Today Special Historical Events In Tamil | 11-02 | February 11
February 11 Today Special | February 11 What Happened Today In History. February 11 Today Whose Birthday (born) | February-11th Important Famous Deaths In History On This Day 11/02 | Today Events In History February 11th | Today Important Incident In History | மாசி 11 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 11-02 | மாசி மாதம் 11ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 11.02 Varalatril Indru Nadanthathu Enna| February 11 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 11/02 | Famous People Born Today 11.02 | Famous People died Today 11-02.
Today Special in Tamil 11-02
Today Events in Tamil 11-02
Famous People Born Today 11-02
Famous People died Today 11-02
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 11-02 | February 11
உலக நோயாளர் நாளாக கொண்டாடப்படுகிறது. (கத்தோலிக்க திருச்சபை)
கண்டுபிடிப்பாளர் நாளாக கொண்டாடப்படுகிறது. (ஐக்கிய அமெரிக்கா)
தேசிய நிறுவன நாளாக கொண்டாடப்படுகிறது. (யப்பான்)
இளைஞர் நாளாக கொண்டாடப்படுகிறது. (கமரூன்)
அறிவியலில் பெண்கள், மற்றும் சிறுமிகளுக்கான பன்னாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 11-02 | February 11
கிமு 660ல் யப்பான் நாடு பேரரசர் ஜிம்முவால் நிறுவப்பட்ட பாரம்பரியமான நாள்.
55ல் உரோம் நகரில் உரோமைப் பேரரசின் முடிக்குரிய பிரித்தானிக்கசு இளவரசர் மர்மமான முறையில் இறந்தமை, நீரோ பேரரசராக வருவதற்கு வழிவகுத்தது.
244ல் சிப்பாய்களின் கிளர்ச்சியை அடுத்து மெசொப்பொத்தேமியாவில் பேரரசர் மூன்றாம் கோர்டியன் கொல்லப்பட்டார்.
1534ல் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் இங்கிலாந்து திருச்சபையின் உயர் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார்.
1626ல் எத்தியோப்பியத் திருச்சபையின் தலைமைப் பீடமாக உரோமைத் திரு ஆட்சிப்பீடத்தை பேரரசர் முதலாம் செசேனியசு அறிவித்து, கத்தோலிக்கத்தை எத்தியோப்பியாவின் அரச சமயமாக்கினார்.
1640ல் இலங்கையின் காலி நகரை ஒல்லாந்தர் கைப்பற்றினர்.
1659ல் கோபனாவன் மீது சுவீடன் படைகள் நடத்திய தாக்குதல் பெரும் இழப்புடன் முறியடிக்கப்பட்டது.
1790ல் அடிமை முறையை ஒழிக்குமாறு நண்பர்களின் சமய சமூகம் அமெரிக்கக் காங்கிரசில் முறையிட்டது.
1794ல் அமெரிக்க மேலவையின் முதலாவது அமர்வு பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது.
1802ல் சின்ன மருது மகன் துரைச்சாமி உட்பட 73 பேர் மலாயாவின் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவிற்கு (இன்றைய பினாங்கு) நாடு கடத்தப்பட்டனர்.
1823ல் மால்டாவில் வல்லெட்டா நகரில் கிறித்தவக் கோவில் ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட விழா நெரிசலில் 110 மாணவர்கள் உயிரிழந்தனர்.
1826ல் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி இலண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
1855ல் காசா ஐலு எத்தியோப்பியாவின் பேரரசராக மூன்றாம் தெவோதிரசு என்ற பெயரில் முடிசூடினார்.
1856ல் அவத் இராச்சியத்தை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கைப்பற்றியது. அவத் மன்னர் வாஜித் அலி சா கைது செய்யப்பட்டு பின்னர் கொல்கத்தாவிற்கு நாடுகடத்தப்பட்டார்.
1858ல் பெர்னதெத் சுபீரு லூர்து அன்னையை முதற்தடவையாகக் கண்ணுற்ற நிகழ்வு பிரான்சின் லூர்து நகரில் இடம்பெற்றது.
1861ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: அடிமைகள் விவகாரத்தில் எந்தவொரு மாநிலத்திலும் நேரடியாகத் தலையிடுவதில்லை என அமெரிக்கக் கீழவை ஏகமனதாக முடிவு செய்தது.
1873ல் எசுப்பானிய மன்னர் முதலாம் அமேதியோ முடி துறந்தார்.
1929ல் வத்திக்கான் நகர் உருவாக்குவதற்கான உடன்பாட்டை இத்தாலியும் திரு ஆட்சிப்பீடமும் எட்டின.
1933ல் மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
1938ல் பிபிசி தொலைக்காட்சி தனது முதலாவது அறிபுனை தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.
1943ல் இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் ஐரோப்பாவில் நேச நாடுகளின் இராணுவத்திற்கு தலைமை தாங்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1953ல் சோவியத் ஒன்றியம் இசுரேல் உடனான அனைத்து தூதரக உறவுகளையும் துண்டித்தது.
1959ல் தெற்கு அரபு அமீரகத்தின் கூட்டமைப்பு (பின்னர் தெற்கு யேமன்) ஐக்கிய இராச்சியத்தின் காப்பு நாடாக உருவாக்கப்பட்டது.
1960ல் சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
1964ல் கிரேக்கரும் துருக்கியரும் சைப்பிரசின் லிமாசோல் நகரில் போரிட்டனர்.
1971ல் பனிப்போர்: பன்னாட்டுக் கடற்பரப்பில் அணுக்கரு ஆயுதங்கள் பயன்படுத்துவதைத் தடை செய்யும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் கையெழுத்திட்டன.
1973ல் வியட்நாம் போர்: வியட்நாமில் இருந்து முதல் தொகுதி அமெரிக்கப் போர்க் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
1978ல் அரிசுட்டாட்டில், வில்லியம் சேக்சுபியர், சார்லஸ் டிக்கின்ஸ் ஆகியோரின் ஆக்கங்களுக்கான தடையை சீனா தளர்த்தியது.
1979ல் அயத்தொல்லா கொமெய்னியின் தலைமையில் ஈரானியப் புரட்சி வெற்றி பெற்றது.
1990ல் 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் நெல்சன் மண்டேலா கேப் டவுன் விக்டர் வெர்ஸ்டர் சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்றார்.
1996ல் குமாரபுரம் படுகொலைகள்: இலங்கை இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் திருகோணமலை, கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.
1997ல் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைப் பழுது பார்க்கும் டிஸ்கவரி விண்ணோடம் புறப்பட்டது.
1999ல் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்தை தாண்டிச் சென்றது. இவ்வாறான நிகழ்வு மீண்டும் 228 ஆண்டுகளின் பின்னரே நிகழும் என எதிர்வு கூறப்படுகிறது.
2008ல் கிழக்குத் திமோர் கிளர்ச்சிப் படைகளின் தாக்குதலில் அரசுத்தலைவர் ஒசே ரமோசு-ஓர்ட்டா படுகாயமடைந்தார். கிளர்ச்சித் தலைவர் அல்பிரடோ ரெய்னார்டோ கொல்லப்பட்டார்.
2011ல் அரேபிய வசந்தம்: ஒசுனி முபாரக்கைப் பதவி விலகக் கோரி எகிப்தியப் புரட்சி ஆரம்பமானது.
2013ல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மூப்பு காரணமாக 2013 பெப்ரவரி 28 இல் பணி துறப்பார் என வத்திக்கான் அறிவித்தது.
2014ல் அல்சீரியாவின் கிழக்கே சரக்கு விமானம் ஒன்று மலைப்பகுதி ஒன்றில் வீழ்ந்ததில் 77 பேர் உயிரிழந்தனர்.
2017ல் வட கொரியா யப்பான் கடல் மேலாக ஏவுகணையை ஏவிப் பரிசோதித்தது.
2018ல் சரதோவ் எயர்லைன்சு விமானம் 703 மாஸ்கோ அருகே வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 71 பேரும் உயிரிழந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 11-02 | February 11
1847ல் ஒளிக்குமிழ் மற்றும் கிராமபோன் ஆகியவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளரான தாமசு ஆல்வா எடிசன் பிறந்த நாள். (இறப்பு-1931)
1865ல் இந்திய அரசியல்வாதியும் வரலாற்றாளரும் மொழியியலாளரும் வானியலாளருமான எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1925)
1904ல் இலங்கை வழக்கறிஞரும் அரசியல்வாதியும் மேலவை உறுப்பினருமான எஸ். நடேசன் பிறந்த நாள். (இறப்பு-1986)
1909ல் அமெரிக்கத் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜோசப் எல் மேங்கியூவிஸ் பிறந்த நாள். (இறப்பு-1993)
1911ல் இந்திய விடுதலைப் போராட்ட வீரரான வ. சுப்பையா பிறந்த நாள். (இறப்பு-1993)
1917ல் அமெரிக்க எழுத்தாளரான சிட்னி ஷெல்டன் பிறந்த நாள். (இறப்பு-2007)
1921ல் இந்தியக் கத்தோலிக்க திருச்சபைக் கர்தினாலான அந்தோனி படியாரா பிறந்த நாள். (இறப்பு-2000)
1924ல் நடிகமணியும் ஈழத்தின் கூத்து நடிகருமான வி. வி. வைரமுத்து பிறந்த நாள். (இறப்பு-1989)
1947ல் சப்பானின் 60வது பிரதமரான யுகியோ அட்டொயாமா பிறந்த நாள்.
1964ல் அமெரிக்க அரசியல்வாதியும் அலெஸ்காவின் 9வது ஆளுநருமான சேரா பேலின் பிறந்த நாள்.
1969ல் அமெரிக்க நடிகையான ஜெனிபர் அனிஸ்டன் பிறந்த நாள்.
1982ல் ஆங்கிலேய நடிகையான நடாலி டோர்மர் பிறந்த நாள்.
1992ல் அமெரிக்க நடிகரும் தற்காப்புக் கலைஞருமான டெய்லர் லாட்னர் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 11-02 | February 11
824ல் திருத்தந்தையான முதலாம் பாஸ்கால் இறப்பு நாள்.
1358ல் தக்காணப் பீடபூமியின் 1வது பாமினி சுல்தானான அலாவுதின் பாமன் சா இறப்பு நாள்.
1650ல் பிரான்சியக் கணிதவியலாளரும் வானியலாளருமான ரெனே டேக்கார்ட் இறப்பு நாள். (பிறப்பு-1596)
1693ல் இயேசு திருச்சபை மதப்போதகரான ஜான் டி பிரிட்டோ இறப்பு நாள். (பிறப்பு-1647)
1755ல் இத்தாலிய தொல்லியலாளரான பிரான்செஸ்கோ சிப்பியோன் மாஃபி இறப்பு நாள். (பிறப்பு-1675)
1942ல் இந்தியத் தொழிலதிபரான ஜம்னாலால் பஜாஜ் இறப்பு நாள். (பிறப்பு-1884)
1946ல் இந்திய இடதுசாரி அரசியல்வாதியான மா. சிங்காரவேலர் இறப்பு நாள். (பிறப்பு-1860)
1948ல் உருசியத் திரைப்பட இயக்குநரான செர்கீ ஐசென்ஸ்டைன் இறப்பு நாள். (பிறப்பு-1898)
1956ல் சோவியத் மற்றும் உருசிய வானியலாளரான செர்கேய் பிளாசுக்கோ இறப்பு நாள். (பிறப்பு-1870)
1963ல் இலங்கையின் மலையக அரசியல்வாதியும் தொழிற்சங்கத்தலைவருமான கே. ராஜலிங்கம் இறப்பு நாள். (பிறப்பு-1909)
1963ல் அமெரிக்கக் கவிஞரும் எழுத்தாளருமான சில்வியா பிளாத் இறப்பு நாள். (பிறப்பு-1932)
1968ல் இந்திய ஊடகவியலாளரும் அரசியல்வாதியுமான தீனதயாள் உபாத்தியாயா இறப்பு நாள். (பிறப்பு-1916)
1974ல் தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரான கண்டசாலா இறப்பு நாள். (பிறப்பு-1922)
1977ல் இந்தியாவின் 5வது குடியரசுத் தலைவரான பக்ருதின் அலி அகமது இறப்பு நாள். (பிறப்பு-1905)
1978ல் நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளரான ஹரி மார்ட்டின்சன் இறப்பு நாள். (பிறப்பு-1904)
1979ல் கருநாடக வயலின் இசைக் கலைஞரான மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1912)
1980ல் இந்திய வரலாற்றாளரான ரமேஷ் சந்திர மஜும்தார் இறப்பு நாள். (பிறப்பு-1888)
1985ல் இலங்கை அரசியல்வாதியும் வழக்கறிஞருமான செ. சுந்தரலிங்கம் இறப்பு நாள். (பிறப்பு-1895)
1986ல் அமெரிக்க ஊடகவியலாளரும் நூலாசிரியருமான பிராங்க் எர்பெர்ட் இறப்பு நாள். (பிறப்பு-1920)
1994ல் ஆங்கிலேய உயிரியலாளரும் பூச்சியியலாளருமான வின்சென்ட் விகில்சுவொர்த் இறப்பு நாள். (பிறப்பு-1899)
2001ல் தமிழ்த் திரைப்பட நடிகரான ஜெய்கணேஷ் இறப்பு நாள். (பிறப்பு-1946)
2006ல் ஆங்கிலேய எழுத்தாளரான பெக்கி கிரிப்ஸ் அப்பையா இறப்பு நாள். (பிறப்பு-1921)
2008ல் அமெரிக்க வேதியியலாளரான பாட்சி ஓ’கானெல் செர்மன் இறப்பு நாள். (பிறப்பு-1930)
2010ல் இந்திய வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான ஷாஹித் அஸ்மி இறப்பு நாள். (பிறப்பு-1977)
2010ல் இந்திய அரசியல்வாதியும் தொழிற்சங்கவாதியுமான உ. ரா. வரதராசன் இறப்பு நாள். (பிறப்பு-1945)
2012ல் அமெரிக்கப் பாடகியும் நடிகையுமான விட்னி ஊசுட்டன் இறப்பு நாள். (பிறப்பு-1963)
2016ல் ஈழத்து எழுத்தாளரான பூ. ம. செல்லத்துரை இறப்பு நாள். (பிறப்பு-1936)
2018ல் பாக்கித்தானிய மனித உரிமைச் செயற்பாட்டாளரான அஸ்மா ஜெகாங்கீர் இறப்பு நாள். (பிறப்பு-1952)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan