March 28 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 28

0

Today Special Historical Events In Tamil | 28-03 | March 28

March 28 Today Special | March 28 What Happened Today In History. March 28 Today Whose Birthday (born) | March-28th Important Famous Deaths In History On This Day 28/03 | Today Events In History March 28th | Today Important Incident In History | பங்குனி 28 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 28-03 | பங்குனி மாதம் 28ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 28.03 Varalatril Indru Nadanthathu Enna| March 28 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 28/03 | Famous People Born Today 28.03 | Famous People died Today 28-03.

Today Special in Tamil 28-03
Today Events in Tamil 28-03
Famous People Born Today 28-03
Famous People died Today 28-03

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 28-03 | March 28

ஆசிரியர் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (செக் குடியரசு, சிலோவாக்கியா)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 28-03 | March 28

193ல் உரோமைப் பேரரசர் பெர்ட்டினாக்சு பிரடோரியன் காவலர்ககளால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரது அரியணையை ஏலத்தில் விற்றனர்.
364ல் உரோமைப் பேரரசர் முதலாம் வலந்தீனியன் தனது சகோதரன் வேலன்சை துணைப் பேரரசனாக நியமித்தார்.
1737ல் மராத்தியர்கள் பாஜிராவ் தலைமையில் முகலாயர்களை தில்லிப் போரில் தோற்கடித்தனர்.
1795ல் போலந்தின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்லாந்து, செமிகாலியா ஆகியன போலந்தில் இருந்து பிரிக்கப்பட்டு உருசியப் பேரரசுடன் சேர்க்கப்பட்டது.
1801ல் புளோரன்சு உடன்பாடு: முதல் பிரெஞ்சுக் குடியரசுக்கும் நேப்பிள்சு இராச்சியத்துக்கும் இடையே போர் முடிவுக்கு வந்தது.
1802ல் என்ரிக் ஒல்பெர்சு 2 பலாசு என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.
1809ல் மெடெலின் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரான்சு எசுப்பானியாவை வென்றது.
1814ல் பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வால்பரைசோ சமரில் இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் பிரித்தானியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
1854ல் கிரிமியப் போர்: பிரான்சும் பிரித்தானியாவும் உருசியா மீது போரை அறிவித்தன.
1879ல் ஆங்கிலோ-சூலு போர்: பிரித்தானியப் படைகள் ஊலோபேன் நகரில் இடம்பெற்ற சமரில் படுதோல்வியடைந்தனர்.
1910ல் கடல் விமானம் ஒன்றில் பறந்த முதலாவது மனிதர் என்ற சாதனையை பிரான்சைச் சேர்ந்த என்றி பாப்ரி என்பவர் பெற்றார்.
1930ல் கொன்ஸ்டன்டீனபில், அங்கோரா ஆகியன இஸ்தான்புல் மற்றும் அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன.
1933ல் இம்பீரியல் ஏர்வேய்சு வானூர்தியில் பயணி ஒருவர் தீ மூட்டியதால் விமானம் விபத்துக்குள்ளாகியதில் பயணம் செய்த அனைத்து 15 பேரும் உயிரிழந்தனர்.
1939ல் எசுப்பானிய உள்நாட்டுப் போர்: மூன்று-நாள் முற்றுகையை அடுத்து மத்ரித் நகரை தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோ கைப்பற்றினார்.
1941ல் இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் நடுநிலக்கடற்படை இத்தாலியின் ஐந்து போர்க்கப்பல்களைத் தாக்கி அழித்தது.
1942ல் இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் கூட்டுப் படை சென் நசேரில் செருமானியப் போர்க்கப்பல் டிர்பிட்சை விரட்டுவதற்கு திடீர்த் தாக்குதலை நடத்தியது.
1946ல் பனிப்போர்: பன்னாட்டளவில் அணுக்கரு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா வெளியிட்டது.
1951ல் முதலாம் இந்தோசீனப் போர்: பிரெஞ்சு ஒன்றியப் படைகள் வோ இங்குயென் கியாப் தலைமையிலான வியட் மின் படைகளை மாவோ கே சமரில் தோற்கடித்தது.
1959ல் சீன மக்கள் குடியரசின் அரச மன்றம் திபெத்து அரசைக் கலைத்தது.
1970ல் மேற்கு துருக்கியை நிலநடுக்கம் தாக்கியதில் 1,086 பேர் உயிரிழந்தனர்.
1979ல் பிரித்தானிய மக்களவையில் யேம்சு கலகனின் அமைச்சரவை மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒரு வாக்கால் வெற்றியடைந்தது.
1979ல் ஐக்கிய அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் அணுக்கரு உலையில் அணுக்கசிவு ஏற்பட்டது.
1988ல் ஹலப்ஜா நகரின் குர்திய இன மக்களுக்கு எதிராக வேதி ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.
1994ல் தென்னாபிரிக்காவில் சூலு இனத்தவர்களுக்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஜோகார்னஸ்பேக் நகரில் இடம்பெற்ற கைகலப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
1999ல் கொசோவோ போரில் செர்பிய துணை இராணுவக் குழுக்களும் இராணுவத்தினரும் இணைந்து 146 கொசோவோ அல்பேனியர்களைக் கொன்றனர்.
2005ல் இந்தோனேசியாவின் சுமாத்திராவில் இடம்பெற்ற 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 915 முதல் 1,314 பேர் வரையானோர் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 28-03 | March 28

