September 10 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 10

0

Today Special Historical Events In Tamil | 10-09 | September 10

September 10 Today Special | September 10 What Happened Today In History. September 10 Today Whose Birthday (born) | September-10th Important Famous Deaths In History On This Day 10/09 | Today Events In History September-10th | Today Important Incident In History | புரட்டாதி 10 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 10-09 | புரட்டாதி மாதம் 10ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 10.09 Varalatril Indru Nadanthathu Enna| September 10 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 10/09 | Famous People Born Today September 10 | Famous People died Today 10-09.

September 10
  • Today Special in Tamil 10-09
  • Today Events in Tamil 10-09
  • Famous People Born Today 10-09
  • Famous People died Today 10-09
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 10-09 | September 10

    அமெரிக்கப் பழங்குடியினர் மரபு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (கயானா)
    குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. (ஒண்டுராசு)
    தேசிய நாளாக கொண்டாடப்படுகிறது. (ஜிப்ரால்ட்டர்)
    ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது. (சீனா)
    உலக தற்கொலைத் தவிர்ப்பு நாளாக கொண்டாடப்படுகிறது.

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 10-09 | September 10

    1419ல் பர்கண்டி கோமகன் ஜான் பின்னாளில் பிரான்சின் மன்னராகப் பதவியேற்ற ஏழாம் சார்லசினால் கொல்லப்பட்டார்.
    1509ல் கான்ஸ்டண்டினோபில் நகரை நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், 109 பள்ளிவாசல்கள் அழிந்தன. 10,000 பேர் வரை இறந்தனர்.
    1515ல் தாமஸ் வோல்சி கருதினாலாக நியமிக்கப்பட்டார்.
    1570ல் எசுப்பானிய இயேசு சபை மதகுருக்கள் அமெரிக்காவின் இன்றைய வர்ஜீனியாவில் தரையிறங்கினர்.
    1759ல் பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.
    1780ல் இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர்: திப்பு சுல்தானின் படைகளுக்கும், பிரித்தானிய கிழக்கிந்தியப் படைகளுக்கும் இடையே காஞ்சிபுரம் அடுத்துள்ள பொள்ளிலூரில் நடந்த போரில் பிரித்தானிய படை பேரிழப்புகளை சந்தித்தது.
    1798ல் சென். ஜோர்ஜெசு கேய் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரித்தானிய ஒண்டுராசு எசுப்பானியாவைத் தோற்கடித்தது.
    1817ல் 1817-1818 பெரும் கிளர்ச்சி: இலங்கையில் வெல்லசை என்ற இடத்தில் கண்டி கிளர்ச்சி ஆரம்பமானது.
    1823ல் சிமோன் பொலிவார் பெருவின் அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டார்.
    1846ல் எலியாஸ் ஓவே தையல் இயந்திரத்துக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
    1858ல் “55 பண்டோரா” என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
    1898ல் ஆஸ்திரியாவின் அரசி பவேரியாவின் எலிசபெத் கொலை செய்யப்பட்டார்.
    1918ல் உருசிய உள்நாட்டுப் போர்: செஞ்சேனை கசான் நகரைக் கைப்பற்றியது.
    1919ல் போலந்து, அங்கேரி, செக்கோசிலோவாக்கியா, யுகோசுலாவியா ஆகிய நாடுகளின் விடுதலையை ஆஸ்திரியாவும் அதன் கூட்டு நாடுகளும் அங்கீகரித்தன.
    1937ல் நடுநிலக் கடலில் பன்னாட்டுக் கடற்கொள்ளை பற்றிய பிரச்சினையைத் தீர்க்க ஒன்பது நாடுகள் மாநாடு நடத்தின..
    1939ல் இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலியாவின் ஒக்சுலி என்ற நீர்மூழ்கி தவறுதலாக பிரித்தானியாவின் டிரைட்டன் நீர்மூழ்கியினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
    1939ல் இரண்டாம் உலகப் போர்: கனடா செருமனி மீது போரை அறிவித்து, நேச நாடுகளான போலந்து, பிரான்சு, ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, ஆத்திரேலியா ஆகியவற்றுடன் இணைந்தது.
    1942ல் இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய இராணுவம் மடகாசுகரில் தரையிறங்கி மடகாஸ்கர் சண்டையில் நேச நாடுகளின் தாக்குதல்களை மீள ஆரம்பித்தது.
    1943ல் இரண்டாம் உலகப் போர்: ஆக்சே நடவடிக்கையின் போது, செருமனியப் படைகள் உரோமை மீதான ஆக்கிரமிப்பை ஆரம்பித்தது.
    1960ல் எத்தியோப்பியாவின் அபீபி பிக்கிலா உரோமில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மாரத்தான் ஓட்டப்போட்டியில் வெறுங்காலுடன் ஓடித் தங்கப் பதக்கம் பெற்றார்.
    1965ல் இந்தியா-பாகிஸ்தான் போர், 1965: அம்ரித்சர் நகரை பாக்கித்தான பீரங்கிப் படையினர் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
    1967ல் கிப்ரால்ட்டர் மக்கள் பிரித்தானியாவின் கீழ் தொடர்ந்திருக்க வாக்களித்தனர்.
    1974ல் கினி-பிசாவு போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.
    1976ல் பிரித்தானிய விமானம் ஒன்று யுகோசுலாவியாவின் சாகிரேப் நகரில் வேறொரு விமானத்துடன் மோதியதில் 176 பேர் உயிரிழந்தனர்.
    1977ல் பிரான்சில் கடைசித் தடவையாக கழுத்து துண்டிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
    2000ல் சியேரா லியோனியில் இரண்டு கிழமைகளுக்கு மேலாக பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆறு பிரித்தானியப் போர்வீரர்களை பிரித்தானிய இராணுவம் நடத்திய பராசு நடவடிக்கையில் விடுவித்தனர். உள்நாட்டுப் போர் அங்கு முடிவுக்கு வந்தது.
    2000ல் இலங்கை, மட்டக்களப்பு நகர முன்னாள் முதல்வர் செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார்.
    2002ல் சுவிட்சர்லாந்து, ஐநாவில் முழு உறுப்பு நாடாக இணைந்தது.
    2006ல் ஈழப்போர்: முகமாலை முன்னரங்கப் பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 119 பேர் படுகாயம் அடைந்தனர்.
    2007ல் 1999 அக்டோபர் இராணுவப் புரட்சியை அடுத்து, ஏழாண்டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்த பாக்கித்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்பினார்.
    2008ல் வரலாற்றில் மிகப்பெரும் அறிவியல் கருவியான ஐரோப்பிய அணு ஆய்வு நிறுவனத்தின் பெரிய ஆட்ரான் மோதுவி ஜெனீவாவில் இயங்க ஆரம்பித்தது.
    2017ல் கரிபியன் தீவுகளில் தாக்கிய இர்மா சூறாவளியினால் 134 பேர் இறந்தனர்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 10-09 | September 10

