான‌ தருண் குமார் கோகய் பிறந்த நாள்.
1936ல் ஈழத்துத் தமிழறிஞரும் பேராசிரியரும் வரலாற்றாளருமான‌ பொன். பூலோகசிங்கம் பிறந்த நாள். (இறப்பு-2019)
1940ல் நோபல் பரிசு பெற்ற கென்னிய அரசியல்வாதியான‌ வாங்கரி மாத்தாய் பிறந்த நாள். (இறப்பு-2011)
1941ல் இந்தியத் துடுப்பாளரான‌ அஜித் வாடேகர் பிறந்த நாள். (இறப்பு-2018)
1997ல் ஆங்கிலேய நடிகரான‌ ஆசா பட்டர்பீல்ட் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 01-04 | April 01

670ல் இரண்டாவது சியா இமாமான‌ அல் ஹசன் இறப்பு நாள். (பிறப்பு-624)
1611ல் போர்த்துக்கேய இந்தியாவின் படைத்தளபதியும் ஆளுநருமான‌ அந்தரே பூர்த்தாடோ தெ மென்டோன்சா இறப்பு நாள். (பிறப்பு-1558)
1976ல் செருமானிய ஓவியரும் சிற்பியுமான‌ மக்ஸ் ஏர்ண்ஸ்ட் இறப்பு நாள். (பிறப்பு-1891)
2002ல் தென்னிந்திய கருநாடக வாய்ப்பாட்டு கலைஞரான‌ கே. வீ. நாராயணசுவாமி இறப்பு நாள். (பிறப்பு-1923)
2007ல் தமிழகத் தமிழறிஞரான‌ தி. வே. கோபாலையர் இறப்பு நாள். (பிறப்பு-1926)
2007ல் பிரித்தானிய-இந்தியக் கட்டடக் கலைஞரான‌ லாரி பேக்கர் இறப்பு நாள். (பிறப்பு-1917)
2018ல் தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரான‌ சி. வி. ராஜேந்திரன் இறப்பு நாள்.
2021ல் இலங்கை கத்தோலிக்க ஆயரான‌ இராயப்பு யோசேப்பு இறப்பு நாள். (பிறப்பு-1940)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 20.10.2022 Today Rasi Palan 20-10-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!
Next article2023 புத்தாண்டில் எந்த எந்த‌ ராசிக்காரர்லளுக்கெல்லாம் அதிச்டம் தேடி ஓடி வரும்… வாங்க பக்கலாம்