September 08 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 08

0

Today Special Historical Events In Tamil | 08-09 | September 08

September 08 Today Special | September 08 What Happened Today In History. September 08 Today Whose Birthday (born) | September-08th Important Famous Deaths In History On This Day 08/09 | Today Events In History September-08th | Today Important Incident In History | புரட்டாதி 08 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 08-09 | புரட்டாதி மாதம் 08ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 08.09 Varalatril Indru Nadanthathu Enna| September 08 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 08/09 | Famous People Born Today September 08 | Famous People died Today 08-09.

September 08
  • Today Special in Tamil 08-09
  • Today Events in Tamil 08-09
  • Famous People Born Today 08-09
  • Famous People died Today 08-09
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 08-09 | September 08

    மரியாவின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. (கத்தோலிக்க திருச்சபை), (ஆங்கிலோ-கத்தோலிக்கம்)
    தேசிய நாளாக‌ கொண்டாடப்படுகிறது.(அந்தோரா)
    வெற்றி நாளாக‌ கொண்டாடப்படுகிறது.(பாக்கித்தான்)
    வெற்றி நாளாக‌ கொண்டாடப்படுகிறது.(மால்ட்டா)
    விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது.(மாக்கடோனியக் குடியரசு, யுகோசுலாவியாவில் இருந்து 1991)
    தேசிய கண் கொடை நாளாக‌ கொண்டாடப்படுகிறது.(இந்தியா)
    அனைத்துலக எழுத்தறிவு நாளாக கொண்டாடப்படுகிறது.
    உலக இயன்முறை மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 08-09 | September 08

    617ல் லி யுவான் சுயி சீன இராணுவத்தைத் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் பின்னர் தாங் சீனப் பேரரசை உருவாக்க வழிவகுத்தது.
    1198ல் பிலிப்பு செருமனியின் மன்னராக முடி சூடினார்.
    1276ல் இருபத்தோராம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    1331ல் இசுடெபான் துசான் செர்பியாவின் மன்னராகத் தன்னை அறிவித்தார்.
    1380ல் குலிக்கோவோ சமரில் உருசியப் படைகள் தத்தார்களையும், மங்கோலியர்களையும் தோற்கடித்தன.
    1504ல் மைக்கலாஞ்சலோவின் தாவீது சிற்பம் புளோரன்சில் திறந்து வைக்கப்பட்டது.
    1514ல் நூற்றாண்டின் மிகப்பெரும் ஓர்சா சமரில் லித்துவேனியாவும் போலந்தும் இணைந்து உருசியாவைத் தோற்கடித்தன.
    1522ல் பெர்டினென்ட் மகலனின்: விக்டோரியா கப்பல் தனது முதலாவது உலகப் பயணத்தை முடித்துக் கொண்டு செவீயா திரும்பியது.
    1565ல் மே 18 இல் ஆரம்பமான மால்ட்டா மீதான உதுமானியரின் முற்றுகை முடிவடைந்தது.
    1655ல் வார்சாவா நகரம் சுவீடனின் ஒரு சிறிய படையிடம் வீழ்ந்தது.
    1727ல் இங்கிலாந்து, பர்வெல் என்ற இடத்தில் குழந்தைகள் பொம்மைக் களியாட்ட விழா ஒன்றில் இடம்பெற்ற பெருந்தீ விபத்தில் 78 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர்.
    1761ல் ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் சார்லட்டைத் திருமணம் புரிந்தார்.
    1775ல் மால்ட்டாவில் மதகுருக்களின் கிளர்ச்சி அடக்கப்பட்டது.
    1796ல் பிரெஞ்சுப் படையினர் ஆத்திரியப் படைகளைத் பசானோ சமரில் தோற்கடித்தனர்.
    1831ல் நான்காம் வில்லியம் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முடிசூடினார்.
    1860ல் லேடி எல்ஜின் என்ற நீராவிக் கப்பல் மிச்சிகன் ஏரியில் மூழ்கியதில் 300 பேர் வரை உயிரிழந்தனர்.
    1888ல் லண்டனில் கிழிப்பர் ஜேக்கினால் கொல்லப்பட்ட இரண்டாவது நபரான அன்னி சேப்மனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
    1900ல் டெக்சாசை சூறாவளி கால்வெஸ்டன் தாக்கியதில் 8,000 பேர் வரை உயிரிழந்தனர்.
    1905ல் தெற்கு இத்தாலியில் 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 557 முதல் 2,500 பேர் வரை உயிரிழந்தனர்.
    1914ல் முதலாம் உலகப் போர்: போரின் போது அணியை விட்டு வெளியேறிய பிரித்தானியப் படைவீரர் தோமசு ஐகேட்டு என்பவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
    1923ல் கலிபோர்னியாவில் ஏழு அமெரிக்கக் கடற்படைக்கப்பல்கள் மூழ்கின, 23 மாலுமிகள் உயிரிழந்தனர்.
    1925ல் எசுப்பானியப் படைகள் பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையில் மொரோக்கோவில் தரையிறங்கின.
    1926ல் செருமனி உலக நாடுகள் சங்கத்தில் இணைந்தது.
    1933ல் ஈராக்கின் மன்னராக காசி பின் பைசல் முடி சூடினார்.
    1934ல் நியூ செர்சிக் கரையில் பயணிகள் கப்பல் தீப்பற்றி எரிந்ததில் 137 பேர் உயிரிழந்தனர்.
    1941ல் இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகளின் லெனின்கிராட் முற்றுகை ஆரம்பமானது.
    1943ல் இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் இத்தாலி-நேசநாட்டுப் படைகள் இடையே போர் நிறுத்தத்தைப் பொது மக்களுக்கு அறிவித்தார்.
    1944ல் இரண்டாம் உலகப் போர்: வி-2 ஏவுகணை மூலம் முதல் தடவையாக லண்டன் நகரம் செருமனியினால் தாக்கப்பட்டது.
    1945ல் சோவியத் படைகள் வட கொரியாவை ஒரு மாதத்திற்கு முன்னர் கைப்பற்றியமைக்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் தரையிறங்கின.
    1946ல் பல்கேரியாவில் முடியாட்சி பொது வாக்கெடுப்பு மூலம் ஒழிக்கப்பட்டது.
    1954ல் தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு நிறுவப்பட்டது.
    1970ல் நியூயார்க் நகரில் கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து வானூர்தி ஒன்று புறப்பட்ட போது விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழந்தனர்.[1]
    1974ல் வாட்டர்கேட் சர்ச்சை: பதவியில் இருக்கும் போது குற்றங்கள் இழைத்தமைக்காக ரிச்சார்ட் நிக்சனுக்கு மன்னிப்பு வங்கும் உத்தரவில் அமெரிக்க அரசுத் தலைவர் ஜெரால்ட் ஃபோர்ட் கையெழுத்திட்டார்.
    1978ல் கறுப்பு வெள்ளி: தெகுரானில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவத்தினர் சுட்டதில் 700–3000 பேர் வரை கொல்லப்பட்டனர். இது ஈரானில் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுத்தது.
    1989ல் டென்மார்க்கில் விமானம் ஒன்று வட கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 55 பேரும் உயிரிழந்தனர்.
    1991ல் மாக்கடோனியக் குடியரசு விடுதலை அடைந்தது.
    1994ல் அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் விமான நிலையத்தில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 132 பேரும் உயிரிழந்தனர்.
    2006ல் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாலேகான் நகரில் மசூதி, மற்றும் சந்தைப் பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
    2016ல் நாசா ஒசைரிசு-ரெக்சு என்ற தனது சிறுகோள்-நோக்கிய விண்கலத்தை ஏவியது. இது 101955 பென்னு என்ற சிறுகோளில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு 2023 இல் பூமி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 08-09 | September 08

