October 22 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 22

0

Today Special Historical Events In Tamil | 22-10 | October 22

October 22 Today Special | October 22 What Happened Today In History. October 22 Today Whose Birthday (born) | October -22nd Important Famous Deaths In History On This Day 22/10 | Today Events In History October-22nd | Today Important Incident In History | ஐப்பசி 22 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 22-10 | ஐப்பசி மாதம் 22ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 22.10 Varalatril Indru Nadanthathu Enna| October 22 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 22/10 | Famous People Born Today October 22 | Famous People died Today 22-10.

 • Today Special in Tamil 22-10
 • Today Events in Tamil 22-10
 • Famous People Born Today 22-10
 • Famous People died Today 22-10
 • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 22-10 | October 22

  இரண்டாம் அருள் சின்னப்பர் விழாவாக‌ கொண்டாடப்படுகிறது.

  வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 22-10 | October 22

  362ல் அந்தியோக்கியா அருகில் அமைந்திருந்த அப்போலோவின் ஆலயம் தீக்கிரையானது.
  794ல் பேரரசர் கன்மு சப்பானியத் தலைநகரை எய்யன்கியோவுக்கு (தற்போது கியோத்தோ) மாற்றினார்.
  1383ல் போர்த்துக்கல் மன்னன் முதலாம் பேர்டினண்டு ஆண் வாரிசு அற்ற நிலையில் இறந்ததை அடுத்து நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
  1633ல் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியுடன் மிங் படை சீனாவின் தெற்கு பூஜியன் கடலில் போரில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெற்றது.
  1707ல் சில்லி கடற்படைப் பேரழிவு: பிரித்தானியாவின் நான்கு அரச கடற்படை கப்பல்கள் கடல்வழிநடத்துதலின் தவறால் சில்லி தீவுகளில் மூழ்கியதில் ஆயிரக்கணக்கான கடற்படையினர் உயிரிழந்தனர். இதன் காரணமாக முதலாவது நெடுங்கோட்டுச் சட்டம் 1714 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  1784ல் உருசியா அலாஸ்காவில் கோடியாக் தீவில் குடியேற்றத்தை அமைத்தது.
  1797ல் பதிவு செய்யப்பட்ட முதலாவது வான்குடைப் பாய்ச்சல் அந்திரே-சாக் கர்னெரின் என்பவரால் பாரிசு நகருக்கு 3200 அடி மேலாக நிகழ்த்தப்பட்டது.
  1844ல் பாரிய எதிர்பார்ப்பு: வில்லியம் மில்லரின் படிப்பினைகளைப் பின்பற்றிய மில்லரிய கிறித்தவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகையும் உலக முடிவையும் எதிர்பார்த்திருந்தனர். அடுத்த நாள் பெரும் ஏமாற்ற நாளாக அறிவிக்கப்பட்டது.
  1859ல் எசுப்பானியா மொரோக்கோ மீது போர் தொடுத்தது.
  1877ல் இசுக்காட்லாந்தில் இடம்பெற்ற பிளான்டையர் சுரங்க விபத்தில், 207 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர்.
  1878ல் செயற்கை ஒளிக்கு கீழ் முதலாவது ரக்பி போட்டி இங்கிலாந்தின் சால்போட் நகரில் நடைபெற்றது.
  1879ல் தாமசு ஆல்வா எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின் வெள்ளொளிர் விளக்கைப் பரிசோதித்தார். இது 13½ மணி நேரம் எரிந்தது.
  1927ல் நிக்கோலா தெஸ்லா ஒரு முனை மின்சாரம் உட்பட 6 புதிய கண்டுபிடிப்புகளை அறிவித்தார்.
  1941ல் இரண்டாம் உலகப் போர்: பிரெஞ்சு எதிர்ப்புக் குழுவின் உறுப்பினர் கை மோக்கே மற்றும் 29 பணயக்கைதிகள் நாட்சி செருமனிப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  1943ல் இரண்டாம் உலகப் போர்: செருமனி மீது பிரித்தானிய அரச வான்படையினரின் இரண்டாவது நெருப்புப்புயல் தாக்குதலின் போது, காசெல் நகரில் 10,000 பேர் கொல்லப்பட்டனர், 150,000 பேர் வீடுகளை இழந்தனர்.
  1947ல் காஷ்மீர் பிரச்சினை தொடங்கியது.
  1957ல் வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் முதல் போர்ச் சாவு இடம்பெற்றது.
  1962ல் கியூபா ஏவுகணை நெருக்கடி: கியூபாவில் சோவியத் அணுக்கரு ஆயுதங்கள் இருப்பதைத் தமது விமானப் படையினர் கண்டறித்துள்ளதாக அமெரிக்கத் தலைவர் ஜான் எஃப். கென்னடி அறிவித்தார்.
  1964ல் பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவு செய்தது.
  1964ல் பிரெஞ்சு எழுத்தாளர் இழான் பவுல் சார்த்ரவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது, எனினும் அவர் அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
  1965ல் இந்தியா-பாக்கித்தான் இடையான இரண்டாம் காஷ்மீர் போர் முடிவுக்கு வந்தது.
  1966ல் சோவியத் ஒன்றியம் லூனா 12 விண்கலத்தை சந்திரனை நோக்கி ஏவியது.
  1968ல் நாசாவின் அப்பல்லோ 7 விண்கலம் பூமியை 163 தடவைகள் சுற்றிய பின்னர் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
  1970ல் துங்கு அப்துல் ரகுமான் மலேசியாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
  1972ல் வியட்நாம் போர்: ஓ சி மின் நகரில் என்றி கிசிஞ்சரும் தென் வியட்நாமியத் தலைவர் நியூவென் வான் தீயுவும் போர் நிறுத்தம் தொடர்பாக சந்தித்து உரையாடினர்.
  1975ல் சோவியத்தின் ஆளில்லா விண்கலம் வெனேரா 9 வெள்ளிக் கோள் மீது தரையிறங்கியது.
  1978ல் இரண்டாம் அருள் சின்னப்பர் திருத்தந்தையாக பதவியேற்றார்.
  1987ல் ஈழப்போர்: யாழ்ப்பாணம் அராலித் துறையில் இந்திய அமைதிப் படையின் உலங்குவானூர்தி தாக்கியதில் பல பயணிகள் கொல்லப்பட்டனர்.
  1999ல் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பிரான்சில் பணியாற்றிய மோரிசு பேப்போன் என்ற இராணுவ அதிகாரிக்கு மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது..
  2001ல் பிஎஸ்எல்வி சி-மூன்று விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
  2007ல் எல்லாளன் நடவடிக்கை: இலங்கையின் அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் கரும்புலிகள் 20 பேரும், இலங்கை படையினர் 14 பேரும் கொல்லப்பட்டு பல வானூர்திகள் அழிக்கப்பட்டன.
  2008ல் இந்தியா சந்திரனை நோக்கிய சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை ஏவியது.
  2013ல் ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம் ஒருபால் திருமணத்தை அங்கீகரித்தது.

  வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 22-10 | October 22

  1511ல் செருமானிய வானியலாளரும் கணிதவியலாளருமான‌ எராசுமசு இரீன்கோல்டு பிறந்த நாள். (இறப்பு-1553)
  1811ல் அங்கேரிய இசைக்கலைஞரான‌ பிரான்சு லிசித்து பிறந்த நாள். (இறப்பு-1886)
  1844ல் பிரான்சிய நடிகையான‌ சாரா பேர்ண்ஹார்ட் பிறந்த நாள். (இறப்பு-1923)
  1870ல் ஈழத்து வரலாற்றாளரும் எழுத்தாளருமான‌ செ. இராசநாயகம் பிறந்த நாள். (இறப்பு-1940)
  1881ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளரான‌ கிளிண்டன் ஜோசப் டேவிசன் பிறந்த நாள். (இறப்பு-1958)
  1887ல் அமெரிக்க ஊடகவியலாளரும் கவிஞருமான‌ ஜான் ரீட் பிறந்த நாள். (இறப்பு-1920)
  1900ல் இந்திய விடுதலைப் போராளியான‌ அஷ்பகுல்லா கான் பிறந்த நாள். (இறப்பு-1927)
  1902ல் இலங்கைப் பிரதமரும் அரசியல்வாதியுமான‌ டபிள்யூ. தகநாயக்க பிறந்த நாள். (இறப்பு-1997)
  1905ல் அமெரிக்க இயற்பியலாளரும் கதிர்வீச்சுப் பொறியியலாளருமான‌ கார்ல் குதே யான்சுகி பிறந்த நாள். (இறப்பு-1950)
  1907ல் இந்திய-அமெரிக்கக் கணிதவியலாளரான‌ எஸ். டீ. சௌலா பிறந்த நாள். (இறப்பு-1995)
  1919ல் தமிழகத் தமிழறிஞரும் பதிப்பாளருமான‌ எச்.வேங்கடராமன் பிறந்த நாள். (இறப்பு-1991)
  1919ல் நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளரான‌ டோரிஸ் லெசிங் பிறந்த நாள். (இறப்பு-2013)
  1922ல் தமிழக அரசியல்வாதியான‌ அ. துரையரசன் பிறந்த நாள். (இறப்பு-1988)
  1936ல் தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்ட வீரரான‌ நிவ்விலி அலெக்சாண்டர் பிறந்த நாள்.
  1938ல் இலங்கை வரலாற்றாளரும் கல்வியாளருமான‌ கா. இந்திரபாலா பிறந்த நாள்.
  1948ல் தமிழகத் தவில் கலைஞரான‌ திருவாளப்புத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி பிறந்த நாள். (இறப்பு-2020)
  1946ல் இந்திய-அமெரிக்க மருத்துவரும் எழுத்தாளருமான‌ தீபக் சோப்ரா பிறந்த நாள்.
  1967ல் ஒந்துராசு-அமெரிக்க நடிகரான‌ கார்லோசு மென்சியா பிறந்த நாள்.
  1988ல் இந்திய நடிகையான‌ பரினீதி சோப்ரா பிறந்த நாள்.

  வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 22-10 | October 22

  1864ல் தமிழ் ஆங்கில விரிவான அகராதியைத் தொகுத்த அமெரிக்க மதப்பரப்புனரான‌ மிரோன் வின்சுலோ இறப்பு நாள். (பிறப்பு-1789)
  1906ல் பிரான்சிய ஓவியரான‌ பால் செசான் இறப்பு நாள். (பிறப்பு-1839)
  1918ல் உருசிய வானியலாளரான‌ திமித்ரி துபியாகோ இறப்பு நாள். (பிறப்பு-1849)
  1925ல் தமிழக புதின எழுத்தாளரும் பத்திரிகையாசிரியருமான‌ அ. மாதவையா இறப்பு நாள். (பிறப்பு-1872)
  1964ல் பாக்கித்தானின் 2வது பிரதமரான‌ கவாஜா நசிமுத்தீன் இறப்பு நாள். (பிறப்பு-1894)
  1975ல் பிரித்தானிய நூலாசிரியரும் வரலாற்றாசிரியருமான‌ அர்னால்ட் ஜோசப் டாயின்பீ இறப்பு நாள். (பிறப்பு-1889)
  1986ல் நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-அமெரிக்க மருத்துவருமான‌ ஆல்பர்ட் செண்ட்-ஜியார்ஜி இறப்பு நாள். (பிறப்பு-1893)
  1990ல் அல்சீரிய-பிரான்சிய மெய்யியலாளரான‌ லூயி அல்தூசர் இறப்பு நாள். (பிறப்பு-1918)
  2011ல் தமிழக அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான‌ சொ. கருப்பசாமி இறப்பு நாள். (பிறப்பு-1955)

  வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

  By: Tamilpiththan

  உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

  Previous articleOctober 21 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 21
  Next articleOctober 23 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 23