October 27 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 27

0

Today Special Historical Events In Tamil | 27-10 | October 27

October 27 Today Special | October 27 What Happened Today In History. October 27 Today Whose Birthday (born) | October -27th Important Famous Deaths In History On This Day 27/10 | Today Events In History October-27th | Today Important Incident In History | ஐப்பசி 27 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 27-10 | ஐப்பசி மாதம் 27ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 27.10 Varalatril Indru Nadanthathu Enna| October 27 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 27/10 | Famous People Born Today October 27 | Famous People died Today 27-10.

  • Today Special in Tamil 27-10
  • Today Events in Tamil 27-10
  • Famous People Born Today 27-10
  • Famous People died Today 27-10
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 27-10 | October 27

    விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1979)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 27-10 | October 27

    939ல் இங்கிலாந்தின் மன்னர் ஏத்தெல்சுத்தான் இறந்ததை அடுத்து முதலாம் எட்மண்டு மன்னராக முடிச் சூடினார்.
    1275ல் ஆம்ஸ்டர்டம் நகரம் அமைக்கப்பட்டது.
    1644ல் இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: நியூபெரியில் இரண்டாம் தடவை போர் இடம்பெற்றது.
    1682ல் பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது.
    1795ல் எசுப்பானியக் குடியேற்றங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையில் மத்ரித் நகரில் செய்துகொள்ளப்பட்டது.
    1806ல் பிரெஞ்சுப் படையினர் பெர்லின் நகரினுள் நுழைந்தனர்.
    1810ல் மேற்கு புளோரிடாவின் முன்னாள் எசுப்பானியக் குடியேற்றங்களை அமெரிக்கா இணைத்துக் கொண்டது.
    1867ல் கரிபால்டியின் படைகள் ரோம் நகருள் புகுந்தன.
    1870ல் 140,000 பிரெஞ்சுப் படை வீரர்கள் மெட்சு நகரில் இடம்பெற்ற போரில் புருசியாவிடம் சரணடைந்தனர்.
    1904ல் முதலாவது சுரங்க நியூயார்க் நகர சப்வே பாதை திறக்கப்பட்டது. இதுவே ஐக்கிய அமெரிக்காவில் மிகப் பெரியதும், உலகில் மிகப் பெரிய சுரங்கப் பாதைகளில் ஒன்றும் ஆகும்.
    1907ல் அங்கேரியில் செர்னோவா என்ற இடத்தில் கிறித்தவக் கோவிலில் வழிபாட்டின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
    1914ல் முதலாம் உலகப் போரில் பிரித்தானிக் கடற்படை முதலாவது தோல்வியைச் சந்தித்தது. ஓடாசியசு என்ற போர்க்கப்பல் அயர்லாந்தின் வடமேற்கே செருமனியின் கண்ணிவெடித் தாக்குதலில் மூழ்கியது.
    1922ல் தென்னாப்பிரிக்க ஒன்றியத்தில் இணைய ரொடீசியாவில் இடம்பெற்ற பொதுவாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.
    1924ல் உஸ்பெக் சோவியத் குடியரசு சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டது.
    1936ல் திருமதி வாலிசு சிம்ப்சன் மணமுறிவு பெற்றார். இது அவருக்கு இங்கிலாந்தின் மன்னர் எட்டாம் எட்வர்டைத் திருமணம் புரிய வழிவகுத்தது. இத்திருமணத்தால் எட்டாம் எட்வர்டு முடிதுறக்க நேரிட்டது.
    1958ல் பாக்கித்தானின் முதலாவது அரசுத்தலைவர் இஸ்காண்டர் மிர்சா இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து இறக்கப்பட்டு இராணுவத் தலைவர் அயூப் கான் ஆட்சியைக் கைப்பற்றினார்.
    1961ல் நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 ஏவூர்தியை விண்ணுக்கு ஏவியது.
    1961ல் மூரித்தானியா, மங்கோலியா ஆகியன ஐக்கிய நாடுகள் அவையில் சேர்ந்தன.
    1962ல் கியூபா ஏவுகணை நெருக்கடி: கியூபாவில் அமெரிக்காவின் யூ-2 விமானம் சோவியத் தயாரிப்பு நில வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
    1971ல் காங்கோ மக்களாட்சிக் குடியரசு சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.1973 – 1.4 கிகி விண்வீழ்கல் கொலராடோவின் கேனன் நகரைத் தாக்கியது.
    1979ல் செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
    1981ல் பனிப்போர்: சோவியத் நீர்மூழ்கி ஒன்று சுவீடனின் கிழக்குக் கரையில் மூழ்கியது.
    1982ல் யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டது.
    1990ல் வட இலங்கை முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம்: யாழ்ப்பாண மாவட்டத்தைத் தாயகமாக கொண்ட முசுலிம்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.
    1991ல் துருக்மெனிஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
    1999ல் ஆர்மீனிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பிரதமர், அவைத் தலைவர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
    2005ல் பாரிசில் இரண்டு முசுலிம் இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது.
    2007ல் காங்கோவில் இடம்பெற்ற பெரு வெள்ளம் காரணமாக 30 பேர் உயிரிழந்து, 100 பேர் காயமடைந்தனர்.
    2014ல் 2002, சூன் 20 இல் ஆரம்பிக்கப்பட்ட எரிக் இராணுவ நடவடிக்கையை முடித்துக் கொண்டு பிரித்தானிய இராணுவம் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறியது.
    2017ல் காத்தலோனியா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 27-10 | October 27

    1782ல் இத்தாலிய இசைக்கலைஞரான‌ நிக்கோலோ பாகானீனி பிறந்த நாள். (இறப்பு-1840)
    1855ல் உருசியத் தாவரவியலாளரான‌ இவான் விளாதிமீரொவிச் மிச்சூரின் பிறந்த நாள். (இறப்பு-1935)
    1858ல் அமெரிக்காவின் 26வது குடியரசுத் தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான‌ தியொடோர் ரோசவெல்ட் பிறந்த நாள். (இறப்பு-1919)
    1904ல் இந்திய விடுதலைப் போராளியும் புரட்சியாளருமான‌ ஜத்தீந்திர நாத் தாஸ் பிறந்த நாள். (இறப்பு-1929)
    1911ல் சீக்கிய சமய, அரசியல் தலைவரான‌ பதே சிங் பிறந்த நாள். (இறப்பு-1972)
    1920ல் இந்தியாவின் 10வது குடியரசுத் தலைவரான‌ கே. ஆர். நாராயணன் பிறந்த நாள். (இறப்பு-2005)
    1932ல் அமெரிக்க எழுத்தாளரான‌ சில்வியா பிளாத் பிறந்த நாள். (இறப்பு-1963)
    1941ல் தமிழக நடிகரான‌ சிவகுமார் பிறந்த நாள்.
    1942ல் இலங்கை அரசியல்வாதியும் ஈழ செயற்பாட்டாளருமான‌ மாவை சேனாதிராஜா பிறந்த நாள்.
    1945ல் பிரேசிலின் 35வது அரசுத்தலைவரான‌ லுலா ட சில்வா பிறந்த நாள்.
    1946ல் செக்-கனடிய நடிகரான‌ இவான் ரியட்மேன் பிறந்த நாள்.
    1952ல் இத்தாலிய நடிகரும் இயக்குநருமான‌ ரொபேர்டோ பெனினி பிறந்த நாள்.
    1968ல் மலையாள நடிகரான‌ திலீப் பிறந்த நாள்.
    1977ல் இலங்கைத் துடுப்பாளரான‌ குமார் சங்கக்கார பிறந்த நாள்.
    1985ல் இந்திய-அமெரிக்க டென்னிசு வீராங்கனையான‌ சுனிதா ராவ் பிறந்த நாள்.
    1986ல் ஆத்திரேலிய துடுப்பாளரான‌ டேவிட் வார்னர் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 27-10 | October 27

    1449ல் சுல்தானும் பாரசீக வானியலாளருமான‌ உலுக் பெக் இறப்பு நாள். (பிறப்பு-1394)
    1605ல் முகலாயப் பேரரசரான‌ அக்பர் இறப்பு நாள். (பிறப்பு-1542)
    1845ல் பிரான்சிய இயற்பியலாளரான‌ சான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே இறப்பு நாள். (பிறப்பு-1785)
    1930ல் அமெரிக்கக் கணிதவியலாளரும் வானியலாளருமான‌ எல்லன் காயேசு இறப்பு நாள். (பிறப்பு-1851)
    1982ல் பிரான்சிய இந்தியவியலாளரும் தமிழறிஞருமான‌ ழாஃன் ஃபில்லியொசா இறப்பு நாள். (பிறப்பு-1906)
    2001ல் இந்திய அரசியல்வாதியான‌ மரகதம் சந்திரசேகர் இறப்பு நாள். (பிறப்பு-1917)
    2002ல் தமிழக அரசியல்வாதியான‌ வாழப்பாடி ராமமூர்த்தி இறப்பு நாள். (பிறப்பு-1940)
    2011ல் தமிழகத் திரைப்பட நடிகரான‌ எல். ஐ. சி. நரசிம்மன் இறப்பு நாள். (பிறப்பு-
    2019ல் இசுலாமிய அரசுத் தலைவரான‌ அபூ பக்கர் அல்-பக்தாதி இறப்பு நாள். (பிறப்பு-1971)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleஇன்றைய ராசி பலன் 25.09.2022 Today Rasi Palan 25-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
    Next articleOctober 28 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 28