    1157ல் இங்கிலாந்தின் அரசராக இருந்த முதலாம் ரிச்சார்ட் பிறந்த நாள். (இறப்பு-1199)
    1841ல் செக் நாட்டு இசையமைப்பாளரான‌ அன்டனின் டுவோராக் பிறந்த நாள். (இறப்பு-1904)
    1887ல் அத்வைத வேதாந்த குருவான‌ சுவாமி சிவானந்தர் பிறந்த நாள். (இறப்பு-1964)
    1913ல் தமிழக நகைச்சுவை எழுத்தாளரான‌ தேவன் பிறந்த நாள். (இறப்பு-1957)
    1915ல் பிலிப்பீனிய எழுத்தாளரும் கவிஞருமான‌ என். வி. எம். கொன்சாலெசு பிறந்த நாள். (இறப்பு-1999)
    1926ல் இந்தியக் கவிஞரும் இயக்குநருமான‌ பூபேன் அசாரிகா பிறந்த நாள். (இறப்பு-2011)
    1933ல் இந்தியப் பாடகியான‌ ஆஷா போசுலே பிறந்த நாள்.
    1944ல் இந்தியப் பாடகியான‌ பத்மினி பிரியதர்சினி பிறந்த நாள். (இறப்பு-2016)
    1946ல் நோபல் பரிசு பெற்ற துருக்கிய-அமெரிக்க வேதியியலாளரான‌ அசீசு சாஞ்சார் பிறந்த நாள்.
    1954ல் ஐயுறவாளர் சங்கத்தைத் தோற்றுவித்த அமெரிக்க வரலாற்றாளரான‌ மைக்கல் செர்மர் பிறந்த நாள்.
    1962ல் செருமானிய நடிகரான‌ தோமஸ் கிரெட்ச்மன் பிறந்த நாள்.
    1971ல் ஆங்கிலேய நடிகரான‌ மார்ட்டின் பிறீமன் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 08-09 | September 08

    1613ல் இத்தாலிய இசையமைப்பாளரான‌ கார்லோ கேசுவால்தோ இறப்பு நாள். (பிறப்பு-1566)
    1851ல் உருசிய சமூகவியலாளரான‌ மக்சிம் கோவலவ்சுகி இறப்பு நாள். (பிறப்பு-1916)
    1895ல் செருமானிய பொறியியலாளரான‌ ஆடம் ஓப்பெல் இறப்பு நாள். (பிறப்பு-1837)
    1939ல் இராமகிருஷ்ணரின் சீடரான‌ சுவாமி அபேதானந்தர் இறப்பு நாள். (பிறப்பு-1866)
    1943ல் செக் நாட்டு ஊடகவியலாளரான‌ ஜுலியஸ் பூசிக் இறப்பு நாள். (பிறப்பு-1903)
    1960ல் இந்திய அரசியல்வாதியும் பத்திரிக்கையாளருமான‌ பெரோஸ் காந்தி இறப்பு நாள். (பிறப்பு-1912)
    1978ல் தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான‌ சாண்டோ சின்னப்பா தேவர் இறப்பு நாள். (பிறப்பு-1915)
    1980ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளரான‌ வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி இறப்பு நாள். (பிறப்பு-1908)
    1981ல் நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளரான‌ ஹிடேகி யுகாவா இறப்பு நாள். (பிறப்பு-1907)
    1982ல் சம்மு காசுமீர் அரசியல்வாதியான‌ சேக் அப்துல்லா இறப்பு நாள். (பிறப்பு-1905)
    1983ல் இலங்கை இடதுசாரி அரசியல்வாதியும் எழுத்தாளரும் வழக்கறிஞருமான‌ வி. காராளசிங்கம் இறப்பு நாள். (பிறப்பு-1921)
    1985ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவரான‌ ஜான் பிராங்கிளின் எண்டர்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1887)
    2003ல் செருமானிய நடிகையும் இயக்குநரான‌ லெனி ரீபென்ஸ்டால் இறப்பு நாள். (பிறப்பு-1902)
    2008ல் தமிழக வயலின் இசைக்கலைஞரான‌ குன்னக்குடி வைத்தியநாதன் இறப்பு நாள். (பிறப்பு-1935)
    2010ல் தமிழ்த் திரைப்பட நடிகரான‌ முரளி இறப்பு நாள். (பிறப்பு-1964)
    2011ல் தமிழகக் கவிஞரும் இதழாசிரியருமான‌ ஆடற்கோ இறப்பு நாள்.
    2012ல் ஐடியோவைத் தோற்றுவித்த ஆங்கிலேய-அமெரிக்கரான‌ பில் மாக்ரிட்ஜ் இறப்பு நாள். (பிறப்பு-1943)
    2019ல் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான‌ ராம் ஜெத்மலானி இறப்பு நாள். (பிறப்பு-1923)
    2021ல் தமிழகக் கவிஞரும் பாடலாசிரியயுமான‌ புலமைப்பித்தன் இறப்பு நாள். (பிறப்பு-1935)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleBharathiyar Padalgal in Tamil PDF பாரதியார் பாடல்கள் தொகுப்பு!
    Next articleSeptember 09 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 09