March 09 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 09

0

Today Special Historical Events In Tamil | 09-03 | March 09

March 09 Today Special | March 09 What Happened Today In History. March 09 Today Whose Birthday (born) | March-9th Important Famous Deaths In History On This Day 09/03 | Today Events In History March 9th | Today Important Incident In History | பங்குனி 09 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 09-03 | பங்குனி மாதம் 09ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 09.03 Varalatril Indru Nadanthathu Enna| March 09 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 09/03 | Famous People Born Today 09.03 | Famous People died Today 09-03.

Today Special in Tamil 09-03
Today Events in Tamil 09-03
Famous People Born Today 09-03
Famous People died Today 09-03

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 09-03 | March 09

ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது. (லெபனான்)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 09-03 | March 09

கிமு 141ல் லியூ சே சீனாவின் ஆன் வம்சப் பேரரசராக முடிசூடினார்.
1009ல் லித்துவேனியா பற்றிய முதலாவது வரலாற்றுப் பதிவு குவெட்லின்பர்க் மதப்பள்ளியின் ஆண்டுக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது.
1226ல் சுல்தான் யலால் அத்-தின் சார்சியத் தலைநகர் திபிலீசியைக் கைப்பற்றினார்.
1500ல் பெத்ரோ கப்ராலின் கடற்படையினர் லிசுபனில் இருந்து கிழக்கிந்தியத் தீவுகள் நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் பின்னர் பிரேசிலைக் கண்டுபிடித்தனர்.
1566ல் ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் செயலாளர் டேவிட் ரிசியோ எடின்பரோவின் அரண்மனை ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார்.
1796ல் நெப்போலியன் பொனபார்ட் தனது முதலாவது மனைவி யோசபினைத் திருமணம் புரிந்தார்.
1815ல் மின்கலத்தால் இயக்கப்படும் மணிக்கூடு பற்றி முதன்முதலாக ஆங்கிலேயப் பொறியியலாளர் பிரான்சிசு ரொனால்ட்சு எழுதினார்.
1841ல் தாம் கொண்டுவரப்பட்ட கப்பலைக் கைப்பற்றி வைத்திருந்த ஆப்பிரிக்கர்கள் சட்ட விரோதமாக அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
1842ல் கலிபோர்னியா தங்க வேட்டைக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாளில் கலிபோர்னியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
1847ல் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் ஜெனரல் வின்ஃபீல்ட் ஸ்கொட் தலைமையில் மெக்சிக்கோவைத் தாக்கின.
1896ல் ஆத்வா நகர சமரில் இத்தாலி தோல்வியடைந்ததை அடுத்து, இத்தாலியின் பிரதமர் பிரான்சிசுக்கோ கிருசுப்பி பதவி துறந்தார்.
1916ல் மெக்சிக்கோ புரட்சி: ஏறத்தாழ 500 மெக்சிக்கர்கள் எல்லை நகரான நியூ மெக்சிக்கோவின் கொலம்பசு நகரைத் தாக்கினர்.
1923ல் விளாதிமிர் லெனினுக்கு மூன்றாம் தடவையாக மாரடைப்பு ஏற்பட்டது.
1942ல் இரண்டாம் உலகப் போர்: இடச்சு கிழக்கிந்திய இராணுவம் மேற்கு சாவகத்தில் நிபந்தனை எதுவுமின்றி சப்பானியப் படைகளிடம் சரணடைந்தது.
1944ல் இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படைகள் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஐந்து-நாள் சமரைத் தொடங்கின.
1944ல் இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவ வானூர்திகள் எசுத்தோனியா தலைநகர் தாலினைத் தாக்கின.
1945ல் இரண்டாம் உலகப் போர்: இந்தோ சீனாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் சப்பானியப் படையினர் பிரான்சியரை ஆட்சியில் இருந்து அகற்றியது.
1945ல் இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க பி-29 போர் விமானங்கள் டோக்கியோவில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட தீச்சூறாவளியினால் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.
1946ல் இங்கிலாந்து, போல்ட்டன் நகரில் விளையாட்டரங்கில் இடம்பெற்ற நெரிசலில் 33 பேர் உயிரிழந்தனர்.
1956ல் நிக்கித்தா குருசேவின் ஸ்டாலினுக்கு எதிரான கொள்கைக்கு எதிராக ஜோர்ஜியாவில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
1957ல் அலாஸ்காவில் அலூசியன் தீவுகளில் ஏற்பட்ட 8.6 அளவு நிலநடுக்கத்தில் பலத்த சேதமும் ஆழிப் பேரலையும் ஏற்பட்டது.
1959ல் பார்பி பொம்மை நியூ யோர்க் நகரில் அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சியில் முதன் முதலாகக் காட்சிக்கு வைக்கப்பட்டது.
1960ல் பெல்டிங் இபார்ட் இசுக்ரிப்னர் என்பவர் தான் கண்டுபிடித்த இடைக்கடத்தி ஒன்றை நோயாளி ஒருவருக்குப் பொருத்தினார். இவ்விடைக்கடத்தி அந்நோயாளி முறையாக இரத்தத்தூய்மிப்புப் பெற அனுமதிக்கிறது.
1961ல் சோவியத்தின் ஸ்புட்னிக் 9 விண்கலம் இவான் இவானொவிச் என்ற மனிதப் போலியை வெற்றிகரமாக விண்வெளிக்குக் கொண்டு சென்றது. இதன் மூலம் சோவியத் ஒன்றியம் மனித விண்வெளிப்பறப்புக்கு தயாரென அறிவித்தது.
1967ல் அமெரிக்காவின் இரு விமானங்கள் ஒகையோ மாநிலத்தில் வானில் மோதிக் கொண்டதில் 26 பேர் உயிரிழந்தனர்.
1976ல் இத்தாலியின் டிறெண்டோ என்ற இடத்தில் ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருந்த கம்பிவட ஊர்தி கீழே விழுந்ததில் 15 சிறுவர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்தனர்.
1977ல் இசுலாமியத் தீவிரவாதிகள் வாசிங்டன், டி. சி.யில் மூன்று கட்டிடங்களை 39-மணிநேரம் கைப்பற்றி வைத்திருந்ததில் 2 பேர் கொல்லப்பட்டு, 149 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
1986ல் சலேஞ்சர் விண்ணோடத்தின் அழிந்த சிதைவுகளை ஐக்கிய அமெரிக்காவின் ஆழ்கடலோடிகள் கண்டுபிடித்தனர். இறந்த ஏழு விண்வெளி வீரர்களினதும் உடல்கள் உள்ளே இருந்தன.
1997ல் சீனா, மங்கோலியா, கிழக்கு சைபீரிய வானியலாளர்கள் பகல் நேரத்தில் ஏல்-பாப் வால்வெள்ளியைக் கண்ணுற்றனர்.
2006ல் சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.
2011ல் டிஸ்கவரி விண்ணோடம் தனது 39-வதும், கடைசியுமான பயணத்தை முடித்து பூமி திரும்பியது.
2012ல் காசாக்கரையில் இருந்து 130 ஏவுகணைகள் இசுரேல் நோக்கி ஏவப்பட்டன.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 09-03 | March 09

