November 30 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 30

0

Today Special Historical Events In Tamil | 30-11 | November 30

November 30 Today Special | November 30 What Happened Today In History. November 30 Today Whose Birthday (born) | November-30th Important Famous Deaths In History On This Day 30/11 | Today Events In History November 30th | Today Important Incident In History | கார்த்திகை 30 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 30-11 | கார்த்திகை மாதம் 30ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 30.11 Varalatril Indru Nadanthathu Enna| November 30 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 30/11 | Famous People Born Today 30.11 | Famous People died Today 30-11.

Today Special in Tamil 30-11
Today Events in Tamil 30-11
Famous People Born Today 30-11
Famous People died Today 30-11

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 30-11 | November 30

தியாகிகள் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (ஐக்கிய அரபு அமீரகம்)
விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (பார்படோசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1966)
விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (தெற்கு யேமன், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1967)
புனித அந்திரேயா விழாவாக கொண்டாடப்படுகிறது. (கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபை)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 30-11 | November 30

977ல் புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் ஒட்டோ பாரிசு மீதான முற்றுகையை நிறுத்தி, பின்வாங்கினார்.
1700ல் சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு தலைமையில் 8.500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் உருசியப் படைகளை வென்றனர்.
1718ல் நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்லசு இறந்தார்.
1782ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: பாரிசு உடன்படிக்கை: அமெரிக்காவிற்கும் மற்றும் பெரிய பிரித்தானியாவுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிசில் கையெழுத்திடப்பட்டது.
1786ல் புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் லியோப்பால்டின் தலைமையிலான டசுக்கனி மரணதண்டனையை இல்லாதொழித்த முதலாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது.
1803ல் எசுப்பானிய அமெரிக்கா, மற்றும் பிலிப்பீன்சில் பெரியம்மைக்கு எதிரான தடுப்பூசி இடுவதற்கான மூன்றாண்டுத் திட்டத்துக்கான பயணம் பால்மீசு என்ற மருத்துவர் தலைமையில் எசுப்பானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
1803ல் லூசியானா வாங்கல்: எசுப்பானியா லூசியானாவை பிரான்சுக்கு அதிகாரபூர்வமாகக் கையளித்தது. 20 நாட்களின் பின்னர் பிரான்சு இப்பிரதேசத்தை ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்றது.
1806ல் நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றின.
1853ல் கிரிமியப் போர்: உருசியப் பேரரசின் கடற்படை வடக்கு துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில் உதுமானியரின் படைகளைத் தோற்கடித்தன.
1872ல் முதலாவது பன்னாட்டுக் காற்பந்துப் போட்டி கிளாஸ்கோவில் இசுக்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது.
1908ல் பென்சில்வேனியாவில் மரியான்னா என்ற இடத்தில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 154 பேர் கொல்லப்பட்டனர்.
1917ல் முதலாம் உலகப் போர்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். ஐயாத்துரை என்ற லான்ஸ் கோப்ரல் போரில் ஈடுபட்டு இறந்தார்.
1936ல் இலண்டனில் பளிங்கு அரண்மனை தீப்பற்றி எரிந்து அழிந்தது.
1939ல் பனிக்காலப் போர்: சோவியத் படைகள் பின்லாந்தை முற்றுகையிட்டு எல்சிங்கி மீது குண்டுகளை வீசீன.
1947ல் பலத்தீன் உள்நாட்டுப் போர் ஆரம்பம். இது இசுரேல் என்ற நாட்டை உருவாக்க வழி வகுத்தது.
1954ல் அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தில் சிலக்கோகா என்ற இடத்தில் விண்வீழ்கல் ஒன்று வீடு ஒன்றில் வீழ்ந்ததில் ஒரு பெண் கொல்லப்பட்டார்.
1962ல் பர்மாவைச் சேர்ந்த யூ தாண்ட் ஐக்கிய நாடுகள் சபையின் 3வது பொதுச் செயலராகத் தெரிவானார்.
1966ல் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பார்படோசு விடுதலை பெற்றது.
1967ல் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து தெற்கு யேமன் விடுதலை பெற்றது.
1967ல் சுல்பிகார் அலி பூட்டோ பாக்கித்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.
1971ல் ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தின் டன்பு என்ற இரண்டு தீவுகளைக் கைப்பற்றியது.
1981ல் பனிப்போர்: ஜெனீவாவில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் பிரதிநிதிகள் ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள நடுத்தர அணுவாயுத ஏவுகணைகளைக் குறைக்க பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.
1995ல் அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளின்டன் வட அயர்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு வட அயர்லாந்து அமைதிப் பேச்சுக்களுக்கு ஆதரவாக உரையாற்றி, தீவிரவாதிகளை அவர் “நேற்றைய மனிதர்” எனக் கூறினார்.
1995ல் வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.
2000ல் நாசா தனது 101-வது விண்ணோடத் திட்டத்தை ஆரம்பித்தது.
2012ல் கொங்கோ குடியரசு, பிராசவில்லி நகரில் சரக்கு வானூர்தி ஒன்று நகரக் குடியிருப்புகளின் மீது வீழ்ந்ததில் 32 பேர் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 30-11 | November 30

1508ல் இத்தாலியக் கட்டிடக் கலைஞரான‌ ஆன்ட்ரே பல்லாடியோ பிறந்த நாள். (இறப்பு-1580)
1667ல் அயர்லாந்து எழுத்தாளரான‌ ஜோனதன் ஸ்விப்ட் பிறந்த நாள். (இறப்பு-1745)
1761ல் ஆங்கிலேய வேதியியலாளரான‌ சிமித்சன் டெனண்ட் பிறந்த நாள். (இறப்பு-1815)
1825ல் பிரான்சிய ஓவியரான‌ வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ பிறந்த நாள். (இறப்பு-1905)
1835ல் அமெரிக்க எழுத்தாளரான‌ மார்க் டுவெய்ன் பிறந்த நாள். (இறப்பு-1910)
1858ல் இந்திய இயற்பியலாளரான‌ ஜகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாள். (இறப்பு-1937)
1869ல் நோபல் பரிசு பெற்ற சுவீடன் இயற்பியலாலரான‌ நில்சு குஸ்டாப் டேலன் பிறந்த நாள். (இறப்பு-1937)
1874ல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரும் நோபல் பரிசு பெற்றவருமான‌ வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த நாள். (இறப்பு-1965)
1888ல் தமிழகத் தமிழறிஞரும் வழக்குரைஞருமான‌ கோவைக்கிழார் பிறந்த நாள். (இறப்பு-1969)
1902ல் இந்தியக் கணிதவியலாளரான‌ திருக்கண்ணபுரம் விஜயராகவன் பிறந்த நாள். (இறப்பு-1955)
1904ல் தமிழகத் தமிழறிஞரான‌ கவிஞரான‌ ச. து. சுப்பிரமணிய யோகி பிறந்த நாள். (இறப்பு-1963)
1923ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் தமிழ்நாட்டின் 5வது முதலமைச்சருமான‌ வி. என். ஜானகி பிறந்த நாள். (இறப்பு-1996)
1931ல் இந்திய வரலாற்றியலாளரான‌ ரூமிலா தாப்பர் பிறந்த நாள்.
1943ல் அமெரிக்க இயக்குநரான‌ டெரன்சு மாலிக் பிறந்த நாள்.
1945ல் தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியான‌ வாணி ஜெயராம் பிறந்த நாள்.
1947ல் கயானா அரசியல்வாதியும் எழுத்தாளருமான‌ மோசசு நாகமுத்து பிறந்த நாள்.
1948ல் இந்திய திரைப்பட நடிகையான‌ கே. ஆர். விஜயா பிறந்த நாள்.
1965ல் அமெரிக்க நடிகரான‌ பென் ஸ்டில்லர் பிறந்த நாள்.
1976ல் இத்தாலிய வானியலாளரான‌ மார்த்தா பர்கே பிறந்த நாள்.
1982ல் கனடிய நடிகையான‌ எலிஷா கத்பெர்ட் பிறந்த நாள்.
1985ல் அமெரிக்க நடிகையான‌ கலே கியூகோ பிறந்த நாள்.
1988ல் ஆத்திரேலியத் துடுப்பாளரான‌ பிலிப் ஹியூஸ் பிறந்த நாள். (இறப்பு-2014)
1990ல் நோர்வே சதுரங்க வீரரான‌ மாக்னசு கார்ல்சன் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 30-11 | November 30

1805ல் கோட்டயம்-மலபார் அரசரான‌ பழசி இராசா இறப்பு நாள். (பிறப்பு-1753)
1830ல் செருமானிய இயற்பியலாளரும் கணிதவியலாளரும் வானியலாளருமான‌ யோகான் தோபியாசு மேயர் இறப்பு நாள். (பிறப்பு-1752)
1900ல் ஐரிய எழுத்தாளரான‌ ஆஸ்கார் வைல்டு இறப்பு நாள். (பிறப்பு-1854)
1930ல் அமெரிக்க தொழிலாளரும் செயற்பாட்டாளருமான‌ மேரி ஹாரிசு ஜோன்சு இறப்பு நாள். (பிறப்பு-1837)
1988ல் இலங்கை இசைக்கலைஞரும் திரைப்பட இசையமைப்பாளருமான‌ எம். கே. றொக்சாமி இறப்பு நாள். (பிறப்பு-1932)
1990ல் தமிழ்த் திரைப்பட நடிகரும் டி. ஆர். ராமச்சந்திரன் இறப்பு நாள். (பிறப்பு-1917)
1992ல் தமிழக சமூகப் போராளியும் பெண்ணியவாதியுமான‌ மீனாம்பாள் சிவராஜ் இறப்பு நாள். (பிறப்பு-1904)
2012ல் இந்தியாவின் 12வது பிரதமரான‌ ஐ. கே. குஜரால் இறப்பு நாள். (பிறப்பு-1919)
2013ல் திரைப்பட நடன இயக்குநரும் நடிகருமான‌ ரகுராம் இறப்பு நாள். (பிறப்பு-1948)
2013ல் அமெரிக்க நடிகரான‌ பால் வாக்கர் இறப்பு நாள். (பிறப்பு-1973)
2014ல் இந்திய அரசியல்வாதியான‌ ஜார்பம் காம்லின் இறப்பு நாள். (பிறப்பு-1961)
2018ல் அமெரிக்காவின் 41-வது அரசுத்தலைவரான‌ ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் இறப்பு நாள். (பிறப்பு-1924)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleNovember 29 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 29
Next articleஅக்டோபர் மாத ராசி பலன்கள்! எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள்!