November 29 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 29

0

Today Special Historical Events In Tamil | 29-11 | November 29

November 29 Today Special | November 29 What Happened Today In History. November 29 Today Whose Birthday (born) | November-29th Important Famous Deaths In History On This Day 29/11 | Today Events In History November 29th | Today Important Incident In History | கார்த்திகை 29 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 29-11 | கார்த்திகை மாதம் 29ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 29.11 Varalatril Indru Nadanthathu Enna| November 29 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 29/11 | Famous People Born Today 29.11 | Famous People died Today 29-11.

Today Special in Tamil 29-11
Today Events in Tamil 29-11
Famous People Born Today 29-11
Famous People died Today 29-11

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 29-11 | November 29

பலத்தீன மக்களுடனான ஒற்றுமைக்கான பன்னாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது.
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (அல்பேனியா)
குடியரசு நாளாக கொண்டாடப்படுகிறது. (யுகோசுலாவியா)
ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது. (வனுவாட்டு)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 29-11 | November 29

1394ல் கொரிய மன்னர் யி சொங்-கை தலைநகரை கேசாங்கில் இருந்து அன்யாங்கிற்கு (இன்றைய சியோல்) மாற்றினார்.
1549ல் திருத்தந்தைத் தேர்தல் (1549–50) ஆரம்பமானது.
1612ல் சுவாலி என்ற இடத்தில் (இன்றைய குசராத்து மாநிலத்தில்) போர்த்துக்கீசருக்கும் கிழக்கிந்திய நிறுவன படைகளுக்குமிடையே இடம்பெற்ற போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.
1729ல் நாட்செசு பழங்குடியினர் மிசிசிப்பியில் பிரெஞ்சுக் குடியேறிகளான 138 ஆண்கள், 35 பெண்கள், 56 குழந்தைகளைப் படுகொலை செய்தனர்.
1732ல் தெற்கு இத்தாலி, நாபொலியில் 6.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,940 பேர் உயிரிழந்தனர்.
1781ல் அடிமைகளை ஏற்றிச்சென்ற சொங் என்ற பிரித்தானியக் கப்பல் மாலுமிகள் காப்பீடு பெறுவதற்காக 133 ஆப்பிரிக்கர்களைக் கொன்று கடலுக்குள் எறிந்தனர்.
1783ல் அமெரிக்காவின் நியூ செர்சி மாநிலத்தில் 5.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
1807ல் நெப்போலியப் படைகள் போர்த்துகலுக்கு முன்னேறியதை அடுத்து ஆறாம் யோவான் மன்னர் லிஸ்பனில் இருந்து அரச குடும்பத்தினருடன் வெளியேறி பிரேசிலுக்கு சென்றார்.
1830ல் போலந்தில் உருசியாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.
1847ல் வாசிங்டனில் மதப்பரப்புனர் மார்க்கசு விட்மன், அவரது மனைவி மற்றும் 15 பேர் அமெரிக்கப் பழங்குடிகளினால் கொல்லப்பட்டனர்.
1850ல் புருசியா ஆத்திரியாவின் தலைமையில் செருமன் கூட்டமைப்பில் சேர சம்மதித்தது.
1855ல் துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.
1877ல் தாமசு ஆல்வா எடிசன் போனோகிராப் என்ற ஒலிப்பதிவுக் கருவியை முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.
1890ல் சப்பானில் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.
1899ல் பார்சிலோனா கால்பந்துக் கழகம் அமைக்கப்பட்டது.
1915ல் கலிபோர்னியாவில் சாண்டா கட்டலீனா தீவின் பல முக்கிய கட்டடங்கள் தீப்பற்றி எரிந்தன.
1922ல் ஹவார்ட் கார்ட்டர் பண்டைய எகிப்தின் துட்டன்காமுன் மன்னனின் கல்லறையை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விட்டார்.
1929ல் அமெரிக்கர் ரிச்சார்ட் பயேர்ட் தென் முனை மேல் பறந்த முதல் மனிதரானார்.
1944ல் இரண்டாம் உலகப் போர்: அல்பேனியா விடுவிக்கப்பட்டது.
1945ல் யுகோசுலாவிய கூட்டு மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
1947ல் முதலாம் இந்தோ-சீனப் போர்: வியட்நாமில் மீ டிராக் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகளடங்கிய 300 பேரைப் படுகொலை செய்தன.
1947ல் பாலத்தீனத்தைப் பிரிப்பதென ஐக்கிய நாடுகள் பொதுச் சபை முடிவெடுத்தது.
1950ல் வட கொரியா மற்றும் சீனப் படைகள் ஐநா படைகளை வட கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர்.
1961ல் நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது பூமியை இரு தடவைகள் சுற்றிவந்து புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது.
1963ல் கனடிய விமானம் மொன்ட்ரியாலில் விபத்துக்குள்ளாகியதில் 118 பேர் உயிரிழந்தனர்.
1982ல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சோவியத் படைகளை ஆப்கானித்தானில் இருந்து உடனடியாக விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது.
1986ல் சுரிநாம் இராணுவம் மொய்வானா கிராமத்தைத் தாக்கி 39 பொதுமக்களைக் கொன்றது.
1987ல் தென் கொரிய விமானம் தாய்-பர்மிய எல்லைக்கருகில் வெடித்துச் சிதறியதில் 115 பேர் கொல்லப்பட்டனர்.
2006ல் அணுவாயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஷாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாக்கித்தான் வெற்றிகரமாக நடத்தியது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 29-11 | November 29

1803ல் ஆத்திரியக் கணிதவியலாளரும் இயற்பியலாளருமான‌ கிறிஸ்டியன் டாப்ளர் பிறந்த நாள். (இறப்பு-1853)
1835ல் சீனப் பேரரசியான‌ டோவாகர் சிக்சி பிறந்த நாள். (இறப்பு-1908)
1901ல் இந்திய ஓவியரான‌ சோபா சிங் பிறந்த நாள். (இறப்பு-1986)
1908ல் தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகரான‌ என். எஸ். கிருஷ்ணன் பிறந்த நாள். (இறப்பு-1957)
1913ல் தமிழக நாடக மற்றும் திரைப்பட நடிகருமான‌ எஸ். வி. சகஸ்ரநாமம் பிறந்த நாள். (இறப்பு-1988)
1913ல் ஆர்மேனிய-சோவியத் வானியற்பியலாளரான‌ பெஞ்சமின் மர்க்கரியான் பிறந்த நாள். (இறப்பு-1985)
1924ல் கேரளக் கர்நாடக இசைக்கலைஞரான‌ பாறசாலை பி. பொன்னம்மாள் பிறந்த நாள். (இறப்பு-2021)
1932ல் பிரான்சின் 22வது அரசுத்தலைவரான‌ ஜாக் சிராக் பிறந்த நாள். (இறப்பு-2019)
1936ல் ஈழத்துத் தமிழறிஞரும் பேராசிரியருமான‌ ஆ. வேலுப்பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-2015)
1963ல் தமிழீழ விடுதலைப் புலிப் போராளியான‌ திலீபன் பிறந்த நாள். (இறப்பு-1987)
1963ல் இந்தியத் தொழிலதிபரான‌ லலித் மோடி பிறந்த நாள்.
1977ல் பாக்கித்தானியத் துடுப்பாளரான‌ யூனுஸ் கான் பிறந்த நாள்.
1982ல் இந்திய நடிகையும் அரசியல்வாதியுமான‌ ரம்யா பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 29-11 | November 29

1530ல் இங்கிலாந்தின் உயராட்சித் தலைவரான‌ தாமஸ் வோல்சி இறப்பு நாள். (பிறப்பு-1470)
1694ல் இத்தாலிய உயிரியலாளரும் மருத்துவருமான‌ மார்செல்லோ மால்பிகி இறப்பு நாள். (பிறப்பு-1628)
1872ல் இசுக்காட்டிய-இத்தாலிய வானியலாளரும் கணிதவியலாளருமான‌ மேரி சோமர்வில்லி இறப்பு நாள்.
1924ல் இத்தாலிய இசையமைப்பாளரான‌ ஜாக்கோமோ புச்சீனி இறப்பு நாள். (பிறப்பு-1858)
1989ல் திரைப்படப் பாடலாசிரியரான‌ அ. மருதகாசி இறப்பு நாள். (பிறப்பு-1920)
1993ல் பிரான்சிய-இந்தியத் தொழிலதிபரான‌ ஜெ. ஆர். டி. டாட்டா இறப்பு நாள். (பிறப்பு-1904)
2008ல் தென்மார்க்கு கட்டிடக்கலைஞரான‌ ஜோர்ன் உட்சன் இறப்பு நாள். (பிறப்பு-1918)
2010ல் இலங்கை ஊடகவியலாளரான எஸ். சிவநாயகம் இறப்பு நாள். (பிறப்பு-1930)
2011ல் அசாமிய எழுத்தாளரும் பத்திரிகையாசிரியருமான‌ இந்திரா கோஸ்வாமி இறப்பு நாள். (பிறப்பு-1942)
2011ல் இலங்கை அரசியல்வாதியான‌ எம். ஏ. அப்துல் மஜீத் இறப்பு நாள். (பிறப்பு-1926)
2013ல் இலங்கைத் தமிழ்க் கல்வியாளரான‌ பாலகுமாரன் மகாதேவா இறப்பு நாள். (பிறப்பு-1921)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleNovember 28 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 28
Next articleNovember 30 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 30