Today Special Historical Events In Tamil | 23-10 | October 23
October 23 Today Special | October 23 What Happened Today In History. October 23 Today Whose Birthday (born) | October -23rd Important Famous Deaths In History On This Day 23/10 | Today Events In History October-23rd | Today Important Incident In History | ஐப்பசி 23 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 23-10 | ஐப்பசி மாதம் 23ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 23.10 Varalatril Indru Nadanthathu Enna| October 23 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 23/10 | Famous People Born Today October 23 | Famous People died Today 23-10.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 23-10 | October 23
மோல் நாளாக கொண்டாடப்படுகிறது.
புரட்சி நாளாக கொண்டாடப்படுகிறது. (மாக்கடோனியக் குடியரசு)
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (லிபியா)
அமைதி ஒப்பந்த நினைவு நாளாக கொண்டாடப்படுகிறது. (கம்போடியா)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 23-10 | October 23
கிமு 42ல் உரோமைப் பேரரசன் புரூட்டசின் இராணுவத்தை மார்க் அந்தோனியும், ஒக்டோவியனும் தோற்கடித்தனர். இறுதியில் புரூட்டசு தற்கொலை செய்து கொண்டான்.
425ல் மூன்றாம் வலன்டீனியன் தனது ஆறாவது அகவையில் உரோமைப் பேரரசனாக முடி சூடினான்.
1157ல் டென்மார்க்கில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. மன்னன் மூன்றாம் சுவெயின் கொல்லப்பட்டு முதலாம் வால்டிமார் அரசனானான்.
1295ல் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒப்பந்தத்தை இசுக்காட்லாந்தும் பிரான்சும் பாரிசில் செய்து கொண்டன.
1694ல் வில்லியம் பிப்சு தலைமையிலான பிரித்தானிய/அமெரிக்க குடியேற்றப் படையினர் கியூபெக்கை பிரான்சிடம் இருந்து கைப்பற்றத் தவறினர்.
1707ல் பெரிய பிரித்தானியாவின் முதல் நாடாளுமன்றம் கூடியது.
1739ல் பிரித்தானியப் பிரதமர் ராபர்ட் வால்போல் எசுப்பானியா மீது போரை அறிவித்தார்.
1864ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: வெசுட்போர்ட் சமரில் அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளை மிசூரி வெசுட்போர்ட் சமரில் தோற்கடித்தன.
1870ல் பிரான்சின் மெட்சு என்ற இடத்தில் இடம்பெற்ற இறுதிப் போரில் புருசியா வெற்றியடைந்தது.
1906ல் அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டூமொண்ட் பாரிசு நகரில் ஐரோப்பாவின் முதலாவது வானூர்தியைப் பறக்க விட்டார்.
1911ல் முதற்தடவையாக வானூர்தி ஒன்று போரில் பயன்படுத்தப்பட்டது. இத்தாலிய வானோடி லிபியாவில் இருந்து புறப்பட்டு துருக்கிய இராணுவ நிலைகளை அவதானித்தான்.
1912ல் முதலாம் பால்க்கன் போர்: செர்பியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் குமனோவோ என்ற இடத்தில் போர் ஆரம்பமானது.
1915ல் நியூயோர்க் நகரில் 25,000-33,000 வரையான பெண்கள் வாக்குரிமை கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1917ல் லெனின் அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.
1929ல் 1929 வால் வீதி வீழ்ச்சி. பங்குச்சந்தை விலைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து, நியூயார்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடையத் தொடங்கியது.
1941ல் இரண்டாம் உலகப் போர்: மாஸ்கோவை நாட்சி செருமனி கைப்பற்றுவதைத் தடுக்கும் பொருட்டு சோவியத் இராணுவத் தளபதி கியோர்கி சூக்கொவ் செஞ்சேனைக்குத் தலைமை ஏற்றார்.
1942ல் இரண்டாம் உலகப் போர்: இரண்டாம் அல்-அலமைன் சண்டை: வடக்கு எகிப்தில், பிரித்தானியாவின் எட்டாவது இராணுப் படைகள் பெர்னார்ட் மோண்ட்கோமரி தலைமையில் எகிப்தில் இருந்து அச்சு இராணுவத்தினரை வெளியேற்ற போர் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
1942ல் அமெரிக்க வான்படையின் தாக்குதலுக்கு அமெரிக்கப் பயணிகள் விமானம் ஒன்று இலக்கானதில் அதில் பயணம் செய்த அனைத்து 12 பேரும் கொல்லப்பட்டனர்.
1944ல் இரண்டாம் உலகப் போர்: வரலாற்றின் மிகப்பெரும் கடற்படைப் போர் பிலிப்பீன்சில் ஆரம்பமாயிற்று.
1946ல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதலாவது கூட்டத்தொடர் நியூயோர்க் நகரில் ஆரம்பமாயிற்று.
1955ல் பிரதமர் நியோ டின் டியெம் முன்னாள் பேரரசர் பாவோ டையை பொது வாக்கெடுப்பில் தோற்கடித்து தென் வியட்நாமை அமைத்தார்.
1956ல் அங்கேரியப் புரட்சி, 1956: அங்கேரியில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராகவும் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். அங்கேரியப் புரட்சி நவம்பர் 4-இல் நசுக்கப்பட்டது.
1958ல் நோவா ஸ்கோசியாவில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 174 நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களில் 100 பேர் மட்டும் நவம்பர் 1 வரையில் மீட்கப்பட்டனர்.
1966ல் ஐக்கிய நாடுகள் அவை மைய மண்டபத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.
1983ல் லெபனான் உள்நாட்டுப் போர்: லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்கக் கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 241 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். அதே நாளில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் பிரெஞ்சு இராணுவத்தினர் 58 பேர் கொல்லப்பட்டனர்.
1989ல் கம்யூனிச அங்கேரிய மக்கள் குடியரசு கலைக்கப்பட்டு அங்கேரியக் குடியரசு நிறுவப்பட்டது.
1991ல் கம்போடிய வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்த அமைதி ஒப்பந்தம் பாரிசில் கையெழுத்திடப்பட்டது.
1991ல் ஈழப்போர்: தமிழீழப் போரில் அனாதைகளான பெண் பிள்ளைகளின் மறுவாழ்வுக்காக செஞ்சோலை சிறுவர் இல்லம் விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது.
1993ல் பெல்பாஸ்ட் நகரில் ஐரியக் குடியரசுப் படை குண்டுத் தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
1998ல் இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு, பாலத்தீனத் தலைவர் யாசிர் அரஃபாத் ஆகியோருக்கிடையில் “அமைதிக்காக நிலம்” என்ற உடன்பாடு எட்டப்பட்டது.
2001ல் வட அயர்லாந்தில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் ஐரியக் குடியரசுப் படை ஆயுதக் களைவில் ஈடுபட்டது.
2001ல் காஷ்மீர் விமானத் தளத்தைப் தகர்க்கும் தீவிரவாதிகளின் தற்கொலைப் படைமுயற்சி முறியடிக்கப்பட்டது. 4 தீவிரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர்.
2002ல் மாஸ்கோவில் நாடக அரங்கு ஒன்றில் செச்சினியத் தீவிரவாதிகளினால் 700 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
2004ல் வடக்கு சப்பானில் நீகாட்டாவில் நிலநடுக்கம் தாக்கியதில் 35 பேர் உயிரிழந்தனர், 2,200 பேர் காயமடைந்தனர்.
2006ல் இலங்கை சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
2011ல் துருக்கியில் 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 582 பேர் உயிரிழந்தனர்.
