September 09 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 09

0

Today Special Historical Events In Tamil | 09-09 | September 09

September 09 Today Special | September 09 What Happened Today In History. September 09 Today Whose Birthday (born) | September-09th Important Famous Deaths In History On This Day 09/09 | Today Events In History September-09th | Today Important Incident In History | புரட்டாதி 09 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 09-09 | புரட்டாதி மாதம் 09ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 09.09 Varalatril Indru Nadanthathu Enna| September 09 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 09/09 | Famous People Born Today September 09 | Famous People died Today 09-09.

September 09
  • Today Special in Tamil 09-09
  • Today Events in Tamil 09-09
  • Famous People Born Today 09-09
  • Famous People died Today 09-09
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 09-09 | September 09

    குழந்தைகள் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (கோஸ்ட்டா ரிக்கா)
    விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (வட கொரியா, 1948)
    விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (தஜிகிஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து 1991)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 09-09 | September 09

    337ல் முதலாம் கான்ஸ்டன்டைனுக்குப் பின்னர் அவரது மூன்று மகன்கள் இணைப் பேரரசர்களாக நியமிக்கப்பட்டார்கள். உரோமைப் பேரரசு மூன்றாகப் பிரிந்தது.
    533ல் 15,000 பைசாந்தியப் படை வீரர்கள் செப்பாவில் (இன்றைய தூனிசியா) தரையிறங்கி கார்த்திஜ் நோக்கிச் சென்றனர்.
    1087ல் வில்லியம் ரூபுசு இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் என்ற பெயரில் முடிசூடினார்.
    1493ல் உதுமானியரின் ஆக்கிரமிப்புக்கு எதிரான குரோவாசியர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது.
    1513ல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் இசுக்கொட்லாந்தின் நான்காம் யேம்சு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.
    1543ல் மேரி ஸ்டுவர்ட் 9 மாதக் குழந்தையாக இருக்கும் போது இசுக்காட்லாந்தின் அரசியாக முடி சூடினாள்.
    1739ல் அமெரிக்கப் புரட்சிக்கு முன்னதாக பிரித்தானியாவின் வட அமெரிக்கக் குடியேற்றங்களில் நிகழ்ந்த அடிமைகளின் கிளர்ச்சி தென் கரொலைனாவில் ஆரம்பமானது
    1776ல் அமெரிக்கக் காங்கிரசு அதன் மாநிலங்களின் ஒன்றியத்துக்கு அதிகாரபூர்வமாக அமெரிக்க ஐக்கிய நாடு எனப் பெயரிட்டது.
    1791ல் அரசுத்தலைவர் ஜார்ஜ் வாசிங்டன் நினைவாக ஐக்கிய அமெரிக்காவின் தலைநகருக்கு வாசிங்டன், டி. சி. எனப் பெயரிடப்பட்டது.
    1799ல் பாஞ்சாலக்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.
    1839ல் ஜான் எர்செல் முதலாவது கண்ணாடித் தட்டு ஒளிப்படத்தை எடுத்தார்.
    1850ல் கலிபோர்னியா 31-வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.
    1855ல் கிரிமியப் போர்: செவஸ்தப்போல் நகரில் இருந்து உருசியப் படைகள் விலகின.
    1892ல் எட்வார்டு எமர்சன் பர்னார்டு வியாழனின் மூன்றாவது சந்திரன் அமல்தியாவைக் கண்டுபிடித்தார்.
    1922ல் கிரேக்க-துருக்கியப் போர் துருக்கியரின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.
    1924ல் அமெரிக்காவின் அவாயில், கௌவை நகரில் சர்க்கரைத் தொழிற்சாலைத் தொழிலாளர் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டபோது காவற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
    1939ல் பர்மாவில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய பர்மிய தேசிய வீரர் ஊ ஒட்டாமா சிறையில் இறந்தார்.
    1940ல் வடக்கு டிரான்சில்வேனியாவை உருமேனியாவிடம் இருந்து அங்கேரிக்குக் கையளிக்கும் நிகழ்வில் இடம்பெற்ற கலவரங்களில் 93 உருமேனியரும் யூதர்களும் கொல்லப்பட்டனர்.
    1942ல் இரண்டாம் உலகப் போர்: சப்பானிய விமானம் ஒரிகனில் குண்டுகளை வீசியது.
    1944ல் பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சோவியத்-சார்பு அரசு பதவியேற்றது.
    1945ல் இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சப்பான் சீனாவிடம் சரணடைந்தது.
    1947ல் முதல் தடவையாக மென்பொருள் வழு ஒன்று ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் கணினி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.
    1948ல் கிம் இல்-சுங் கொரிய சனநாயக மக்கள் குடியரசை அதிகாரபூர்வமாக அமைத்தார்.
    1954ல் அல்சீரியாவில் இடம்பெற்ற 6.7 அளவு நிலநடுக்கத்தில் 1,243 பேர் உயிரிழந்தனர்.
    1965ல் நியூ ஓர்லென்ஸ் அருகே பெட்சி சூறாவளி தாக்கியதில் 76 பேர் உயிரிழந்தனர்,
    1969ல் கனடாவில் பிரெஞ்சு மொழியும் ஆங்கிலமும் நடுவண் அரசு முழுவதும் அதிகாரபூர்வ மொழிகளாக அறிவிக்கப்பட்டன.
    1970ல் பிரித்தானிய விமானம் ஒன்று பாலத்தீனப் போராளிகளால் கடத்தப்பட்டு யோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
    1971ல் நியூயார்க்கில் அட்டிக்கா சிறைச்சாலையில் நான்கு-நாள் கலவரம் ஆரம்பமானது. இறுதியில் 39 பேர் கொல்லப்பட்டனர்.
    1990ல் சத்துருக்கொண்டான் படுகொலை: மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.
    1991ல் சோவியத் ஒன்றியத்தில் இருந்து தஜிகிஸ்தான் விடுதலையடைந்தது.
    1993ல் பலத்தீன விடுதலை இயக்கம் இசுரேலைத் தனிநாடாக அங்கீகரித்தது.
    2001ல் ஆப்கானித்தானில் வடக்குக் கூட்டணித் அகமது சா மசூது இரண்டு அல் காயிதா தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    2004ல் இந்தோனீசியா, ஜகார்த்தாவில் ஆத்திரேலியத் தூதரகத்துக்கு முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
    2002ல் பீகாரில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 130 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
    2009ல் துபை மெட்ரோ சேவை ஆரம்பிக்கப்பட்டது.
    2012ல் ஈராக்கில் இடம்பெற்ற பல்முனைத் தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
    2015ல் ஐக்கிய இராச்சியத்தில் அதிக காலத்துக்கு ஆட்சியில் இருந்தவர் என்ற பெருமையை இரண்டாம் எலிசபெத் பெற்றார்.
    2016ல் வட கொரியா தனது ஐந்தாவதும், மிகப்பெரியதுமான அணுவாயுத சோதனையை மேற்கொண்டது.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 09-09 | September 09

    1789ல் அமெரிக்க வானியலாளரான‌ வில்லியம் கிரேஞ்சு பாண்டு பிறந்த நாள். (இறப்பு-1859)
    1828ல் உருசிய எழுத்தாளரான‌ லியோ டால்ஸ்டாய் பிறந்த நாள். (இறப்பு-1910)
    1899ல் தமிழக எழுத்தாளரும் இதழாசிரியருமான‌ கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி பிறந்த நாள். (இறப்பு-1954)
    1916ல் தமிழக அரசியல்வாதியான‌ ஏ. சேனாபதி கவுண்டர் பிறந்த நாள். (இறப்பு-1992)
    1925ல் தமிழக அரசியல்வாதியான‌ இராம. வீரப்பன் பிறந்த நாள்.
    1941ல் சி நிரலாக்க மொழியைக் கண்டுபிடித்த அமெரிக்கரான‌ தென்னிசு இரிட்சி பிறந்த நாள். (இறப்பு-2011)
    1945ல் தமிழக எழுத்தாளரான‌ அரசு மணிமேகலை பிறந்த நாள். (இறப்பு-2001)
    1949ல் இந்தோனேசியாவின் 6வது அரசுத் தலைவரான‌ சுசீலோ பாம்பாங் யுதயோனோ பிறந்த நாள்.
    1953ல் தென்னிந்திய நடிகையான‌ மஞ்சுளா பிறந்த நாள். (இறப்பு-2013)
    1966ல் அமெரிக்க நடிகரான‌ ஆடம் சேண்ட்லர் பிறந்த நாள்.
    1967ல் இந்திய நடிகரான‌ அக்‌ஷய் குமார் பிறந்த நாள்.
    1968ல் பாக்கித்தானிய அரசியல்வாதியான‌ சாபாசு பட்டி பிறந்த நாள். (இறப்பு-2011)
    1991ல் பிரேசில் கால்பந்தாட்ட வீரரான ஒஸ்கார் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 09-09 | September 09

    1087ல் இங்கிலாந்தின் அரசனான‌ முதலாம் வில்லியம் இறப்பு நாள். (பிறப்பு-1028)
    1569ல் டச்சு ஓவியரான‌ பீட்டர் புரூகல் இறப்பு நாள். (பிறப்பு-1525)
    1947ல் கலாயோகியான‌ ஆனந்த குமாரசுவாமி இறப்பு நாள். (பிறப்பு-1877)
    1976ல் சீனப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும் மெய்யியலாளருமான‌ மா சே துங் இறப்பு நாள். (பிறப்பு-1893)
    2000ல் அமெரிக்க இயற்பியலாளரும் வானியலாளருமான‌ எர்பெர்ட் ஃபிரீடுமேன் இறப்பு நாள். (பிறப்பு-1916)
    2000ல் மொரிசியசு ஆளுனரான‌ வீராசாமி ரிங்காடு இறப்பு நாள். (பிறப்பு-1920)
    2003ல் அங்கேரிய-அமெரிக்க இயற்பியலாளரான‌ எட்வர்ட் டெல்லர் இறப்பு நாள். (பிறப்பு-1908)
    2005ல் தமிழக அரசியல்வாதியான‌ இளையபெருமாள் இறப்பு நாள். (பிறப்பு-1924)
    2011ல் தமிழக நடிகையான‌ காந்திமதி இறப்பு நாள்.
    2012ல் பிபிசி தமிழோசை ஒலிபரப்பாளரான‌ சங்கர் சங்கரமூர்த்தி இறப்பு நாள்.
    2012ல் இந்தியத் தொழிலதிபரான‌ வர்கீஸ் குரியன் இறப்பு நாள். (பிறப்பு-1921)
    2014ல் வங்காளதேசப் பாடகியான‌ பிரோசா பேகம் இறப்பு நாள். (பிறப்பு-1930)
    2015ல் இலங்கைத் தமிழ் இயற்பியலாளரும் கல்வியாளருமான‌ கே. குணரத்தினம் இறப்பு நாள். (பிறப்பு‍அ1934)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleSeptember 08 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 08
    Next articleSeptember 10 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 10