February 09 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 09

0

Today Special Historical Events In Tamil | 09-02 | February 09

February 09 Today Special | February 09 What Happened Today In History. February 09 Today Whose Birthday (born) | February-9th Important Famous Deaths In History On This Day 09/02 | Today Events In History February 9th | Today Important Incident In History | மாசி 09 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 09-02 | மாசி மாதம் 09ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 09.02 Varalatril Indru Nadanthathu Enna| February 09 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 09/02 | Famous People Born Today 09.02 | Famous People died Today 09-02.

Today Special in Tamil 09-02
Today Events in Tamil 09-02
Famous People Born Today 09-02
Famous People died Today 09-02

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 09-02 | February 09

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 09-02 | February 09

474ல் சீனோ பைசாந்தியப் பேரரசின் இணைப்பேரரசராக நியமிக்கப்பட்டார்.
1555ல் இங்கிலாந்தின் குளொசுட்டர் ஆயர் ஜோன் ஊப்பர் மரத்துடன் கட்டி வைக்கப்பட்டு எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
1621ல் 15-ம் கிரகோரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1640ல் இலங்கையின் நீர்கொழும்பு நகரை ஒல்லாந்தர் கைப்பற்றினர்.
1775ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய நாடாளுமன்றம் மாசச்சூசெட்சு மாநிலத்தை கிளர்ச்சி இடமாக அறிவித்தது.
1822ல் எயிட்டி புதிதாக அமைக்கப்பட்ட டொமினிக்கன் குடியரசை முற்றுகையிட்டது.
1825ல் வாக்காளர் குழுக்களில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை பெறத் தவறியதை அடுத்து, அமெரிக்கக் காங்கிரசு ஜான் குவின்சி ஆடம்சை ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுத்தது.
1861ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் இடைக்காலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1895ல் வில்லியம் மோர்கன் கைப்பந்தாட்டத்தைக் கண்டுபிடித்தார்.
1897ல் பெனின் மீது பிரித்தானியர் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1900ல் இலங்கையிலும், இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
1900ல் டேவிசுக் கோப்பை டென்னிசு போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
1904ல் உருசிய-சப்பானியப் போர்: போர்ட் ஆர்த்தர் சமர் முடிவடைந்தது.
1913ல் எரிவெள்ளிக் கூட்டம் ஒன்று வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கப் பகுதிகளில் தென்பட்டது. இது பூமியின் சிறிய, குறுகிய வாழ்வுக் காலமுள்ள ஒரு இயற்கைத் துணைக்கோள் என வானியலாளர்களால் கூறப்பட்டது.
1920ல் ஆர்க்ட்டிக் தீவுக்கூட்டமான சுவல்பார்டு மீது நோர்வேயின் உரிமை அங்கீகரிக்கப்பட்டது.
1942ல் இரண்டாம் உலகப் போர்: ஆண்டு முழுவதுமான பகலொளி சேமிப்பு நேரம் போர்க்கால நடவடிக்கையாக ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1951ல் கொரியப் போர்: இரண்டு-நாள் கியோச்சாங் படுகொலைகள் ஆரம்பமாயின. தென்கொரிய இராணுவம் கியோச்சாங் என்ற இடத்தில் 719 பொதுமக்களைக் கொன்று குவித்தது.
1959ல் முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆர்-7 சோவியத் ஒன்றியத்தில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
1965ல் வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கத் தாக்குதல் படைப்பிரிவு முதற்தடவையாக தென் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டது.
1971ல் அமெரிக்காவின் லாசு ஏஞ்சலசில் 6.5–6.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 64 பேர் உயிரிழந்தனர்.
1971ல் அப்பல்லோ திட்டம்: சந்திரனில் தரையிறங்கிய மூன்றாவது விண்கலம் அப்பல்லோ 14 மூன்று அமெரிக்கர்களுடன் வெற்றிகரமாக பூமி திரும்பியது.
1975ல் சோயூஸ் 17 விண்கலம் பூமி திரும்பியது.
1986ல் ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அண்மையில் எட்டரைக் கோடி கிமீ தூரத்தில் வந்தது.
1991ல் லித்துவேனியாவில் விடுதலைக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தார்கள்.
1996ல் ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.
1996ல் கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
2008ல் இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
2016ல் செருமனி, பவேரியா மாநிலத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 85 பேர் காயமடைந்தனர்.
2018ல் தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 09-02 | February 09

1737ல் ஆங்கிலேய-அமெரிக்க மெய்யியலாளரும் எழுத்தாளருமான‌ தாமஸ் பெய்ன் பிறந்த நாள். (இறப்பு-1809)
1773ல் ஐக்கிய அமெரிக்காவின் 9வது அரசுத்தலைவரான‌ வில்லியம் ஹென்றி ஹாரிசன் பிறந்த நாள். (இறப்பு-1841)
1910ல் நோபல் பரிசு பெற்ற பிரான்சிய உயிரிவேதியியலாளரும் மருத்துவரும் ஜாக்குவஸ் மோனாட் பிறந்த நாள். (இறப்பு-1976)
1919ல் தமிழகக் கருநாடக இசைப் பாடகரான‌ மதுரை சோமு பிறந்த நாள். (இறப்பு-1989)
1929ல் மகாராட்டிராவின் 8வது முதலமைச்சரான‌ ஏ. ஆர். அந்துலே பிறந்த நாள். (இறப்பு-2014)
1934ல் இந்திய இயற்பியலாளரான‌ சி. பஞ்சரத்தினம் பிறந்த நாள். (இறப்பு-1969)
1940ல் நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளரான‌ ஜே. எம். கோட்ஸி பிறந்த நாள்.
1943ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளரான‌ ஜோசப் ஸ்டிக்லிட்சு பிறந்த நாள்.
1944ல் அமெரிக்க எழுத்தாளரான‌ ஆலிஸ் வாக்கர் பிறந்த நாள்.
1945ல் நோபல் பரிசு பெற்ற சப்பானிய உயிரியலாளரான‌ இயோசினோரி ஓசூமி பிறந்த நாள்.
1950ல் மலேசிய எழுத்தாளரான‌ ஆதி குமணன் பிறந்த நாள். (இறப்பு-2005)
1964ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் வழக்கறிஞருமான‌ ம. ஆ. சுமந்திரன் பிறந்த நாள்.
1970ல் ஆத்திரேலியத் துடுப்பாளரான‌ கிளென் மெக்ரா பிறந்த நாள்.
1981ல் ஆங்கிலேய நடிகரான‌ டாம் ஹிடில்ஸ்டன் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 09-02 | February 09

1881ல் உருசிய புதின எழுத்தாளரான‌ பியோதர் தஸ்தயெவ்ஸ்கி இறப்பு நாள். (பிறப்பு-1821)
1966ல் ஈழத்துக் கவிஞரான‌ மு. செல்லையா இறப்பு நாள். (பிறப்பு-1906)
1977ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் வழக்கறிஞருமான‌ ஜி. ஜி. பொன்னம்பலம் இறப்பு நாள். (பிறப்பு-1901)
1981ல் இந்திய அரசியல்வாதியான‌ எம். சி. சாக்ளா இறப்பு நாள். (பிறப்பு-1900)
1984ல் தமிழக பரதநாட்டியக் கலைஞரான‌ தஞ்சாவூர் பாலசரஸ்வதி இறப்பு நாள். (பிறப்பு-1918)
1986ல் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் பொதுவுடமைவாதியுமான‌ ச. ராஜாபாதர் இறப்பு நாள். (பிறப்பு-1916)
1987ல் அமெரிக்க வேதியியலாளரான‌ லூயிஸ் ஹாம்மெட் இறப்பு நாள். (பிறப்பு-1894)
1989ல் சப்பானிய கேலிப்பட ஓவியரான‌ ஒசாமு தெசூகா இறப்பு நாள். (பிறப்பு-1928)
1996ல் தென்னிந்திய வீணைக் கலைஞரான‌ சிட்டி பாபு இறப்பு நாள். (பிறப்பு-1936)
2001ல் எழுத்தாளரான‌ சாவி இறப்பு நாள். (பிறப்பு-1916)
2008ல் இந்திய சமூக சேவகரான‌ பாபா ஆம்தே இறப்பு நாள். (பிறப்பு-1914)
2010ல் ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞரான‌ செல்லையா மெற்றாஸ்மயில் இறப்பு நாள்.
2011ல் தமிழக எழுத்தாளரான‌ வ. விஜயபாஸ்கரன் இறப்பு நாள். (பிறப்பு-1926)
2011ல் தமிழக எழுத்தாளரான‌ எஸ். வி. ராமகிருஷ்ணன் இறப்பு நாள். (பிறப்பு-1936)
2012ல் புதின எழுத்தாளரான‌ ஹெப்சிபா ஜேசுதாசன் இறப்பு நாள். (பிறப்பு-1925)
2012ல் இந்திய இசைக்கலைஞரான‌ எஸ். தட்சிணாமூர்த்தி இறப்பு நாள். (பிறப்பு-1921)
2013ல் இந்தியத் தீவிரவாதியான‌ அஃப்சல் குரு இறப்பு நாள்.
2013ல் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான‌ மலர் மன்னன் இறப்பு நாள்.
2016ல் நேப்பாளத்தின் 37வது பிரதமரான‌ சுசில் கொய்ராலா இறப்பு நாள். (பிறப்பு-1939)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleFebruary 08 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 08
Next articleFebruary 10 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 10