2015ல் பற்றீசியா சூறாவளி மெக்சிக்கோவைத் தாக்கியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 23-10 | October 23
1491ல் கத்தோலிக்கப் போதகரான லொயோலா இஞ்ஞாசி பிறந்த நாள். (இறப்பு-1556)
1844ல் பிரான்சிய நடிகையான சாரா பேர்ண்ஹார்ட் பிறந்த நாள். (இறப்பு-1923)
1873ல் அமெரிக்க இயற்பியலாளரான வில்லியம் டி. கூலிட்ச் பிறந்த நாள். (இறப்பு-1975)
1875ல் அமெரிக்க வேதியியலாளரான கில்பர்ட் நியூட்டன் லூயிசு பிறந்த நாள். (இறப்பு-1946)
1894ல் அமெரிக்க வானியலாளரான எம்மா வுசோத்சுகி பிறந்த நாள். (இறப்பு-1975)
1900ல் கத்தோலிக்க திருச்சபையின் முதல் இந்தியக் கர்தினாலான வலேரியன் கிராசியாஸ் பிறந்த நாள். (இறப்பு-1978)
1905ல் தமிழக எழுத்தாளரான அ. சீனிவாச ராகவன் பிறந்த நாள். (இறப்பு-1975)
1920ல் சப்பானிய-அமெரிக்க அறிவியலாளரான புச்சியித்தா தெத்துசுயா பிறந்த நாள். (இறப்பு-1998)
1923ல் இந்திய அரசியல்வாதியான பைரோன் சிங் செகாவத் பிறந்த நாள். (இறப்பு-2010)
1929ல் வங்காளதேசக் கவிஞரும் ஊடகவியலாளருமான சம்சுர் ரகுமான் பிறந்த நாள். (இறப்பு-2006)
1939ல் இலங்கை நீதிபதியும் 1வது வட மாகாண முதலமைச்சருமான க. வி. விக்னேஸ்வரன் பிறந்த நாள்.
1940ல் பிரேசில் கால்பந்து வீரரான பெலே பிறந்த நாள்.
1942ல் அமெரிக்க இயக்குநரான மைக்கேல் கிரைட்டன் பிறந்த நாள். (இறப்பு-2008)
1948ல் இலங்கை அரசியல்வாதியான எம். எச். எம். அஷ்ரப் பிறந்த நாள். (இறப்பு-2000)
1954ல் தாய்வான்-அமெரிக்க இயக்குநரான ஆங் லீ பிறந்த நாள்.
1960ல் அமெரிக்க எழுத்தாளரும் கணினி அறிவியலாளருமான ராண்டி பௌஷ் பிறந்த நாள். (இறப்பு-2008)
1974ல் இந்திய ஊடகவியலாளரும் எழுத்தாளருமான அரவிந்த் அடிகா பிறந்த நாள்.
1976ல் கனடிய-அமெரிக்க நடிகரான ரையன் ரெனால்ட்சு பிறந்த நாள்.
1979ல் தெலுங்குத் திரைப்பட நடிகரான பிரபாஸ் பிறந்த நாள்.
1989ல் இந்தோ-கனடியப் பாடகியான ஜொனிதா காந்தி பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 23-10 | October 23
1910ல் தாய்லாந்து மன்னரான ஐந்தாம் இராமா இறப்பு நாள். (பிறப்பு-1853)
1921ல் இசுக்கொட்டிய தொழிலதிபரான ஜான் பாய்டு டன்லப் இறப்பு நாள். (பிறப்பு-1840)
1986ல் இலங்கைத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குனருமான டபிள்யூ. எம். எஸ். தம்பு இறப்பு நாள். (பிறப்பு-1902)
2010ல் ஈழத்துத் தமிழறிஞரும் புலவருமான அமுது இறப்பு நாள். (பிறப்பு-1918)
2011ல் அமெரிக்க கணினியியலாளரான ஜோன் மெக்கார்த்தி இறப்பு நாள். (பிறப்பு-1927)
2012ல் வங்காளக் கவிஞரான சுனில் கங்கோபாத்யாயா இறப்பு நாள். (பிறப்பு-1934)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan