February 12 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 12

0

Today Special Historical Events In Tamil | 12-02 | February 12

February 12 Today Special | February 12 What Happened Today In History. February 12 Today Whose Birthday (born) | February-12th Important Famous Deaths In History On This Day 12/02 | Today Events In History February 12th | Today Important Incident In History | மாசி 12 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 12-02 | மாசி மாதம் 12ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 12.02 Varalatril Indru Nadanthathu Enna| February 12 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 12/02 | Famous People Born Today 12.02 | Famous People died Today 12-02.

Today Special in Tamil 12-02
Today Events in Tamil 12-02
Famous People Born Today 12-02
Famous People died Today 12-02

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 12-02 | February 12

டார்வின் நாளாக கொண்டாடப்படுகிறது.
செங்கை நாளாக கொண்டாடப்படுகிறது.
ஒன்றிய நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (மியான்மர்)
இளைஞர் நாளாக கொண்டாடப்படுகிறது. (வெனிசுவேலா)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 12-02 | February 12

1502ல் எசுப்பானியாவின் காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லா அவ்விராச்சியத்தில் உள்ள அனைத்து முசுலிம்களையும் கிறித்துவத்திற்கு மாற உத்தரவிட்டார்.
1502ல் இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.
1554ல் இங்கிலாந்தின் முடிக்கு உரிமை கோரி ஓராண்டில் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் ஜேன் கிரே கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள்.
1593ல் ஏறத்தாழ 3,000 கொரிய யோசன் வம்சப் படைகள் யப்பானின் 30,000 படைகளை எதிர்த்து வெற்றி கண்டன.
1689ல் ஐக்கிய இராச்சியத்தின் கடைசி கத்தோலிக்க மன்னர் இரண்டாம் யேம்சு 1688 இல் பிரான்சுக்கு தப்பியோடியமை முடி துறந்ததாகக் கருதப்படும் என இங்கிலாந்து நாடாளுமன்றம் தீர்மானித்தது.
1733ல் ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா பிர்த்தானியாவின் பதின்மூன்று குடியேற்றங்களில் 13-வது குடியேற்ற நாடாக யேம்சு ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது.
1771ல் சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெடெரிக் இறந்ததை அடுத்து அவனது மகன் மூன்றாம் குசுத்தாவ் மன்னன் ஆனான்.
1818ல் சிலி எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1819ல் கண்டிப் போர்கள்: கண்டியில் இராணுவச் சட்டம் முடிவுக்கு வந்தது.
1825ல் கிறீக் பழங்குடியினர் ஜோர்ஜியாவில் இருந்த தமது கடைசி நிலங்களை அமெரிக்க அரசுக்கு கொடுத்து விட்டு மேற்கு நோக்கி குடிபெயர்ந்தனர்.
1832ல் கலாபகசுத் தீவுகளை எக்குவாடோர் இணைத்துக் கொண்டது.
1855ல் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1909ல் நியூசிலாந்தின் பென்குயின் என்ற பயணிகள் கப்பல் வெலிங்டன் துறைமுகத்துக்கு அருகே மூழ்கி வெடித்ததில் 75 பேர் உயிரிழந்தனர்.
1909ல் ஐக்கிய அமெரிக்காவின் மிக பழைமையான சிறுபான்மைச் சமூக உரிமை சங்கம் நிறப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கான தேசிய சங்கம் அமைக்கப்பட்டது.
1912ல் சீனாவின் கடைசி அரசன் உவான்தொங் முடி துறந்தான்.
1912ல் சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்தது.
1921ல் போல்செவிக் படைகள் சியார்சியா மீது தாக்குதலைத் தொடுத்தன.
1927ல் முதலாவது பிரித்தானியப் படைகள் ஷங்காய் நகரை அடைந்தன.
1934ல் ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகியது.
1935ல் ஈலியம்-நிரப்பப்பட்ட வான்கப்பல் மேக்கோன் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கரையில் மூழ்கியது.
1947ல் மிகப்பெரும் இரும்பு விண்வீழ்கல் சோவியத் ஒன்றியம் சிக்கோட்-ஆலின் என்ற இடத்தில் விண்கல் வீழ் பள்ளம் ஒன்றை உருவாக்கியது.
1961ல் வெனேரா 1 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது.
1974ல் 1970 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற சோவியத் எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்செனிட்சின் சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறினார்.
1994ல் நோர்வே தேசிய அருங்காட்சியகத்தினுள் நுழைந்த நால்வர் எட்வர்ட் மண்ச்சின் புகழ்பெற்ற அலறல் ஓவியத்தைத் திருடிச் சென்றனர்.
2001ல் நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
2002ல் யூகொஸ்லாவியாவின் முன்னாள் தலைவர் சிலொபதான் மிலோசெவிச் மீது ஹேக் நகரில் ஐநாவின் போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பமாயின. நான்கு ஆண்டுகளின் பின்னர் விசாரணை முடிவடையும் முன்னர் அவர் இறந்தார்.
2002ல் ஈரானின் விமானம் ஒன்று கோரமபாத் நகரில் வீழ்ந்ததில் 119 பேர் உயிரிழந்தனர்.
2009ல் அமெரிக்காவின் கோல்கன் விமானம் நியூயார்க்கில் வீடு ஒன்றின் மீது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும், தரையில் ஒருவரும் உயிரிழந்தனர்.
2016ல் 1054 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் சமயப்பிளவிற்குப் பின்னர் முதற்தடவையாக திருத்தந்தை பிரான்சிசு, மாஸ்கோவின் மறைமுதுவர் கிரீல் ஆகியோர் சந்தித்து கூட்டறிக்கை ஒன்றை விடுத்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 12-02 | February 12

1768ல் புனித உரோமைப் பேரரசரான‌ இரண்டாம் பிரான்சிசு பிறந்த நாள். (இறப்பு-1835)
1804ல் செருமானிய-இத்தாலிய இயற்பியலாளரான‌ ஹைன்ரிக் லென்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1865)
1809ல் ஆங்கிலேய இயற்கையியலாளரும் நிலவியலாளருமான‌ சார்லஸ் டார்வின் பிறந்த நாள். (இறப்பு-1882)
1809ல் அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவரான‌ ஆபிரகாம் லிங்கன் பிறந்த நாள். (இறப்பு-1865)
1814ல் கார்ல் மார்க்சின் மனைவியான‌ ஜென்னி வான் வெசுட்பலென் பிறந்த நாள். (இறப்பு-1881)
1824ல் ஆரிய சமாசத்தை உருவாக்கிய இந்திய குருவான‌ தயானந்த சரசுவதி பிறந்த நாள். (இறப்பு-1883)
1851ல் ஆத்திரிய பொருளியலாளரும் மார்க்சிய விமர்சகருமான‌ ஆய்கென் வொன் பொம் போவர்க் பிறந்த நாள். (இறப்பு-1914)
1922ல் மலேசியாவின் 3வது பிரதமரான‌ உசேன் ஓன் பிறந்த நாள். (இறப்பு-1990)
1948ல் அமெரிக்கக் கணினி அறிவியலாளரான‌ ரே கர்ஸ்வயில் பிறந்த நாள்.
1967ல் தென்னிந்திய சித்திரவீணைக் கலைஞரான‌ என். ரவிகிரண் பிறந்த நாள்.
1969ல் அமெரிக்கத் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான‌ டேரன் அரோனாப்ஸ்கி பிறந்த நாள்.
1986ல் தமிழகத் திரைப்பட நடிகரான‌ ஆரி பிறந்த நாள்.
1980ல் எசுப்பானிய டென்னிசு வீரரான‌ ஹூவான் கார்லோஸ் ஃபெரேரோ பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 12-02 | February 12

1713ல் முகலாயப் பேரரசரான‌ சகாந்தர் சா இறப்பு நாள். (பிறப்பு-1664)
1804ல் செருமானிய மெய்யியலாளரான‌ இம்மானுவேல் கண்ட் இறப்பு நாள். (பிறப்பு-1724)
1908ல் தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கரான‌ ஜி. யு. போப் இறப்பு நாள். (பிறப்பு-1820)
1912ல் நோர்வே மருத்துவரான‌ கெரார்டு ஆன்சன் இறப்பு நாள். (பிறப்பு-1841)
1916ல் செருமானிய கணிதவியலாளரும் மெய்யியலாளருமான‌ ரிச்சர்டு டீடிகைண்டு இறப்பு நாள். (பிறப்பு-1831)
1964ல் இலங்கை வழக்கறிஞரும் 1-வது யாழ்ப்பாண முதல்வருமான‌ சாம். அ. சபாபதி இறப்பு நாள். (பிறப்பு-1898)
1988ல் இலங்கை வழக்கறிஞரும் அரசியல்வாதியும் மேலவை உறுப்பினருமான‌ எஸ். நடராஜா இறப்பு நாள்.
2009ல் தமிழீழ ஊடகவியலாளரான‌ புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி இறப்பு நாள்.
2009ல் தீக்குளித்து இறந்த ஈழத்தமிழனான‌ முருகதாசன் இறப்பு நாள். (பிறப்பு-1982)
2013ல் காந்தியவாதியும் இந்திய விடுதலைப்போராட்ட வீரருமான‌ சங்கரலிங்கம் ஜெகந்நாதன் இறப்பு நாள். (பிறப்பு-1914)
2015ல் மலேசிய அரசியல்வாதியான‌ நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் இறப்பு நாள். (பிறப்பு-1931)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleFebruary 11 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 11
Next articleFebruary 13 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 13