October 29 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 29

0

Today Special Historical Events In Tamil | 29-10 | October 29

October 29 Today Special | October 29 What Happened Today In History. October 29 Today Whose Birthday (born) | October -29th Important Famous Deaths In History On This Day 29/10 | Today Events In History October-29th | Today Important Incident In History | ஐப்பசி 29 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 29-10 | ஐப்பசி மாதம் 29ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 29.10 Varalatril Indru Nadanthathu Enna| October 29 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 29/10 | Famous People Born Today October 29 | Famous People died Today 29-10.

 • Today Special in Tamil 29-10
 • Today Events in Tamil 29-10
 • Famous People Born Today 29-10
 • Famous People died Today 29-10
 • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 29-10 | October 29

  உலக பக்கவாத நாளாக கொண்டாடப்படுகிறது.
  குடியரசு நாளாக கொண்டாடப்படுகிறது. (துருக்கி, 1923)

  வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 29-10 | October 29

  கிமு 539ல் பாரசீகப் பேரரசை நிறுவிய சைரசு பாபிலோனின் தலைநகரை அடைந்து, யூதர்கள் அனைவரையும் அவர்களது நாட்டுக்குத் திரும்ப அனுமதித்தார்.
  312ல் முதலாம் கான்ஸ்டன்டைன் மில்வியன் சமரில் பெரும் வெற்றி பெற்று உரோம் திரும்பினான். அங்கு அவனுக்குப் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
  969ல் பைசாந்தியப் படையினர் சிரியாவின் அந்தியோக்கியா நகரைக் கைப்பற்றினர்.
  1390ல் மந்திரவாதிகளுக்கு எதிரான முதலாவது வழக்கு பாரிசில் இடம்பெற்றது. வழக்கின் இறுதியில் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
  1591ல் ஒன்பதாம் இனொசெண்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  1618ல் ஆங்கிலேயக் கவிஞரும் நாடுகாண் பயணியுமான சேர் வால்ட்டர் ரேலி இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னருக்கு எதிராக சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனக்குள்ளாக்கப்பட்டார்.
  1665ல் போர்த்துக்கீசப் படையினர் கொங்கோ பேரரசைத் தோற்கடித்து அதன் மன்னன் முதலாம் அந்தோனியோவைக் கொன்றனர்.
  1675ல் லைப்னித்சு முதற்தடவையாக ∫ என்ற குறியீட்டை நுண்கணிதத்தில் தொகையீட்டைக் குறிக்கப் பயன்படுத்தினார்.
  1832ல் இந்தியாவில் பங்களூரில் நிலை கொண்டிருந்த பிரித்தானியப் படையினருக்கு எதிராக நடத்தப்படவிருந்த சிப்பாய்களின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
  1863ல் ஜெனீவாவில் கூடிய 18 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர்.
  1886ல் அன்றைய பிரித்தானிய இந்திய அரசுக்கும், திருவாங்கூர் மன்னருக்கும் இடையே முல்லைப் பெரியாறு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
  1901ல் அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லியைக் கொலை செய்த குற்றத்திற்காக லியோன் சொல்கோஸ் என்பவனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
  1914ல் உதுமானியப் பேரரசு முதலாம் உலகப் போரில் இறங்கியது.
  1922ல் பெனிட்டோ முசோலினி இத்தாலியின் பிரதமராக மூன்றாம் விக்டர் இம்மானுவேல் மன்னரால் நியமிக்கப்பட்டார்.
  1923ல் உதுமானியப் பேரரசு கலைந்ததைத் தொடர்ந்து துருக்கி குடியரசானது.
