February 13 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 13

0

Today Special Historical Events In Tamil | 13-02 | February 13

February 13 Today Special | February 13 What Happened Today In History. February 13 Today Whose Birthday (born) | February-13th Important Famous Deaths In History On This Day 13/02 | Today Events In History February 13th | Today Important Incident In History | மாசி 13 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 13-02 | மாசி மாதம் 13ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 13.02 Varalatril Indru Nadanthathu Enna| February 13 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 13/02 | Famous People Born Today 13.02 | Famous People died Today 13-02.

Today Special in Tamil 13-02
Today Events in Tamil 13-02
Famous People Born Today 13-02
Famous People died Today 13-02

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 13-02 | February 13

குழந்தைகள் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (மியான்மர்)
உலக வானொலி நாளாக‌ கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 13-02 | February 13

962ல் உரோமின் ஆட்சியாளராக ஜோனை நியமிக்கும் உடன்பாடு புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோவுக்கும், திருத்தந்தை பன்னிரண்டாம் ஜோனுக்கும் இடையில் எட்டப்பட்டது.
1322ல் இங்கிலாந்தின் எலி நகரப் பேராலயத்தின் கோபுரம் இடிந்து வீழ்ந்தது.
1542ல் முறைபிறழ்புணர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரின் ஐந்தாம் மனைவி கேத்தரின் அவார்டு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
1575ல் பிரான்சின் மன்னராக மூன்றாம் என்றி முடிசூடினார்.
1633ல் திரிபுக் கொள்கை விசாரணையை எதிர்கொள்ள கலீலியோ கலிலி உரோம் நகர் வந்தார்.
1689ல் வில்லியம், மேரி ஆகியோர் இங்கிலாந்தின் கூட்டாட்சியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
1692ல் கிளென்கோ படுகொலைகள்: இசுக்காட்லாந்தில் கிளென் கோ என்ற இடத்தில் ஏறத்தாழ 80 டொனால்டு வம்சத்தினர் புதிய மன்னர் வில்லியமுக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்ததால் படுகொலை செய்யப்பட்டனர்.
1739ல் ஈரானிய ஆட்சியாளர் நாதிர் ஷாவின் படையினர் இந்தியாவின் முகலாயப் பேரரசர் முகம்மது ஷாவின் படைகளைத் தோற்கடித்தனர்.
1755ல் சாவகத்தின் மடாரம் பேரரசு “யோக்யகர்த்தா சுல்தானகம்” மற்றும் “சுரகர்த்தா சுல்தானகம்” என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
1880ல் தாமசு ஆல்வா எடிசன் எடிசன் விளைவை அவதானித்தார்.
1913ல் 13வது தலாய் லாமா திபெத்திய விடுதலையை அறிவித்தார்.
1914ல் பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சேர் பட்டம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்பட்டது.[1]
1931ல் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு தனது தலைநகரை கொல்கத்தாவில் இருந்து புது தில்லிக்கு நகர்த்தியது.
1934ல் சோவியத் நீராவிக்கப்பல் செலியூன்ஸ்கின் 111 பேருடன் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது.
1945ல் இரண்டாம் உலகப் போர்: புடாபெஸ்ட் நகர முற்றுகை முடிவுக்கு வந்தது. செருமனிய, அங்கேரிப் படைகள் செஞ்சேனையிடம் சரணடைந்தன.
1960ல் பிரான்சு வெற்றிகரமாக அணுகுண்டு சோதனையை நடத்தி, அணுவாயுதங்களைக் கொண்டுள்ள 4வது நாடானது.
1971ல் வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் உதவியுடன் தெற்கு வியட்நாம் லாவோசைத் தாக்கியது.
1975ல் நியூயார்க் உலக வணிக மையத்தில் தீ பரவியது.
1978ல் சிட்னியில் ஹில்ட்டன் ஓட்டலுக்கு வெளியே பாரவூர்தி ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் மூவர் கொல்லப்பட்டனர்.
1981ல் அமெரிக்காவில் கென்டக்கி மாநிலத்தில் லூயிவில் நகரில் bஇடம்பெற்ற கழிவுநீர்க் குழாய் வெடிப்பில் இரண்டு மைல் நீள வீதிகள் சேதமடைந்தன.
1983ல் இத்தாலி, துரின் நகரில் திரையரங்கு ஒன்று தீப்பற்றியதில் 64 பேர் உயிரிழந்தனர்.
1984ல் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராக கான்ஸ்டன்டீன் செர்னென்கோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1985ல் இலங்கையில் கொக்கிளாய் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டது.
1990ல் செருமானிய மீளிணைவு: இரண்டு செருமனிகளையும் ஒன்றினைக்க இரண்டு-கட்டத் திட்டத்துக்கு உடன்பாடு எட்டப்பட்டது.
1991ல் வளைகுடாப் போர்: பகுதாது நகரில் அகதிகள் முகாம் ஒன்றின் மீது கூட்டு நாடுகளின் குண்டுகள் வீழ்ந்ததில் 400 ஈராக்கியப் பொதுமக்கள் கொலலப்பட்டனர்.
1996ல் நேப்பாளத்தில் மாவோயிசப் பொதுவுடமைவாதிகளால் நேபாள மக்கள் புரட்சி ஆரம்பிக்கப்பட்டது.
2001ல் எல் சல்வடோரில் 6.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.
2004ல் அண்டவெளியின் மிகப்பெரிய வைர, வெண்குறு விண்மீன் பிபிஎம் 37093 கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
2008ல் ஆத்திரேலியப் பழங்குடியினரின் குழந்தைகளை 1869-1969 காலப்பகுதிகளில் அவர்களின் குடும்பங்களில் இருந்து கட்டாயமாகப் பிரித்தமைக்காக ஆத்திரேலிய அரசு சார்பாக பிரதமர் கெவின் ரட் பொது மன்னிப்புக் கேட்டார்.
2010ல் இந்தியாவில் புனே நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டு, 60 பேர் காயமடைந்தனர்.
2017ல் தென்கொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னின் சகோதரர் கிம் சோங்-நம் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 13-02 | February 13

1672ல் பிரான்சிய மருத்துவரும் வேதியியலாளருமான‌ எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய் பிறந்த நாள். (இறப்பு-1731)
1766ல் ஆங்கிலேய பொருளியலாளரான‌ தோமஸ் மால்தஸ் பிறந்த நாள். (இறப்பு-1834)
1805ல் செருமானிய கணிதவியலாளரான‌ டிரிஃக்லெ பிறந்த நாள். (இறப்பு-1859)
1835ல் இந்திய மதத் தலைவரான‌ மிர்சா குலாம் அகமது பிறந்த நாள். (இறப்பு-1908)
1868ல் இலங்கை அரசியல்வாதியான‌ டொன் பாரன் ஜெயதிலக்க பிறந்த நாள். (இறப்பு-1944)
1879ல் இந்தியக் கவிஞரும் செயற்பாட்டாளருமான‌ சரோஜினி நாயுடு பிறந்த நாள். (இறப்பு-1949)
1910ல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-அமெரிக்க இயற்பியலாளரான‌ வில்லியம் ஷாக்லி பிறந்த நாள். (இறப்பு-1989)
1915ல் பர்மாவின் 5வது பிரதமரான‌ ஆங் சான் பிறந்த நாள். (இறப்பு-1947)
1920ல் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரான‌ அ. மருதகாசி பிறந்த நாள். (இறப்பு-1989)
1933ல் கமரூனின் 2வது அரசுத்தலைவரான‌ பவுல் பியா பிறந்த நாள்.
1934ல் இலங்கை அரசியல்வாதியான வெ. யோகேசுவரன் பிறந்த நாள். (இறப்பு-1989)
1937ல் சாம்பிய அரசுத்தலைவர் ரூப்பையா பண்டா பிறந்த நாள்.
1951ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான‌ எம். ஒய். இக்பால் பிறந்த நாள். (இறப்பு-2021)
1979ல் நோர்வே நாட்டுக் கொலையாளியான‌ ஆண்டர்ஸ் பேரிங் பிரீவிக் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 13-02 | February 13

1542ல் இங்கிலாந்து அரசியான‌ கத்தரீன் ஹவார்ட் இறப்பு நாள். (பிறப்பு-1523)
1883ல் செருமானிய செவ்விசையமைப்பாளரான‌ ரிச்சார்ட் வாக்னர் இறப்பு நாள். (பிறப்பு-1813)
1950ல் தமிழகத் தமிழறிஞரான‌ செய்குத்தம்பி பாவலர் இறப்பு நாள். (பிறப்பு-1874)
1973ல் தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான‌ ஒய். வி. ராவ் இறப்பு நாள். (பிறப்பு-1903)
1987ல் தமிழக முதலமைச்சரும் அரசியல்வாதியுமான‌ எம். பக்தவத்சலம் இறப்பு நாள். (பிறப்பு-1897)
2009ல் தமிழக எழுத்தாளரான‌ கிருத்திகா இறப்பு நாள்.
2014ல் இலங்கை-இந்தியத் திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான‌ பாலு மகேந்திரா இறப்பு நாள். (பிறப்பு-1939)
2016ல் இந்தியக் கவிஞரான‌ ஓ. என். வி. குறுப்பு இறப்பு நாள். (பிறப்பு-1931)
2016ல் தமிழக எழுத்தாளரான‌ ஏ. நடராஜன் இறப்பு நாள். (பிறப்பு-1938)
2017ல் வட கொரிய அரசியல்வாதியான‌ கிம் சோங்‍நம் இறப்பு நாள். (பிறப்பு-1971)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleFebruary 12 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 12
Next articleFebruary 14 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 14