March 11 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 11

0

Today Special Historical Events In Tamil | 11-03 | March 11

March 11 Today Special | March 11 What Happened Today In History. March 11 Today Whose Birthday (born) | March-11th Important Famous Deaths In History On This Day 11/03 | Today Events In History March 11th | Today Important Incident In History | பங்குனி 11 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 11-03 | பங்குனி மாதம் 11ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 11.03 Varalatril Indru Nadanthathu Enna| March 11 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 11/03 | Famous People Born Today 11.03 | Famous People died Today 11-03.

Today Special in Tamil 11-03
Today Events in Tamil 11-03
Famous People Born Today 11-03
Famous People died Today 11-03

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 11-03 | March 11

விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (லித்துவேனியா, சோவியத் ஒன்றியத்தில் இருந்து, 1990)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 11-03 | March 11

222ல் உரோமைப் பேரரசர் எலகபாலுசு கிளர்ச்சி ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து பிரடோரியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் உரோமை நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு டைபர் ஆற்றில் வீசப்பட்டன.
1649ல் புரோந்து உள்நாட்டுப் போரில் பிரான்சுடன் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1702ல் முதலாவது ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட் லண்டனில் வெளியிடப்பட்டது.
1784ல் மங்களூர் உடன்படிக்கை எட்டப்பட்டதை அடுத்து இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது.
1812ல் சேர் இராபர்ட் பிரவுன்ரிக் பிரித்தானிய இலங்கையின் 3-வது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
1861ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.
1864ல் இங்கிலாந்து செபீல்டு நகரில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கினால் 238 பேர் உயிரிழந்தனர்.
1888ல் ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக் கரையில் பெரும் பனிப்புயல் தாக்கியதில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.
1897ல் மேற்கு வேர்ஜீனியாவுக்கு மேலாகப் பறந்த எரிவெள்ளி ஒன்று வெடித்து சிதறியதில் சேதம் ஏற்பட்டது.
1902ல் இலங்கையில் காங்கேசன்துறையில் இருந்து சாவகச்சேரி வரையான 21 மைல் நீள புகையிரதப் பாதை அமைக்கப்பட்டது.
1905ல் இலங்கையில் காங்கேசன்துறை முதல் மதவாச்சி வரை புகையிரதப் பாதை அமைக்கும் பணி முடிவடைந்தது.
1917ல் முதலாம் உலகப் போர்: பக்தாத் நகரம் ஜெனரல் ஸ்டான்லி மோட் தலைமையிலான ஆங்கிலோ-இந்தியப் படைகளிடம் வீழ்ந்தது.
1918ல் உருசியாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது.
1931ல் சோவியத் ஒன்றியத்தில் “வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு” என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1941ல் இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் கடன்-குத்தகை ஒப்பந்தம் சட்டத்தை அமுல்படுத்தினார். இதன் மூலம் அமெரிக்கத் தயாரிப்பு போர்த் தளவாடங்கள் நேச நாடுகளுக்கு கடனாக அனுப்பப்பட்டன.
1945ல் இரண்டாம் உலகப் போர்: சப்பானியக் கடற்படை அமெரிக்க பசிபிக் கடற்படைத் தளங்கள் மீது மிகப்பெரிதான கமிக்காஸ் தாக்குதலை ஆரம்பித்தது.
1945ல் இரண்டாம் உலகப் போர்: சப்பானின் பொம்மை அரசு வியட்நாம் இராச்சியம் பாவோ தாய் தலைமையில் அமைக்கப்பட்டது.
1946ல் நாட்சிகளின் அவுசுவிட்சு வதமிகாமின் முதலாம் கட்டலை அதிகாரி ருடோல்ஃப் ஒசு பிரித்தானியப் படைகளால் கைப்பற்றப்பட்டார்.
1958ல் ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் அணுகுண்டு ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் தெற்கு கரோலைனாவில் பலர் காயமடைந்தனர்.
1977ல் வாசிங்டனில் அனாஃபி முசுலிம்களால் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த 130 பேரும் மூன்று இசுலாமிய நாடுகளின் கூட்டு முயற்சியை அடுத்து விடுவிக்கப்பட்டனர்.
1978ல் ஒன்பது பாலத்தீனத் தீவிரவாதிகள் இசுரேலில் பேருந்து ஒன்றைக் கடத்தி 37 பொதுமக்களைக் கொன்றனர்.
1983ல் பாக்கித்தான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக சோதித்தது.
1990ல் லித்துவேனியா சோவியத்திடம் இருந்து தன்னிச்சையாக விடுதலையை அறிவித்தது.
1998ல் திருகோணமலைத் துறைமுகத்தில் கரும்புலிகள் இலங்கையின் ரோந்துப் படகொன்றை மூழ்கடித்தனர்.
1999ல் இன்ஃபோசிஸ், இந்தியாவின் முதலாவது வணிக நிறுவனமாக நாஸ்டாக் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படட்து.
2004ல் எசுப்பானியா தலைநகர் மாத்ரிதில் இடம்பெற்ற தொடர் தொடருந்துக் குண்டுவெடிப்பில் 192 பேர் கொல்லப்பட்டனார்.
2007ல் தென் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள கயானா விண்வெளி ஏவுதளத்தில் ஆரியான்-5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட்-4பி என்ற இந்திய செய்மதியையும் ஸ்கைநெட்-5ஏ என்ற பிரித்தானியாவின் துணைக்கோளையும் சுமந்து சென்றது.
2009ல் செருமனியில் வின்னென்டென் பாடசாலையில் மேற்கொள்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்தனர்.
2010ல் செபஸ்டியான் பினேரா சிலியின் அரசுத்தலைவராக பதவியேற்றார். இந்நாளில், சிலியின் பிச்சிலெமு பகுதியில் 6.9 அளவு ஏற்பட்ட நிலநடுக்கம் பதவியேற்பு நிகழ்வைப் பாதித்தது.
2011ல் சப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலகின் இரண்டாவது பெரிய அணுவுலைப் பேரழிவு இடம்பெற்றது.
2012ல் ஆப்கானித்தான், காந்தாரம் அருகே அமெரிக்க இராணுவ வீரன் 16 பொதுமக்களைப் படுகொலை செய்தான்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 11-03 | March 11

378ல் திருத்தந்தையான‌ முதலாம் இன்னசெண்ட் பிறந்த நாள். (இறப்பு-417)
1811ல் பிரான்சியக் கணிதவியலாளரும் வானியலாளருமான‌ உர்பைன் லெவெரியே பிறந்த நாள். (இறப்பு-1877)
1898ல் இராமகிருஷ்ண குருகுல மரபைச் சேர்ந்த துறவியான‌ சித்பவானந்தர் பிறந்த நாள். (இறப்பு-1985)
1912ல் இந்திய விடுதலைப்போராட்ட செயற்பாட்டாளரான‌ என். ஜி. ராமசாமி பிறந்த நாள். (இறப்பு-1943)
1913ல் தமிழக எழுத்தாளரும் பாடலாசிரியரும் திரைக்கதை ஆசிரியருமான‌ சக்தி கிருஷ்ணசாமி பிறந்த நாள். (இறப்பு-1987)
1922ல் மலேசியாவின் 2வது பிரதமரான‌ அப்துல் ரசாக் உசேன் பிறந்த நாள். (இறப்பு-1976)
1927ல் இந்திய புற்றுநோய் மருத்துவ நிபுணரான‌ வி. சாந்தா பிறந்த நாள். (இறப்பு-2021)
1931ல் ஆத்திரேலிய-அமெரிக்கத் தொழிலதிபரான‌ ரூப்பர்ட் மர்டாக் பிறந்த நாள்.
1936ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய நச்சுயிரியலாளரான‌ ஹெரால்டு சூர் ஹாசென் பிறந்த நாள்.
1952ல் ஆங்கிலேய எழுத்தாளரான‌ டக்ளஸ் ஆடம்ஸ் பிறந்த நாள். (இறப்பு-2001)
1985ல் இலங்கைத் துடுப்பாளரான‌ அஜந்த மென்டிஸ் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 11-03 | March 11

1863ல் ஆங்கிலேய இராணுவ அதிகாரியான‌ ஜேம்சு ஓற்றம் இறப்பு நாள். (பிறப்பு-1803)
1955ல் நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டிய உயிரியலாளரான‌ அலெக்சாண்டர் பிளெமிங் இறப்பு நாள். (பிறப்பு-1881)
1967ல் இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளரான‌ வெ. அ. சுந்தரம் இறப்பு நாள். (பிறப்பு-1896)
1971ல் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான‌ பைலோ பார்ன்சுவர்த் இறப்பு நாள். (பிறப்பு-1906)
1979ல் ஆந்திர கருநாடக இசைக் கலைஞரான‌ ஆர். அனந்த கிருஷ்ணர் இறப்பு நாள். (பிறப்பு-1893)
1997ல் மலையாள இயக்குனரான‌ நடிகரான‌ தயாரிப்பாளர் திக்குறிசி சுகுமாரன் இறப்பு நாள். (பிறப்பு-1916)
2002ல் செருமானியக் கண்டுபிடிப்பாளரான‌ ருடால்ப் ஹெல் இறப்பு நாள். (பிறப்பு-1901)
2012ல் ஈழத்து எழுத்தாளரான‌ த. ஆனந்தமயில் இறப்பு நாள். (பிறப்பு-1947)
2013ல் ஈழத்துப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான‌ சு. சபாரத்தினம் இறப்பு நாள். (பிறப்பு-1930)
2013ல் இந்திய கருநாடக இசைப் பாடகரும் மருத்துவருமான‌ ஸ்ரீபாத பினாகபாணி இறப்பு நாள். (பிறப்பு-1913)
2013ல் நூலகவியலாளரும் தமிழறிஞருமான‌ வே. தில்லைநாயகம் இறப்பு நாள். (பிறப்பு-1925)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleMarch 10 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 10
Next articleMarch 24 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 24