Home Rasi Palan ராசி பலன் New Year Rasi Palan 2019 புத்தாண்டின் அதிஸ்ட வாழ்க்கை எந்த ராசிக்கு கிடைக்கும்! கிரகநிலை புத்தாண்டு பலன்கள் 2019!

புத்தாண்டின் அதிஸ்ட வாழ்க்கை எந்த ராசிக்கு கிடைக்கும்! கிரகநிலை புத்தாண்டு பலன்கள் 2019!

0
3101

நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீவிளம்பி வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் தேதி பின்னிரவு மார்கழி மாதம் 17ம் தேதி முன்னிரவு – (1.1.2019) கிருஷ்ணபக்ஷ தசமியும் ஸ்வாதி நக்ஷத்ரமும் சுக நாமயோகமும் பத்ரை கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் முன் இரவு 12.00 மணிக்கு கன்னியா லக்னத்தில் 2019 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.

ஸ்வாதி நக்ஷத்ரம் துலா ராசி கன்னி லக்னத்தில் புத்தாண்டு பிறக்கிறது. பிறக்கும் புத்தாண்டில் அனைவரும் சீரும் சிறப்புடனும் – ஆயுசுடனும் – ஆரோக்கியத்துடனும் – அனைத்து விதமான ஷேமங்கள் பெறவும் – திருமணம் கைகூடி வரவும் – சந்தாண பாக்கியம் கிட்டவும் – நல்ல வேலை கிடைக்கவும் – வெளிநாடு பயணம் இனிதே பெறவும் – வீடு மனை வாகனம் அமையவும் ஆண்டின் தொடக்க நாளில் இறைவனை திருக்கோவில்களில் சென்று வழிபாடு செய்து வருவது நல்லது.

இந்த ஆண்டு சிவனுக்கும் நரசிம்மருக்கும் உகந்த நக்ஷத்ரமான ஸ்வாதி நக்ஷத்ரத்தில் பிறக்கிறது. மண்ணில் வாழும் மக்களுக்கு எல்லாம் பொன்னும் பொருளும் போகமும் செல்வாக்கும் சொல்வாகும் இன்னும் பெருகும். கன்னியர்களின் கவலைகள் தீரவும் – காளையர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைத்திடவும் – எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறவும் சுகஸ்தானத்தில் இருக்கும் லக்னாதிபதி புதனுக்கு உகந்த தேவதையான ஸ்ரீமன் நாராயணனையும் – ஸ்வாதி நக்ஷத்ரத்திற்கு உகந்த தேவதையான நரசிம்மரையும் வணங்கி வர அனைத்தும் நிறைவேறும். விளம்பி வருடம் மார்கழி மாதம் 16ம் தேதி நிகழும் புத்தாண்டை முதல்நாளே கொண்டாடுவது சிறப்பானதாகும். புத்தாண்டின் கிரகநிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் நவக்கிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் சந்தோஷங்களை அள்ளித்தரும் கிரக அமைப்பில் இருப்பது நன்மையே.

கிரகநிலை: லக்னம் கன்னி – துலா ராசியில் சந்திரன், சுக்கிரன் – விருச்சிக ராசியில் குரு – தனுசு ராசியில் சூரியன், புதன், சனி – மகர ராசியில் கேது – மீன ராசியில் செவ்வாய் – கடக ராசியில் ராகு என கிரகங்களுடைய உலா இருக்கிறது.

ஆண்டின் தொடக்கத்தில் லக்ன தொழில் அதிபதி புதன் சுகஸ்தானத்தில் விரையாதிபதி சூரியன் – பஞ்சம ரண ருண அதிபதி சனியுடனும் இணைந்து இருக்கிறார். தனவாக்கு பாக்கியாதிபதி சுக்கிரன் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ஆட்சியாக அமர்ந்திருக்கிறார். தைரிய அஷ்டம ஸ்தானாதிபதி செவ்வாய் குரு வீடான மீன ராசியிலும் சுக களத்திராதிபதி குரு செவ்வாய் வீடான விருச்சிக ராசியிலும் பரிவர்த்தனை பெற்று அருளாசி வழங்குகிறார்கள். எனவே இவ்வாண்டு சுபகாரியங்கள் அனைத்தும் நல்ல முறையில் நடப்பதைக் காட்டுகிறது. மேலும் லாபாதிபதி சந்திரன் லக்னத்திற்கு நட்பு கிரகமாவார். அவர் தனவாக்கு ஸ்தானத்தில் சுக்கிரனுடன் அமர்ந்திருப்பது யோகமாகும். அல்லல்கள் அனைத்தும் தீரப் போகிறது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மங்கள காரியங்கள் அனைத்தும் எந்த விதமான தங்கு தடையின்றி நடைபெறும். பூமியிலுள்ள மக்களுக்கெல்லாம் தைரியமும் – இறைவனின் பரம சைதன்யமும் நிறையப் போகிறது. கவலைகள் மறைந்து கை நிறைய தனலாபம் அமையப் போகிறது.

உயர்வான வாழ்க்கைக்கு எண் 5: 1 + 1 + 2 + 0 + 1 + 9 = 14 = 1 + 4 = 5; இது புதனுடைய எண்ணாகும். புதன் நட்பு வீடான தனுசு ராசியில் சஞ்சாரம் பெறுகிறார். மேலும் சூரியன் சனியுடன் இணைந்திருக்கிறார். கல்வியையும் சாமர்த்தியத்தையும் குறிக்கும் எண் ஐந்தாகும். ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு அனைத்து விதமான நற்பலன்களையும் அளிக்கும் என நம்பலாம். மேலும் ஆண்டின் கூட்டுத் தொகையானது 3. இந்த எண் சுபகாரகன் குருவைக் குறிப்பதாகும். இவ்வருடம் எந்த ஒரு செயலையும் தொடங்க விரும்புபவர்கள் பெருமாளையும் – சிவனையும் வழிபட்டு வந்தால் அனைத்து காரியங்களும் கைகூடும்.

வளமாக இருக்க போகும் ராசிகள்: ரிஷபம் – கடகம் – விருச்சிகம் – மீனம்

முயற்சிக்குப் பின் வெற்றி பெறப் போகும் ராசிகள்: மேஷம் – சிம்மம் – துலாம் – கும்பம்

இறைவனை சரணடைவதன் மூலம் உபாயம் பெறப் போகும் ராசிகள்: மிதுனம் – தனுசு – கன்னி – மகரம்

பொதுப் பலன்கள்: கன்னியர்களுக்கு தகுந்த மணமாகும். மாலை வாய்ப்புகளும் – மழலை பாக்யமும் – வேலைவாய்ப்புகளும் வியக்கும் விதத்தில் இருக்கும். பத்திரிகைத்துறை – எழுத்துதுறை – ஆசிரியர் துறை – கணிதம் – ரசாயணம் – ஆண்மீகம் – சோதிடம் – வழக்கறிஞர் துறை – புத்தகத்துறை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுக்ரன் ஆட்சியாக இருப்பதால் கலைத்துறை செழிக்கும். கலைஞர்கள் கௌரவப்படுத்தப்படுவார். வண்ணத்திரை சின்னத்திரை இரண்டுமே மக்களுக்கு பயனளிக்கும். உணவிற்கு எந்த விதமான பங்கமும் இராது. உணவு உற்பத்தியாளர்களுக்கு தகுந்த விலை நிர்ணயமாகும். மக்களுக்கு பொருளாதார நிலை உயரும். பெட்ரோல் – டீசல் – கச்சா எண்ணை – சமையல் எண்ணை விலை அதிகமாக உயரும். இந்திய ரூபாயின் மதிப்பில் சலனம் இருக்கும். தங்கம் – வெள்ளி விலையும் உயரும். நிறைய சிவாலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அரசாங்கத்தில் சிறு சிறு ஊசல்கள் இருக்கும். மழை பொழிவு நன்றாக இருக்கும். சராசரி வெயில் அளவை இந்த வருடம் வெப்பம் அதிகரிக்கும். காட்டில் நெருப்பால் அழிவு ஏற்படலாம். அண்டார்டிகா – அமெரிக்கா – ஐரோப்பிய நாடுகள் – சுமத்ரா தீவு – ஜப்பான் போன்ற இடங்களில் பூகம்பம் வர வாய்ப்புள்ளது. யாராலும் சரியான முறையில் வானிலையை கணித்து கூற முடியாத நிலை ஏற்படலாம். அணு ஆயுதத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். தண்ணீர் தேவை அதிகமாகும். காடுகளை அழிப்பது அதிகமாகும். கடவுளுக்கு எதிராக பேசும் நபர்கள் அதிகமாவார்கள்.

இவ்வாண்டு நடைபெறும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்: வாக்கிய பஞ்சாங்கப்படி:

குருபகவான்: 2019 – நவம்பர் மாதம் 23ம் தேதி (விகாரி வருஷம் – கார்த்திகை மாதம் 7ம் தேதி) தனுசு ராசிக்கு மாறுகிறார். தனுசுக்கு மாறும் குரு பகவான் தனது பஞ்சம பார்வையாக மேஷ ராசியையும் – சப்தம பார்வையாக மிதுன ராசியையும் – நவம பார்வையாக சிம்ம ராசியையும் பார்க்கிறார்.

ராகு நிலை: 2019 – பிப்ரவரி மாதம் 13ம் தேதி (விளம்பி வருஷம் – மாசி மாதம் – 01ம் தேதி) – புதன்கிழமை:

கடக ராசியிலிருக்கும் ராகு பகவான் மிதுன ராசிக்கு மாறுகிறார். மாறும் ராகு பகவான் மேஷம் – சிம்மம் – தனுசு ராசிகளைப் பார்க்கிறார். (சிலர் ராகுவிற்கு பார்வையில்லை என்பர்).

கேது நிலை: 2019 – பிப்ரவரி மாதம் 13ம் தேதி (விளம்பி வருஷம் – மாசி மாதம் – 01ம் தேதி) – புதன்கிழமை:

மகர ராசியிலிருக்கும் கேது பகவான் தனுசு ராசிக்கு மாறுகிறார். மிதுனம் – துலாம் – கும்பம் ஆகிய ராசிகளை பார்க்கிறார் கேது பகவான். (சிலர் கேதுவிற்கு பார்வையில்லை என்பர்).

1. 2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மேஷம்
2. 2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – ரிஷபம்
3. 2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மிதுனம்
4. 2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – கடகம்
5. 2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – சிம்மம்
6. 2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – கன்னி
7. 2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – துலாம்
8. 2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – விருச்சிகம்
9. 2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – தனுசு
10. 2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மகரம்
11. 2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – கும்பம்
12. 2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மீனம்

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 31.12.2018 திங்கட்கிழமை!
Next articleபிறக்கும் 2019 ஜனவரி மாத பலன்கள்! அதிர்ஷ்டத்தின் உச்சத்திற்கு செல்லப்போவது எந்த ராசி?