Today Special Historical Events In Tamil | 31-10 | October 31
October 31 Today Special | October 31 What Happened Today In History. October 31 Today Whose Birthday (born) | October -31st Important Famous Deaths In History On This Day 31/10 | Today Events In History October-31st | Today Important Incident In History | ஐப்பசி 31 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 31-10 | ஐப்பசி மாதம் 31ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 31.10 Varalatril Indru Nadanthathu Enna| October 31 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 31/10 | Famous People Born Today October 31 | Famous People died Today 31-10.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 31-10 | October 31
ஆலோவீன் நிகழ்ச்சியாக கொண்டாடப்படும்
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 31-10 | October 31
475ல் ரோமுலசு ஆகுஸ்டலசு உரோமைப் பேரரசராக முடி சூடினார்.
683ல் மெக்கா முற்றுகையின் போது கஃபா தீப்பற்றி அழிந்தது.
802ல் பைசாந்தியப் பேரரசி ஐரீன் பதவியில் இருந்தௌ அகற்றப்பட்டார். பதிலாக நிதி அமைச்சர் நிக்கபோரசு பேரரசராக நியமிக்கப்பட்டார்.
1517ல் கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்: மார்ட்டின் லூதர் தனது 95 கொள்கைகளை செருமனியின் விட்டன்பேர்க் தேவாலய வாசலில் வெளியிட்டார்.
1803ல் கப்டன் டிரைட்பேர்க் தலைமையில் ஆங்கிலேயப் படைகள் பண்டாரவன்னியனின் படைகளை முல்லைத்தீவில் தாக்குதல் நடத்தினர். பலர் கொல்லப்பட்டனர்.
1863ல் நியூசிலாந்தில் நிலை கொண்ட பிரித்தானியப் படைகள் “வைக்காட்டொ” என்ற இடத்தில் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து மவோரி போர் மீண்டும் ஆரம்பமானது.
1864ல் நெவாடா ஐக்கிய அமெரிக்காவின் 36வது மாநிலமாக இணைந்தது.
1903ல் அமெரிக்கா, இந்தியானாபொலிசில் தொடருந்து விபத்தில் 17 உயிரிழந்தனர்.
1913ல் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலை லிங்கன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
1918ல் முதலாம் உலகப் போர்: ஆத்திரியா-அங்கேரி 1867 ஒப்பந்தம் கைவிடப்பட்டு, அங்கேரி முழுமையான விடுதலை அடைந்தது.
1922ல் பெனிட்டோ முசோலினி இத்தாலியின் பிரதமரானார்.
1924ல் உலக சேமிப்பு நாள் இத்தாலியின் மிலன் நகரில் சேமிப்பு வங்கிகளின் உலக அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.
1931ல் தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.
1940ல் இரண்டாம் உலகப் போர்: பிரிட்டன் சண்டை முடிவுற்றது. ஐக்கிய இராச்சியம் செருமனியின் முற்றுகையை முறியடித்தது.
1941ல் இரண்டாம் உலகப் போர்: ஐசுலாந்துக்கு அருகில் அமெரிக்கக் கப்பல் ஒன்றை செருமனியப் படகு தாக்கி மூழ்கடித்ததில் 100 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1954ல் அல்ஜீரியாவில் பிரெஞ்சு ஆக்கிரமிப்புக்கெதிராக அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி போராட்டத்தை ஆரம்பித்தது.
1956ல் சூயெசு நெருக்கடி: ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு சூயசு கால்வாயைத் திறக்க வற்புறுத்தி எகிப்தின் மீது குண்டுகளை வீசின.
1961ல் ஸ்டாலினின் உடல் மாஸ்கோவில் உள்ள லெனினின் நினைவகத்தில் இருந்து அகற்றப்பட்டது.
1963ல் இந்தியானாபொலிசில் பனிக்கட்டி சறுக்கல் களியாட்ட விழா ஒன்றின் போது இடம்பெற்ற புரொப்பேன் தாங்கி வெடிப்பில் 74 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
1968ல் வியட்நாம் போர்: பாரிசு அமைதிப் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வடக்கு வியட்நாம் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் நவம்பர் 1 இலிருந்து நிறுத்துவதாக அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் பி. ஜான்சன் அறிவித்தார்.
1973ல் அயர்லாந்தில் டப்ளின் நகர சிறை ஒன்றில் இருந்து மூன்று ஐரியக் குடியரசு இராணுவத்தினர் அங்கு தரையிறங்கிய கடத்தப்பட்ட உலங்கு வானூர்தி ஒன்றில் தப்பி வெளியேறினர்.
1979ல் மெக்சிக்கோ நகரில் வெசுட்டர்ன் ஏர்லைன்சு விமானம் ஒன்று வீழ்ந்ததில் 73 பேர் உயிரிழந்தனர்.
1984ல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
1996ல் பிரேசில், சாவோ பாவுலோவில் டாம் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 99 பேர் உயிரிழந்தனர்.
1999ல் ஜெசி மார்ட்டின் 11 மாதங்கள் பாய்க்கப்பலில் தனியே இடை விடாது உலகைச் சுற்றி வந்து மெல்பேர்ண் திரும்பினார்.
1999ல் எகிப்திய விமானம் ஒன்று மசாசுசெட்சில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 217 பேரும் உயிரிழந்தனர்.
2000ல் சோயுசு டிஎம்-31 விண்கலம் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகள் நடத்துவதற்கான முதலாவது குழுவினரை ஏற்றிச் சென்றது.
2000ல் சிங்கப்பூர் போயிங் 747-400 விமானம் தாய்பெய் நகரில் விபத்துக்குள்ளாகியதில் 83 பேர் உயிரிழந்தனர்.
2003ல் 22 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் மலேசியப் பிரதமர் மகதிர் பின் முகமது தமது பதவியைத் துறந்தார். இவர் 2018 இல் மீண்டும் தனது 92-வது அகவையில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2011ல் உலக மக்கள் தொகை ஏழு பில்லியனைத் தாண்டியது.
2015ல் மெட்ரோஜெட் விமானம் 9268 வடக்கு சினாயில் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதில் 224 பேர் கொல்லப்பட்டனர்.
2017ல் நியூயார்க் நகரில் சுமையுந்து ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.
2018ல் ஒற்றுமைக்கான சிலை குசராத்து மாநிலத்தில் திறந்து வைக்கப்பட்டது.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 31-10 | October 31
1632ல் டச்சு ஓவியரான யொகான்னசு வெர்மிர் பிறந்த நாள். (இறப்பு-1675)
1711ல் இத்தாலிய மருத்துவரும் இயற்பியலாளருமான லாரா மரியா பிறந்த நாள். (இறப்பு-1778)
1760ல் சப்பானிய ஓவியரான ஒக்குசாய் பிறந்த நாள். (இறப்பு-1849)
1795ல் ஆங்கிலேயக் கலைஞரான ஜோன் கீற்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1821)
1815ல் செருமானியக் கணிதவியலாளரான கார்ல் வியர்ஸ்ட்ராஸ் பிறந்த நாள். (இறப்பு-1897)
1828ல் ஆங்கிலேய இயற்பியலாளரும் வேதியியலாளருமான ஜோசப் வில்சன் ஸ்வான் பிறந்த நாள். (இறப்பு-1914)
1861ல் தமிழக இதழாசிரியரும் ஆய்வாளரும் நூலாசிரியருமான நாராயண ஐயங்கார் பிறந்த நாள். (இறப்பு-1947)
1875ல் இந்திய அரசியல்வாதியான வல்லபாய் பட்டேல் பிறந்த நாள். (இறப்பு-1950)
1887ல் சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவரான சங் கை செக் பிறந்த நாள். (இறப்பு-1975)
1918ல் அமெரிக்க உளவியலாளரான இயான் ஸ்டீவன்சன் பிறந்த நாள். (இறப்பு-2007)
1922ல் கம்போடியாவின் 1வது பிரதமரான நொரடோம் சீயனூக் பிறந்த நாள். (இறப்பு-2012)
1925ல் அமெரிக்க வரலாற்றாளரான லாரன்ஸ் ஏ க்ரீம் பிறந்த நாள். (இறப்பு-1990)
1929ல் தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரான முக்தா சீனிவாசன் பிறந்த நாள்.
1930ல் அமெரிக்க விண்வெளி வீரரான மைக்கேல் கொலின்ஸ் பிறந்த நாள். (இறப்பு-2021)
1933ல் தமிழக எழுத்தாளரான துரை இராஜாராம் பிறந்த நாள்.
1943ல் கேரள அரசியல்வாதியும் முதலமைச்சருமான உம்மன் சாண்டி பிறந்த நாள்.
1961ல் அசாம் மாநிலத்தின் 14வது முதலமைச்சரான சர்பானந்த சோனாவால் பிறந்த நாள்.
1961ல் நியூசிலாந்து நடிகரான பீட்டர் ஜாக்சன் பிறந்த நாள்.
1986ல் தென்னிந்திய மற்றும் மலையாளத் திரைப்பட நடிகையான சம்விருதா சுனில் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 31-10 | October 31
1811ல் வன்னி மன்னனான பண்டார வன்னியன் இறப்பு நாள்.
1926ல் அங்கேரிய-அமெரிக்க மாயவித்தைக் காரரான ஆரி உடீனி இறப்பு நாள். (பிறப்பு-1874)
1929ல் இந்திய-ஆங்கிலேய நடிகரான நார்மன் பிரிட்சர்டு இறப்பு நாள். (பிறப்பு-1877)
1962ல் பிரென்சு வானியலாளரான கேபிரியேல் இரெனவுதோத் பிளம்மாரியன் இறப்பு நாள். (பிறப்பு-1877)
1975ல் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பின்னணிப் பாடகருமான எஸ். டி. பர்மன் இறப்பு நாள். (பிறப்பு-1906)
1984ல் இந்தியாவின் 3வது பிரதமரான இந்திரா காந்தி இறப்பு நாள். (பிறப்பு-1917)
1990ல் திரைப்பட மற்றும் கருநாடக இசைப்பாடகியான எம். எல். வசந்தகுமாரி இறப்பு நாள். (பிறப்பு-1928)
1993ல் இத்தாலிய இயக்குநரான பெடெரிக்கோ ஃபெலினி இறப்பு நாள். (பிறப்பு-1920)
1999ல் அமெரிக்க வானியலாளரும் ஜான் வெய்ன்ரைட் எவான்சு இறப்பு நாள். (பிறப்பு-1909)
2003ல் இந்தியக் கருநாடக இசைப் பாடகரான செம்மங்குடி சீனிவாச ஐயர் இறப்பு நாள். (பிறப்பு-1908)
2005ல் பின்னணிப் பாடகியான பி. லீலா இறப்பு நாள். (பிறப்பு-1934)
2006ல் பாக்கித்தானிய-இந்தியக் கவிஞரான அம்ரிதா பிரீதம் இறப்பு நாள். (பிறப்பு-1919)
2013ல் பிரம்மஞானசபையின் தலைவியான ராதா பர்னியர் இறப்பு நாள். (பிறப்பு-1923)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan