June 27 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 27

0

Today Special Historical Events In Tamil | 27-06 June 27

June 27 Today Special | June 27 What Happened Today In History. June 27 Today Whose Birthday (born) | June-27th Important Famous Deaths In History On This Day 27/06 | Today Events In History June-27th | Today Important Incident In History | ஜூன் 27 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 27-06 | ஆனி மாதம் 27ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 27.06 Varalatril Indru Nadanthathu Enna.

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 27-06

  • கனடாவில் பல்கலாச்சார நாள் கொண்டாடப்படுகிறது.
  • 1977ல் பிரான்சிடம் இருந்து சீபூத்தீ விடுதலை பெற்ற நாளாக‌ கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 27-06 June 27

  • 1497ல் இலண்டன் டைபர்ன் என்ற இடத்தில் மைக்கேல் கோஃப், தோமசு பிளமாங்க் எனும் கோர்னியக் கிளர்ச்சியாளர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
  • 1556ல் இலண்டனில் 13 பேர் தமது சீர்திருத்தத் திருச்சபை நம்பிக்கைகளுக்காக எரியூட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1743ல் டெட்டிஞ்சென் போரில் பங்குபற்றிய பிரித்தானிய மன்னர் இரண்டாம் ஜார்ஜ் போர் ஒன்றில் நேரடியாகப் பங்குகொண்ட கடைசி பிரித்தானிய முடியாட்சியாளர் ஆவார்.
  • 1759ல் கியூபெகின் மீதான பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமானது.
  • 1760ல் எக்கோயீ போரில் (வட கரொலைனாவில்) பிரித்தானியப் படைகளை செரோக்கீ போராளிகள் வென்றனர்.
  • 1806ல் புவனெசு ஐரிசை பிரித்தானியப் படையினர் கைப்பற்றினர்.
  • 1806ல் டச்சு இலங்கையில் கத்தோலிக்கர் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
  • 1844ல் வன்முறைக் கும்பல் ஒன்றினால் கார்த்தேசு சிறையில் பின்னாள் புனிதர்களின் கிறித்து சபையை நிறுவிய இரண்டாம் யோசப்பு இசுமித்தும் அவரது சகோதரரும் இலினொயும் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1898ல் நோவா ஸ்கோசியாவைச் சேர்ந்த யோசுவா சுலோக்கம் உலகை சுற்றும் முதலாவது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
  • 1905ல் உருசிய-சப்பானியப் போரின் போது பொத்தெம்கின் என்ற உருசியப் போர்க்கப்பலில் கடற்படையினர் கிளர்ச்சியில் இறங்கினர்.
  • 1941ல் இரண்டாம் உலகப் போரில் செருமனியப் படைகள் பியாலிசுத்தோக் நகரை பர்பரோசா நடவடிக்கையின் போது கைப்பற்றின.
  • 1941ல் உருமேனியா லாசி நகரில் யூதர்களுக்கு எதிரான படுகொலைகளை ஆரம்பித்ததால் குறைந்தது 13,266 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
  • 1950ல் அமெரிக்கா கொரியப் போரில் போரிட தனது படைகளை அனுப்பத் தீர்மானித்தது.
  • 1954ல் ஓபினின்ஸ்க் நகரில் சோவியத் ஒன்றியத்தின் முதலாவது அணு மின் நிலையம் திறக்கப்பட்டது.
  • 1954ல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.
  • 1957ல் டெக்சஸ்–லூசியானா எல்லையை சூறாவளி தாக்கியதில் 400 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
  • 1973ல் உருகுவை அரசுத்தலைவர் உவான் மரியா போர்டபெரி நாடாளுமன்றத்தைக் கலைத்து நாட்டில் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார்.
  • 1974ல் அமெரிக்கத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன் சோவியத் ஒன்றியத்துக்கான பயணம் மேற்கொண்டார்.
  • 1976ல் பாலத்தீன விடுதலை இயக்கப் போராளிகளால் ஏர் பிரான்சு 139 (டெல் அவீவ்-ஏதென்ஸ்-பாரிசு) கடத்தப்பட்டு உகாண்டாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
  • 1977ல் பிரான்சிடம் இருந்து சீபூத்தீ விடுதலை பெற்றது.
  • 1979ல் குத்துச்சண்டையில் இருந்து முகமது அலி ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
  • 1980ல் பலெர்மோ நோக்கிச் சென்ற இத்தாலியின் ஏரோலைனீ 870 விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் சென்ற அனைத்து 81 பேரும் உயிரிழந்தனர்.
  • 1981ல் சீனப் பொதுவுடமைக் கட்சியின் நடுவண் செயற்குழு தனது மக்கள் சீனக் குடியரசு உருவாக்கப்பட்டதில் இருந்து நமது கட்சியின் வரலாறு பற்றிய சில கேள்விகள் பற்றிய தீர்மானத்தை வெளியிட்டதுடன் சீனப் பண்பாட்டுப் புரட்சியின் விளைவுகளுக்காக மாவோ சே துங் மீது குற்றஞ்சாட்டியது.
  • 1982ல் கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது.
  • 1988ல் இரண்டு தொடருந்துகள் மோதியதில் பாரிசு நகரில் 56 பேர் உயிரிழந்தனர்.
  • 1991ல் தனது விடுதலையை சுலோவீனியா அறிவித்த இரண்டாம் நாளில் யுகோஸ்லாவியா அதன் மீது படையெடுத்தது.
  • 1994ல் ஜப்பானில் ஓம் சிர்க்கியோ மதக்குழுவினர் 7 பேர் கொல்லப்பட்டதுடன் 660 பேர் காயமடைந்தனர்.
  • 1998ல் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.
  • 2007ல் 1997 முதல் பதவியில் இருந்த பிரித்தானியத் தலைமை அமைச்சர் டோனி பிளேர் பதவி துறந்தார்.
  • 2013ல் சூரியனை ஆய்வு செய்வதற்காக நாசா விண்கலம் ஒன்றை ஏவியது.
  • 2014ல் ஆந்திரப் பிரதேசத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் இந்தியா நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் வெடித்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 27-06 June 27

  • 1789ல் இலங்கையில் கல்விச்சாலைகளை நிறுவிய அமெரிக்கக் கிறித்தவ மதகுருவான‌ டானியல் புவர் பிறந்த நாள் (இறப்பு 1855)
  • 1838ல் இந்திய ஊடகவியலாளரும் கவிஞருமான‌ பங்கிம் சந்திர சட்டர்ஜி பிறந்த நாள் (இறப்பு 1894)
  • 1869ல் லித்துவேனிய-கனடிய மெய்யியலாளரும் செயர்பாட்டாளருமான‌ எம்மா கோல்ட்மன் பிறந்த நாள் (இறப்பு 1940)
  • 1872ல் அமெரிக்க வானியலாளரான‌ ஏபர் தவுசுட் கர்டிசு பிறந்த நாள் (இறப்பு 1942)
  • 1880ல் அமெரிக்க எழுத்தாளரும் செயர்பாட்டாளருமான‌ ஹெலன் கெல்லர் பிறந்த நாள் (இறப்பு 1968)
  • 1899ல் ஈழத்துத் தமிழறிஞரான‌ சி. கணபதிப்பிள்ளை பிறந்த நாள் (இறப்பு 1986)
  • 1912ல் கயானா-அமெரிக்கப் புதின எழுத்தாளரான‌ ஈ. ஆர். பிரைத்வெயிட் பிறந்த நாள் (இறப்பு 2016)
  • 1922ல் தமிழக எழுத்தாளரான அகிலன் பிறந்த நாள் (இறப்பு 1988)
  • 1927ல் ஈழத்து எழுத்தாளரும் இதழாசிரியருமான‌ டொமினிக் ஜீவா பிறந்த நாள்
  • 1939ல் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமான‌ ராகுல் தேவ் பர்மன் பிறந்த நாள் (இறப்பு 1994)
  • 1943ல் ஈழத்து வயலின் இசைக் கலைஞரான உ. இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் (இறப்பு 2015)
  • 1958ல் அமெரிக்க வானியலாளரான மரியா சூபர் பிறந்த நாள்
  • 1962ல் இந்திய-கனடிய தொழிலதிபரான சுனந்தா புஷ்கர் பிறந்த நாள் (இறப்பு 2014)
  • 1963ல் இந்திய அரசியல்வாதியான சுசில் குமார் சிங் பிறந்த நாள்
  • 1964ல் கேரள தடகள விளையாட்டாளரான பி. டி. உஷா பிறந்த நாள்
  • 1975ல் அமெரிக்க நடிகரான தோபி மக்குயர் பிறந்த நாள்
  • 1992ல் இந்தியத் திரைப்பட நடிகையான கார்த்திகா நாயர் பிறந்த நாள்

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 27-06 June 27

  • 1839ல் சீக்கிய பேரரசை நிறுவியவரான ரஞ்சித் சிங் இறப்பு நாள் (பிறப்பு 1780)
  • 1844ல் பிற்காலப் புனிதர்களின் இயேசு கிறித்து சபையை நிறுவிய அமெரிக்கரான‌ இரண்டாம் யோசப்பு இசுமித்து இறப்பு நாள் (பிறப்பு 1805)
  • 1963ல் தமிழகத் தமிழறிஞரான‌ ச. து. சுப்பிரமணிய யோகி இறப்பு நாள் (பிறப்பு 1904)
  • 1988ல் ஈழத்து இசையமைப்பாளரும் பாடகருமான‌ ஆர். முத்துசாமி இறப்பு நாள் (பிறப்பு 1926)
  • 1998ல் இந்திய இதழிகையாளரான நிகில் சக்கரவர்த்தி இறப்பு நாள் (பிறப்பு 1913)
  • 2006ல் ஈழத்து எழுத்தாளரும் கவிஞருமான‌ கா. செ. நடராசா இறப்பு நாள் (பிறப்பு 1930)
  • 2007ல் தமிழக கருநாடக இசைக் கலைஞரான‌ டி. எம். தியாகராஜன் இறப்பு நாள் (பிறப்பு 1923)
  • 2008ல் இந்திய இராணுவத் தளபதியான சாம் மானேக்சா இறப்பு நாள் (பிறப்பு 1914)
  • 2009ல் ஈழத்துக் கவிஞரான இ. முருகையன் இறப்பு நாள் (பிறப்பு 1935)
  • 2016ல் அமெரிக்க சமூக அறிவியலாளரும் நூலாசிரியரும் எழுத்தாளருமான‌ ஆல்வின் டாப்லர் இறப்பு நாள் (பிறப்பு 1928)
  • 2019ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் இயக்குநருமான‌ விஜய நிர்மலா இறப்பு நாள் (பிறப்பு 1944)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசீதேவி Seethevi – Seedevi (Tamilpiththan kavithai-23)
Next articleJune 28 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 28