June 16 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 16

0

June 16 Today Special Historical Events In Tamil | 16-06

June 16 Today Special | June 16 What Happened Today In History. June 16 Today Whose Birthday (born) | June-16th Important Famous Deaths In History On This Day 16/06 | Today Events In History June-16th | Today Important Incident In History | ஜூன் 16 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 16-06 | ஆனி மாதம் 16ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 16.06 Varalatril Indru Nadanthathu Enna.

june 16
june 16

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 16-06

  • பன்னாட்டு ஆப்பிரிக்கக் குழந்தை நாள் கொண்டாப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 16-06 June 16

  • கிமு 363ல் உரோமைப் பேரரசர் யூலியான் டைகிரிசு ஆறு வழியே பின்வாங்கி, தமது சரக்குக் கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்தினார். இதனால் உரோமைப் படைகள் பாரசீகரிடம் இருந்து பெரும் இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது.
  • கிமு 632ல் சாசானிய வம்சத்தின் (இன்றைய ஈரான்) கடைசி அரசரா மூன்றாம் யாசுடெகெர்டு சாசானியப் பேரரசின் மன்னராக முடிசூடினார்.
  • 1487ல் ரோசாப்பூப் போர்களின் கடைசிப் போர் ஸ்டோக் ஃபீல்டு என்ற இடத்தில் இடம்பெற்றது.
  • 1586ல் ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி, இரண்டாம் பிலிப்பைத் தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்தார்.
  • 1654ல் சுவீடனின் கிறித்தீனா மகாராணி முடி துறந்தார். பத்தாம் சார்லசு குசுத்தாவ் புதிய மன்னராக முடிசூடினார்.
  • 1745ல் ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: நியூ இங்கிலாந்து குடியேற்றப் படையினர் புதிய பிரெஞ்சு லூயிசுபேர்க் கோட்டையைக் கைப்பற்றினர்.
  • 1773ல் வங்காளம் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் முதன்மை மாகாணமானது, உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது.
  • 1779ல் எசுப்பானியா பெரிய பிரித்தானியா மீது போரை அறிவித்தது, ஜிப்ரால்ட்டர் மீதான போர் ஆரம்பமானது.
  • 1819ல் குசராத்து மாநிலத்தில், கச்சு என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,550 பேர் உயிரிழந்தனர்.
  • 1846ல் ஒன்பதாம் பயசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். இவரே நீண்ட காலம் (32 ஆண்டுகள்) பதவியில் இருந்த திருத்தந்தை ஆவார்.
  • 1883ல் இங்கிலாந்தில் விக்டோரியா நாடக அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 183 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
  • 1897ல் அவாய் குடியரசை ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் ஒப்பந்தம் எழுதப்பட்டது.
  • 1903ல் போர்ட் தானுந்து நிறுவனம் நிறுவனமயப்படுத்தப்பட்டது.
  • 1903ல் ருவால் அமுன்சென் தனது முதலாவது வடமேற்குப் பெருவழியின் கிழக்கு-மேற்கு நோக்கிய கடற்பயணத்தை ஒசுலோவில் இருந்து ஆரம்பித்தார்.
  • 1911ல் ஐபிஎம் நிறுவனம் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1911ல் 772 கிராம் எடையுள்ள விண்வீழ்கல் விஸ்கொன்சின் கில்போர்ன் நகரில் வீழந்தது.
  • 1922ல் அயர்லாந்து சுயாதீன மாநிலத்தில்திடம்பெற்ற பொதுத்தேர்தலில் சின் பெயின் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது.
  • 1940ல் லித்துவேனியாவில் கம்யூனிச அரசு ஆட்சிக்கு வந்தது.
  • 1944ல் ஐக்கிய அமெரிக்கா 14-வயது ஜார்ஜ் ஸ்டின்னி என்பவரை தூக்கிலிட்டது.
  • 1948ல் மலாயன் கம்யூனிச்டுக் கட்சி உறுப்பினர்கள் மூன்று பிரித்தானியத் தோட்ட அதிகாரிகளைக் கொன்றதை அடுத்து அங்கு அவசர காலச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
  • 1955ல் அர்கெந்தீனாவில் உவான் பெரோன் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் பொருட்டு, அரசுக்கு ஆதரவான பேரணி ஒன்றின் மீது கடற்படையினர் குண்டுகள் வீசியதில் 364 பேர் கொல்லப்பட்டனர், 800 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
  • 1958ல் 1956 அங்கேரியப் புரட்சியில் ஈடுபட்ட தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
  • 1963ல் வஸ்தோக் 6: உருசியாவின் வலன்டீனா டெரெஷ்கோவா விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
  • 1976ல் தென்னாபிரிக்காவில் சுவெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
  • 1997ல் அல்சீரியாவில் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 50 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
  • 2010ல் பூட்டான் புகையிலைப் பயன்பாட்டை முற்றாகத் தடை செய்த முதலாவது நாடானது.
  • 2012ல் ஐக்கிய அமெரிக்க வான்படையின் தானியங்கி போயிங் எக்ஸ்-37 விண்ணூர்தி 469-நாள் பயணத்தின் பின்னர் பூமி திரும்பியது.
  • 2012ல் சீனா சென்சூ 9 விண்கலத்தை லியு யங் என்ற பெண் உட்பட மூவருடன் வெற்றிகரமாக ஏவியது.
  • 2013ல் வட இந்திய மாநிலமான உத்தராகண்டத்தில் பெரும் வெள்ளம், நிலச்சரிவுகள் இடம்பெற்றதில் பெரும் அழிவுகள் ஏற்பட்டன.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 16-06 June 16

