March 30 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 30

0

Today Special Historical Events In Tamil | 30-03 | March 30

March 30 Today Special | March 30 What Happened Today In History. March 30 Today Whose Birthday (born) | March-30th Important Famous Deaths In History On This Day 30/03 | Today Events In History March 30th | Today Important Incident In History | பங்குனி 30 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 30-03 | பங்குனி மாதம் 30ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 30.03 Varalatril Indru Nadanthathu Enna| March 30 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 30/03 | Famous People Born Today 30.03 | Famous People died Today 30-03.

Today Special in Tamil 30-03
Today Events in Tamil 30-03
Famous People Born Today 30-03
Famous People died Today 30-03

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 30-03 | March 30

நில நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (பாலத்தீனம்)
தேசிய மருத்துவர்கள் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (ஐக்கிய அமெரிக்கா)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 30-03 | March 30

598ல் பால்க்கன் நடவடிக்கை: ஆவார் நாடோடிக் குழு பைசாந்தியப் பேரரசின் முக்கிய நகரமான தோமிசு மீதான முற்றுகையை நிறுத்தினர். அவார்-சிலாவிக் நாடோடிக் குழுக்கள் கொள்ளை நோயினால் பெருமளவில் அழிந்ததைத் தொடர்ந்து அவர்களது தலைவர் முதலாம் பயான் தன்யூப் ஆற்றின் வடக்கே பின்வாங்கினார்.
1296ல் இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையேயான சண்டையில், இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்வர்டு பெரிக் நகரை சூறையாடினார்.
1699ல் குரு கோவிந்த் சிங் பஞ்சாபின், அனந்த்பூர் சாகிப் நகரில் கால்சா அமைப்பைத் தோற்றுவித்தார்.
1818ல் இயற்பியலாளர் அகசுடீன் பிரெனெல் ஒளியியல் சுழற்சி பற்றிய தனது குறிப்புகளை பிரெஞ்சு அறிவியல் கழகத்தில் படித்தார்.
1822ல் ஐக்கிய அமெரிக்காவில் புளோரிடா பிராந்தியம் உருவாக்கப்பட்டது.
1831ல் யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிசன் கட்டிடங்கள் தீப்பிடித்து அழிந்தன.
1842ல் அறுவைச் சிகிச்சைகளில் முதன்முதலாக ஈதர் மயக்க மருந்து குரோபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.
1851ல் ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1856ல் கிரிமியப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பாரிசு உடன்பாடு எட்டப்பட்டது.
1858ல் அழிப்பானுடன் கூடிய எழுதுகோலுக்கான காப்புரிமம் ஐமன் லிப்மன் என்பவரினால் பெறப்பட்டது.
1861ல் சேர் வில்லியம் குரூக்சு தாலியம் தனிமத்தைக் கண்டுபிடித்தார்.
1863ல் டென்மார்க்கு இளவரசர் வில்லெம் கியோர்க் கிரேக்கத்தின் ஜார்ஜ் மன்னராக முடிசூடினார்.
1867ல் அலாஸ்கா மாநிலத்தை 2 சதம்/ஏக்கர் ($4.19/கிமீ²) என்ற கணக்கில் 7.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு, உருசியாவிடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா கொள்வனவு செய்தது.
1912ல் மொரோக்கோ பிரான்சின் பாதுகாப்பில் உள்ள ஒரு நாடாக அறிவிக்கப்பட்டது.
1940ல் இரண்டாம் சீன-சப்பானியப் போர்: புதிய சீன பொம்மை அரசின் தலைநகராக நான்கிங் நகரை சப்பான் அறிவித்தது.
1944ல் இரண்டாம் உலகப் போர்: நேசப் படைகள் பல்காரியா தலைநகர் சோபியா மீது பெரும் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டன.
1944ல் இரண்டாம் உலகப் போர்: நியூரம்பெர்க் நகரைத் தாக்க அனுப்பப்பட்ட பிரித்தானியாவின் 795 போர் வானூர்திகளில் 95 வானூர்திகள் திரும்பவில்லை.
1945ல் இரண்டாம் உலகப் போர்: சோவியத் செஞ்சேனைப் படை ஆஸ்திரியாவின் வியன்னா நகரைக் கைப்பற்றியது; போலந்து, செஞ்சேனைப் படைகள் இணைந்து தான்சிக்கைக் கைப்பற்றின.
1949ல் பனிப்போர்: ஐசுலாந்து நேட்டோ அமைப்பில் இணைந்தது. இதற்கு எதிரான கலவரம் ரெய்க்யவிக் நகரில் இடம்பெற்றது.
1965ல் வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கத் தூதராலயத்திற்கு முன்னால் தானுந்துக் குண்டொன்று வெடித்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
1972ல் வியட்நாம் போர்: வடக்கு வியட்நாம் படைகள் தெற்கு வியட்நாமின் பாதுகாப்பு வலயத்தினுள் சென்றதை அடுத்து அங்கு போர் மூண்டது.
1979ல் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் எய்ரி நீவ் என்பவர் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் இருந்து வெளியேறும் போது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். ஐரிய தேசிய விடுதலை இராணுவம் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.
1981ல் அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் வாசிங்டனில் உணவு விடுதி ஒன்றில் வைத்து ஜோன் இங்கிளி என்பவனால் மார்பில் சுடப்பட்டார். மேலும் மூவர் காயமடைந்தனர்.
1982ல் கொலம்பியா விண்ணோடம் நியூ மெக்சிகோவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 30-03 | March 30

1432ல் உதுமானிய சுல்தானான‌ இரண்டாம் முகமது பிறந்த நாள். (இறப்பு-1481)
1566ல் இத்தாலிய இசைக்கலைஞரும் இசையமைப்பாளருமான‌ கார்லோ கேசுவால்தோ பிறந்த நாள். (இறப்பு-1613)
1709ல் தமிழில் நாட்குறிப்பு எழுதியவரான‌ ஆனந்த ரங்கம் பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1761)
1746ல் எசுப்பானிய-பிரான்சிய ஓவியரான‌ பிரான்சிஸ்கோ கோயா பிறந்த நாள். (இறப்பு-1828)
1853ல் டச்சு-பிரான்சிய ஓவியரான‌ வின்சென்ட் வான் கோ பிறந்த நாள். (இறப்பு-1890)
1861ல் சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரான‌ சுவாமி யோகானந்தர் பிறந்த நாள். (இறப்பு-1899)
1889ல் ஈழத்து நாடகக் கலைஞரான‌ க. சொர்ணலிங்கம் பிறந்த நாள். (இறப்பு-1982)
1894ல் சோவியத் மற்றும் உருசிய வானியலாளரான‌ நிக்கொலாய் பரபாசொவ் பிறந்த நாள். (இறப்பு-1971)
1908ல் இந்தியத் திரைப்பட நடிகையான‌ தேவிகா ராணி பிறந்த நாள். (இறப்பு-1994)
1925ல் தமிழக மார்க்சியத் திறனாய்வாளரான‌ தி. க. சிவசங்கரன் பிறந்த நாள். (இறப்பு-2014)
1926ல் சுவீடன் தொழிலதிபரான‌ இங்வர் காம்பரத் பிறந்த நாள். (இறப்பு-2018)
1930ல் மலேசிய-இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான‌ கே. ஆர். சோமசுந்தரம் பிறந்த நாள்.
1936ல் ஈழத்து வில்லிசைக் கலைஞரான‌ சின்னமணி பிறந்த நாள். (இறப்பு-2015)
1940ல் ஈழத்து எழுத்தாளரான‌ கே. எஸ். ஆனந்தன் பிறந்த நாள். (இறப்பு-2021)
1945ல் ஆங்கிலேய இசைக்கலைஞரும் பாடகருமான‌ எரிக் கிளாப்டன் பிறந்த நாள்.
1966ல் தமிழ்த் திரைப்பட இயக்குநரான‌ விக்ரமன் பிறந்த நாள்.
1979ல் இந்திய-அமெரிக்க இசைக்கலைஞரும் பாடகியுமான‌ நோரா ஜோன்ஸ் பிறந்த நாள்.
1984ல் ஆத்திரேலிய டென்னிசு வீராங்கனையான‌ சமந்தா ஸ்டோசர் பிறந்த நாள்.
1992ல் இந்தியப் பின்னணிப் பாடகியான‌ பாலக் முச்சால் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 30-03 | March 30

1664ல் சீக்கிய நம்பிக்கையின் எட்டாம் குருவான‌ குரு அர் கிருசன் இறப்பு நாள். (பிறப்பு-1656)
1840ல் ஆங்கிலேய-பிரான்சிய ஆடை வடிவமைப்பாளரான‌ பியூ பிரம்மல் இறப்பு நாள். (பிறப்பு-1778)
1951ல் ஈழத்துப் பத்திரிகையாளரும் பதிப்பாளரும் சமூக சேவையாளருமான‌ நா. பொன்னையா இறப்பு நாள். (பிறப்பு-1892)
1986ல் அமெரிக்க நடிகரான‌ ஜேம்ஸ் காக்னி இறப்பு நாள். (பிறப்பு-1899)
2002ல் இந்தியக் கவிஞரான‌ ஆனந்த் பக்சி இறப்பு நாள். (பிறப்பு-1930)
2005ல் அமெரிக்க அரசியல் செயற்பாட்டாளரான‌ பிரெட் கோரெமாட்சு இறப்பு நாள். (பிறப்பு-1919)
2005ல் மலையாள எழுத்தாளரும் ஓவியருமான‌ ஒ. வே. விஜயன் இறப்பு நாள். (பிறப்பு-1930)
2015ல் இடச்சு வானியலாளரான‌ இங்கிரிடு கிரோயெனவெல்டு இறப்பு நாள். (பிறப்பு-1921)
2017ல் கேரள வரலாற்று ஆய்வாளரும் நூலாசிரியருமான‌ என். எம். நம்பூதிரி இறப்பு நாள். (பிறப்பு-1943)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleMarch 29 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 29
Next articleMarch 31 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 31