October 30 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 30

0

Today Special Historical Events In Tamil | 30-10 | October 30

October 30 Today Special | October 30 What Happened Today In History. October 30 Today Whose Birthday (born) | October -30th Important Famous Deaths In History On This Day 30/10 | Today Events In History October-30th | Today Important Incident In History | ஐப்பசி 30 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 30-10 | ஐப்பசி மாதம் 30ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 30.10 Varalatril Indru Nadanthathu Enna| October 30 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 30/10 | Famous People Born Today October 30 | Famous People died Today 30-10.

 • Today Special in Tamil 30-10
 • Today Events in Tamil 30-10
 • Famous People Born Today 30-10
 • Famous People died Today 30-10
 • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 30-10 | October 30

  விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (சிலோவாக்கியா)
  தேவர் செயந்தி நாளாக கொண்டாடப்படுகிறது.

  வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 30-10 | October 30

  637ல் அந்தியோக்கியா ராசிதீன் கலீபாக்கள் தலைமையிலான முசுலிம் படையினரிடம் வீழ்ந்தது.
  758ல் குவாங்சோவை அரபு, பாரசீக கடற்கொள்ளையர் கைப்பற்றினர்.
  1270ல் சிசிலியின் முதலாம் சார்லசிற்கும் தூனிசின் சுல்தானுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எற்பட்டதை அடுத்து 8-வது சிலுவைப் போரும் தூனிசு மீதான முற்றுகையும் முடிவுக்கு வந்தன.
  1485ல் ஏழாம் என்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
  1502ல் வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்.
  1657ல் எசுப்பானியப் படைகள் யமேக்காவை மீளக் கைப்பற்றுவதில் தோல்வி கண்டது.
  1817ல் வெனிசுவேலாவில் சுதந்திர அரசொன்றை சிமோன் பொலிவார் அமைத்தார்.
  1831ல் ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த நாட் டர்னர் வர்ஜீனியாவில் கைது செய்யப்பட்டார்.
  1863ல் டென்மார்க்கு இளவரசர் வில்லெம் முதலாம் ஜார்ஜ் என்ற பெயரில் கிரேக்க மன்னராக முடிசூடும் நோக்குடன் ஏதென்சை சென்றடைந்தார்.
  1864ல் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஹெலேனா குடியேற்ற நாடு நிறுவப்பட்டது.
  1905ல் உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு முதலாவது அரசியலமைப்பை அறிவித்து பிரதிநிதிகள் அவையை நிறுவினார். (இது யூலியன் நாட்காட்டியில் அக்டோபர் 17 இல் இடம்பெற்றது).
  1918ல் உதுமானியப் பேரரசு கூட்டுப் படைகளுடன் உடன்பாட்டுக்கு வந்ததில் மத்திய கிழக்கில் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
  1920ல் அவுஸ்திரேலியக் கம்யூனிஸ்ட் கட்சி சிட்னியில் அமைக்கப்பட்டது.
  1925ல் ஜான் லோகி பைர்டு பிரித்தானியாவின் முதலாவது தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார்.
  1941ல் இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதிய கடன்-குத்தகை ஒப்பந்தத்தில் வழங்க பிராங்க்ளின் ரூசவெல்ட் ஒப்புதல் வழங்கினார்.
  1941ல் மேற்கு உக்ரைனில் 1,500 யூதர்கள் நாசிகளினால் பெல்செக் வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர்.
  1945ல் இந்தியா ஐநாவில் இணைந்தது.
  1947ல் உலக வணிக அமைப்பை ஏற்படுத்துவதற்கு முன்னோடியாக கட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம் நிறுவப்பட்டது.
  1953ல் பனிப்போர்: பொதுவுடைமைவாதிகளுக்கு எதிரான போரில், அணு ஆயுதங்களை அபிவிருத்தி செய்வதற்கான உத்தரவில் அமெரிக்கத் தலைவர் டுவைட் டி. ஐசனாவர் கையெழுத்திட்டார்.
  1960ல் முதலாவது வெற்றிகரமான சிறுநீரகக் கொடை ஐக்கிய இராச்சியத்தில் அளிக்கப்பட்டது.
  1961ல் சோவியத் ஒன்றியம் 50 மெகாதொன் அளவுள்ள சார் வெடிகுண்டு என்ற அணுகுண்டை வெடிக்க வைத்தது. இதுவே இந்நாள் வரை வெடிக்கப்பட்ட மிகப்பெரிய அணுகுண்டாகும்.
  1961ல் ஜோசப் ஸ்டாலினின் உடல் மாஸ்கோவின் கிரெம்லினில் லெனின் நினைவகத்தில் இருந்து அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.
  1964ல் இலங்கையின் மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
  1970ல் வியட்நாமில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 293 பேர் உயிரிழந்து, 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.
  1973ல் ஐரோப்பாவையும் ஆசியாவையும் பொசுபோரசு நீரிணைக்கு மேலாக இணைக்கும் பொசுபோரசு பாலம் துருக்கியின் இசுதான்புல் நகரில் அமைக்கப்பட்டது.
  1983ல் ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் அர்கெந்தீனாவில் முதற்தடவையாகத் தேர்தல் இடம்பெற்றது.
  1985ல் சாலஞ்சர் விண்ணோடம் தனது கடைசி வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்தது.
  1993ல் வட அயர்லாந்து, கிரேசுடீன் என்ற இடத்தில் ஆலோவீன் விழா ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.
  1995ல் கனடாவில் இருந்து பிரிந்து செல்ல கியூபெக் மாநிலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு 50.6% to 49.4% என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.
  2001ல் இலங்கைப் பிரதமர் பேசவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் இறந்தனர், 15 பேர் காயமடைந்தனர்.
  2006ல் ஜெனீவாவில் விடுதலைப் புலிகளிக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன.
  2014ல் பாலத்தீன நாட்டை சுவீடன் அங்கீகரித்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாலத்தீனத்தை அங்கீகரித்த முதல் நாடு இதுவாகும்.
  2015ல் உருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 64 பேர் உயிரிழந்தனர், 147 பேர் காயமடைந்தனர்.

  வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 30-10 | October 30

  1632ல் ஆங்கிலேய இயற்பியலாளரும் கணிதவியலாளரும் கட்டிடக் கலைஞருமான‌ கிறிஸ்டோபர் ரென் பிறந்த நாள். (இறப்பு-1723)
  1735ல் அமெரிக்காவின் 2வது அரசுத் தலைவரான‌ ஜான் ஆடம்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1826)
  1885ல் அமெரிக்கக் கவிஞரான‌ எஸ்ரா பவுண்ட் பிறந்த நாள். (இறப்பு-1972)
  1896ல் அமெரிக்கப் போர் வீரரான‌ ஹேரி ஆர். ட்ரூமன் பிறந்த நாள். (இறப்பு-1980)
  1898ல் தமிழறிஞரான‌ இராய. சொக்கலிங்கம் பிறந்த நாள். (இறப்பு-1974)
  1908ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான‌ முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள். (இறப்பு-1963)
  1909ல் இந்திய-பிரெஞ்சு இயற்பியலாளரான‌ ஓமி பாபா பிறந்த நாள். (இறப்பு-1966)
  1916ல் தமிழக எழுத்தாளரான‌ லா. சா. ராமாமிர்தம் பிறந்த நாள். (இறப்பு-2007)
  1932ல் இந்திய வரலாற்றாளரான‌ பருண் டே பிறந்த நாள். (இறப்பு-2013)
  1936ல் இலங்கை அரசியல்வாதியான‌ ஏ. ஆர். எம். அப்துல் காதர் பிறந்த நாள்.
  1941ல் நோபல் பரிசு பெற்ற செருமனிய இயற்பியலாளரான‌ தியோடர் வொல்ப்காங் ஹான்ஸ் பிறந்த நாள்.
  1942ல் இலங்கை அரசியல்வாதியான‌ சமல் ராஜபக்ச பிறந்த நாள்.
  1953ல் அமெரிக்க நடிகரும் இயக்குநருமான‌ சார்லஸ் மார்டின் ஸ்மித் பிறந்த நாள்.
  1960ல் எர்ச்செந்தீனக் கால்பந்து வீரரான‌ டீகோ மரடோனா பிறந்த நாள்.
  1962ல் யமேக்கத் துடுப்பாளரான‌ கொட்னி வோல்சு பிறந்த நாள்.
  1966ல் தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான‌ கே. வி. ஆனந்த் பிறந்த நாள்.
  1972ல் ஈழத்து அரசியல் ஆய்வாளரான புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி பிறந்த நாள். (இறப்பு-2009)

  வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 30-10 | October 30

  1883ல் இந்திய மெய்யியலாளரும் தயானந்த சரசுவதி இறப்பு நாள். (பிறப்பு-1824)
  1910ல் செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்தவருமான ஹென்றி டியூனாண்ட் இறப்பு நாள். (பிறப்பு-1828)
  1963ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான‌ முத்துராமலிங்கத் தேவர் இறப்பு நாள். (பிறப்பு-1908)
  1969ல் தமிழக சமய சொற்பொழிவாளரான‌ அனந்தராம தீட்சிதர் இறப்பு நாள். (பிறப்பு-1903)
  1972ல் சீக்கிய சமய மற்றும் அரசியல் தலைவரான‌ பதே சிங் இறப்பு நாள். (பிறப்பு-1911)
  1973ல் தமிழக அரசியல்வாதியான‌ ரா. கிருஷ்ணசாமி நாயுடு இறப்பு நாள். (பிறப்பு-1902)
  1974ல் இந்தியப் பாடகியும் நடிகையுமான‌ பேகம் அக்தர் இறப்பு நாள். (பிறப்பு-1914)
  1979ல் இலங்கையின் முற்போக்கு இலக்கிய கவிஞரான‌ சுபத்திரன் இறப்பு நாள். (பிறப்பு-1935)
  1990ல் இந்திய நடிகரும் இயக்குநருமான‌ வி. சாந்தாராம் இறப்பு நாள். (பிறப்பு-1901)
  1994ல் இந்திய அரசியல்வாதியான‌ சுவரண் சிங் இறப்பு நாள். (பிறப்பு-1907)
  1997ல் புதுவைத் தமிழறிஞரான‌ சுந்தர சண்முகனார் இறப்பு நாள். (பிறப்பு-1922)
  1999ல் இலங்கை மலையகத் தமிழர்களின் அரசியல் மற்றும் தொழிற்சங்கத் தலைவரான‌ சௌமியமூர்த்தி தொண்டமான் இறப்பு நாள். (பிறப்பு-1913)
  2007ல் தமிழக எழுத்தாளரான‌ லா. சா. ராமாமிர்தம் இறப்பு நாள். (பிறப்பு-1916)
  2009ல் இந்திய அரசியல்வாதியான‌ பொ. மோகன் இறப்பு நாள். (பிறப்பு-1949)
  2010ல் டச்சுக் கவிஞரான‌ ஆரி முலிச் இறப்பு நாள். (பிறப்பு-1927)

  வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

  By: Tamilpiththan

  உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

  Previous articleOctober 29 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 29
  Next articleOctober 31 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 31