March 29 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 29

0

Today Special Historical Events In Tamil | 29-03 | March 29

March 29 Today Special | March 29 What Happened Today In History. March 29 Today Whose Birthday (born) | March-29th Important Famous Deaths In History On This Day 29/03 | Today Events In History March 29th | Today Important Incident In History | பங்குனி 29 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 29-03 | பங்குனி மாதம் 29ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 29.03 Varalatril Indru Nadanthathu Enna| March 29 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 29/03 | Famous People Born Today 29.03 | Famous People died Today 29-03.

Today Special in Tamil 29-03
Today Events in Tamil 29-03
Famous People Born Today 29-03
Famous People died Today 29-03

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 29-03 | March 29

1947 கிளர்ச்சி நினைவு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (மடகாசுகர்)
இளைஞர் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (சீனக் குடியரசு)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 29-03 | March 29

845ல் பாரிசு நகரம் வைக்கிங்குகளினால் சூறையாடப்பட்டது.
1461ல் ரோசாப்பூப் போர்கள்: யோர்க் இளவரசர் எட்வர்ட் டௌட்டன் என்ற இடத்தில் நடந்த சமரில் மார்கரெட் மகாராணியைத் தோற்கடித்து, இங்கிலாந்தின் நான்காம் எட்வர்ட் மன்னரானார்.
1632ல் கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது.
1792ல் 13 நாட்களின் முன்னால் சுடப்பட்ட சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னர் இறந்தார்.
1807ல் 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை செருமானியய வானியலாளர் ஐன்ரிக் ஓல்பர்சு கண்டுபிடித்தார்.
1809ல் சுவீடன் மன்னர் நான்காம் குஸ்தாவ் அடொல்ஃப் இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1831ல் துருக்கிக்கு எதிராக பொசுனிய எழுச்சி ஆரம்பமானது.
1847ல் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் வேராகுரூசு நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர்.
1849ல் பஞ்சாபை பிரித்தானியா கைப்பற்றியது.
1857ல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் மங்கள் பாண்டே பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.
1867ல் கனடாக் கூட்டமைப்பை சூலை 1 இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரச ஒப்புதலை அளித்தார்.
1879ல் ஆங்கில-சூலூ போர்: தென்னாபிரிக்காவில் கம்பூலா என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் 20,000 சூலுக்களை வென்றனர்.
1886ல் அமெரிக்காவின் அட்லான்டா நகரில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார்.
1945ல் இரண்டாம் உலகப் போர்: செருமனியின் நான்காம் பிரிவு இராணுவம் சோவியத் செஞ்சேனையினால் முற்றாக அழிக்கப்பட்டது.
1945ல் இரண்டாம் உலகப் போர்: வி-1 பறக்கும் வெடிகுண்டு கடைசித் தடவையாக இங்கிலாந்தைத் தாக்கியது.
1947ல் மடகாசுகரில் பிரான்சிய குடியேற்ற ஆட்சிக்கெதிராக மலகாசி எழுச்சி ஆரம்பமானது.
1961ல் வாசிங்டன், டி. சி. மக்கள் அரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கும் சட்டம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.
1962ல் அர்கெந்தீனாவின் அரசுத்தலைவர் அர்த்தூரோ புரொந்தீசி இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1971ல் மை லாய் படுகொலைகள்: அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றான்.
1973ல் வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர்.
1973ல் அமெரிக்காவின் லாவோஸ் மீதான குண்டுத்தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது.
1974ல் நாசாவின் மரைனர் 10 விண்ணுளவி புதன் கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது.
1974ல் சீனாவின் சென்சி மாகாணத்தில் சுடுமட்சிலைப் படை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
1999ல் உத்தரப் பிரதேசம், சமோலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 103 பேர் உயிரிழந்தனர்.
2004ல் பல்காரியா, எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, உருமேனியா, சிலோவாக்கியா, சுலோவீனியா ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் முழுமையான அங்கத்துவம் பெற்றன.
2007ல் கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.
2008ல் பூமி மணித்தியாலம் அனைத்துலக மயப்படுத்தப்பட்டது.
2010ல் மாஸ்கோ மெட்ரோ தொடருந்து நிலையத்தில் இரண்டு தற்கொலைக் குண்டுகள் வெடித்ததில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
2013ல் தன்சானியா, தாருசலாம் நகரில் 16-மாடிக் கட்டடம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.
2014ல் ஐக்கிய இராச்சியத்தில் முதலாவது ஒருபால் திருமணங்கள் இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 29-03 | March 29

1790ல் அமெரிக்காவின் 10-வது அரசுத்தலைவரான‌ ஜான் டைலர் பிறந்த நாள். (இறப்பு-1862)
1869ல் பிரித்தானிய கட்டிடக் கலைஞரான‌ எட்வின் லூட்டியன்சு பிறந்த நாள். (இறப்பு-1944)
1885ல் தமிழக இதழாசிரியரும் எழுத்தாளரும் சீர்திருத்தவாதியும் சொற்பொழிவாளருமான‌ பா. தாவூத் ஷா பிறந்த நாள். (இறப்பு-1969)
1918ல் வோல் மார்ட்டை நிறுவிய அமெரிக்கத் தொழிலதிபரான‌ சாம் வோல்ற்றன் பிறந்த நாள். (இறப்பு-1992)
1930ல் மொரீசியசின் 4வது குடியரசுத் தலைவரான‌ அனெரூட் ஜக்நாத் பிறந்த நாள்.
1946ல் அமெரிக்க பொருளாதார வல்லுனரும் எழுத்தாளருமான‌ ராபர்ட் ஷில்லர் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 29-03 | March 29

கிமு 87ல் சீனப் பேரரசரான‌ ஆனின் பேரரசர் வு இறப்பு நாள். (பிறப்பு-கிமு 156)
1629ல் டச்சு ஓவியரான‌ இரண்டாம் ஜேகப் டி கெயின் இறப்பு நாள். (பிறப்பு-1565)
1891ல் பிரான்சிய ஓவியரான‌ யோர்ச் சோரா இறப்பு நாள். (பிறப்பு-1859)
1909ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் மருத்துவருமான‌ டபிள்யூ. ஜி. ரொக்வூட் இறப்பு நாள். (பிறப்பு-1843)
1946ல் பெல்ஜிய-அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான‌ ஜார்ஜ் வாசிங்டன் இறப்பு நாள். (பிறப்பு-1871)
1965ல் புதுவைக் கவிஞரான‌ தமிழ்ஒளி இறப்பு நாள். (பிறப்பு-1924)
1971ல் தமிழகத் தமிழறிஞரும் எழுத்தாளரும் உரையாசிரியருமான‌ பாலூர் து. கண்ணப்பர் இறப்பு நாள். (பிறப்பு-1908)
1977ல் ஆத்திரியத் தொழிலதிபரும் கலைச்சொல்லியலாளருமான‌ யூஜீன் வூசுட்டர் இறப்பு நாள். (பிறப்பு-1898)
1985ல் அமெரிக்க மானிடவியலாளரான‌ ஜார்ஜ் பீட்டர் மர்டாக் இறப்பு நாள். (பிறப்பு-1897)
1997ல் இந்தியப் பெண் எழுத்தாளரும் செயல்பாட்டாளரான‌ பூபுல் செயகர் இறப்பு நாள். (பிறப்பு-1915)
2000ல் தமிழ்த் திரைப்பட நடிகையான‌ சி. கே. சரஸ்வதி இறப்பு நாள்.
2007ல் தமிழக இசை மற்றும் நடன விமர்சகரான‌ சுப்புடு இறப்பு நாள்.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleMarch 28 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 28
Next articleMarch 30 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 30