1454ல் இத்தாலிய நிலப்படவரைஞரும் நாடுகாண் பயணியுமான‌ அமெரிகோ வெஸ்புச்சி பிறந்த நாள். (இறப்பு-1512)
1564ல் செருமானிய மதகுருவும் வானியலாளருமான‌ டேவிட் பாப்ரிசியசு பிறந்த நாள். (இறப்பு-1617)
1568ல் இத்தாலியப் புனிதரான‌ அலோசியுஸ் கொன்சாகா பிறந்த நாள். (இறப்பு-1591)
1818ல் பிரான்சிய வேதியியலாளரான‌ செயிண்ட் கிளெயர் டிவில்லி பிறந்த நாள். (இறப்பு-1881)
1928ல் செருமானிய குறியீட்டியல் வல்லுநரான‌ மார்ட்டின் க்ராம்பன் பிறந்த நாள். (இறப்பு-2015)
1928ல் ஈழத்து இடதுசாரி எழுத்தாளரும் பதிப்பாளருமான‌ செ. கணேசலிங்கன் பிறந்த நாள். (இறப்பு-2021)
1929ல் வங்காளதேசத்தின் 19வது குடியரசுத் தலைவரான‌ சில்லூர் இரகுமான் பிறந்த நாள். (இறப்பு-2013)
1931ல் இந்திய அரசியல்வாதியான‌ கரண் சிங் பிறந்த நாள்.
1934ல் உருசிய விண்வெளி வீரரான‌ யூரி ககாரின் பிறந்த நாள். (இறப்பு-1968)
1943ல் அமெரிக்க சதுரங்க வீரரான‌ பாபி பிசர் பிறந்த நாள். (இறப்பு-2008)
1951ல் இந்திய தபேலா இசைக்கலைஞரான‌ சாகீர் உசைன் பிறந்த நாள்.
1954ல் தமிழகத் திரைப்பட பின்னணிப் பாடகரான‌ டி. எல். மகராஜன் பிறந்த நாள்.
1954ல் ஐரியக் குடியரசுப் படைத் தன்னார்வலரான‌ பொபி சான்ட்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1981)
1956ல் இந்திய அரசியல்வாதியான‌ சசி தரூர் பிறந்த நாள்.
1957ல் அமெரிக்க உயிரியலாளரான‌ பி.சீ மையேர்சு பிறந்த நாள்.
1959ல் நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளரான‌ தக்காக்கி கஜித்தா பிறந்த நாள்.
1970ல் இந்தியத் தொழிலதிபரும் அரசியல்வாதியுமான‌ நவீன் ஜின்டால் பிறந்த நாள்.
1974ல் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான‌ ஜோஷ்வா ஸ்ரீதர் பிறந்த நாள்.
1979ல் குவாத்தமாலா-அமெரிக்க நடிகரான‌ ஆஸ்கர் ஐசக் பிறந்த நாள்.
1985ல் இந்தியத் துடுப்பாளரான‌ பார்தீவ் பட்டேல் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 09-03 | March 09

1825ல் ஆங்கிலேயக் கவிஞரும் நூலாசிரியருமான‌ அன்னா லெத்திசியா பார்பௌல்டு இறப்பு நாள். (பிறப்பு-1743)
1847ல் ஆங்கிலேயத் தொல்லுயிரியாளரான‌ மேரி அன்னிங் இறப்பு நாள். (பிறப்பு-1799)
1851ல் தென்மார்க்கு இயற்பியலாளரும் வேதியியலாளருமான‌ ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட் இறப்பு நாள். (பிறப்பு-1777)
1857ல் இத்தாலியப் புனிதரான‌ தோமினிக் சாவியோ இறப்பு நாள். (பிறப்பு-1842)
1926ல் ரெய்கி பயிற்சி முறையை உருவாக்கிய சப்பானிய ஆன்மிகத் தலைவரான‌ மிக்கோ உசுயி இறப்பு நாள். (பிறப்பு-1865)
1936ல் இந்திய யோகியான‌ யுக்தேஷ்வர் கிரி இறப்பு நாள். (பிறப்பு-1855)
1941ல் பிரித்தானிய மொழியியலாளரான‌ ஜார்ஜ் ஆபிரகாம் கிரியெர்சன் இறப்பு நாள். (பிறப்பு-1851)
1952ல் உருசியப் பெண் புரட்சியாளரான‌ அலெக்சாண்டிரா கொலோண்டை இறப்பு நாள். (பிறப்பு-1872)
1970ல் தமிழக பெரியாரியக்க செயற்பாட்டாளரான‌ எஸ். இராமநாதன் இறப்பு நாள். (பிறப்பு-1895)
1988ல் தென்னிந்திய இசையமைப்பாளரான‌ எம். பி. ஸ்ரீனிவாசன் இறப்பு நாள். (பிறப்பு-1925)
1992ல் இசுரேலின் 6வது பிரதமரும் நோபல் பரிசு பெற்றவருமான‌ மெனசெம் பெகின் இறப்பு நாள். (பிறப்பு-1913)
1994ல் இந்தியத் திரைப்பட நடிகையான‌ தேவிகா ராணி இறப்பு நாள். (பிறப்பு-1908)
1997ல் அமெரிக்க ராப் கலைஞரான‌ நொடோரியஸ் பி.ஐ.ஜி இறப்பு நாள். (பிறப்பு-1972)
2003ல் தமிழிசைக் கலைக்களஞ்சியம் தொகுத்தவரான‌ வீ. ப. கா. சுந்தரம் இறப்பு நாள். (பிறப்பு-1915)
2005ல் இந்திய அரசியல்வாதியான‌ எம். பழனியாண்டி இறப்பு நாள். (பிறப்பு-1918)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 18.10.2022 Today Rasi Palan 18-10-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!
Next articleMarch 10 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 10