September 11 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 11

0

Today Special Historical Events In Tamil | 11-09 | September 11

September 11 Today Special | September 11 What Happened Today In History. September 11 Today Whose Birthday (born) | September-11th Important Famous Deaths In History On This Day 11/09 | Today Events In History September-11st | Today Important Incident In History | புரட்டாதி 11 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 11-09 | புரட்டாதி மாதம் 11ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 11.09 Varalatril Indru Nadanthathu Enna| September 11 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 11/09 | Famous People Born Today September 11 | Famous People died Today 11-09.

September 11
  • Today Special in Tamil 11-09
  • Today Events in Tamil 11-09
  • Famous People Born Today 11-09
  • Famous People died Today 11-09
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 11-09 | September 11

    ஜின்னா நினைவு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (பாக்கித்தான்)
    ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது. (அர்கெந்தீனா)
    தேசிய நாளாக கொண்டாடப்படுகிறது. (காத்தலோனியா)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 11-09 | September 11

    1226ல் முதலாவது கத்தோலிக்க நற்கருணை ஆராதனை பிரான்சு, அவினோன் என்ற இடத்தில் இடம்பெற்றது.
    1297ல் இசுட்டெர்லிங் பாலம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வில்லியம் வேலசு தலைமையில் இசுக்கொட்லாந்துப் படையினர் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர்.
    1541ல் சிலியின் சான் டியேகோ நகரம் பழங்குடிப் போர்வீரர்களால் அழிக்கப்பட்டது.
    1565ல் உதுமானியப் படைகள் மால்ட்டாவில் இருந்து வெளியேறியதை அடுத்து, மால்ட்டா முற்றுகை முடிவுக்கு வந்தது.
    1609ல் என்றி அட்சன் மன்காட்டனை அடைந்து அங்கு பழங்குடியினர் வாழ்வதைக் கண்டார்.
    1649ல் ஆலிவர் கிராம்வெல்லின் ஆங்கிலேய நாடாளுமன்றப் படைகள் அயர்லாந்தின் ட்ரொகேடா நகரைக் கைப்பற்றி ஆயிரக்கணக்கானோரைக் கொன்றனர்.
    1683ல் வியென்னா சமர்: போலந்து மன்னர் மூன்றாம் ஜான் சொபீசுக்கி தலைமையிலான படைகள் துமானியரின் முற்றுகையை முறியடித்தன.
    1708ல் சுவீடனின் பன்னிரண்ட்டாம் சார்லசு மன்னன் தனது மாஸ்கோவின் மீதான படையெடுப்பை சிமோலியென்சுக் என்ற இடத்தில் இடைநிறுத்தினான். இது பெரும் வடக்குப் போரின் ஒரு திருப்பு முனையாகக் கருதப்படுகிறது. அவனது படைகள் 9 மாதங்களின் பின்னர் தோற்கடிக்கப்பட்டன. சுவீடன் பேரரசு உலக வல்லமை என்ற நிலையில் இருந்து தாழ்ந்தது.
    1709ல் பிரித்தானியா, நெதர்லாந்து, ஆஸ்திரியா ஆகியன பிரான்ஸ் மீது போர் தொடுத்தன.
    1714ல் எசுப்பானிய மரபுரிமைப் போர்: காத்தலோனியாவின் தலைநகர் பார்செலோனா எசுப்பானிய மற்றும் பிரெஞ்சு போர்போன் இராணுவத்திடம் சரணடைந்தது.
    1758ல் ஏழாண்டுப் போர்: செயிண்ட் காஸ்டு நகர சமரில் பிரான்சு பிரித்தானிய முற்றுகையை முறியடித்தது.
    1777ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: பிராண்டிவைன் சமரில் பிரித்தானியர் பென்சில்வேனியாவில் பெரும் வெற்றி பெற்றனர்.
    1802ல் பிரான்சு சார்டீனியா பேரரசை இணைத்துக் கொண்டது.
    1803ல் தில்லி போர்: இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரின் போது, பிரித்தானியப் படைகளுக்கும், மராத்தியர்களுக்கும் இடையில் போர் இடம்பெற்றது.
    1813ல் பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: பிரித்தானியப் படைகள் வாசிங்டன், டி. சி.யை ஊடுருவும் நோக்கில் வெர்ணன் மலையை அடைந்தன.
    1934ல் தினமணி நாளிதழ் வெளியிடப்பட்டது.
    1852ல் புரட்சியை அடுத்து புவெனசு ஐரிசு குடியரசாகத் தன்னை அறிவித்துக் கொண்டது.
    1857ல் ஐக்கிய அமெரிக்கா, யூட்டாவில் மெடோசு மலை படுகொலைகள் இடம்பெற்றன. நூற்றுக்கும் அதிகமான ஆர்கன்சஸ் குடியேறிகள் கொல்லப்பட்டனர்.
    1889ல் யாழ்ப்பாணத்தில் இந்து சாதனம் என்ற பத்திரிகை டி. பி. செல்லப்பாபிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது.
    1893ல் முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு சிக்காகோவில் ஆரம்பமானது.
    1897ல் எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மன்னர் கஃபா இராச்சியத்தைக் கைப்பற்றினார்.
    1905ல் நியூயார்க் நகரில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 13 பேர் உயிரிழந்தனர்.
    1906ல் மகாத்மா காந்தி சத்தியாக்கிரகம் என்ற சொற்பதத்தை தென்னாபிரிக்காவில் வன்முறையற்ற இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்.