  1929ல் 1929 வால் வீதி வீழ்ச்சி: “கருப்பு செவ்வாய்” என அழைக்கப்பட்ட இந்நாளில் நியூ யோர்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. பெரும் பொருளியல் வீழ்ச்சி ஆரம்பமானது.
  1941ல் பெரும் இன அழிப்பு: லித்துவேனியாவில் செருமனியப் படையினரால் 10,000 வரையான யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  1944ல் இரண்டாம் உலகப் போர்: சோவியத் செஞ்சேனை அங்கேரியை அடைந்தது.
  1948ல் கலிலேயாவில் சாஃப்சாஃப் என்ற கிராமமொன்றில் புகுந்த இசுரேலியர்கள் 70 பாலத்தீனர்களைச் சுட்டுக் கொன்றனர்.
  1950ல் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் தொடர் வரலாற்றுப் புதினம் முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்தது.
  1955ல் சோவியத் போர்க்கப்பல் நோவசிபீர்ஸ்க் செவஸ்தபோல் துறைமுகத்தில் இரண்டாம் உலகப் போர்க் கால கண்ணிவெடியில் சிக்கியது.
  1956ல் சூயெசு நெருக்கடி ஆரம்பம்: இசுரேலியப் படையினர் சினாய் தீபகற்பத்தைக் கைப்பற்றி எகிப்தியப் படைகளை சூயஸ் கால்வாய் நோக்கி விரட்டினர்.
  1957ல் இசுரேலிய நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட கிரனேடுத் தாக்குதலில் பிரதமர் டேவிட் பென்-குரியன் மற்றும் அவரது ஐந்து அமைச்சர்கள் காயமடைந்தனர்.
  1960ல் அமெரிக்காவில், ஒகையோ மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்தனர்.
  1961ல் ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து சிரியா வெளியேறியது.
  1964ல் தங்கனிக்கா மற்றும் சன்சிபார் இரண்டும் இணைந்து தன்சானியாக் குடியரசு ஆகியது.
  1964ல் 565 கரட் (113 கிராம்) “ஸ்டார் ஒஃப் இந்தியா” உட்படப் பல பெறுமதி மிக்க இரத்தினக்கற்கள் நியூயார்க் நகரில் உள்ள அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டன.
  1967ல் மொண்ட்ரியால் நகரில் 50 மில்லியன் மக்கள் கண்டு களித்த எக்ஸ்போ 67 உலகக் கண்காட்சி முடிவடைந்தது.
  1969ல் உலகின் முதலாவது ஒரு கணினியில் இருந்து வேறொரு கணினிக்கான தொடுப்பு ஆர்ப்பாநெட் மூலம் இணைக்கப்பட்டது.
  1991ல் நாசாவின் கலிலியோ விண்கலம் 951 காஸ்ப்ராவுக்குக் கிட்டவாகச் சென்று சிறுகோள் ஒன்றுக்குக் கிட்டவாக சென்ற முதலாவது விண்கலம் என்ற சாதனையை அடைந்தது.
  1998ல் தென்னாப்பிரிக்காவில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கை இரு தரப்பு மீது குற்றம் சாட்டியது.
  1998ல் டிஸ்கவரி விண்ணோடம் 77-வயது ஜான் கிளென் என்பவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
  1998ல் ஐக்கிய அமெரிக்காவில் உயர் வரையறு தொலைக்காட்சி ஆரம்பமானது.
  1998ல் 39 பேருடன் சென்ற துருக்கிய விமானம் ஒன்று குர்தியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது.
  1999ல் ஒடிசாவில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் 10,000 பேர் வரை இறந்தனர். 2.5 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.
  2002ல் வியட்நாமின் ஓ சி மின் நகரப் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேருக்கு மேல் உயிரிழந்தனர்..
  2004ல் செப்டம்பர் 11, 2001 தாக்குதலுக்குத் தானே காரணம் எனக் கூறும் உசாமா பின் லாதினின் காணொளி வெளியானது.
  2005ல் தில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அறுபதிற்கும் அதிகமானோர் கொல்லப்படனர்.
  2012ல் அமெரிக்காவின் கிழக்குக் கரையை சாண்டி சூறாவளி தாக்கியதில் 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
  2015ல் 35 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஒரு குழந்தைக் கொள்கையை சீனா கைவிடுவதாக அறிவித்தது.

  வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 29-10 | October 29

  1270ல் மகாராட்டிரத் துறவியான‌ நாம்தேவ் பிறந்த நாள். (இறப்பு-1350)
  1808ல் இத்தாலிய வானியலாளரான காத்தரினா சுகார்பெல்லினி பிறந்த நாள். (இறப்பு-1873)
  1897ல் செருமனியின் அரசுத்தலைவரான‌ ஜோசப் கோயபெல்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1945)
  1909ல் தமிழகத் தமிழறிஞரும் நூலாசிரியருமான‌ மு. அருணாசலம் பிறந்த நாள். (இறப்பு-1992)
  1921ல் இலங்கைக் கல்வியாளரான‌ பாலகுமாரன் மகாதேவா பிறந்த நாள். (இறப்பு-2013)
  1923ல் ஆத்திரிய-அமெரிக்க வேதியியலாளரான‌ காரல் ஜெராசி பிறந்த நாள். (இறப்பு-2015)
  1931ல் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான‌ வாலி பிறந்த நாள். (இறப்பு-2013)
  1938ல் லைபீரியாவின் 24வது அரசுத்தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான‌ எலன் ஜான்சன் சர்லீஃப் பிறந்த நாள்.
  1950ல் துருக்கியின் 11வது அரசுத்தலைவரான‌ அப்துல்லா குல் பிறந்த நாள்.
  1974ல் இலங்கை அரசியல்வாதியான‌ செல்வராசா கஜேந்திரன் பிறந்த நாள்.
  1976ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் பிறந்த நாள்.
  1980ல் அமெரிக்க நடிகரான‌ பென் போஸ்டர் பிறந்த நாள்.
  1981ல் இந்திய நடிகையான‌ ரீமா சென் பிறந்த நாள்.
  1985ல் இந்தியக் குத்துச்சண்டை வீரரான‌ விஜேந்தர் குமார் பிறந்த நாள்.
  1986ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ ஸ்ரீதேவி விஜயகுமார் பிறந்த நாள்.

  வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 29-10 | October 29

  1618ல் ஆங்கிலேய இராணுவ அதிகாரியும் நாடுகாண் பயணியும் அரசியல்வாதியுமான‌ வால்ட்டர் ரேலி இறப்பு நாள். (பிறப்பு-1554)
  1783ல் பிரான்சியக் கணிதவியலாலரும் இயற்பியலாளருமான‌ ழான் லி ராண்ட் டெ’ஆலம்பர்ட் இறப்பு நாள். (பிறப்பு-1717)
  1897ல் அமெரிக்க ஊடகவியலாளரும் மெய்யியலாளரும் பொருளியலாளருமான‌ ஹென்றி ஜார்ஜ் இறப்பு நாள். (பிறப்பு-1839)
  1911ல் அங்கேரிய-அமெரிக்கப் பதிப்பாளரும் அரசியல்வாதியுமான‌ ஜோசேப் புலிட்சர் இறப்பு நாள். (பிறப்பு-1847)
  1929ல் தென்னிந்திய அரசியல்வாதியும் தொழிலதிபரும் புரவலருமான‌ ஏ. சபாபதி முதலியார் இறப்பு நாள். (பிறப்பு-1838)
  1949ல் ஆர்மேனிய-பிரெஞ்சு மதகுருவும் மெய்யியலாளருமான‌ ஜார்ஜ் குர்ச்சீயெவ் இறப்பு நாள். (பிறப்பு-1872)
  1951ல் அமெரிக்க வானியலாளரான‌ இராபர்ட் கிராண்ட் ஐத்கென் இறப்பு நாள். (பிறப்பு-1864)
  1959ல் சோவியத் வானியலாளரான அலெக்சாந்தர் துபியாகோ இறப்பு நாள். (பிறப்பு-1903)
  1976ல் யாழ்ப்பாணத்துக் கல்வியாளரான‌ தெ. து. ஜயரத்தினம் இறப்பு நாள். (பிறப்பு-1913)
  1988ல் இந்திய எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான‌ கமலாதேவி சட்டோபாத்யாய் இறப்பு நாள். (பிறப்பு-1903)
  1990ல் தமிழகப் பக்தியிசைப் பாடகரான‌ கே. வீரமணி இறப்பு நாள். (பிறப்பு-1936)
  2001ல் இலங்கை வானொலி பிபிசி தமிழோசை அறிவிப்பாளரான‌ சுந்தா சுந்தரலிங்கம் இறப்பு நாள். (பிறப்பு-1930)
  2006ல் நைஜீரிய அரசியல்வாதியான‌ முகம்மது மசிடோ இறப்பு நாள். (பிறப்பு-1928)

  வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

  By: Tamilpiththan

  உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

  Previous articleOctober 28 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 28
  Next articleOctober 30 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 30