    1487ல் திருத்தந்தையான‌ மூன்றாம் ஜூலியுஸ் பிறந்த நாள். (இறப்பு-1555)
    1857ல் அமெரிக்க வானியலாளரான‌ ஜேம்சு எட்வார்டு கீலர் பிறந்த நாள். (இறப்பு-1900)
    1862ல் தமிழறிஞரும் உரையாசிரியரும் கவிஞருமான‌ பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் பிறந்த நாள். (இறப்பு-1914)
    1887ல் உத்தரப் பிரதேசத்தின் 1வது முதலமைச்சரான‌ கோவிந்த் வல்லப் பந்த் பிறந்த நாள். (இறப்பு-1961)
    1892ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளரான‌ ஆர்தர் காம்ப்டன் பிறந்த நாள். (இறப்பு-1962)
    1909ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான‌ வ. நல்லையா பிறந்த நாள். (இறப்பு-1976)
    1912ல் இந்தியாவின் 5வது குடியரசுத் துணைத் தலைவரான‌ பசப்பா தனப்பா ஜாட்டி பிறந்த நாள். (இறப்பு-2002)
    1912ல் பிரித்தானிய-ஆத்திரேலிய-இலங்கை மார்க்சியப் புரட்சியாளரான‌ மார்க் அந்தோனி பிரேசுகர்டில் பிறந்த நாள். (இறப்பு-1999)
    1920ல் புள்ளியியலாளரும் இந்திய-அமெரிக்க கணிதவியலாளருமான‌ சி. ஆர். ராவ் பிறந்த நாள்.
    1929ல் அமெரிக்கக் குழிப்பந்தாட்ட வீரரும் தொழிலதிபருமான‌ ஆர்னால்ட் பால்மர் பிறந்த நாள். (இறப்பு-2016)
    1934ல் தமிழக இசையியல் அறிஞரான‌ பி. எம். சுந்தரம் பிறந்த நாள்.
    1937ல் அமெரிக்க உயிரியலாளரான‌ ஜேரட் டயமண்ட் பிறந்த நாள்.
    1957ல் மலேசிய அரசியல்வாதியான‌ எஸ். கே. தேவமணி பிறந்த நாள்.
    1957ல் இந்திய-பிரித்தானியத் திரைப்படத் தயாரிப்பாளரான‌ சுனந்தா முரளி மனோகர் பிறந்த நாள். (இறப்பு-2017)
    1958ல் அமெரிக்க இயக்குநரான‌ கிரிஷ் கொலம்பஸ் பிறந்த நாள்.
    1960ல் ஆங்கிலேய நடிகரான‌ கொலின் பிர்த் பிறந்த நாள்.
    1964ல் சீன தொழில் முனைவரான‌ ஜாக் மா பிறந்த நாள்.
    1965ல் இந்தியத் திரைப்பட நடிகரான‌ அதுல் குல்கர்ணி பிறந்த நாள்.
    1971ல் விடுதலைப் புலி உறுப்பினரான‌ மேஜர் காந்தரூபன் பிறந்த நாள். (இறப்பு-1990)
    1975ல் தமிழகத் திரையிசைப் பாடலாசிரியரான‌ விவேகா பிறந்த நாள்.
    1978ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ மஞ்சு வாரியர் பிறந்த நாள்.
    1980ல் தமிழ்த் திரைப்பட நடிகரான‌ ஜெயம் ரவி பிறந்த நாள்.
    1984ல் தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகியான‌ சின்மயி பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 10-09 | September 10

    கிமு 210ல் சீனாவின் 1வது பேரரசரான‌ சின் சி ஹுவாங் இறப்பு நாள். (பிறப்பு-கிமு 260)
    1797ல் ஆங்கிலேய மெய்யியலாளரும் எழுத்தாளரருமான‌ மேரி உல்சுடன்கிராஃப்ட் இறப்பு நாள். (பிறப்பு-1759)
    1898ல் ஹங்கேரியின் அரசியான பவேரியாவின் எலிசபெத் இறப்பு நாள். (பிறப்பு-1837)
    1915ல் இந்திய மெய்யியலாளரும் எழுத்தாளருமான‌ பாகாஜதீன் இறப்பு நாள். (பிறப்பு-1879)
    1920ல் அமெரிக்க நடிகையான‌ ஆலிவ் தோமசு இறப்பு நாள். (பிறப்பு-1894)
    1925ல் இந்திய அரசியல்வாதியும் வரலாற்றாளரும் மொழியியலாளரும் வானியலாளருமான‌ எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1865)
    1983ல் தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரான‌ அ. க. செட்டியார் இறப்பு நாள். (பிறப்பு-1911)
    1997ல் இலங்கை அரசியல்வாதியான‌ பாக்கீர் மாக்கார் இறப்பு நாள். (பிறப்பு-1917)
    1998ல் தமிழறிஞரும் பேராசிரியருமான‌ சி. பாலசுப்பிரமணியன் இறப்பு நாள். (பிறப்பு-1935)
    2005ல் ஆத்திரியக் கணிதவியலாளரும் அண்டவியலாளருமான‌ எர்மன் போண்டி இறப்பு நாள். (பிறப்பு-1919)
    2008ல் இலங்கை நாதசுரக் கலைஞரான‌ வி. கே. கானமூர்த்தி இறப்பு நாள். (பிறப்பு-1948)
    2020ல் தமிழ் தொலைக்காட்சி நகைச்சுவை நடிகரும் திரைப்பட நடிகருமான‌ வடிவேல் பாலாஜி இறப்பு நாள். (பிறப்பு-1975)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleSeptember 09 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 09
    Next articleSeptember 11 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 11