June 17 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 17

0

June 17 Today Special Historical Events In Tamil | 17-06

June 17 Today Special | June 17 What Happened Today In History. June 17 Today Whose Birthday (born) | June-17th Important Famous Deaths In History On This Day 17/06 | Today Events In History June-17th | Today Important Incident In History | ஜூன் 17 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 17-06 | ஆனி மாதம் 17ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 17.06 Varalatril Indru Nadanthathu Enna.

June 17
June 17

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 17-06

  • 1944ல் ஐசுலாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலை நாளாகும்.
  • லாத்வியக் குடியரசு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட‌ நாள்.
  • பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட நாளாகும்.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 17-06 June 17

  • 653ல் திருத்தந்தை முதலாம் மார்ட்டின் கைது செய்யப்பட்டு தேசத்துரோகக் குற்றச்சாட்டுடன் கான்ஸ்டண்டினோபில் கொண்டு செல்லப்பட்டார்.
  • 1244ல் பாரிசில் பெருந்தொகையான யூத சமய கையெழுத்துப்படிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
  • 1397ல் டென்மார்க், சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் டென்மார்க்கின் முதலாம் மார்கரெட்டின் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
  • 1579ல் சர் பிரான்சிஸ் டிரேக் நோவா அல்பியனில் (இன்றைய கலிபோர்னியா) தரையிறங்கி அதனை இங்கிலாந்துக்காக உரிமை கோரினார்.
  • 1596ல் இடச்சு நாடுகாண் பயணி வில்லியம் பாரென்ட்சு ஆர்க்டிக் தீவுக்கூட்டமான ஸ்பிட்சுபெர்கனைக் கண்டுபிடித்தார்.
  • 1631ல் மும்தாசு மகால் பிள்ளைப்பேற்றின் போது இறந்தார். அவரது கணவர் முகலாயப் பேரரசர் ஷாஜகான் அடுத்த 17 ஆண்டுகளுக்கு மும்தாசுக்கான நினைவுச்சின்னமான தாஜ்மகாலைக் கட்டுவதில் முனைந்தார்.
  • 1767ல் ஆங்கிலேயக் கப்பல் தலைவர் சாமுவேல் வாலிசு தாகித்தியைக் கண்டறிந்தார்.
  • 1794ல் ஆங்கிலோ-கோர்சிக்கன் இராச்சியம் அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் இது கலைந்தது.
  • 1839ல் அவாய் இராச்சியத்தில், ரோமன் கத்தோலிக்கர்கள் சுதந்திரமாக சமய வழிபாட்டில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.
  • 1843ல் நியூசிலாந்தில் மாவோரி பழங்குடியினருக்கும், பிரித்தானியக் குடியேறிகளுக்கும் இடையில் சமர்கள் இடம்பெற்றன.
  • 1885ல் விடுதலைச் சிலை நியூயார்க் துறைமுகத்தை வந்தடைந்தது.
  • 1900ல் மேற்கு கூட்டுப் படைகளும் சப்பானியப் படைகளும் இணைந்து சீனாவின் தியான்ஜின், தாக்கு கோட்டைகளைக் கைப்பற்றின.
  • 1911ல் செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு சாவடைந்தார்.
  • 1929ல் நியூசிலாந்து மர்ச்சிசன் நகரில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17 பேர் உயிரிழந்தனர்.
  • 1933ல் அமெரிக்காவின் கேன்சசு நகரில் கொள்ளைக்காரன் பிராங்க் நாஷ் என்பவனை விடுவிக்கும் பொருட்டு கொள்ளைக்காரர் நடத்திய தாக்குதலில் நான்கு எஃப்பிஐ பணியாளர்களும், பிராங்க் நாஷும் கொல்லப்பட்டனர்.
  • 1939ல் பிரான்சில் கடைசித் தடவையாக பகிரங்கமாகக் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இயூசன் வீடுமேன் என்பவர் இவ்வாறு கொல்லப்பட்டார்.
  • 1940ல் இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் லான்காஸ்ட்ரியா கப்பல் செருமானிய லூப்டுவாபே படையினரால் சென் நசேர் அருகில் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதில் குறைந்தது 3,000 பேர் உயிரிழந்தனர்.
  • 1940ல் இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படையினர் லிபியாவின் கப்பூசோ கோட்டையைத் தாக்கி இத்தாலியப் படையினரிடம் இருந்து கைப்பற்றினர்.
  • 1940ல் எசுத்தோனியா, லாத்வியா, லிதுவேனியா ஆகிய மூன்று பால்ட்டிக் நாடுகளும் சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டினுள் வந்தன. 1991 இலேயே இவை விடுதலை பெற்றன.
  • 1944ல் ஐசுலாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலையை அறிவித்து குடியரசானது.
  • 1948ல் டக்லசு டிசி-6 என்ற அமெரிக்க விமானம் பென்சில்வேனியா, கார்மேல் குன்றில் மோதியதில் அனைத்து 43 பயணிகளும் கொல்லப்பட்டனர்.
  • 1953ல் பனிப்போர்: பெர்லினில் கிழக்கு செருமனி அரசுக்கெதிராக தொழிலாளர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் சோவியத் படைகளினால் நசுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
  • 1960ல் நே பெர்சு அமெரிக்கப் பழங்குடியினர் 1863 உடன்படிக்கைப்படி அவர்களது 7 மில்லியன் ஏக்கர் நிலம் குறைவாக மதிப்பீடு (4 சதம்/ஏக்கர்) செய்யப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டமைக்காக $4 மில்லியன் இழப்பீடு பெற்றனர்.
  • 1963ல் தெற்கு வியட்நாமில் பௌத்தர்கள் 2,000 பேர் வரை கலகம் செய்தனர். ஒருவர் கொல்லப்பட்டார்.
  • 1967ல் அணுகுண்டு சோதனை: சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டை வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக அறிவித்தது.
  • 1985ல் டிஸ்கவரி விண்ணோடத்தில் முதலாவது அராபிய விண்வெளிவீரர் (சுல்தான் பின் சல்மான் பின் அப்துலசீசு அல் சவுதி) விண்வெளிக்கு சென்றார்.
  • 1991ல் தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்கர்கள் அனைவரும் பிறப்பின் போது இனவாரியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்தது.
  • 1992ல் “கூட்டு ஆயுதக்குறைப்பு” ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், உருசிய அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
  • 2006ல் மன்னார் பேசாலைப் பகுதியில் கடற்படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதலின் பின்னர் ஆறு பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • 2015ல் சார்லசுட்டன் படுகொலை: தென் கரொலைனாவில் ஆப்பிரிக்க மெதடித்த தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2017ல் மத்திய போர்த்துகல் பகுதியில் காட்டுத்தீ பரவியதில் 64 பேர் உயிரிழந்தனர், 204 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 17-06 June 17

  • 1239ல் ஆங்கிலேய மன்னரான‌ முதலாம் எட்வர்டு பிறந்தார். (இறப்பு 1307)
  • 1704ல் ஆங்கிலேயப் பொறியியலாளரான‌ ஜான் கே பிறந்தார். (இறப்பு 1780)
  • 1800ல் ஆங்கிலேய-அயர்லாந்து வானியலாளரும் அரசியல்வாதியுமான‌ வில்லியம் பார்சன்சு பிறந்தார். (இறப்பு 1867)
  • 1882ல் உருசிய இசைக்கலைஞரும் இசையமைப்பாளருமான‌ இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி பிறந்தார். (இறப்பு 1971)
  • 1883ல் தமிழக அரசியல்வாதியான மயிலை சின்னத்தம்பிப் பிள்ளை ராஜா பிறந்தார். (இறப்பு 1943)
  • 1898ல் இடச்சு வரைகலைஞரான‌ மௌ. கொ. எசர் பிறந்தார். (இறப்பு 1972)
  • 1921ல் தமிழக எழுத்தாளரான‌ மீ. ப. சோமு பிறந்தார். (இறப்பு 1999)
  • 1939ல் இலங்கை-செருமானியத் தொழிலதிபரான‌ இயன் கிருகரன் பிறந்தார்.
  • 1942ல் நோபல் பரிசு பெற்ற எகிப்திய அரசியல்வாதியான முகம்மது அல்-பராதிய் பிறந்தார்.
  • 1950ல் தமிழக சொல்லாய்வறிஞரான‌ ப. அருளி பிறந்தார்.
  • 1973ல் இந்திய டென்னிசு வீரரான‌ லியாண்டர் பயஸ் பிறந்தார்.
  • 1976ல் ஆங்கிலேய நடிகரான‌ ஸ்காட் அட்கின்ஸ் பிறந்தார்.
  • 1980ல் அமெரிக்க டென்னிசு வீராங்கனையான‌ வீனஸ் வில்லியம்ஸ் பிறந்தார்.
  • 1981ல் ஆத்திரேலியத் துடுப்பாளரான‌ ஷேன் வாட்சன் பிறந்தார்.
  • 1988ல் ஆத்திரேலிய நீச்சல் வீராங்கனையான‌ ஸ்ரெபனி றைஸ் பிறந்தார்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 17-06 June 17

656ல் பாரசீக ஆட்சியாளரான‌ உதுமான் இறப்பு நாள் (பிறப்பு 577)
676ல் திருத்தந்தையான‌ இரண்டாம் ஆதேயோதாத்துஸ் இறப்பு நாள்
1631ல் சாஜகானின் மனைவியான‌ மும்தாசு மகால் இறப்பு நாள் (பிறப்பு 1593)
1674ல் மராத்தியப் பேரரசரின் தாயாரான‌ ஜிஜாபாய் (பிறப்பு 1598)
1839ல் பிரித்தானிய இந்தியாவின் 14வது தலைமை ஆளுநரான‌ வில்லியம் பென்டிங்கு பிரபு இறப்பு நாள் (பிறப்பு 1774)
1911ல் திருநெல்வேலி மாவட்டத்தின் தற்காலிக ஆட்சியாளரான‌ ஆஷ் துரை இறப்பு நாள் (பிறப்பு 1872)
1911ல் இந்திய விடுதலைப் போராட்ட வீரரான‌ வாஞ்சிநாதன் இறப்பு நாள் (பிறப்பு 1886)
1996ல் இந்திய அரசியல்வாதியான‌ மதுகர் தத்ரேய தேவ்ரஸ் இறப்பு நாள் (பிறப்பு 1915)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleJune 16 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 16
Next articleJune 18 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 18