March 10 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 10

0

Today Special Historical Events In Tamil | 10-03 | March 10

March 10 Today Special | March 10 What Happened Today In History. March 10 Today Whose Birthday (born) | March-10th Important Famous Deaths In History On This Day 10/03 | Today Events In History March 10th | Today Important Incident In History | பங்குனி 10 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 10-03 | பங்குனி மாதம் 10ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 10.03 Varalatril Indru Nadanthathu Enna| March 10 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 10/03 | Famous People Born Today 10.03 | Famous People died Today 10-03.

Today Special in Tamil 10-03
Today Events in Tamil 10-03
Famous People Born Today 10-03
Famous People died Today 10-03

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 10-03 | March 10

பெரும் இனவழிப்பு நினைவு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (பல்காரியா)
திபெத்திய எழுச்சி நாளாக‌ கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 10-03 | March 10

298ல் உரோமைப் பேரரசர் மாக்சிமியன் வட ஆப்பிரிக்காவில் பேர்பர்களுக்கு எதிரான போரை முடித்துக் கொண்டு, கார்த்திஜ் நகரைச் சென்றடைந்தார்.
1629ல் முதலாம் சார்லசு மன்னர் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை.
1735ல் உருசியாவிற்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி உருசியப் படைகள் அசர்பைஜானின் பக்கூ நகரில் இருந்து வெளியேறின.
1801ல் பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
1804ல் லூசியானா வாங்கல்: லூசியானாவை அதிகாரபூர்வமாக பிரான்சிடம் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குக் கையளிக்கும் நிகழ்ச்சி மிசூரி, செயிண்ட் லூயிசில் நடைபெற்றது.
1814ல் பிரான்சில் லாவோன் என்ற இடத்தில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.
1830ல் அரச நெதர்லாந்து கிழக்கிந்திய இராணுவம் அமைக்கப்பட்டது.
1848ல் மெக்சிக்கோ-அமெரிக்கப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கையை அமெரிக்க மேலவை ஏற்றுக் கொண்டது.
1865ல் ஏமி ஸ்பெயின் என்ற அமெரிக்க அடிமைப் பெண், தனது முதலாளியிடம் இருந்து திருடிய குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டாள்.
1876ல் அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் வெற்றிகரமான தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.
1893ல் ஐவரி கோஸ்ட் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகியது.
1902ல் துருக்கியின் டோச்சாங்கிரி என்ற நகர் நிலநடுக்கத்தினால் முற்றாக அழிந்தது.
1906ல் வடக்கு பிரான்சில் குரியேரெஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 1,099 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1909ல் மலேசியத் தீபகற்பத்தின் கடாரம், கிளாந்தான், பெர்லிஸ், திராங்கானு உள்ளடங்கிய இறைமையை ஆங்கிலோ-சியாம் உடன்படிக்கையின் படி தாய்லாந்து பிரித்தானியாவுக்கு விட்டுக் கொடுத்தது.
1911ல் இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.
1922ல் கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் இரண்டாண்டுகளில் குடல்வாலழற்சி காரணமாக விடுதலையானார்.
1933ல் கலிபோர்னியாவின் லோங் கடற்கரையில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கம் காரணமாக 120 பேர் உயிரிழந்தனர்.
1945ல் இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க வான்படையினர் டோக்கியோ மீது குண்டுகள் வீசியதில் 100,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1948ல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1952ல் கியூபாவில் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா தலைமையில் இராணுவப் புரட்சி வெற்றி பெற்றது.
1959ல் திபெத்திய எழுச்சி: சீனாவினால் கடத்தப்படலாம் என்ற அச்சத்தினால் பல்லாயிரக்கணக்கான திபெத்தியர் தலாய் லாமாவின் மாளிகையைச் சூழ்ந்து கொண்டு அவருக்குப் பாதுகாப்பளித்தனர்.
1970ல் வியட்நாம் போர்: அமெரிக்கத் தளபதி ஏர்னெஸ்ட் மெடினா வியட்நாமில் 1968 இல் நிகழ்த்திய மை லாய் படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டான்.
1977ல் யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
1982ல் கோள்கள் அனைத்தும் சூரியனின் ஒரு பக்கத்தில் வரிசையில் காணப்பட்டன.
1990ல் எயிட்டியில் இடம்பெறற இராணுவப் புரட்சியில் புரொஸ்பர் அவ்ரில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2003ல் விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் இலங்கைக் கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 11 போராளிகள் கொல்லப்பட்டனர்.
2006ல் செவ்வாய் உளவு சுற்றுக்கலன் செவ்வாய்க் கோளை அடைந்தது.
2011ல் சப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 10-03 | March 10

1628ல் இத்தாலிய மருத்துவரும் உயிரியலாளருமான‌ மார்செல்லோ மால்பிகி பிறந்த நாள். (இறப்பு-1694)
1760ல் பிரித்தானிய இலங்கையின் 2-வது ஆளுநரான‌ தோமசு மெயிற்லண்ட் பிறந்த நாள். (இறப்பு-1824)
1762ல் செருமானிய வேதியியலாளரான‌ ஜெர்மியாசு பெஞ்சமன் ரிச்டர் பிறந்த நாள். (இறப்பு-1807)
1798ல் பிரான்சியக் கணிதவியலாளரான‌ பியர்ரே பிரெடெரிக் சாரசு பிறந்த நாள். (இறப்பு-1861)
1845ல் உருசியாவின் மூன்றாம் அலெக்சாந்தர் பிறந்த நாள். (இறப்பு-1894)
1867ல் அமெரிக்கத் தாதியும் மனிதநேயவாதியுமான‌ லில்லியன் டி வால்டு பிறந்த நாள். (இறப்பு-1940)
1884ல் ஈழத்துக் காந்தியவாதியும் சமூக சீர்திருத்தவாதியும் பெண்ணியவாதியும் அரசியல்வாதியுமான‌ மா. மங்களம்மாள் பிறந்த நாள். (இறப்பு-1971)
1886ல் தமிழகத் தமிழறிஞரான‌ செகவீர பாண்டியனார் பிறந்த நாள். (இறப்பு-1967)
1914ல் இலங்கைத் தமிழறிஞரும் அரசியல்வாதியுமான‌ கா. பொ. இரத்தினம் பிறந்த நாள். (இறப்பு-2010)
1920ல் திராவிடர் கழகத்தின் தலைவரும் சொற்பொழிவாளரும் எழுத்தாளருமான‌ மணியம்மையார் பிறந்த நாள். (இறப்பு-1978)
1921ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ எம். வி. ராஜம்மா பிறந்த நாள். (இறப்பு-1999)
1932ல் இந்திய இயற்பியலாளரும் பொறியியலாளருமான‌ உடுப்பி ராமச்சந்திர ராவ் பிறந்த நாள்.
1933ல் தமிழ்த்தேசிய உணர்வாளரான‌ பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த நாள். (இறப்பு-1995)
1933ல் தமிழக அரசியல்வாதியும் தமிழ்த் தேசிய உணர்வாளருமான‌ பழ. நெடுமாறன் பிறந்த நாள்.
1934ல் கேரள அரசியல்வாதியான‌ எம். கே. நாராயணன் பிறந்த நாள்.
1936ல் சுவிட்சர்லாந்துத் தொழிலதிபரான‌ செப் பிளாட்டர் பிறந்த நாள்.
1939ல் இந்திய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான‌ அஸ்கர் அலி என்ஜினியர் பிறந்த நாள். (இறப்பு-2013)
1940ல் அமெரிக்க நடிகரும் தற்காப்புக் கலை வீரருமான‌ சக் நோரிஸ் பிறந்த நாள்.
1949ல் கனடியக் கணிணி அறிவியலாளரான‌ பில் பக்ஸ்டன் பிறந்த நாள்.
1952ல் சிம்பாப்வேயின் 2வது பிரதமரான‌ மோர்கன் சுவாங்கிராய் பிறந்த நாள்.
1957ல் அல் காயிதா அமைப்பை ஆரம்பித்த சவுதி அரேபியரான‌ உசாமா பின் லாதின் பிறந்த நாள். (இறப்பு-2011)
1957ல் இந்திய இயற்பியலாளரும் பேராசிரியருமான‌ தாணு பத்மநாபன் பிறந்த நாள். (இறப்பு-2021)
1958ல் அமெரிக்க நடிகையான‌ ஷாரன் ஸ்டோன் பிறந்த நாள்.
1971ல் அமெரிக்க நடிகரான‌ ஜான் ஹாம் பிறந்த நாள்.
1974ல் டுவிட்டரை ஆரம்பித்த அமெரிக்கத் தொழிலதிபரான‌ பிஸ் ஸ்டோன் பிறந்த நாள்.
1984ல் அமெரிக்க நடிகையான‌ ஒலிவியா வைல்ட் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 10-03 | March 10

483ல் திருத்தந்தையான‌ சிம்ப்ளீசியுஸ் இறப்பு நாள்.
1872ல் இத்தாலிய ஊடகவியலாளரும் அரசியல்வாதியுமான‌ ஜிசொப்பி மாசினி இறப்பு நாள். (பிறப்பு-1805)
1897ல் இந்தியக் கவிஞரும் செயற்பாட்டாளருமான‌ சாவித்திரிபாய் புலே இறப்பு நாள். (பிறப்பு-1831)
1913ல் அமெரிக்க தாதியும் செயற்பாட்டாளருமான‌ ஹேரியட் டப்மேன் இறப்பு நாள். (பிறப்பு-1820)
1966ல் நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளரான‌ பிரிட்சு ஜெர்னிகி இறப்பு நாள். (பிறப்பு-1888)
1973ல் தமிழக நாதசுவரக் கலைஞரான‌ குழிக்கரை காளிதாஸ் பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1913)
1978ல் தென்னிந்திய அரசியல்வாதியும் சென்னை மாகாண முதல்வருமான‌ பொபிலி அரசர் இறப்பு நாள். (பிறப்பு-1901)
1979ல் தமிழக எழுத்தாளரும் நாடகாசிரியரும் நடிகரும் கவிஞரும் திரைப்பட இயக்குநருமான‌ எஸ். டி. சுந்தரம் இறப்பு நாள். (பிறப்பு-1921)
1999ல் மராத்திய எழுத்தாளரான‌ குசுமாகரசு இறப்பு நாள். (பிறப்பு-1912)
2001ல் ஈழ-ஆத்திரேலியக் கணிதவியலாளரும் தமிழ் தேசிய செயற்பாட்டாளருமான‌ சி. ஜே. எலியேசர் இறப்பு நாள். (பிறப்பு-1918)
2012ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளரான‌ பிராங்க் செர்வுட் ரோலண்ட் இறப்பு நாள். (பிறப்பு-1927)
2016ல் இலங்கை எழுத்தாளரும் வெளியீட்டாளரும் ஊடகவியலாளரும் விக்கிப்பீடியருமான‌ பீ. எம். புன்னியாமீன் இறப்பு நாள். (பிறப்பு-1960)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleMarch 09 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 09
Next articleMarch 11 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 11