இன்று 25-09-2022 புரட்டாசி மாதம் 08ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். இன்று அமாவாசை திதி பின்இரவு 03.24 வரை பின்பு வளர்பிறை பிரதமை. இன்று உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 05.55 வரை பின்பு அஸ்தம். இன்று அமிர்தயோகம் பின் இரவு 05.55 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ மஹாலய அமாவாசை.
இராகு காலம்: மாலை 04.30 – 06.00, எம கண்டம்: பகல் 12.00 – 01.30, குளிகன்: பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள்: காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.
மேஷம் ராசிபலன்:
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும்.
ரிஷபம் ராசிபலன்:
இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களின் மாறுபட்ட கருத்துகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலங்கள் உண்டாகும்.
மிதுனம் ராசிபலன்:
இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு உபாதைகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகளை சந்திக்க நேரிடும். பொறுமையாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
கடகம் ராசிபலன்:
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
சிம்மம் ராசிபலன்:
இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். வருமானம் அதிகரிக்கும்.
கன்னி ராசிபலன்:
இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிட்டும். வியாபார ரீதியான பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
துலாம் ராசிபலன்:
இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப்பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம் ராசிபலன்:
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
தனுசு ராசிபலன்:
இன்று நீங்கள் எந்த செயலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.
மகரம் ராசிபலன்:
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உங்கள் ராசிக்கு பகல் 11.22 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் மதியத்திற்கு பின் தொடங்குவது நல்லது.
கும்பம் ராசிபலன்:
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 11.22 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. முடிந்த வரை பயணங்களை தவிர்க்கவும்.
மீனம் ராசிபலன்:
இன்று வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.