    1914ல் முதலாம் உலகப் போர்: ஆத்திரேலியா புதிய பிரித்தானியத் தீவினுள் நுழைந்து அங்கு நிலை கொண்டிருந்த செருமனியப் படைகளை வெளியேற்றினர்.
    1916ல் கனடாவின் கியூபெக் பாலத்தின் மத்திய பகுதி உடைந்து வீழ்ந்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர். இப்பாலம் முன்னர் 1907, ஆகத்து 29 இலும் உடைந்தது.
    1919ல் ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் ஒண்டுராசினுள் நுழைந்தனர்.
    1943ல் இரண்டாம் உலகப் போர்: செருமானியப் படைகள் கோர்சிகா மற்றும் கொசோவோவைக் கைப்பற்றின.
    1944ல் இரண்டாம் உலகப் போர்: மேற்கத்திய நேசநாடுகளின் ஜெர்மானியப் படையெடுப்பு ஆகனில் இடம்பெற்றது.
    1944ல் இரண்டாம் உலகப் போர்: செருமனியின் டார்ம்ஸ்டாட் நகரில் இடம்பெற்ற பிரித்தானியரின் குண்டுவீச்சில் 11,500 பேர் கொல்லப்பட்டனர்..
    1945ல் இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலியப் படைகள் போர்னியோவில் சப்பானியரால் நடத்தப்பட்ட போர்க்கைதிகளின் முகாமைக் கைப்பற்றின.
    1945ல் இரண்டாம் உலகப் போர்: போர்னியோ தீவில் சப்பானியரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போர்க்கைதிகளை ஆத்திரேலியப் படையினர் விடுவித்தனர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 2,000 பேர் செப்டம்பர் 15-இல் கொல்லப்படவிருந்தனர்.
    1954ல் சூறாவளி எட்னா புதிய இங்கிலாந்தைத் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர்.
    1965ல் இந்திய-பாக்கித்தான் போர்: இந்தியத் தரைப்படை லாகூருக்குத் தென்கிழக்கே பாக்கித்தானின் பார்க்கி நகரைக் கைப்பற்றியது.
    1968ல் பிரான்சில் நீசு நகரில் விமானம் ஒன்று வீழந்ததில் 95 பேர் உயிரிழந்தனர்.
    1970ல் செப்டம்பர் 6 இல் கடத்தப்பட்ட விமானங்களில் இருந்த 88 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஏனைய இசுரேலியர்கள் செப்டம்பர் 25 வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
    1973ல் சிலியின் மக்களாட்சி அரசு இராணுவப் புரட்சியில் கவிழ்க்கப்பட்டது. அரசுத்தலைவர் சால்வடோர் அயேந்தே கொல்லப்பட்டார். இராணுவத் தலைவர் அகஸ்தோ பினோசெட் ஆட்சியைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சியை நடத்தினார்.
    1974ல் அமெரிக்காவில் வட கரொலைனாவில் சார்லட் நகரில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 71 பேர் உயிரிழந்தனர்.
    1978ல் பெரியம்மை நோயினால் இறந்த கடைசி நபராக ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஜனெட் பார்க்கர் அறியப்படுகிறார்.
    1982ல் பாலத்தீன அகதிகளின் பாதுகாப்புக்கென வந்திருந்த பன்னாட்டுப் படைகள் பெய்ரூத் நகரை விட்டு அகன்றனர். ஐந்து நாட்களின் பின்னர் அங்கு பல்லாயிரக்கணக்கான அகதிகள் கொல்லப்பட்டனர்.
    2001 வான் தாக்குதல்களில் உலக வர்த்தக மையம் எரிகிறது
    1989ல் அங்கேரியில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த கிழக்கு செருமனி அகதிகள் மேற்கு செருமனிக்குள் செல்ல அங்கேரி அனுமதி அளித்தது.
    1992ல் அவாய் தீவை சூறாவளி இனிக்கி தாக்கியதில் தீவு பலத்த சேதத்தைச் சந்தித்தது.
    1997ல் நாசாவின் மார்சு செர்வயர் விண்கலம் செவ்வாயை அடைந்தது.
    1997ல் ஐக்கிய இராச்சியத்தினுள் அடங்கிய தனியான நாடாளுமன்றத்தை அமைக்க இசுக்காட்லாந்து மக்கள் வாக்களித்தனர்.
    1998ல் யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுவெடிப்பில் யாழ்ப்பாண முதல்வர் பொன். சிவபாலன் மற்றும் இலங்கை படைத்துறையின் யாழ் நகரத் தளபதி சுசாந்த மெண்டிஸ் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.[1]
    2001ல் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்: நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது அல் காயிதா தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.
    2005ல் காசா கரையில் இருந்து யூதக் குடியேற்றங்களை அகற்றும் பணியை இசுரேல் முடித்தது.
    2007ல் உருசியா எல்லா வெடிகுண்டுகளினதும் தந்தை என அழைக்கப்படும் மிகப்பெரும் மரபுசார் ஆயுதத்தைச் சோதித்தது.
    2008ல் கால்வாய் சுரங்கத்தில் இடம்பெற்ற தீ விபத்தினால் சுரங்கப் போக்குவரத்து ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டது.
    2012ல் பாக்கித்தானில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் இடம்பெற்ற தீ விபத்தில் 315 பேர் உயிரிழந்தனர்.
    2012ல் லிபியாவில் பங்காசி நகரில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டதில் நால்வர் கொல்லப்பட்டனர்.
    2015ல் சவூதி அரேபியாவில் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலில் இடம்பெற்ற பாரந்தூக்கி விபத்தில் 111 பேர் உயிரிழந்தனர், 394 பேர் காயமடைந்தர்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 11-09 | September 11

