28-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 28-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0
259

Tamil news today 28-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 28.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 28/6/20, Today News in Tamil 28.06.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

“இனவெறி மற்றும் பிரிவினைவாதம் பரவிய சகாப்தம் ஓகஸ்ட் 5 ம் திகதியுடன் முடிவடையும்” – ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச.

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க எமது தரப்பில் இருந்து பல தியாகங்கள் செய்யப்பட்டன- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு.

பொதுமக்களுக்கு தனது அரசாங்கத்தின் கீழ் எரிபொருள் சலுகைகள் வழங்கப்படும் – ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச.

இலங்கையின் கடல் எல்லைப் பகுதிகள் பலவீனமான நிலையிலேயே தொடர்ந்து காணப்படுகின்றது. – அமெரிக்க இராஜாங்க திணைக்களம்.

யாழ். மறைமாவட்டத்தின் முதலாவது ஆயர் Bettacchini-இன் சிலை, யாழ்ப்பாண ஆயர் இல்லத்தில் சனிக்கிழமை திறந்து வைப்பு.

“போரின்போது மூவாயிரம் இராணுவத்தினரைக் கொன்றதாக கருணா அம்மானே ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முடியும்” – லக்ஷ்மன் கிரியெல்ல.

சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் “வடக்கு மாகாண சபை தேர்தலின்போது, வடக்கில் இருக்கும் இராணுவத்தினரை வெளியேற்றுவோம் என முழக்கம் இட்டார், ஆனால் ஒரு இராணுவ சிப்பாயை கூட அவரால் வெளியேற்ற முடியவில்லை” .- வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா.

“தமிழ் தேசியம் பேசுபவர்கள் தொடர்பாக என்னிடம் இருக்கும் ஆதாரங்கள் கையளிக்கப்பட்டால் அவர்களை நேரடியாக கைது செய்ய முடியும்”- விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா).

Tamil News Today India

அன்றாட வாழ்க்கையில் தூய தமிழில் பேசுவோருக்கு பரிசுத் தொகை வழங்கும் திட்டம். தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் குற்றவாளிகளில் ஒருவரான யூசுப் மேமன் 54 ஆவது வயதில் நாசிக் சிறையில் உயி(ரி)ழப்பு.

இந்தியாவில் சீரற்ற காலநிலை காரணமாக பீகார் மாநிலம் கோபால் கஞ்ச் மாவட்டத்தில் மின்னல் தாக்கியத்தில் 13 பேர் உயி(ரி)ழப்பு.

ச‌ர்வதேச பயணிகள் விமானப்போக்குவரத்து ஜூலை 15 ம் திகதி வரை நிறுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து டி.ஜி.சி.ஏ அறிவிப்பு.

இரத்தக் கட்டியோடு பிறந்த குழந்தைக்கு, நுண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.

வேலூர் மத்திய சிறையில் 27 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதம் வாபஸ்.! இளநீர் குடித்து முடித்து கொண்டார் முருகன்.

வேலூர் வாலாஜாவில் நாட்டுவெடிகுண்டு வெடிவிபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

Tamil News Today World

கொரோனாவில் இருந்து மீண்ட 114 வயது முதியவர்! எத்தியோப்பியாவில் சம்பவம்.

மெக்சிகோவில் தாய்க்கும் இல்லை, தந்தைக்கும் இல்லை, ஆனால் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைக்கு கொரோனா தொற்று.

அண்டை நாடுகளுக்கு போர் பீதியை ஏற்படுத்தி வரும் சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா அதிநவீன போர் விமான பயிற்சி அளிக்க திட்டம்.

Tamil News Live

கொண்டாட்டத்துடன் நடந்து முடிந்த வனிதா திருமணம்.

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் வெளியிட்டுள்ள காணொளி சமூகவலைத்தளங்களில்…

நடிகர் ஹரிஷ் கல்யான் சமூக வலைத்தளத்தில் கவிதை ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

I want to fly high
Reach for the stars
Sing out my soul
Put a smile on your face
Hug nature & cry wild
Pick a fruit & save it for later…. Oh
Lord My God
Unchain my heart, set me free
For i hate this chaos.
Do u hear me?? -Harish

Today News Tamil – Tamil News Today 28-06-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: