June 18 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 18

0

June 18 Today Special | June 18 What Happened Today In History. June 18 Today Whose Birthday (born) | June-18th Important Famous Deaths In History On This Day 18/06 | Today Events In History June-18th | Today Important Incident In History | ஜூன் 18 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 18-06 | ஆனி மாதம் 18ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 18.06 Varalatril Indru Nadanthathu Enna.

June 18
June 18

Today Special Historical Events In Tamil | 14-06 June 18

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 18-06

  • அசர்பைஜானின் மனித உரிமைகள் நாளாக கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 18-06 June 18

  • 618ல் லீ யுவான் சீனாவின் பேரரசராக முடிசூடினார். அவரது தாங் வம்சம் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது.
  • 656 ல் அலீ ராசிதீன் கலீபாக்களின் கலீபா ஆனார்.
  • 1429ல் பிரெஞ்சுப் படையினர் ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பாட்டேய் சமரில் ஆங்கிலேயப் படையினரத் தோற்கடித்தனர். நூறாண்டுப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தது.
  • 1633ல் இங்கிலாந்தின் முதலாம் சார்லசு இசுக்கொட்லாந்தின் மன்னராக எடின்பரோவில் முடிசூடினார்.
  • 1767ல் ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர் சாமுவேல் வால்லிசு தாகித்தியை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
  • 1778ல் அமெரிக்கப் புரட்சிப் போர், பிரித்தானியப் படையினர் பிலடெல்பியாவைக் கைவிட்டு வெளியேறினர்.
  • 1812ல் பிரித்தானிய அமெரிக்கப் போர், அமெரிக்கக் காங்கிரசு பிரித்தானியா, கனடா, அயர்லாந்து மீது போரை அறிவித்தது.
  • 1815ல் நெப்போலியப் போர்கள், வாட்டர்லூ சமரில் நெப்போலியன் பொனபார்ட் வெல்லிங்டன் பிரபுவினால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து நெப்போலியன் பிரான்சின் அரசாட்சியை இரண்டாம் தடவையாகவும், இறுதியாகவும் இழந்தான்.
  • 1830ல் பிரான்சு அல்சீரியாவை ஊடுருவியது.
  • 1858ல் சார்லஸ் டார்வின் தனது படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய முடிவுகளுக்கு ஒப்பான ஆய்வு அறிக்கைகளை ஆல்ஃவிரடு அரசல் வாலேசுவிடம் இருந்து பெற்றார். இதனை அடுத்து டார்வின் தனது ஆய்வு அறிக்கைகளை வெளியிட வேண்டி வந்தது.
  • 1869ல் இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது.
  • 1887ல் வேற்று நாடு ஒன்று தமது நாடுகளுடன் போரில் ஈடுபட்டால் இரு நாடுகளும் நடுநிலை வகிப்பதென்ற ஒப்பந்தத்தில் செருமனியும், உருசியாவும் கையெழுத்திட்டன.
  • 1900ல் வெளிநாட்டுத் தூதுவர்கள், அவர்களது குடும்பத்தினர் உட்பட சீனாவில் உள்ள அனைத்து வெளிநாட்டவரும் கொல்லப்பட வேண்டும் என சீனாவின் பேரரசி டோவாகர் சிக்சி ஆணை பிறப்பித்தார்.
  • 1908ல் சப்பானியர்கள் 781 பேர் பிரேசிலின் சான்டோசு கரையை அடைந்ததுடன் சப்பானியக் குடியேற்றம் அங்கு ஆரம்பித்தது.
  • 1908ல் பிலிப்பைன்சு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
  • 1928ல் வானோடி அமேலியா ஏர்ஃகாட் அத்திலாந்திக்குப் பெருங்கடலை விமானத்தில் கடந்த முதல் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
  • 1946ல் சமூகவுடைமைவாதி ராம் மனோகர் லோகியா போத்துக்கீசருக்கு எதிராக கோவாவில் நேரடி நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
  • 1948ல் கொலொம்பியா ரெக்கார்ட்சு நிறுவனம் நீண்ட நேரம் ஒலிக்கும் இசைத்தட்டை நியூயார்க்கில் வெளியிட்டது.
  • 1953 – 1952ல் எகிப்தியப் புரட்சி முடிவுக்கு வந்தது. முகமது அலி வம்சம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு எகிப்து குடியரசாக அறிவிக்கப்பட்டது.
  • 1953ல் ஐக்கிய அமெரிக்க வான்படையைச் சேர்ந்த சி-24 விமானம் சப்பான், தச்சிக்காவா என்ற இடத்தில் மோதி வெடித்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1954ல் அடையாறு புற்றுநோய் மையம் அமைக்கப்பட்டது.
  • 1965ல் வியட்நாம் போர்: அமெரிக்கா பி-52 குண்டு வீச்சு விமானங்கள் மூலம் தெற்கு வியட்நாமில் தேசிய விடுதலை முன்னணி கரந்தடி வீரகளைத் தாக்கியது.
  • 1972ல் பிரித்தானிய பயணிகள் விமானம் ஒன்று இலண்டன் ஈத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு நிமிடங்களில் தரையில் மோதி வெடித்ததில் 118 பேர் உயிரிழந்தனர்.
  • 1979ல் போர்த்தந்திர படைக்கலக் கட்டுப்பாட்டு உடன்பாட்டில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் கையெழுத்திட்டன.
  • 1981ல் அமெரிக்காவில் மசாசுசெட்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • 1981ல் கரவுத் தொழினுட்பத்தைக் கொண்டு தயாரான வானூர்தி லொக்கீட் எப்-117 நைட்கோக் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டது.
  • 1983ல் சாலஞ்சர் விண்ணோடம்: சாலி றைட் விண்ணுக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
  • 1983ல் பகாய் சமயத்தைப் பின்பற்றியமைக்காக 10 பகாய் பெண்கள் ஈரான் சீராசு நகரில் தூக்கிலிடப்பட்டனர்.
  • 1985ல் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.
  • 1994ல் வட அயர்லாந்தில் இரவு விடுதி ஒன்றில் 1994 கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது அல்ஸ்டர் படையினர் சுட்டதில் ஆறு கத்தோலிக்கப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஐந்து பேர் காயமடைந்தனர்.
  • 2006ல் கசக்ஸ்தானின் முதலாவது செயற்கைக்கோள், காஸ்சாட் ஏவப்பட்டது.
  • 2018ல் சப்பான், வடக்கு ஒசாக்காவில் 5.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் நால்வர் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 18-06 June 18