    1751ல் சாக்சே-மெய்னிங்கன் அரசவையின் உறுப்பினரான இளவரசி சார்லட்டி பிறந்த நாள். (இறப்பு-1827)
    1798ல் செருமானியக் கனிமவியலாளரும் இயற்பியலாளருமான‌ பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் பிறந்த நாள். (இறப்பு-1895)
    1847ல் அமெரிக்க வானியலாளரான‌ மேரி வாட்சன் வைட்னே பிறந்த நாள். (இறப்பு-1921)
    1862ல் அமெரிக்க எழுத்தாளரான‌ ஓ ஹென்றி பிறந்த நாள். (இறப்பு-1910)
    1874ல் இந்திய வழக்கறிஞரும் விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதியுமான‌ எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் பிறந்த நாள். (இறப்பு-1941)
    1877ல் ஆங்கிலேய இயற்பியலாளரும் வானியலாளரும் கணிதவியலாளருமான‌ ஜேம்சு ஆப்வுட் ஜீன்சு பிறந்த நாள். (இறப்பு-1946)
    1882ல் வழக்கறிஞரும் எழுத்தாளரும் திறனாய்வாளருமான‌ டி. கே. சிதம்பரநாத முதலியார் பிறந்த நாள். (இறப்பு-1954)
    1885ல் ஆங்கிலேய எழுத்தாளரும் கவிஞருமான‌ டி. எச். லாரன்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1930)
    1889ல் சென்னை மாகாண முதல்வரான‌ ப. சுப்பராயன் பிறந்த நாள். (இறப்பு-1962)
    1895ல் இந்திய மெய்யியலாளரும் காந்தியவாதியுமான‌ வினோபா பாவே பிறந்த நாள். (இறப்பு-1982)
    1911ல் இந்தியத் துடுப்பாட்ட வீரரான‌ லாலா அமர்நாத் பிறந்த நாள். (இறப்பு-2000)
    1915ல் இந்திய எழுத்தாளரும் செயல்பாட்டாளருமான‌ பூபுல் செயகர் பிறந்த நாள். (இறப்பு-1997)
    1917ல் பிலிப்பீன்சின் 10வது அரசுத்தலைவரான‌ பேர்டினண்ட் மார்க்கோஸ் பிறந்த நாள். (இறப்பு-1989)
    1944ல் நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளரான‌ செர்கே அரோழ்சி பிறந்த நாள்.
    1945ல் தமிழக மிருதங்கக் கலைஞரான‌ காரைக்குடி மணி பிறந்த நாள்.
    1960ல் நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளரான‌ இரோசி அமானோ பிறந்த நாள்.
    1965ல் சிரியாவின் 21வது அரசுத்தலைவரான‌ பசார் அல்-அசத் பிறந்த நாள்.
    1976ல் தமிழகத் திரைப்பட நடிகரான‌ மனோஜ் பாரதிராஜா பிறந்த நாள்.
    1976ல் இந்தியத் துடுப்பாட்ட வீரரான முரளி கார்த்திக் பிறந்த நாள்.
    1979ல் தென்னிந்திய நடிகையான‌ துலிப் ஜோஷி பிறந்த நாள்.
    1982ல் தென்னிந்திய நடிகையான‌ சிரேயா சரண் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 11-09 | September 11

    1921ல் தமிழகக் கவிஞரும் ஊடகவியலாளரும் விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளருமான‌ சுப்பிரமணிய பாரதி இறப்பு நாள். (பிறப்பு-1882)
    1948ல் பாக்கித்தானின் 1வது ஆளுநரான‌ முகம்மது அலி ஜின்னா இறப்பு நாள். (பிறப்பு-1876)
    1957ல் அமெரிக்க வானியலாளரான‌ மேரி பிராக்டர் இறப்பு நாள். (பிறப்பு-1862)
    1957ல் ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக போராடியவரான‌ இம்மானுவேல் சேகரன் இறப்பு நாள். (பிறப்பு-1924)
    1971ல் சோவியத் தலைவரான‌ நிக்கிட்டா குருசேவ் இறப்பு நாள். (பிறப்பு-1894)
    1973ல் சிலியின் 29வது அரசுத்தலைவரான‌ சால்வடோர் அயேந்தே இறப்பு நாள். (பிறப்பு-1908)
    1978ல் கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் இந்தியக் கர்தினாலான‌ வலேரியன் கிராசியாஸ் இறப்பு நாள். (பிறப்பு-1900)
    1987ல் தமிழக எழுத்தாளரான‌ சாண்டில்யன் இறப்பு நாள். (பிறப்பு-1910)
    1997ல் நேபாளப் பிரதமரான‌ மாத்ரிக பிரசாத் கொய்ராலா இறப்பு நாள். (பிறப்பு-1912)
    1998ல் யாழ்ப்பாண மாநகர முதல்வரான‌ பொன். சிவபாலன் இறப்பு நாள். (பிறப்பு-1952)
    2009ல் கியூபப் புரட்சியாளரான‌ யுவான் அல்மெய்டா இறப்பு நாள். (பிறப்பு-1927)
    2015ல் இலங்கையின் மெல்லிசை மற்றும் திரைப்படப் பாடகரான‌ ஜோசப் ராஜேந்திரன் இறப்பு நாள்.
    2020ல் இலங்கைத் துடுப்பாட்ட வீரரான‌ டோனி ஓபாத்த இறப்பு நாள். (பிறப்பு-1947)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleSeptember 10 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 10
    Next articleSeptember 12 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 12