Today Special Historical Events In Tamil | 24-10 | October 24
October 24 Today Special | October 24 What Happened Today In History. October 24 Today Whose Birthday (born) | October -24th Important Famous Deaths In History On This Day 24/10 | Today Events In History October-24th | Today Important Incident In History | ஐப்பசி 24 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 24-10 | ஐப்பசி மாதம் 24ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 24.10 Varalatril Indru Nadanthathu Enna| October 24 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 24/10 | Famous People Born Today October 24 | Famous People died Today 24-10.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 24-10 | October 24
அந்தோனி மரிய கிளாரட் திருவிழா நாளாக கொண்டாடப்படுகிறது.
உலக இளம்பிள்ளை வாத நாளாக கொண்டாடப்படுகிறது.
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (சாம்பியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1964)
ஐக்கிய நாடுகள் நாளாக கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 24-10 | October 24
69ல் வெசுப்பாசியானுக்கு விசுவாசமான படையினர் உரோமைப் பேரரசர் விட்டேலியசின் படைகளைத் தோற்கடித்தனர்.
1260ல் சார்ட்டேர்ஸ் கதீட்ரல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது. இது தற்போது யுனெசுக்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1605ல் முகலாயப் பேரரசர் ஜகாங்கீரின் முடிசூட்டு விழா இடம்பெற்றது.
1648ல் வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
1795ல் போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் கலைக்கப்பட்டு, அதனை ஆஸ்திரியா, புருசியா, மற்றும் உருசியா ஆகியன தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.
1801ல் மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
1851ல் யுரேனசு கோளைச் சுற்றும் உம்பிரியல், ஏரியல் ஆகிய நிலாக்களை வில்லியம் இலாசல் கண்டுபிடித்தார்.
1857ல் உலகின் முதலாவது காற்பந்தாட்ட அணி செபீல்டு இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.
1861ல் ஐக்கிய அமெரிக்காவில் கண்டங்களுக்கிடையேயான முதலாவது தந்தித் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
1871ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 20 வரையான சீனக் குடியேறிகள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
1902ல் குவாத்தமாலாவின் சாண்டா மரியா எரிமலை வெடிக்க ஆரம்பித்தது. இது 20-ஆம் நூற்றாண்டின் மூன்றாவது மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஆகும்.
1911ல் வட கரொலைனாவில் ரைட் சகோதரர்கள் தமது வானூர்தியில் வானில் 9 நிமிடங்கள் 45 செக்கன்கள் பறந்தார்கள்.
1912ல் முதலாவது பால்கான் போர்: குமனோவா என்ற இடத்தில் இடம்பெற்ற உதுமானியப் பேரரசுக்கு எதிரான போரில் செர்பியா வெற்றி பெற்றது.
1917ல் முதலாம் உலகப் போர்: கப்பரெட்டோ சமரில் ஆத்திரியா-அங்கேரி, செருமனியப் படைகளிடம் இத்தாலி பெரும் தோல்வியடைந்தது.
1917ல் போல்செவிக் செம்படையினர் உருசியாவில் அரசக் கட்டடங்களைக் கைப்பற்ற ஆரம்பித்தனர். அக்டோபர் புரட்சியின் முதல் நிகழ்வுகள் இவையாகும்.
1929ல் கறுப்பு வியாழன்: நியூயார்க் பங்குச் சந்தையில் பங்குகள் சரிவு.
1930ல் பிரேசிலில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் வாசிங்டன் லூயிசு பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1943ல் நாடு கடந்த இந்திய அரசு முறைப்படி பிரித்தானியா மீதும் அமெரிக்கா மீதும் போரை அறிவித்தது.
1944ல் இரண்டாம் உலகப் போர்: முசாசி என்ற சப்பானியப் போர்க்கப்பலை அமெரிக்க விமானங்கள் தாக்கி மூழ்கடித்தன.
1945ல் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
1946ல் வி-2 இல. 13 என்ற ஏவூர்தியில் பொருத்தப்பட்ட புகைப்படக் கருவி மூலம் முதன் முதலாக விண்ணில் இருந்து பூமியின் புகைப்படம் எடுக்கப்பட்டது.
1949ல் ஐக்கிய நாடுகள் தலைமையகத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.
1954ல் டுவைட் டி. ஐசனாவர் தெற்கு வியட்நாமிற்கு ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவைத் தெரிவித்தார்.
1960ல் சோவியத் ஒன்றியத்தின் பைக்கனூர் விண்தளத்தில் ஆர்-16 ஏவுகணை வெடித்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1964ல் வடக்கு றொடீசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சாம்பியா என்னும் பெயரைப் பெற்றது.
1980ல் போலந்து அரசு சொலிடாரிட்டி தொழிற்சங்கத்தை அங்கீகரித்தது.
1994ல் கொழும்பில் தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசுத்தலைவர் வேட்பாளர் காமினி திசாநாயக்கா உட்பட 52 பேர் கொல்லப்பட்டனர்.
1998ல் டீப் ஸ்பேஸ் 1 என்ற வால்வெள்ளி/சிறுகோள் திட்டம் ஆரம்பமானது.
2003ல் கான்கோர்டு விமானம் தனது கடைசி வணிக-நோக்குப் பயணத்தை மேற்கொண்டது.
2007ல் சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் ‘சாங்-ஒன்று’ தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
2008ல் இரத்த வெள்ளி அன்று உலகின் பெரும்பாலான பங்குச் சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டன.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 24-10 | October 24
1632ல் டச்சு உயிரியலாளரான ஆன்டன் வான் லீவன்ஹூக் பிறந்த நாள். (இறப்பு-1723)
1775ல் இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசரான பகதூர் சா சஃபார் பிறந்த நாள். (இறப்பு-1862)
1804ல் செருமானிய இயற்பியலாளரான வில்கெம் எடுவர்டு வெபர் பிறந்த நாள். (இறப்பு-1891)
1827ல் பிரித்தானிய அரசியல்வாதியும் இந்திய வைசிராயுமான ரிப்பன் பிரபு பிறந்த நாள். (இறப்பு-1909)
1890ல் இந்திய இயற்பியலாளரான சிசிர் குமார் மித்ரா பிறந்த நாள். (இறப்பு-1963)
1914ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் இந்தியத் தேசிய இராணுவப் போராளியுமான இலட்சுமி சாகல் பிறந்த நாள். (இறப்பு-2012)
1915ல் அமெரிக்க எழுத்தாளரான பாப் கார்னே பிறந்த நாள். (இறப்பு-1998)
1921ல் இந்திய ஓவியரான ஆர். கே. லட்சுமண் பிறந்த நாள். (இறப்பு-2015)
1921ல் தமிழக எழுத்தாளரான ஏ. கே. வேலன் பிறந்த நாள்.
1924ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான சி. கதிரவேலுப்பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1981)
1932ல் அமெரிக்க எழுத்தாளரும் கல்வியாளருமான இசுடீபன் கோவே பிறந்த நாள். (இறப்பு-2012)
1940ல் இந்திய விண்வெளி அறிவியலாளரான கி. கஸ்தூரிரங்கன் பிறந்த நாள்.
1954ல் ஆத்திரேலியாவின் 29வது பிரதமரான மால்கம் டேர்ன்புல் பிறந்த நாள்.
1957ல் இலங்கை கம்பன் கழக அமைப்பாளரான இ. ஜெயராஜ் பிறந்த நாள்.
1971ல் இந்திய நடிகையான மல்லிகா செராவத் பிறந்த நாள்.
1980ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான லைலா பிறந்த நாள்.
1983ல் ஈழத்து எழுத்தாளரும் ஊடகவியலாளருமான தீபச்செல்வன் பிறந்த நாள்.
1992ல் இலங்கை-செருமனிய குத்துச்சண்டை வீரரான துளசி தருமலிங்கம் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 24-10 | October 24
1601ல் டென்மார்க் வானியலாளரான டைக்கோ பிராகி இறப்பு நாள். (பிறப்பு-1546)
1801ல் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான மருது பாண்டியர் இறப்பு நாள்.
1869ல் பிரித்தானிய இயற்பியலாளரான ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் இறப்பு நாள். (பிறப்பு-1786)
1870ல் எசுப்பானிய மற்றும் கத்தோலிக்க மறைபோதகரான அந்தோனி மரிய கிளாரட் இறப்பு நாள். (பிறப்பு-1807)
1953ல் தமிழகத் தமிழறிஞரான மு. கதிரேசச் செட்டியார் இறப்பு நாள். (பிறப்பு-1881)
1956ல் பிரித்தானியத் தாவரவியலாளரும் மலாயாவில் ரப்பர் மரங்களை அறிமுகப்படுத்தியவருமான எச். என். ரிட்லி இறப்பு நாள். (பிறப்பு-1885)
1981ல் அமெரிக்க ஆடை வடிவமைப்பாளரான எடித் எட் இறப்பு நாள். (பிறப்பு-1897)
1991ல் இந்திய எழுத்தாளரான இசுமத் சுகதாய் இறப்பு நாள். (பிறப்பு-1915)
1994ல் இலங்கை அரசியல்வாதியான காமினி திசாநாயக்கா இறப்பு நாள். (பிறப்பு-1942)
2005ல் அமெரிக்க செயற்பாட்டாளரான றோசா பாக்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1913)
2006ல் இந்திய காந்தியவாதியும் வரலாற்று ஆய்வாளருமான தரம்பால் இறப்பு நாள். (பிறப்பு-1922)
2011ல் அமெரிக்கக் கணினி அறிவியலாளரும் உணரறிவியலாளருமான ஜோன் மெக்கார்த்தி இறப்பு நாள். (பிறப்பு-1927)
2013ல் இந்தியப் பாடகரான மன்னா தே இறப்பு நாள். (பிறப்பு-1919)
2014ல் கலை மற்றும் இலக்கிய விமரிசகரான தேனுகா இறப்பு நாள்.
2014ல் தமிழ்த் திரைப்பட நடிகரான எஸ். எஸ். ராஜேந்திரன் இறப்பு நாள். (பிறப்பு-1928)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan