June 28 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 28

0

Today Special Historical Events In Tamil | 28-06 June 28

June 28 Today Special | June 28 What Happened Today In History. June 28 Today Whose Birthday (born) | June-28th Important Famous Deaths In History On This Day 28/06 | Today Events In History June-28th | Today Important Incident In History | ஜூன் 28 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 28-06 | ஆனி மாதம் 28ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 28.06 Varalatril Indru Nadanthathu Enna.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 28-06 June 28

 • 1098ல் மோசுல் படைகளை முதலாம் சிலுவைப் போர் வீரர்கள் தோற்கடித்தனர்.
 • 1360ல் கிரனாதாவின் 10வது நசுரிது வம்ச மன்னராக ஆறாம் முகம்மது குடிசூடினார்.
 • 1461ல் இங்கிலாந்தின் மன்னராக நான்காம் எட்வர்டு முடி சூடினார்.
 • 1519ல் புனித உரோமப் பேரரசராக ஐந்தாம் சார்லசு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 1635ல் குவாதலூப்பு பிரெஞ்சுக் குடியேற்ற நாடானது.
 • 1651ல் போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையில் பெரெசுடெச்கோவில் போர் ஆரம்பமானது.
 • 1709ல் சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு மன்னரை உருசியாவின் முதலாம் பேதுரு பொல்தாவா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தார்.
 • 1776ல் அமெரிக்கப் புரட்சிப் போரின் போது ஜார்ஜ் வாசிங்டனை கடத்தத் திட்டமிட்டதற்காக அவரது மெய்ப்பாதுகாப்பாளரும் அமெரிக்க விடுதலைப் படையைச் சேர்ந்தவருமான தோமசு ஹிக்கி தூக்கிலிடப்பட்டார்.
 • 1838ல் ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக விக்டோரியா முடிசூடினார்.
 • 1846ல் அடோல்ப் சக்ஸ் சாக்சபோனுக்கான காப்புரிமம் பெற்றார்.
 • 1881ல் ஆத்திரிய-செர்பியக் கூட்டணி இரகசியமாக கையெழுத்திடப்பட்டது.
 • 1882ல் எல்லை நிர்ணயிக்கும் உடன்பாடு கினி, சியேரா லியோனி நாடுகளுக்கிடையில் எட்டப்பட்டது.
 • 1894ல் அமெரிக்கத் தொழிலாளர் நாள் அமெரிக்காவில் அதிகாரபூர்வ விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
 • 1896ல் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் 58 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
 • 1902ல் பனாமா கால்வாயின் உரிமைகளை கொலொம்பியாவிடம் இருந்து பெறுவதற்கான அதிகாரங்களை அரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட்டுக்கு ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் வழங்கியது.
 • 1904ல் “நோர்ஜ்” என்ற டென்மார்க் நாட்டுப் பயணிகள் கப்பல் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சிறிய திட்டு ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 635 பேர் உயிரிழந்தனர்.
 • 1911ல் எகிப்தில் நாக்லா என்ற விண்கல் வீழ்ந்தது.
 • 1914ல் முதலாம் உலகப் போர் தொடங்க இது காரணமான ஆத்திரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், அவரது மனைவி இளவரசி சோஃபி ஆகியோர் சாரயேவோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது காவ்ரீலோ பிரின்சிப் என்ற பொசுனிய-செர்பிய தேசியவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
 • 1917ல் முதலாம் உலகப் போரில் கிரேக்கம் கூட்டு அணிகளுடன் இணைந்தது.
 • 1919ல் வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதுடன் செருமனிக்கும் முதலாம் உலகப் போரின் நேச அணிகளுக்கும் இடையில் போர் முடிவுக்கு வந்தது.
 • 1922ல் டப்லினில் ஐரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
 • 1926ல் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரின் நிறுவனங்கள் இணைக்கப்பட்டு உருவானது.
 • 1940ல் மல்தோவாவை சோவியத் ஒன்றியம் உருமேனியாவிடம் இருந்து கைப்பற்றியது.
 • 1942ல் இரண்டாம் உலகப் போரில் நாட்சி ஜெர்மனி சோவியத் ஒன்றியம் மீது நீலத் திட்டம் என்ற பெயரில் தாக்குதலை ஆரம்பித்தது.
 • 1948ல் பனிப்போல் நடைபெற்றதுடன் டீட்டோ–இசுட்டாலின் பிரிவை அடுத்து யுகொசுலாவியப் பொதுவுடமைவாதிகளின் அணி கொமின்ஃபோர்மில் இருந்து நீக்கப்பட்டது.
 • 1950ல் கொரியப் போரில் சியோல் வடகொரியப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
 • 1950ல் கொரியப் போரில் 100,000 இற்கும் அதிகமான கம்யூனிச சிந்தனையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
 • 1950ல் கொரியப் போரின் போது கொரிய மக்கள் இராணுவம் சியோல் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் நடத்திய தாக்குதலில் 700-900 வரையானோர் கொல்லப்பட்டனர்.
 • 1964ல் ஆப்பிரிக்க-அமெரிக்க ஒற்றுமை அமைப்பை மல்கம் எக்ஸ் தோற்றுவித்தார்.
 • 1973ல் வடக்கு அயர்லாந்தில் முதற்தடவையாக தேசியவாதிகளுக்கும் ஒன்றியவாதிகளுக்கும் இடையே அதிகாரப் பகிர்வுக்கு வகை செய்யும் முகமாக பொதுத் தேர்தல்கள் இடம்பெற்றன.
 • 1976ல் அமெரிக்க ஐக்கிய இராச்சியக் கூலிப்படைகளுக்கு அங்கோலா நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
 • 1981ல் இசுலாமிய குடியரசுக் கட்சியின் 73 அதிகாரிகள் தெகுரானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.
 • 1987ல் இராணுவ வரலாற்றில் முதற்தடவையாக பொதுமக்கள் மீது வேதிப்பொருள் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈராக்கியப் போர் விமானங்கள் ஈரானின் சர்தாசுத் நகர் மீது தாக்குதல் நடத்தியது.
 • 1995ல் மண்டைதீவு இராணுவப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர்.
 • 2004ல் ஈராக்கில் இடைக்கால அரசிடம் ஆட்சி கையளிக்கப்பட்டதுடன் அமெரிக்கா ஆதரவு ஆட்சி முடிவுக்கு வந்தது.
 • 2009ல் இராணுவப் புரட்சி மூலம் ஒண்டுராசு அரசுத்தலைவர் மனுவேல் செலாயா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
 • 2016ல் துருக்கியின் இசுதான்புல் வானூர்தி நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டதுடன் 230 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 28-06 June 28

 • 1491ல் இங்கிலாந்து மன்னரான எட்டாம் என்றி பிறந்த நாள் (இறப்பு 1547)
 • 1577ல் பிளெமிய ஓவியரான பீட்டர் பவுல் ரூபென்ஸ் பிறந்த நாள் (இறப்பு 1640)
 • 1653ல் முகலாயப் பேரரசரான முகமது ஆசம் ஷா பிறந்த நாள் (இறப்பு 1707)
 • 1712ல் சுவிட்சர்லாந்து மெய்யியலாளரான இழான் இழாக்கு உரூசோ பிறந்த நாள் (இறப்பு 1778)
 • 1873ல் நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மருத்துவரான அலெக்சிஸ் காரெல் பிறந்த நாள் (இறப்பு 1944)
 • 1876ல் அமெரிக்க செவிலியரான கிளாரா லூயி மாஸ் பிறந்த நாள் (இறப்பு 1901)
 • 1906ல் நோபல் பரிசு பெற்ற போலந்து-அமெரிக்க இயற்பியலாளரான மரியா கோயெப்பெர்ட் மேயர் பிறந்த நாள் (இறப்பு 1972)
 • 1907ல் ஈழத்துத் தமிழறிஞரான தாவீது அடிகள் பிறந்த நாள் (இறப்பு 1981)
 • 1912ல் செருமானிய இயற்பியலாளரும் மெய்யியலாளருமான‌ கார்ல் பிரீட்ரிக் வைசாக்கர் பிறந்த நாள் (இறப்பு 2007)
 • 1915ல் தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளரான சாண்டோ சின்னப்பா தேவர் பிறந்த நாள் (இறப்பு 1978)
 • 1921ல் இந்தியாவின் 9வது பிரதமரான பி. வி. நரசிம்ம ராவ் பிறந்த நாள் (இறப்பு 2004)
 • 1927ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளரான பிராங்க் செர்வுட் ரோலண்ட் பிறந்த நாள் (இறப்பு 2012)
 • 1928ல் சுவீடன் அரசியல்வாதியான ஹான்ஸ் பிலிக்ஸ் பிறந்த நாள்
 • 1930ல் நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து-அமெரிக்க உயிரியலாளரான வில்லியம் சி. கேம்பல் பிறந்த நாள்
 • 1930ல் அமெரிக்க உளவியலாளரும் பதிப்பாளருமான‌ லியோ கோல்டுபெர்கெர் பிறந்த நாள்
 • 1934ல் துனீசிய-பிரான்சிய ஊடகவியலாளரான ஜார்ஸ் போலான்ஸ்கி பிறந்த நாள் (இறப்பு 2015)
 • 1937ல் இலங்கை வானொலி மற்றும் மேடை நடிகரான‌ எஸ். எஸ். கணேசபிள்ளை பிறந்த நாள் (இறப்பு 1995
 • 1938ல் இலங்கை ஊடகவியலாளரும் அரசியல்வாதியுமான‌ சி. சிவமகராஜா பிறந்த நாள் (இறப்பு 2006)
 • 1940ல் மலேசிய அரசியல்வாதியான கர்பால் சிங் பிறந்த நாள் (இறப்பு 2014)
 • 1940ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வங்காளதேச பொருளியலாளரான முகம்மது யூனுஸ் பிறந்த நாள்
 • 1942ல் தென்னாப்பிரிக்க அரசியல்வாதியான கிரிசு ஹானி பிறந்த நாள் (இறப்பு 1993)
 • 1946ல் அமெரிக்க நடிகரும் இயக்குநருமான‌ புரூஸ் டேவிசன் பிறந்த நாள்
 • 1948ல் உருசிய-அமெரிக்க இயக்குநரான செர்ஜி போட்ரோவ் பிறந்த நாள்
 • 1971ல் தென்னாப்பிரிக்க-அமெரிக்க தொழிலதிபரான‌ எலொன் மசுக் பிறந்த நாள்
 • 1995ல் தமிழக-இந்திய மாற்றுத்திறனாளரும் தடகள விளையாட்டு வீரருமான‌ மாரியப்பன் தங்கவேலு பிறந்த நாள்

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 28-06 June 28

 • 1836ல் அமெரிக்காவின் 4வது அரசுத்தலைவரான ஜேம்ஸ் மாடிசன் இறப்பு நாள் (பிறப்பு 1751)
 • 1889ல் அமெரிக்க வானியலாளரான மரியா மிட்செல் இறப்பு நாள் (பிறப்பு 1818)
 • 1914ல் ஆத்திரிய இளவரசரான பிரான்ஸ் பேர்டினண்ட் இறப்பு நாள் (பிறப்பு 1863)
 • 1971ல் சென்னை மாகாண சட்டமன்றத் தலைவரான‌ ஹச். பி. அரி கௌடர் இறப்பு நாள் (பிறப்பு 1893)
 • 1972ல் இந்திய அறிவியலாளரான பிரசந்தா சந்திரா மகாலனோபிசு இறப்பு நாள் (பிறப்பு 1893)
 • 1976ல் வைணவத் தமிழறிஞரான பு. இரா. புருடோத்தமர் இறப்பு நாள் (பிறப்பு 1901)
 • 1981ல் கனடிய ஓட்டவீரரான டெர்ரி பாக்ஸ் இறப்பு நாள் (பிறப்பு 1958)
 • 2009ல் இந்திய இயக்குநரான‌ அ. க. லோகிததாசு இறப்பு நாள் (பிறப்பு 1955)
 • 2016ல் நாகாலந்து அரசியல்வாதியான ஐசக் சிஷி சூ இறப்பு நாள் (பிறப்பு 1929)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleJune 27 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 27
Next articleJune 29 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 29