December 01 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 01

0

Today Special Historical Events In Tamil | 01-12 | December 01

December 01 Today Special | December 01 What Happened Today In History. December 01 Today Whose Birthday (born) | December-1st Important Famous Deaths In History On This Day 01/12 | Today Events In History December 01st | Today Important Incident In History | மார்கழி 01 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 01-12 | மார்கழி மாதம் 01ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 01.12 Varalatril Indru Nadanthathu Enna| December 01 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 01/12 | Famous People Born Today 01.12 | Famous People died Today 01-12.

Today Special in Tamil 01-12
Today Events in Tamil 01-12
Famous People Born Today 01-12
Famous People died Today 01-12

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 01-12 | December 01

குடியரசு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு
விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (போர்த்துக்கல்)
ஆசிரியர் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (பனாமா)
உலக எயிட்சு நாளாக‌ கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 01-12 | December 01

800ல் வத்திக்கானில் பிராங்கியப் பேரரசர் சார்லமேன் திருத்தந்தை மூன்றாம் லியோ மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்தார்.
1420ல் இங்கிலாந்தின் ஐந்தாம் என்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான்.
1768ல் அடிமைகளை ஏற்றிச் செல்லும் பிரெடென்போர்க் என்ற கப்பல் ஒன்று நோர்வேக்கருகில் மூழ்கியது.
1822ல் முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசராக முடிசூடினார்.
1828ல் அர்கெந்தீனாவில் இராணுவத் தளபதி யுவான் லாவால் ஆளுநர் மனுவேல் டொரெகோவுக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி, திசம்பர் புரட்சியை ஆரம்பித்தான்.
1834ல் தென்னாப்பிரிக்காவின் கேப் குடியேற்றத்தில் அடிமைத் தொழில் ஒழிக்கப்பட்டது.
1875ல் வேல்சு இளவரசர் (பின்னாளைய ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார். இலங்கைத் தமிழர் சார்பில் சொலமன் ஜோன்பிள்ளை வரவேற்புரையைப் படித்தார்.
1913ல் தெற்கு அரைக்கோளத்தின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை பிரேசிலின் புவெனஸ் ஐரிஸ் நகரில் ஆரம்பமாகியது.
1913ல் முதலாவது பால்கான் போரை அடுத்து துருக்கியிடம் இருந்து சுயாட்சி உரிமை பெற்ற பெற்ற கிரீட் கிரேக்கத்துடன் இணைந்தது.
1918ல் திரான்சில்வேனியா உருமேனியாவுடன் இணைந்தது.
1918ல் ஐஸ்லாந்து டென்மார்க் முடியாட்சியின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது.
1918ல் சேர்பிய, குரொவாசிய, சிலவேனிய இராச்சியம் (பின்னர் யூகொசிலாவிய இராச்சியம்) அமைக்கப்பட்டது.
1924ல் எஸ்தோனியாவில் கம்யூனிசப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
1934ல் சோவியத் ஒன்றியத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் செர்கே கீரொவ் கட்சித் தலைமையகத்தில் வைத்து லியொனீட் நிக்கொலாயெவ் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். யோசப் ஸ்டாலின் இந்நிகழ்வைப் பயன்படுத்தி பெரும் துப்புரவாக்கத்தை ஆரம்பித்தார்.
1941ல் இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் பேரரசர் இறோகித்தோ அமெரிக்காவுடனான போரை ஆரம்பிக்க ஒப்புதல் அளித்தார்.
1958ல் மத்திய ஆபிரிக்கக் குடியரசு பிரெஞ்சு ஒன்றியத்தினுள் சுயாட்சி பெற்றது.
1958ல் சிக்காகோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் உயிரிழந்தனர்.
1959ல் பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
1960ல் கொங்கோ அதிபர் பத்திரிசு லுமும்பா இராணுவத் தளபதி மொபுட்டுவினால் கைது செய்யப்பட்டார்.
1961ல் இந்தோனேசியாவின் மேற்கு நியூ கினியில் மேற்கு பப்புவா குடியரசு அறிவிக்கப்பட்டது.
1963ல் நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.
1965ல் இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.
1971ல் கெமர் ரூச் போராளிகள் கம்போடிய அரசு நிலைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தனர்.
1971ல் இந்திய இராணுவம் காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்தது.
1973ல் பப்புவா நியூ கினி ஆத்திரேலியாவிடம் இருந்து சுயாட்சி பெற்றது.
1974ல் அமெரிக்காவின் வர்ஜீனியாவில் போயிங் 727 வானூர்தி வீழ்ந்ததில் 92 பேர் உயிரிழந்தனர்.
1974ல் ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு வடமேற்கே போயிங் 727 வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்தனர்.
1981ல் யுகோசுலாவியாவின் வானூர்தி ஒன்று கோர்சிகாவில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 180 பேரும் உயிரிழந்தனர்.
1988ல் உலக எயிட்சு நாள் ஐக்கிய நாடுகளினால் அறிவிக்கப்பட்டது.
1989ல் பனிப்போர்: கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோக அதிகாரத்தை அகற்ற கிழக்கு செருமனி நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது.
1989ல் பிலிப்பீன்சு அரசுத்தலைவர் கொரசோன் அக்கினோவைப் பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட இராணுவப் புரட்சி தோல்வியடைந்தது.
1991ல் பனிப்போர்: உக்ரைன் வாக்காளர்கள் சோவியத்திடம் இருந்து உக்ரைன் முற்றாக வெளியேற வாக்களித்தனர்.
1997ல் இந்தியாவின் பீகார் மாநிலத்தில், ரன்வீர் சேனா அமைப்பினர் கம்யூனிஸ்டுக் கட்சியின் செல்வாக்குள்ள இலக்சுமன்பூர்-பதி என்ற ஊரைத் தாக்கி 63 தலித்துகளைக் கொன்றனர்.
2006ல் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச மீது கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவர் காயமெதுவுமின்றி தப்பினார்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 01-12 | December 01

1895ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான‌ காகா காலேல்கர் பிறந்த நாள். (இறப்பு-1981)
1900ல் தமிழக இதழாளரும் எழுத்தாளரும் திராவிட இயக்க செயல்பாட்டாளருமான‌ சாமி சிதம்பரனார் பிறந்த நாள். (இறப்பு-1961)
1901ல் தமிழகப் புதின எழுத்தாளரான‌ வை.மு.கோதைநாயகி பிறந்த நாள். (இறப்பு-1960)
1918ல் இந்திய ஆன்மிகத் துறவியான‌ யோகி ராம்சுரத்குமார் பிறந்த நாள். (இறப்பு-2001)
1935ல் அமெரிக்க நடிகரும் தயாரிப்பாளரான‌ வுடி ஆலன் பிறந்த நாள்.
1949ல் கொலம்பியாவின் போதைக் கடத்தல் குழுத் தலைவரான‌ பப்லோ எசுகோபர் பிறந்த நாள். (இறப்பு-1993)
1949ல் சிலியின் 35வது அரசுத்தலைவரான‌ செபஸ்டியான் பினேரா பிறந்த நாள்.
1954ல் இந்திய சமூக ஆர்வலரான‌ மேதா பட்கர் பிறந்த நாள்.
1955ல் இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரான‌ உதித் நாராயண் பிறந்த நாள்.
1963ல் இலங்கைத் துடுப்பாட்ட வீரரும் அரசியல்வாதியுமான‌ அர்ஜுன றணதுங்க பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 01-12 | December 01

1825ல் உருசியப் பேரரசரான‌ முதலாம் அலெக்சாந்தர் இறப்பு நாள். (பிறப்பு-1777)
1859ல் ஆங்கிலேய சட்ட வல்லுநரும் அரசியல் சிந்தனையாளருமான‌ ஜான் ஆஸ்டின் இறப்பு நாள். (பிறப்பு-1790)
1866ல் உவெல்சிய புவியியலாளரான‌ ஜார்ஜ் எவரஸ்ட் இறப்பு நாள். (பிறப்பு-1790)
1916ல் பிரான்சிய மதகுருவான‌ சார்லஸ் தெ ஃபூக்கோ இறப்பு நாள். (பிறப்பு-1858)
1927ல் இந்திய நிருவாகியான‌ பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி இறப்பு நாள். (பிறப்பு-1862)
1947ல் ஆங்கிலேயக் கணிதவியலாளரான‌ ஜி. எச். ஹார்டிப் இறப்பு நாள். (பிறப்பு-1877)
1964ல் ஆங்கிலேய-இந்திய உயிரியலாளரான‌ ஜே. பி. எஸ். ஹால்டேன் இறப்பு நாள். (பிறப்பு-1892)
1973ல் இசுரேலின் 1வது பிரதமரான‌ டேவிட் பென்-குரியன் இறப்பு நாள். (பிறப்பு-1886)
1974ல் உத்தரப் பிரதேச முதலமைச்சரான‌ சுசேதா கிருபளானி இறப்பு நாள். (பிறப்பு-1908)
1980ல் சிந்தி அறிஞரும் விமர்சகரும் எழுத்தாளருமான‌ மங்காராம் உதராம் மல்கானி இறப்பு நாள். (பிறப்பு-1896)
1990ல் இந்திய அரசியல்வாதியான‌ விஜயலட்சுமி பண்டிட் இறப்பு நாள். (பிறப்பு-1900)
2001ல் அமெரிக்கத் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான‌ எல்லிஸ் ஆர். டங்கன் இறப்பு நாள். (பிறப்பு-1909)
2012ல் இந்திய புவியியற்பியலாளரான‌ தேவேந்திரலால் இறப்பு நாள். (பிறப்பு-1929)
2015ல் தமிழகப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான‌ விக்கிரமன் இறப்பு நாள். (பிறப்பு-1928)
2016ல் தமிழகக் கவிஞரும் சொற்பொழிவாளரும் நாடக ஆசிரியரும் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான‌ இன்குலாப் இறப்பு நாள். (பிறப்பு-1944)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article12 ராசிக்காரர்களும் பணக்காரராக வர வேண்டுமா? ஜோதிடத்தின் படி பணத்தை சேமிப்பதற்கான சரியான வழி!
Next articleஇன்றைய ராசி பலன் 02.10.2022 Today Rasi Palan 02-10-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!