June 15 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 15

0

June 15 Today Special | June 15 What Happened Today In History. June 15 Today Whose Birthday (born) | June-15th Important Famous Deaths In History On This Day 15/06 | Today Events In History June-15th | Today Important Incident In History | ஜூன் 15 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 15-06 | ஆனி மாதம் 15ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 15.06 Varalatril Indru Nadanthathu Enna.

Today Special Historical Events In Tamil | 15-06

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 15-06

 • கோஸ்ட்டா ரிக்கா நாட்டின் மரம் நடுகை நாள் மரங்களை நட்டு மரங்கள்பால் அக்கறை கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.
 • காற்றினுடைய ஆற்றலை காற்றினுடைய முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் உலகக் காற்று நாள் கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 15-06

 • கிமு 763ல் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை மெசொப்பொத்தேமியாவின் அசிரியர்கள் பதிந்தார்கள்.
 • 844ல் இத்தாலியின் உரோம் நகரில் இரண்டாம் செர்கியசினால் இரண்டாம் லூயிசு மன்னராக முடிசூடி வைக்கப்பட்டார்.
 • 923ல் சோயிசன்சு என்ற இடத்தில் நடைபெற்ற போரின்போது பிரான்சின் முதலாம் இராபர்ட் மன்னர் கொல்லப்பட்டார்.
 • 1184ல் பிம்ரைட் என்ற இடத்தில் நடைபெற்ற போரின்போது நோர்வே மன்னரான‌ ஐந்தாம் மாக்னசு கொல்லப்பட்டார்.
 • 1215ல் இங்கிலாந்தின் ஜோன் மன்னரான‌ மாக்னா கார்ட்டாவில் தன்னுடைய‌ இலச்சினையைப் பதிந்தார்.
 • 1219ல் வடக்கு சிலுவைப் போர்களில் ஒன்றான‌ லிந்தானீசு சமரை அடுத்து தானிய எசுத்தோனிய இராச்சியம் அமைக்கப்பட்டது.
 • 1246ல் ஆஸ்திரியாவின் இரண்டாம் பிரெடெரிக்கின் இறப்பை தொடர்ந்து பாபன்பேர்க் என்னும் அரச வம்சம் அழிந்தது.
 • 1300ல் பில்போ என்னும் நகரம் அமைக்கப்பட்டது.
 • 1389ல் கொசோவோவில் என்னும் இடத்தில் நடந்த போரின்போது உதுமானியர்கள் செர்பியர்களையும் பொசுனியர்களையும் தோற்கடித்தனர்.
 • 1502ல் கிறித்தோபர் கொலம்பசு தன்னுடைய‌ நான்காவது கடற் பயணத்தின் போது மர்தினிக்கு தீவில் கால் வைத்தார்.
 • 1520ல் மார்ட்டின் லூதரை உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கப்போவதாக திருத்தந்தை பத்தாம் லியோ எச்சரித்தார்.
 • 1667ல் மருத்துவர் சான் பாப்டிஸ்ட் டெனிஸ் என்பவரால் முதலாவது மனித குருதி மாற்றீடு மேற்கொள்ளப்பட்டது.
 • 1752ல் மின்னல் ஒரு மின்சாரம் என்பதை பெஞ்சமின் பிராங்கிளின் நிறுவினார்.
 • 1775ல் சியார்ச் வாசிங்டன் அமெரிக்க இராணுவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
 • 1776ல் பென்சில்வேனியாவில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக டெலவெயர் வாக்களித்தது.
 • 1785ல் முதலாவது வான விபத்து நிகழ்ந்தது. (ழீன்-பிரான்சுவா பிலாத்ரே டி ரோசியர் மற்றும் பியேர் ரொமாயின் ஆகியோர் ஆங்கிலக் கால்வாயை வெப்பக் காற்றுக் குடுவையில் பறக்க முயன்றபோது குடுவை வெடித்ததில் உயிரிழந்தனர்).
 • 1808ல் யோசப் பொனபார்ட் என்பவர் எசுப்பானியாவின் (spain) மன்னராக முடிசூடினார்.
 • 1836ல் 25வது அமெரிக்க மாநிலமாக ஆர்கன்சா ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 • 1844ல் சார்லசு கூடியர் என்பவரால் இயற்கை இறப்பர் பதப்படுத்தும் முறை காப்புரிமம் பெறப்பட்டது.
 • 1846ல் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கிடையான‌ எல்லைக்கோடு ராக்கி மலைத்தொடர் முதல் உவான் டெ பூக்கா நீரிணை வழியாக வரையப்பட்டது.
 • 1846ல் ஜேர்னல் என்ற முதலாவது இதழ் இலங்கையின் அரச ஆசியர் சமூகத்தால் வெளியிடப்பட்டது.
 • 1878ல் எதுவார்து மைபிரிட்ச் என்பவர் குதிரை ஒன்று ஓடும்போது அதன் நான்கு கால்களும் தரையில் படுவதில்லை என்பதை நிறுவும் புகைப்படங்களை எடுத்தார். இந்த ஆய்வு தான் பின்னாளில் அசையும் திரைப்படங்கள் உருவாக மூல காரணமாக‌ அமைந்தது.
 • 1888ல் ஜெர்மான் பேரரசின் கடைசி மன்னராக முடிக்குரிய இளவரசர் வில்லியம் முடிசூடினார். 1888 இல் முதலாம் வில்லியம் மற்றும் மூன்றாம் பிரெடெரிக் ஆகிய மன்னர்கள் இறந்ததனால், 1888ம் ஆண்டானது ஜெர்மனியின் மூன்று பேரரசர்களின் ஆட்சி இடம்பெற்ற‌ ஆண்டு ஆகும்.
 • 1896ல் ய‌ப்பானில் சன்ரிக்கு என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 22,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
 • 1904ல் ஜெனரல் சுலோக்கம் என்ற நீராவிப் படகு நியூயோர்க் நகரின் கிழக்கு ஆற்றில் தீப்பற்றியதில் 1,000 பேர் வரை உயிரிழந்தனர்.
 • 1909ல் இலார்ட்சுவில் இம்பீரியல் துடுப்பாட்ட மாநாட்டை இங்கிலாந்து, ஆத்திரேலியா, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூடி ஆரம்பித்தனர்.
 • 1937ல் கார்ல் வியென் தலைமையிலான‌ ஜெர்ம‌னியக் குழு நங்க பர்வதம் என்னும் மலையில் பனிச்சரிவில் சிக்கியதில் 16 உறுப்பினர்களை இழந்தது.
 • 1940ல் இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனி பாரிஸ் நகரைக் கைப்பற்றியதை அடுத்து நேச அணிப் படைகள் பிரான்சில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.
 • 1944ல் இரண்டாம் உலகப் போரின்போது ய‌ப்பானியரின் பிடியில் இருந்த சைப்பேனை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றியது.
 • 1944ல் சசுக்காச்சுவான் பொதுத்தேர்தலில் வட அமெரிக்காவில் டொம்மி டக்ளசு தலைமையிலான‌ முதலாவது சோசலிச அரசு பதவியேற்றது.
 • 1954ல் சுவிட்சர்லாந்தின் பேசெல் நகரில் ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டது.
 • 1977ல் எசுப்பானியாவில் முதல் தடவையாக மக்களாட்சி முறைத் தேர்தல் நடைபெற்றது.
 • 1978ல் ஜோர்தான் மன்னரான‌ உசைன், லீசா அலபி என்ற அமெரிக்கப் பெண்ணைத் திருமண‌ம் புரிந்தார். இவர் நூர் மகாராணி என அழைக்கப்பட்டார்.
 • 1984ல் யாழ்ப்பாணம் காரைநகரில் விடுதலைப் புலிகளால் இலங்கைக் கடற்படை ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
 • 1991ல் பிலிப்பைன்ஸில் பினாடூபோ எரிமலை வெடித்ததில் 800க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
 • 1994ல் இஸ்ரேலும், வத்திக்கானும் முழுமையான பண்ணுறவாண்மையை {அரசனயம் (Diplomacy)} ஏற்படுத்திக் கொண்டன.
 • 1996ல் மான்செஸ்டர் நகரில் ஐரியக் குடியரசுப் படை (ஐஆர்ஏ) பலம் வாய்ந்த சுமையுந்துக் குண்டை வெடிக்கவைத்ததில் பலர் காயமடைந்தனர்.
 • 2014ல் பாக்கிஸ்தான் வடக்கு வசீரித்த்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான‌ இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 15-06

 • 1594ல் பிரான்சிய ஓவியரான‌ நிக்கோலா போசின் பிறந்த நாள் (இறப்பு 1665)
 • 1754ல் எசுப்பானிய வேதியியகாளரும் கனிமவியலாளருமான யுவான் ஒசே எலுயார் பிறந்த நாள் (இறப்பு 1796)
 • 1843ல் நோர்வே இசைக்கலைஞரும் இசையமைப்பாளருமான எட்வர்டு கிரெய்கு பிறந்த நாள் (இறப்பு 1907)
 • 1848ல் இந்திய ஆயரும் புனிதருமான பருமலா திருமேனி பிறந்த நாள் (இறப்பு 1902)
 • 1863ல் இந்திய வழக்கறிஞரும் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசருமான கிருஷ்ண சுவாமி அய்யர் பிறந்த நாள் (இறப்பு 1911)
 • 1902ல் ஜெர்மனிய மற்றும் அமெரிக்க உளவியல் நிபுணர் எரிக் எரிக்சன் பிறந்த நாள் (இறப்பு 1994)
 • 1921ல் இலங்கை அரசியல்வாதியான எம். எச். மொகம்மது பிறந்த நாள் (இறப்பு 2016)
 • 1926ல் இலங்கை தமிழ் அரசியல்வாதியான வழக்கறிஞர் அல்பிரட் துரையப்பா பிறந்த நாள் (இறப்பு 1975)
 • 1933ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதி வீரசிங்கம் ஆனந்தசங்கரி பிறந்த நாள்.
 • 1934ல் தமிழக எழுத்தாளர் ஜவஹர் சு. சுந்தரம் பிறந்த நாள்.
 • 1935ல் தமிழகத் தமிழறிஞர் மணவை முஸ்தபா பிறந்த நாள் (இறப்பு 2017)
 • 1937ல் தமிழக ஓவியர் ப. தங்கம் பிறந்த நாள்.
 • 1939ல் இலங்கை எழுத்தாளர் உதுமாலெவ்வை ஆதம் பாவா பிறந்த நாள்.
 • 1941ல் ஜெர்மனிய இயற்பியலாளர் ஆகென் கிலிநெர்டு பிறந்த நாள்.
 • 1941ல் இந்திய அரசியல்வாதி டி. ஆர். பாலு பிறந்த நாள்.
 • 1941ல் ஜெர்மனிய இயற்பியலாளர் ஆகென் கிலிநெர்டு பிறந்த நாள்.
 • 1942ல் மலேசியத் தமிழ்க் கவிஞர் ப. மு. அன்வர் பிறந்த நாள்.
 • 1944ல் திரைப்படப் பாடகர் மற்றும் நடிகருமான மலேசியா வாசுதேவன் பிறந்த நாள் (இறப்பு 2011)
 • 1944ல் தமிழக எழுத்தாளர் க. நெடுஞ்செழியன் பிறந்த நாள்.
 • 1953ல் தமிழ்க் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கியவரான உமர் தம்பி பிறந்த நாள் (இறப்பு 2006)
 • 1950ல் இந்திய-ஆங்கிலேயத் தொழிலதிபரான இலட்சுமி மித்தல் பிறந்த நாள்.
 • 1953ல் சீன அரசுத்தலைவர் சீ சின்பிங் பிறந்த நாள்.
 • 1959ல் கேரள பேராயர் பசேலியோஸ் கிளேமிஸ் பாவா பிறந்த நாள்.
 • 1969ல் அமெரிக்க ராப் கலைஞரும் நடிகருமான ஐஸ் கியூப் பிறந்த நாள்.
 • 1973ல் அமெரிக்க நடிகரும் பாடகருமான நீல் பாட்ரிக் ஹாரிஸ் பிறந்த நாள்.
 • 1984ல் தமிழ் நடிகரும் பின்னணிப் பாடகருமான நகுல் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 15-06

 • 1948ல் தமிழிசை ஆய்வாளர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் இறப்பு நாள் (பிறப்பு 1881)
 • 1849ல் அமெரிக்காவின் 11வது அரசுத்தலைவரான ஜேம்ஸ் போக் இறப்பு நாள் (பிறப்பு 1795)
 • 1952ல் உருசிய வானியலாளரான‌ விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி இறப்பு நாள் (பிறப்பு 1891)
 • 1971ல் தென்னிந்தியாவின் மலையாளத் திரைப்பட நடிகர் சத்தியன் இறப்பு நாள் (பிறப்பு 1912)
 • 1975ல் தமிழக கடம் கலைஞரான ஆலங்குடி இராமச்சந்திரன் இறப்பு நாள் (பிறப்பு 1912)
 • 1975ல் இந்திய வரலாற்றாளரும் திராவிடவியலாளருமான கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி இறப்பு நாள் (பிறப்பு 1892)
 • 2006ல் தமிழக அரசியல்வாதி டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை இறப்பு நாள் (பிறப்பு 1918)
 • 2008ல் இலங்கை ஆன்மிகவாதியான தங்கம்மா அப்பாக்குட்டி இறப்பு நாள் (பிறப்பு 1925)
 • 2013ல் தமிழகத் திரைப்பட நடிகரும் செயற்பாட்டாளருமான மணிவண்ணன் இறப்பு நாள் (பிறப்பு 1954)
 • 2016ல் தமிழகத் திரைப்பட இயக்குநர் ஏ. சி. திருலோகச்சந்தர் இறப்பு நாள் (பிறப்பு 1930)
 • 2016ல் இலங்கை இடதுசாரி அரசியல்வாதியான‌ சோமவன்ச அமரசிங்க இறப்பு நாள் (பிறப்பு 1943)
 • 2016ல் இலங்கை அரசியல்வாதியும் தொழிற்சங்கத் தலைவருமான அலவி மௌலானா இறப்பு நாள் (பிறப்பு 1932)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஜோதிகாவும், நக்மாவும் உடன்பிறந்த சகோதிரிகள் இல்லையாம்? வெளியான அதிர்ச்சி உண்மை? ஜோதிகாவின் உண்மையான‌ அக்கா இவர்தானாம்?
Next article28-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 28-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live