Today Special Historical Events In Tamil | 29-06 June 29
June 29 Today Special | June 29 What Happened Today In History. June 29 Today Whose Birthday (born) | June-29th Important Famous Deaths In History On This Day 29/06 | Today Events In History June-29th | Today Important Incident In History | ஜூன் 29 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 29-06 | ஆனி மாதம் 29ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 29.06 Varalatril Indru Nadanthathu Enna.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 29-06
- 1976ல் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீசெல்சு விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது.
- நெதர்லாந்தில் முன்னாள் படைத்துறையினர் நாள் கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 29-06 June 29
- 1194ல் சுவேர் நோர்வேயின் மன்னராக முடிசூடினார்.
- 1534ல் பிரின்சு எட்வர்ட் தீவை இழ்சாக் கார்ட்டியே முதலாவது ஐரோப்பியராக அடைந்தார்.
- 1613ல் இலண்டனில் சேக்சுபியரால் ஆரம்பிக்கப்பட்ட குளோப் நாடக அரங்கு தீக்கிரையானது.
- 1659ல் இளவரசர் துருபெத்சுக்கோய் தலைமையிலான உருசியப் படைகளை கொனோட்டொப் போரில் உக்ரைனியப் படைகள் தோற்கடித்தன.
- 1786ல் இசுக்கொட்லாந்தில் இருந்து ஒண்டாரியோவின் கிளென்கரி என்ற ஊரில் ஆயர் அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள் சென்று குடியேறினர்.
- 1807ல் உருசிய-துருக்கிப் போரில் திமீத்ரி சென்யாவின் தலைமையிலான உருசியக் கடற்படை உதுமானியரை ஏதோசு சமரில் தோற்கடித்தது.
- 1814ல் இலங்கையின் காலி நகரை மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் வந்தடைந்தனர்.
- 1864ல் கனடா, கியூபெக்கில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 99 பேர் உயிரிழந்தனர்.
- 1880ல் பிரான்சு தாகித்தியைக் கைப்பற்றியது.
- 1888ல் ஜோர்ஜ் எடுவார்ட் கவ்ராட் என்பவர் ஆண்டெலின் எகிப்தில் இசுரேல் என்ற ஆக்கத்தை கிராமபோன் உருளை ஒன்றில் பதிவு செய்தார்.
- 1895ல் சாரின் உருசிய அரசின் படைக்குக் கட்டாய ஆளெடுக்கும் நடவடிக்கையைக் கண்டித்து டுகோபார் தமது ஆயுதங்களை எரித்தனர்.
- 1900ல் நோபல் அறக்கட்டளை நோபல் பரிசுகளின் நிதி மூலங்களையும் அதன் நிர்வாகத்தையும் ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கபபட்டது.
- 1914ல் சைபீரியாவில் கிரிகோரி ரஸ்புடின் மீது கொலை முயற்சி நடந்தது.
- 1950ல் கொரியப் போரில் அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் கொரியா மீது கடல் மார்க்கத் தடையை ஏற்படுத்துவதற்கு அனுமதி அளித்தார்.
- 1975ல் முதலாவது ஆப்பிள் I கணினியை ஸ்டீவ் வாஸ்னியாக் சோதித்தார்.
- 1976ல் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீசெல்சு விடுதலை பெற்றது.
- 1995ல் உருசிய விண்வெளி நிலையம் மீருடன் முதல் தடவையாக அட்லாண்டிசு விண்ணோடம் இணைந்தது.
- 1995ல் தென் கொரியாவின் சியோல் நகரில் பல்பொருள் அங்காடி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 501 பேர் உயிரிழந்ததுடன் 937 பேர் காயமடைந்தனர்.
- 2002ல் தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நடைபெற்ற கடற்படைச் சமரில் ஆறு தென்கொரிய வீரர்கள் கொல்லப்பட்டதுடன் வட கொரியப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது.
- 2006ல் குவாண்டானமோ விரிகுடா தடுப்பு முகாம் கைதிகளை இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை செய்ய அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் வாக்கர் புஷ் எடுத்த முடிவை ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை செய்தது.
- 2007ல் தனது முதலாவது ஐ-போன் செல்லிடபேசியை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
- 2012ல் அமெரிக்காவின் கிழக்குப் பகுதியைத் தாக்கிய நீள்சுழற்காற்றினால் 22 பேர் உயிரிழந்தனர்.
- 2014ல் இசுலாமிய அரசு தமது கலீபகத்தை சிரியாவிலும் வடக்கு ஈராக்கிலும் நிறுவினர்.
- 2014ல் நைஜீரியாவில் சிபோக் நகரில் உள்ள நான்கு கிறிஸ்தவக் கோவில்களை இசுலாமியத் தீவிரவாதிகள் தீக்கிரையாக்கி அங்கிருந்த குறைந்தது 30 பேரைக் கொன்றனர்.
- 2015ல் சென்னை மெட்ரோவின் முதல் கட்ட சேவை ஆலந்தூர், சென்னை கோயம்பேடு இடையே ஆரம்பிக்கப்பட்டது.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 29-06 June 29
- 1818ல் இத்தாலிய வானியலாளரான ஏஞ்செலோ சேச்சி பிறந்த நாள் (இறப்பு 1878)
- 1864ல் வங்காளக் கல்வியாளரும் வழக்கறிஞரும் கணிதவியலாளருமான அசுதோசு முகர்சி பிறந்த நாள் (இறப்பு 1924)
- 1868ல் அமெரிக்க வானியலாளரும் ஊடகவியலாளருமான ஜார்ஜ் எல்லேரி ஏல் பிறந்த நாள் (இறப்பு 1938)
- 1888ல் உருசிய இயற்பியலாளரும் கணிதவியலாளருமான அலெக்சாந்தர் ஃபிரீடுமேன் பிறந்த நாள் (இறப்பு 1925)
- 1893ல் இந்தியப் பொருளியலாளரான பிரசந்தா சந்திரா மகாலனோபிசு பிறந்த நாள் (இறப்பு 1972)
- 1900ல் பிரான்சியக் கவிஞரும் விமானியுமான அந்துவான் து செயிந் தெகுபெறி பிறந்த நாள் (இறப்பு 1944)
- 1909ல் ஆங்கிலேய இந்தியவியலாளரும் சமற்கிருதப் பேராசிரியருமான தாமசு பறோ பிறந்த நாள் (இறப்பு 1986)
- 1925ல் தமிழக நாடகரும் திரைப்பட நடிகருமான ஆர். எஸ். மனோகர் பிறந்த நாள் (இறப்பு 2006)
- 1925ல் இத்தாலியின் 11வது அரசுத்தலைவரான ஜார்ஜியோ நபோலிடானோ பிறந்த நாள் பிறந்த நாள்
- 1931ல் இந்திய அணுசக்தி அறிவியலாளரும் பி. கே. அய்யங்கார் பிறந்த நாள் (இறப்பு 2011)
- 1936ல் ஆத்திரேலியப் பழங்குடித் தலைவரான எடி மாபோ பிறந்த நாள் (இறப்பு 1992)
- 1945ல் இலங்கையின் 5வது அரசுத்தலைவரான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பிறந்த நாள்
- 1947ல் தமிழக எழுத்தாளரான அனுராதா ரமணன் பிறந்த நாள் (இறப்பு 2010)
- 1973ல் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான கார்த்திக் ராஜா பிறந்த நாள்
- 1978ல் அமெரிக்கப் பாடகியும் நடிகையுமான நிக்கோல் செர்சிங்கர் பிறந்த நாள்
- 1990ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான ஹரீஷ் கல்யாண் பிறந்த நாள்
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 29-06 June 29
- 1861ல் ஆங்கிலேயக் கவிஞரான எலிசபெத் பிரௌனிங் இறப்பு நாள் (பிறப்பு 1806)
- 1873ல் இந்தியக் கவிஞரான மைக்கேல் மதுசூதன் தத்தா இறப்பு நாள் (பிறப்பு 1824)
- 1895ல் ஆங்கிலேய உயிரியலாளரான தாமசு என்றி அக்சுலி இறப்பு நாள் (பிறப்பு 1825)
- 1966ல் இந்திய மார்க்சியப் புலமையாளரும் கணிதவியலாளருமான தாமோதர் தர்மானந்தா கோசாம்பி இறப்பு நாள் (பிறப்பு 1907)
- 2009ல் தமிழக மொழியியலாளரான வ. ஐ. சுப்பிரமணியம் இறப்பு நாள் (பிறப்பு 1926)
- 2013ல் இத்தாலிய வானியற்பியலாளரான மார்கரிதா ஏக் இறப்பு நாள் (பிறப்பு 1922)
- 2017ல் தமிழக கருநாடக இசைப் பாடகியான சூலமங்கலம் ஜெயலட்சுமி இறப்பு நாள் (பிறப்பு 1937)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: