Today Special Historical Events In Tamil | 26-10 | October 26
October 26 Today Special | October 26 What Happened Today In History. October 26 Today Whose Birthday (born) | October -26th Important Famous Deaths In History On This Day 26/10 | Today Events In History October-26th | Today Important Incident In History | ஐப்பசி 26 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 26-10 | ஐப்பசி மாதம் 26ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 26.10 Varalatril Indru Nadanthathu Enna| October 26 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 26/10 | Famous People Born Today October 26 | Famous People died Today 26-10.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 26-10 | October 26
இணைப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது. (சம்மு காசுமீர்)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 26-10 | October 26
740ல் கான்ஸ்டண்டினோபில் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
1341ல் ஆறாம் ஜான் பைசாந்தியப் பேரரசராகத்த் தன்னை அறிவித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் (1341–47) ஆரம்பமானது.
1377ல் பொசுனியாவின் முதலாவது மன்னராக முதலாம் திவிர்த்கோ முடி சூடினார்.
1520ல் புனித உரோமையின் பேரரசராக ஐந்தாம் சார்லசு முடிசூடினார்.
1640ல் இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து முதலாம் சார்லசு மன்னனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1689ல் ஆஸ்திரியாவின் இராணுவத் தலைவர் பிக்கொலோமினி வாந்திபேதி நோய் பரவாமல் தடுக்க இசுக்கோப்ஜி நகரை எரித்தார். இறுதியில் அவரே வாந்திபேதியால் இறந்தார்.
1775ல் அமெரிக்கக் குடியேற்றங்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அமெரிக்கப் புரட்சியை அடக்க இராணுவத்துக்கு அதிகாரம் அளித்தார்.
1776ல் அமெரிக்கப் புரட்சிக்கு ஆதரவு வேண்டி பெஞ்சமின் பிராங்கிளின் பிரான்சுக்குப் பயணமானார்.
1859ல் வடக்கு வேல்சில் ரோயல் சார்ட்டர் என்ற கப்பல் மூழ்கியதில் 459 பேர் இறந்தனர்.
1863ல் உலகின் மிகப் பழமையான காற்பந்துச் சங்கம் இலண்டனில் அமைக்கப்பட்டது.
1876ல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான முடிவு பிரித்தானிய அரசரால் எடுக்கப்பட்டது.
1905ல் நோர்வே பிரிந்து சென்றதை சுவீடன் அங்கீகரித்தது.
1909ல் சப்பானியப் பிரதமர் ஈட்டோ இரொபூமி மஞ்சூரியா, கார்பின் தொடருந்து நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1912ல் முதலாம் பால்கன் போர்: உதுமானியரால் ஆக்கிரமிக்கப்பட்ட தெசாலோனிக்கி நகரம் விடுவிக்கப்பட்டு கிரேக்கத்துடன் இணைக்கப்பட்டது. இதே நாளில் செர்பியப் படைகள் ஸ்கோப்ஜே நகரைக் கைப்பற்றின.
1917ல் முதலாம் உலகப் போர்: கப்பொரெட்டோ சமரில் இத்தாலியப் படைகள் ஆத்திரியா-அங்கேரி, செருமனியப் படைகளுடன் மோதி பெரும் இழப்பை சந்தித்தன.
1917ல் முதலாம் உலகப் போர்: இத்தாலி கபொரேட்டொ என்ற இடத்தில் செருமனி மற்றும் ஆஸ்திரியா நாடுகளுடன் மோதி கடும் தோல்வியைச் சந்தித்தது.
1917ல் முதலாம் உலகப் போர்: பிரேசில் மைய நாடுகளுக்கு எதிராகப் போரில் இறங்கியது.
1936ல் முதலாவது மின்னியற்றி ஊவர் அணையில் முழுமையாக இயங்கியது.
1942ல் இரண்டாம் உலகப் போர்: சான்டா குரூஸ் தீவுகளில் இரண்டு அமெரிக்க வான்படைக் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
1947ல் சம்மு-காசுமீர் மன்னர் இந்தியாவுடன் தனது இராச்சியத்தை இணைக்கச் சம்மதித்தார்.
1947ல் ஈராக்கிலிருந்து பிரித்தானிய இராணுவம் வெளியேறியது.
1955ல் ஆஸ்திரியாவில் கடைசி கூட்டுப்படைகள் வெளியேறின. ஆஸ்திரியா நிரந்தர நடுநிலை நாடாகத் தன்னை அறிவித்தது.
1958ல் பான் அமெரிக்கன் ஏர்வேய்சு போயிங் 707 இன் முதலாவது வணிக-நோக்குப் பறப்பை நியூயோர்க் முதல் பாரிசு வரை மேற்கொண்டது.
1967ல் முகம்மத் ரிசா பகுலவி ஈரானின் பேரரசராகத் தன்னை அறிவித்து, பேரரசியாக தனது மனைவி ஃபாராவுக்கு முடிசூட்டினார்.
1968ல் சோவியத் விண்ணோடி கியோர்கி பெரிகவோய் சோயூசு 3 விண்கலத்தில் நான்கு-நாள் பயணத்தை ஆரம்பித்தார்.
1977ல் பெரியம்மை நோய் தாக்கிய கடைசி நோயாளி சோமாலியாவில் அடையாளம் காணப்பட்டார். உலக சுகாதார அமைப்பு இந்நாளை பெரியம்மையின் கடைசி நாளாக அறிவித்தது.
1979ல் தென் கொரியா அரசுத்தலைவர் பார்க் சுங்-கீ இராணுவத் தளபதி கிம் ஜே-கியூ என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1985ல் ஆத்திரேலிய அரசு உலுரூவின் உரிமையை உள்ளூர் பழங்குடியினரிடம் கையளித்தது.
1991ல் யுகோசுலாவிய மக்கள் இராணுவம் சுலோவீனியாவில் இருந்து விலகியது.
1994ல் யோர்தானும் இசுரேலும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1994ல் பெர்மாவின் கடைசித் தேற்றம் அண்ட்ரூ வைல்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது என அறிவிக்கப்பட்டது.
1995ல் இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுலாமிய ஜிகாட் தலைவர் பாதி சிக்காகி மால்ட்டாவில் உள்ள விடுதி ஒன்றில் மொசாட் அமைப்பினரால் கொல்லப்பட்டார்.
2000ல் ஐவரி கோஸ்ட்டின் அரசுத்தலைவர் இராபர்ட் கூயெய் பதவியிறக்கப்பட்டு லோரண்ட் பாக்போ தலைவரானார்.
2001ல் ஐக்கிய அமெரிக்கா தேசப்பற்றுச் சட்டத்தை நிறைவேற்றியது.
2002ல் மாஸ்கோவில் நாடக மாளிகை ஒன்றில் செச்சினியத் தீவிரவாதிகள் மூன்று நாட்களாகப் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்தது. 150 பணயக் கைதிகளும் 50 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
2003ல் கலிபோர்னியாவில் இடம்பெற்ற தீயில் 15 பேர் கொல்லப்பட்டு 250,000 ஏக்கர், மற்றும் 2,200 வீடுகள் சான் டியேகோ நகரில் அழிந்தன.
2015ல் 7.5 அளவு நிலநடுக்கம் ஆப்கானித்தானின் இந்து குஷ் மலைப் பகுதியைத் தாக்கியதில் 398 பேர் கொல்லப்பட்டு, 2,536 பேர் காயமடைந்தனர்.
2016ல் இத்தாலியின் நடுப்பகுதியை 6.6 அளவு நிலநடுக்கம் தாக்கியது.