  • 1799ல் ஆங்கிலேய வானியலாளரும் வணிகருமான‌ வில்லியம் இலாசல் பிறந்த நாள் (இறப்பு 1880)
  • 1816ல் நேப்பாள மன்னரான‌ ஜங் பகதூர் ராணா பிறந்த நாள் (இறப்பு 1877)
  • 1882ல் பல்கேரியாவின் 32வது பிரதமரான‌ கியார்கி திமித்ரோவ் பிறந்த நாள் (இறப்பு 1949)
  • 1908ல் தமிழக அரசியல்வாதியான‌ கக்கன் பிறந்த நாள் (இறப்பு 1981)
  • 1918ல் மலேசியத் தமிழ் அரசியல்வாதியான‌ உபைதுல்லா பிறந்த நாள் (இறப்பு 2009)
  • 1920ல் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதியுமான‌ சின்ன அண்ணாமலை பிறந்த நாள் (இறப்பு 1980)
  • 1924ல் தமிழக ஓவியரான கோபுலு பிறந்த நாள் (இறப்பு 2015)
  • 1926ல் அமெரிக்க வானியலாளரும் அண்டவியலாளருமான‌ ஆலன் சாந்தேகு பிறந்த நாள் (இறப்பு 2010)
  • 1941ல் தமிழகத் திரைப்பட இயக்குநரும் பாடலாசிரியருமான‌ பஞ்சு அருணாசலம் பிறந்த நாள் (இறப்பு 2016)
  • 1942ல் தென்னாப்பிரிக்காவின் 23வது அரசுத்தலைவரான‌ தாபோ உம்பெக்கி பிறந்த நாள்
  • 1948ல் இந்திய அரசியல்வாதியான‌ மகாத்மா காந்தியின் மூத்த மகன் ஹரிலால் காந்தி பிறந்த நாள் (இறப்பு 1888)
  • 1949ல் போலந்தின் 4வது அரசுத்தலைவரான‌ லேக் காச்சின்ஸ்கி பிறந்த நாள் (இறப்பு 2010)
  • 1959ல் கனடிய நிதி எழுத்தாளரும் ஊடகவியலாளருமான‌ கெயில் வாசு ஒக்சலேட் பிறந்த நாள்
  • 1960ல் இலங்கை அரசியல்வாதியான‌ தியாகராஜா மகேஸ்வரன் பிறந்த நாள் (இறப்பு 2008)
  • 1962ல் அமெரிக்க இயற்பியலாளரான‌ இலிசா ராண்டால் பிறந்த நாள்
  • 1965ல் தமிழக எழுத்தாளரான‌ த. சதீஷ்குமார் பிறந்த நாள்
  • 1986ல் இசுக்கொட்டிய நடிகரான‌ ரிச்சர்ட் மேடன் பிறந்த நாள்

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 18-06 June 18

  • 1753ல் பிரான்சிய வேதியியலாளரான‌ கிளாடு பிரான்சுவா ஜெப்ராய் இறப்பு நாள் (பிறப்பு 1729)
  • 1858ல் இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையான‌ ராணி லட்சுமிபாய்(ஜான்சிராணி) இறப்பு நாள் (பிறப்பு 1835)
  • 1922ல் டச்சு வானியலாளரான‌ யாகோபசு காப்தேயன் இறப்பு நாள் (பிறப்பு 1851)
  • 1928ல் நோர்வே விமான ஓட்டியும் நாடுகாண் பயணியுமான‌ ருவால் அமுன்சென் இறப்பு நாள் (பிறப்பு 1872)
  • 1936ல் உருசிய புதின எழுத்தாளரான‌ மாக்சிம் கார்க்கி இறப்பு நாள் (பிறப்பு 1868)
  • 1972ல் அமெரிக்க வானியலாளரான‌ மில்டன் இலாசெல் குமாசன் இறப்பு நாள் (பிறப்பு 1891)
  • 1977ல் தமிழகப் புலவரான‌ பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர் இறப்பு நாள் (பிறப்பு 1898)
  • 1980ல் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதியுமான‌ சின்ன அண்ணாமலை இறப்பு நாள் (பிறப்பு 1920)
  • 2009ல் இந்துத்தானி இசைக் கலைஞரான‌ அலி அக்பர் கான் இறப்பு நாள் (பிறப்பு 1922)
  • 2010ல் நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கீச புதின எழுத்தாளர் ஜோசே சரமாகூ இறப்பு நாள் (பிறப்பு 1922)
  • 2011ல் சாம்பியாவின் 2வது அரசுத்தலைவர் பிரெடிரிக் சிலுபா இறப்பு நாள் (பிறப்பு 1943)
  • 2014ல் அமெரிக்க வேதியியலாளரும் பொறியியலாளருமான‌ இஸ்டெபனி குவோலக் இறப்பு நாள் (பிறப்பு 1923)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleJune 17 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 17
Next articleJune 19 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 19