623ல் உமையா காலிபாவான‌ முதலாம் மர்வான் பிறந்த நாள். (இறப்பு-685)
661ல் உமையா காலிபாவான‌ இரண்டாம் முஆவியா பிறந்த நாள். (இறப்பு-684)
1483ல் இத்தாலிய ஓவியரும் கட்டிடக்கலைஞருமான‌ ராபியேல் சான்சியோ பிறந்த நாள். (இறப்பு-1520)
1515ல் எசுப்பானியப் புனிதரான‌ அவிலாவின் புனித தெரேசா பிறந்த நாள். (இறப்பு-1582)
1801ல் உருசிய வானியலாளரான‌ கார்ல் பிரீட்ரிக் நோர் பிறந்த நாள். (இறப்பு-1883)
1863ல் பிரான்சிய கீழைத்தேசவியலாளரும் இந்தியவியலாளருமான‌ சில்வா லெவி பிறந்த நாள். (இறப்பு-1935)
1868ல் உருசியப் புதின மற்றும் நாடக எழுத்தாளரான‌ மாக்சிம் கார்க்கி பிறந்த நாள். (இறப்பு-1936)
1874ல் இந்திய-பிரித்தானிய அரசியல்வாதியான‌ சாபுர்சி சக்லத்வாலா பிறந்த நாள். (இறப்பு-1936)
1899ல் இலங்கை சமூக சேவையாளரும் அரசியல்வாதியும் கல்வியாளருமான‌ ஹன்டி பேரின்பநாயகம் பிறந்த நாள். (இறப்பு-1977)
1904ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இசையமைப்பாளரும் இயக்குனரும் தயாரிப்பாளரும் எழுத்தாளரும் பாடகருமான‌ வி. நாகையா பிறந்த நாள். (இறப்பு-1973)
1922ல் இலங்கை அரசியல்வாதியான‌ பா. நேமிநாதன் பிறந்த நாள்.
1926ல் இந்தியத் துடுப்பாளரான‌ போலி உம்ரிகர் பிறந்த நாள். (இறப்பு-2006)
1933ல் ஈழத்தின் சிறுவர் எழுத்தாளரும் கதைசொல்லியுமான‌ மாஸ்டர் சிவலிங்கம் பிறந்த நாள். (இறப்பு-2022)
1936ல் நோபல் பரிசு பெற்ற பெரு எழுத்தாளரான‌ மாரியோ பார்க்காசு யோசா பிறந்த நாள்.
1940ல் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மாவட்ட ஆயரான‌ எஸ். ஜெபநேசன் பிறந்த நாள்.
1942ல் அமெரிக்க மெய்யியலாளரான‌ டானியல் டெனற் பிறந்த நாள்.
1943ல் இலங்கை சிங்களத் திரைப்பட இயக்குனரும் கல்வியாளருமான‌ தர்மசேன பத்திராஜா பிறந்த நாள். (இறப்பு-2018)
1945ல் பிலிப்பீன்சின் 16வது அரசுத்தலைவரான‌ ரொட்ரிகோ துதெர்த்தெ பிறந்த நாள்.
1968ல் இந்டிய-ஆங்கிலேயத் துடுப்பாளரான‌ நாசர் ஹுசைன் பிறந்த நாள்.
1969ல் அமெரிக்க இயக்குநரும் தயாரிப்பாளருமான‌ பிரெட் ரட்னர் பிறந்த நாள்.
1970ல் அமெரிக்க நடிகரான‌ வின்ஸ் வுகஹன் பிறந்த நாள்.
1982ல் இந்தியத் திரைப்பட நடிகையான‌ சோனியா அகர்வால் பிறந்த நாள்.
1985ல் சுவிட்சர்லாந்து டென்னிசு வீரரான‌ ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா பிறந்த நாள்.
1986ல் அமெரிக்கப் பாடகியும் நடிகையுமான‌ லேடி காகா பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 28-03 | March 28

1552ல் சீக்கிய குருவான‌ குரு அங்கது தேவ் இறப்பு நாள். (பிறப்பு-1504)
1584ல் உருசியப் பேரரசரான‌ உருசியாவின் நான்காம் இவான் இறப்பு நாள். (பிறப்பு-1530)
1899ல் இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரான‌ சுவாமி யோகானந்தர் இறப்பு நாள். (பிறப்பு‍ 1861)
1941ல் ஆங்கிலேய எழுத்தாளரான‌ வெர்ஜீனியா வூல்ஃப் இறப்பு நாள். (பிறப்பு-1882)
1943ல் இந்திய அரசியல்வாதியும் விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளருமான‌ சத்தியமூர்த்தி இறப்பு நாள். (பிறப்பு-1887)
1944ல் தமிழகத் தமிழறிஞரும் சொற்பொழிவாளரும் ஆய்வாளரான‌ ந. மு. வேங்கடசாமி நாட்டார் இறப்பு நாள். (பிறப்பு-1884)
1947ல் உருசியக் கணிதவியலாளரான‌ இவான் இவானோவிச் செகால்கின் இறப்பு நாள். (பிறப்பு-1869)
1969ல் அமெரிக்காவின் 34வது அரசுத்தலைவரான‌ டுவைட் டி. ஐசனாவர் இறப்பு நாள். (பிறப்பு-1890)
1971ல் தமிழக எழுத்தாளரும் இதழாளரும் பதிப்பாளரும் விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளருமான‌ பரலி சு. நெல்லையப்பர் இறப்பு நாள். (பிறப்பு-1889)
1991ல் தமிழகத் தமிழறிஞரும் கல்வியாளருமான‌ எச். வேங்கடராமன் இறப்பு நாள். (பிறப்பு-1919)
2006ல் இந்திய மெய்யியலாளரான‌ வேதாத்திரி மகரிசி இறப்பு நாள். (பிறப்பு-1911)
2017ல் தென்னாப்பிரிக்க அரசியல்வாதியான‌ அகமத் கத்ரடா இறப்பு நாள். (பிறப்பு-1929)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleMarch 27 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 27
Next articleMarch 29 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 29