  • 1723ல் இசுக்கொட்டிய மெய்யியலாளரும் பொருளியலாளருமான ஆடம் சிமித் பிறந்த நாள் (இறப்பு 1790)
  • 1829ல் அமெரிக்க பழங்குடித் தலைவரான‌ யெரொனீமோ பிறந்த நாள் (இறப்பு 1909)
  • 1888ல் உருசிய இயற்பியலாளரும் கணிதவியலாளருமான‌ அலெக்சாந்தர் ஃபிரீடுமேன் பிறந்த நாள் (இறப்பு 1925)
  • 1891ல் உருசிய வானியலாளரான‌ விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி பிறந்த நாள் (இறப்பு 1952)
  • 1893ல் தமிழகத் தொழிலதிபரான‌ கருமுத்து தியாகராஜன் செட்டியார் பிறந்த நாள் (இறப்பு 1974)
  • 1896ல் இந்தியத் துடுப்பாட்டக்காரரான‌ கோட்டா ராமசுவாமி பிறந்த நாள் (இறப்பு 1990)
  • 1902ல் அமெரிக்கத் தொல்லியலாளரான‌ ஜியார்ஜ் கேலார்ட் சிம்ப்சன் பிறந்த நாள் (இறப்பு 1984)
  • 1902ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவரான பார்பரா மெக்லின்டாக் பிறந்த நாள் (இறப்பு 1992)
  • 1917ல் அமெரிக்கப் பதிப்பாளரான‌ கேத்தரின் கிரகாம் பிறந்த நாள் (இறப்பு 2001)
  • 1921ல் சோவியத் உருசிய இயற்பியலாளரான‌ அலெக்சாந்தர் சுதக்கோவ் பிறந்த நாள் (இறப்பு 2001)
  • 1924ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளரான டி. ஆர். மகாலிங்கம் (இறப்பு 1978)
  • 1930ல் அங்கேரிய-அமெரிக்க ஒளிப்பதிவாளரரும் தயாரிப்பாளருமான வில்மோஸ் சிக்மண்ட் பிறந்த நாள் (இறப்பு 2016)
  • 1934ல் தென்னிந்திய நடிகையும் பரதநாட்டியக் கலைஞரும் பாடகியுமான‌ குமாரி கமலா பிறந்த நாள்
  • 1937ல் அமெரிக்க எழுத்தாளரான‌ எரிக் செகல் பிறந்த நாள் (இறப்பு 2010)
  • 1940ல் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியான என். சந்தோசு எக்டே பிறந்த நாள்
  • 1950ல் இந்திய நடிகரும் அரசியல்வாதியுமான மிதுன் சக்கரவர்த்தி பிறந்த நாள்
  • 1958ல் ஆத்திரேலிய போர்வீரரும் இசைக்கலைஞருமான அபு சயாப் பிறந்த நாள்
  • 1971ல் அமெரிக்க ராப் இசைக்கலைஞரும் தயாரிப்பாளருமன‌ டூப்பாக் ஷகூர் பிறந்த நாள் (இறப்பு 1996)
  • 1986ல் தென்னிந்திய நடிகையான அஞ்சலி பிறந்த நாள்‌

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Born Today In History 16-06 June 16

  • 1925ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் அரசியல்வாதியுமான சித்தரஞ்சன் தாஸ் இறப்பு நாள் (பிறப்பு 1870)
  • 1940ல் லூயி பாஸ்டர் கண்டுபிடித்த விசர்நாய்க் கடி தடுப்பூசி மருந்தை தன் மேல் செலுத்தி சோதனை செய்த முதலாவது நபரான யோசப் மைசிட்டர் இறப்பு நாள் (பிறப்பு 1876)
  • 1944ல் வங்கக் கல்வியாளரும் வேதியியலாளரும் சமூக சேவையாளருமான‌ பிரபுல்ல சந்திரராய் இறப்பு நாள் (பிறப்பு 1861)
  • 1977ல் செருமானிய-அமெரிக்க இயற்பியலாளரும் பொறியியலாளருமான‌ வெர்னர் வான் பிரவுன் இறப்பு நாள் (பிறப்பு 1912)
  • 2015ல் இந்தியக் கட்டிடக்கலைஞரான‌ சார்லசு கோர்ரியா இறப்பு நாள் (பிறப்பு 1930)
  • 2016ல் ஆங்கிலேய அரசியல்வாதியான‌ எலன் ஜோ காக்சு இறப்பு நாள் (பிறப்பு 1974)
  • 2017ல் செருமனியின் 6வது அரசுத்தலைவரான எலன் ஜோ காக்சு இறப்பு நாள் (பிறப்பு 1930)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமீண்டும் கொரோனா அதிகரிப்பு! கொரோனா வலையத்திற்குள் 8 மாநிலங்கள்! முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
Next articleJune 17 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 17