2019ல் அமெரிக்கப் படையினர் சிரியா, இதுலிபில் நடத்திய தாக்குதலில் இசுலாமிய அரசுத் தலைவர் அபூ பக்கர் அல்-பக்தாதி தற்கொலை செய்து இறந்தார்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 26-10 | October 26
1841ல் ஆசுத்திரிய வானியலாளரும் கணிதவியலாளருமான தியோடோர் வான் அப்போல்சர் பிறந்த நாள். (இறப்பு-1886)
1873ல் வங்கதேச-பாக்கித்தானிய அரசியல்வாதியான ஏ. கே. பசுலுல் ஹக் பிறந்த நாள். (இறப்பு-1962)
1883ல் அமெரிக்க மெய்யியலாளரான நெப்போலியன் ஹில் பிறந்த நாள். (இறப்பு-1970)
1890ல் இந்திய இதழியலாளரும் செயற்பாட்டாளருமான கணேஷ் சங்கர் வித்யார்த்தி பிறந்த நாள். (இறப்பு-1931)
1892ல் இலங்கை அரசியல்வாதியான பாக்கியசோதி சரவணமுத்து பிறந்த நாள். (இறப்பு-1950)
1902ல் அமெரிக்க வானியலாளரான் என்றியேட்டா கில் சுவோப் பிறந்த நாள். (இறப்பு-1980)
1919ல் அமெரிக்க வானியலாளரான முகம்மத் ரிசா ஷா பஹ்லவி பிறந்த நாள். (இறப்பு-1980)
1920ல் அமெரிக்க வானியலாளரான சாரா இலீ இலிப்பின்கோட் பிறந்த நாள்.
1923ல் இந்திய அரசியல்வாதியும் உத்தரபிரதேச மாநில முதலமைச்சருமான இராம் பிரகாசு குப்தா பிறந்த நாள். (இறப்பு-2004)
1932ல் கருநாடக முதலமைச்சரான சாரெகொப்பா பங்காரப்பா பிறந்த நாள். (இறப்பு-2011)
1933ல் ஈழத்து ஆன்மிகவாதியான முருகேசு சுவாமிகள் பிறந்த நாள். (இறப்பு-2007)
1947ல் அமெரிக்க அரசியல்வாதியான இலரி கிளின்டன் பிறந்த நாள்.
1947ல் ஈழத்து எழுத்தாளரான சாருமதி பிறந்த நாள். (இறப்பு-1998)
1952ல் அமெரிக்கப் பொருளியலாளரான லார்ஸ் பீட்டர் ஹான்சென் பிறந்த நாள்.
1959ல் பொலிவியாவின் 80வது அரசுத்தலைவரான ஏவோ மொராலெஸ் பிறந்த நாள்.
1965ல் தென்னிந்தியத் திரைப்பட பாடகரான மனோ பிறந்த நாள்.
1974ல் இந்தியத் திரைப்பட நடிகையும் தயாரிப்பாளருமான ரவீணா டாண்டன் பிறந்த நாள்.
1985ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான அசின் பிறந்த நாள்.
1991ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான அமலா பால் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 26-10 | October 26
899ல் ஆங்கிலேய மன்னரான ஆல்பிரட் இறப்பு நாள். (பிறப்பு-849)
1764ல் ஆங்கிலேய ஓவியரான வில்லியம் ஹோகார்த் இறப்பு நாள். (பிறப்பு-1697)
1879ல் மானிப்பாய் அகராதி தொகுத்து வெளியிட்ட ஈழத்துத் தமிழறிஞரான அ. சந்திரசேகர பண்டிதர் இறப்பு நாள்.
1930ல் உருசிய-சுவிசு மருத்துவரான வால்டெமர் ஆஃப்கின் இறப்பு நாள். (பிறப்பு-1860)
1957ல் நோபல் பரிசு பெற்ற செக்-அமெரிக்க மருத்துவரான கெர்டி கோரி இறப்பு நாள். (பிறப்பு-1896)
1974ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான மிர்துலா சாராபாய் இறப்பு நாள். (பிறப்பு-1911)
2013ல் இந்தியக் கல்வியாளரான பி. எஸ். மணிசுந்தரம் இறப்பு நாள். (பிறப்பு-1927)
2019ல் இலங்கை வரலாற்றாளரும் எழுத்தாளரும் அரசியல்வாதியுமான தங்கேஸ்வரி கதிராமன் இறப்பு நாள். (பிறப்பு-1952)
2019ல் இந்திய யோகக்கலைப் பயிற்சியாளரான நானம்மாள் இறப்பு நாள். (பிறப்பு-1920)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan