February 10 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 10

0

Today Special Historical Events In Tamil | 10-02 | February 10

February 10 Today Special | February 10 What Happened Today In History. February 10 Today Whose Birthday (born) | February-10th Important Famous Deaths In History On This Day 10/02 | Today Events In History February 10th | Today Important Incident In History | மாசி 10 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 10-02 | மாசி மாதம் 10ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 10.02 Varalatril Indru Nadanthathu Enna| February 10 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 10/02 | Famous People Born Today 10.02 | Famous People died Today 10-02.

Today Special in Tamil 10-02
Today Events in Tamil 10-02
Famous People Born Today 10-02
Famous People died Today 10-02

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 10-02 | February 10

குருதிய எழுத்தாளர் ஒன்றிய நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (ஈராக்கிய குர்திஸ்தான்)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 10-02 | February 10

1258ல் மங்கோலியப் படையெடுப்பு: பகுதாது மன்கோலியர்களிடம் வீழ்ந்தது. அப்பாசியக் கலீபகம் அழிக்கப்பட்டது. இசுலாமியப் பொற்காலம் முடிவுக்கு வந்தது.
1355ல் இங்கிலாந்து, ஆக்சுபோர்டில் ஆக்சுபோர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் இரண்டு நாட்களில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
1567ல் ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் இரண்டாவது கணவர் டார்ன்லி பிரபு எடின்பரோவில் குண்டுவெடிப்பில் இறந்தார்.
1763ல் பாரிஸ் உடன்படிக்கை (1763): பிரான்சு கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு கையளித்தது.
1798ல் லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர் உரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக அறிவித்தார்.
1815ல் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.
1840ல் ஐக்கிய இராச்சியத்தின், விக்டோரியா மகாராணி இளவரசர் ஆல்பேர்ட்டைத் திருமணம் புரிந்தார்.
1846ல் முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர்: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பஞ்சாபின் சீக்கியருக்கும் இடையில் சோப்ரானில் இடம்பெற்ற போரில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர்.
1897ல் மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.
1936ல் இரண்டாவது இத்தாலிய-அபிசீனியப் போர்: இத்தாலியப் படையினர் எத்தியோப்பியத் தற்காப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்தனர்.
1939ல் எசுப்பானிய உள்நாட்டுப் போர்: தேசியவாதிகள் காத்தலோனியாவைக் கைப்பற்றும் நடவடிக்கையை நிறைவேற்றி பிரான்சுடனான எல்லையை மூடினர்.
1940ல் சோவியத் ஒன்றியம் தாம் கைப்பற்றிய கிழக்குப் போலந்தில் இருந்து அப்பிரதேச மக்களை சைபீரியாவுக்கு நாடு கடத்தினர்.
1942ல் இரண்டாம் உலகப் போர்: சப்பானிய இராணுவத்தினர் போர்னியோவின் தலைநகர் பஞ்சார்மாசினைக் கைப்பற்றினர்.
1943ல் இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் முற்றுகையை முற்றாக முறியடிக்கும் நோக்கில், சோவியத் செஞ்சேனை, செருமனியப் படைகளுடனும், எசுப்பானியத் தன்னார்வப் படைகளுடனும் கிராசுனி போர் என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன.
1947ல் பாரிசு அமைதி உடன்பாடுகள் இத்தாலி, உருமேனியா, அங்கேரி, பல்காரியா, பின்லாந்து, மற்றும் இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்டன.
1948ல் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் குளொஸ்டர் கோமகன் இளவரசர் என்றியினால் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் திறந்து வைக்கப்பட்டது.
1962ல் பனிப்போர்: அமெரிக்க யூ2 உளவு விமான விமானி காரி பவர்சு, சோவியத் உளவாளி ருடோல்ஃப் ஏபெல் ஆகிய கைதிகளின் பரிமாற்ரம் இடம்பெற்றது.
1964ல் ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கரையில் “மெல்பேர்ன்” என்ற விமானந்தாங்கிக் கப்பலும் “வொயேஜர்” என்ற கடற்படைக் கப்பலும் மோதிக் கொண்டதில் 82 பேர் உயிரிழந்தனர்.
1969ல் தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார்.
1972ல் ரசு அல்-கைமா ஏழாவது அமீரகமாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்தது.
1984ல் கென்யப் படையினர் வடகிழக்குக் கென்யாவில் 5000 இற்கும் அதிகமான சோமாலி-கென்ய இனத்தவரைப் படுகொலை செய்தனர்.
1991ல் வன்னி மீதான இலங்கை இராணுவத்தினரின் வன்னி விக்கிரம படையெடுப்பு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதுடன் உலங்குவானூர்தி ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1996ல் ஐபிஎம் சதுரங்கக் கணினி “டீப் புளூ” உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.
2007ல் இலினொய் மேலவை உறுப்பினர் பராக் ஒபாமா தான் 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவர் பின்னர் இத்தேர்தைல் வெற்றி பெற்றார்.
2009ல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன.
2013ல் இந்தியாவின் அலகாபாத் நகரில் கும்பமேளா திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 10-02 | February 10

1775ல் ஆங்கிலேய எழுத்தாளரும் கவிஞரும் சார்லஸ் லாம் பிறந்த நாள். (இறப்பு-1834)
1785ல் பிரான்சிய இயற்பியலாளரும் பொறியியலாளருமான‌ கிளாட்-லூயி நேவியர் பிறந்த நாள். (இறப்பு-1836)
1805ல் கேரள கத்தோலிக்கப் புனிதரான‌ குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா பிறந்த நாள். (இறப்பு-1871)
1825ல் ஆங்கிலேய அரசியல்வாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான‌ சாமுவேல் பிளிம்சால் பிறந்த நாள். (இறப்பு-1898)
1842ல் அயர்லாந்து வானியலாளரான‌ அகனேசு மேரி கிளார்க் பிறந்த நாள். (இறப்பு-1907)
1848ல் பெல்சிய ஓவியரான‌ அன்னா பொச் பிறந்த நாள். (இறப்பு-1936)
1890ல் நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளரான‌ போரிஸ் பாஸ்ரர்நாக் பிறந்த நாள். (இறப்பு-1960)
1893ல் அமெரிக்க டென்னிசு ஆட்டவீரரும் பயிற்சியாளருமான‌ பில் டில்டென் பிறந்த நாள். (இறப்பு-1953)
1897ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவரான‌ ஜான் பிராங்கிளின் எண்டர்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1985)
1898ல் செருமானிய இயக்குநரும் கவிஞருமான‌ பெர்தோல்ட் பிரெக்ட் பிறந்த நாள். (இறப்பு-1956)
1902ல் நோபல் பரிசு பெற்ற சீன-அமெரிக்க இயற்பியலாளரான‌ வால்டர் பிராட்டன் பிறந்த நாள். (இறப்பு-1987)
1916ல் பஞ்சாபின் முதலமைச்சரான‌ தர்பாரா சிங் பிறந்த நாள். (இறப்பு-1990)
1919ல் தமிழக ஓவியரும் திரைப்பட நடிகரும் கருநாடக இசைக்கலைஞருமான‌ சு. ராஜம் பிறந்த நாள். (இறப்பு-2010)
1929ல் தமிழக அரசியல்வாதியான‌ நாஞ்சில் கி. மனோகரன் பிறந்த நாள். (இறப்பு-2000)
1937ல் தமிழக அரசியல்வாதியான‌ தா. கிருட்டிணன் பிறந்த நாள். (இறப்பு-2003)
1952ல் சிங்கப்பூரின் 3வது பிரதமர் லீ சியன் லூங் பிறந்த நாள்.
1957ல் அமெரிக்க வானியற்பியலாளரான‌ காத்தரைன் பிரீசு பிறந்த நாள்.
1982ல் அமெரிக்க விரைவு ஓட்ட வீரரான‌ ஜஸ்டின் காட்லின் பிறந்த நாள்.
1984ல் இந்தியத் திரைப்பட இயக்குநரும் நடிகரும் திரைப்படத் தொகுப்பாளரும் திரைக்கதை ஆசிரியருமான அல்போன்சு புத்திரன் பிறந்த நாள்.
1985ல் தமிழகக் கருநாடக இசைப் பாடகியான‌ மகதி பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 10-02 | February 10

1307ல் மங்கோலியப் பேரரசரான‌ தெமுர் கான் இறப்பு நாள். (பிறப்பு-1265)
1837ல் உருசியக் கவிஞரான‌ அலெக்சாந்தர் பூஷ்கின் இறப்பு நாள். (பிறப்பு-1799)
1865ல் எசுத்தோனிய-இத்தாலிய இயற்பியலாளரான‌ ஹைன்ரிக் லென்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1804)
1868ல் இசுக்கொட்லாந்து இயற்பியலாளரும் கணிதவியலாளரும் வானியலாளருமான‌ டேவிட் புரூஸ்டர் இறப்பு நாள். (பிறப்பு-1781)
1878ல் பிரான்சிய உயிரியலாளரான‌ கிளவுட் பெர்னாட் இறப்பு நாள். (பிறப்பு-1813)
1891ல் சுருசிய-சுவீடன் கணிதவியலாளரும் இயற்பியலாளருமான‌ சோஃபியா கோவலெவ்சுகாயா இறப்பு நாள். (பிறப்பு-1850)
1912ல் ஆங்கிலேய மருத்துவரான‌ ஜோசப் லிஸ்டர் இறப்பு நாள். (பிறப்பு-1827)
1923ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளரான‌ வில்லெம் ரோண்ட்கன் இறப்பு நாள். (பிறப்பு-1845)
1944ல் கிரேக்க-பிரான்சிய வானியலாளரான‌ சதுரங்க வீரரான‌ யூகி மைக்கேல் அந்தொனியாடி இறப்பு நாள். (பிறப்பு-1870)
1953ல் இந்திய அரசியல்வாதியும் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் பிரதம அமைச்சருமான‌ என். கோபாலசாமி அய்யங்கார் இறப்பு நாள். (பிறப்பு-1882)
1993ல் சுவீடிய இயற்பியலாளரும் வானியலாளருமான‌ பெங்கித் எட்லேன் இறப்பு நாள். (பிறப்பு-1906)
2001ல் இலங்கை-இந்தியத் திரைப்பட நடிகையான‌ கே. தவமணி தேவி இறப்பு நாள்.
2005ல் அமெரிக்க நடிகரும் எழுத்தாளருமான‌ ஆர்தர் மில்லர் இறப்பு நாள். (பிறப்பு-1915)
2010ல் மலையாளத் திரைப்பாடலாசிரியரும் திரைக்கதையாசிரியருமான‌ கிரீஷ் புத்தன்சேரி இறப்பு நாள். (பிறப்பு-1957)
2020ல் இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் நாடகக் கலைஞரும் ஆய்வாளருமான‌ சிசு நாகேந்திரன் இறப்பு நாள். (பிறப்பு-1921)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleFebruary 09 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 09
Next articleFebruary 11 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 11