February 08 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 08

0

Today Special Historical Events In Tamil | 08-02 | February 08

February 08 Today Special | February 08 What Happened Today In History. February 08 Today Whose Birthday (born) | February-8th Important Famous Deaths In History On This Day 08/02 | Today Events In History February 8th | Today Important Incident In History | மாசி 08 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 08-02 | மாசி மாதம் 08ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 08.02 Varalatril Indru Nadanthathu Enna| February 08 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 08/02 | Famous People Born Today 08.02 | Famous People died Today 08-02.

Today Special in Tamil 08-02
Today Events in Tamil 08-02
Famous People Born Today 08-02
Famous People died Today 08-02

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 08-02 | February 08

பரிநிர்வாண நாளாக கொண்டாடப்படுகிறது. (மகாயான பௌத்தம்)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 08-02 | February 08

421ல் மேற்கு உரோமைப் பேரரசின் இணைப் பேரரசராக மூன்றாம் கொன்ஸ்டான்டியசு பதவியேற்றார்.
1238ல் மங்கோலியர்கள் உருசிய நகரான விளாதிமிரை தீயிட்டுக் கொளுத்தினர்.
1347ல் பைசாந்திய உள்நாட்டுப் போர் 1341–47 முடிவுக்கு வந்தது.
1587ல் இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியைக் கொலை செய்ய முயற்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இசுக்காட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டார்.
1601ல் முதலாம் எலிசபெத் மகாராணிக்கு எதிராக எசெக்சின் இரண்டாம் பிரபு இராபர்ட் டெவெரோ கிளர்ச்சியில் ஈடுபட்டார். இது விரைந்து அடக்கப்பட்டது.
1785ல் வாரன் ஏசுடிங்சு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பிரித்தானிய இந்தியத் தலைமை ஆளுநர் பதவியைத் துறந்தார்.
1817ல் லாசு எராசு தனது படையுடன் அந்தீசு மலையைக் கடந்து சான் மார்ட்டினுடன் இணைந்து சிலியை எசுப்பானியாவிடம் இருந்து விடுவித்தார்.
1879ல் சிட்னி துடுப்பாட்ட ஆட்டம் ஒன்றில் இடம்பெற்ற கலவரம் ஒன்றில் ஜார்ஜ் ஹரீஸ் தலைமையிலான இங்கிலாந்து துடுப்பாட்ட அணி கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டது.
1885ல் முதலாவது அரச-ஆதரவுடனான சப்பானியக் குடியேற்றம் அவாயில் ஆரம்பமானது.
1904ல் அச்சே போர்: டச்சு குடியேற்ற இராணுவம் வடக்கு சுமாத்திராவின் பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் படை நடவடிக்கையை ஆரம்பித்தது. இது அங்கு இனப்படுகொலையில் முடிந்தது.
1904ல் சப்பானியரின் நீர்மூழ்கிக் குண்டு ஒன்று சீனாவின் லூசென்கோ நகரைத் தாக்கியது. உருசிய-சப்பானியப் போர் ஆரம்பமானது.
1924ல் ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1942ல் இரண்டாம் உலகப் போர்: சப்பான் சிங்கப்பூரை ஊடுருவியது.
1942ல் இரண்டாம் உலகப் போர்: டச்சு இராணுவத்தினர் இந்தோனேசியாவின் பஞ்சார்மாசின் நகரை சப்பானியர் கைப்பற்றுவதைத் தடுக்க அந்நகரை தீயிட்டுக் கொளுத்தினர்.
1942ல் செருமனிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் நேதாஜி செருமனியில் இருந்து தெற்காசியாவுக்குப் புறப்பட்டார்.
1945ல் இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவும் கனடாவும் ரைன் ஆற்றின் மேற்குக் கரையைக் கைப்பற்றும் நோக்குடன் வெரிடபிள் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
1945ல் இரண்டாம் உலகப் போர்: மிக்கைல் தெவித்தாயெவ் தலைமையில் பத்து சோவியத் கைதிகள் செருமனிய நாட்சி வதைமுகாம் ஒன்றில் இருந்து விமானம் ஒன்றைக் கடத்தித் தப்பினர்.
1955ல் பாக்கித்தானின் சிந்து மாகாண அரசு நில மானிய முறைமையை ஒழித்தது.
1956ல் இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் களனி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
1960ல் இரண்டாம் எலிசபெத் மகாராணி விடுத்த அறிவிப்பு ஒன்றில், அவரும் அவரது குடும்பமும் வின்சர் மாளிகை என அழைக்கப்படுவர் எனவும், அவரது வழித்தோன்றல்கள் மவுன்ட்பேட்டன்-வின்சர் என அழைக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.
1963ல் அமெரிக்க குடிமக்கள் கியூபாவுக்கு செல்வது, மற்றும் கியூபாவுடன் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகியன சட்டவிரோதம் என ஜான் எஃப். கென்னடியின் நிருவாகம் அறிவித்தது.
1963ல் ஈராக்கில் அப்து அல்-கரீம் காசிம் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது.
1965ல் அமெரிக்காவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்சு விமானம் அத்திலாந்திக் பெருங்கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 84 பேரும் உயிரிழந்தனர்.
1971ல் நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
1974ல் 84 நாட்கள் விண்ணில் பயணம் செய்த பின்னர் முதலாவது அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஸ்கைலாப் 4 வீரர்கள் பூமி திரும்பினர்.
1974ல் மேல் வோல்ட்டாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1981ல் கிரேக்கத்தில் 21 கால்பந்து விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 21 பார்வையாளர்கள் உயிரிழந்தனர், 55 பேர் காயமடைந்தனர்.
1983ல் ஆத்திரேலியாவின் மெல்பேர்ண் நகரைப் பெரும் புழுதிப் புயல் தாக்கியதில், 320 மீட்டர் புழுதி மேகம் நகரில் தோன்றியது.
1986ல் கனடாவின் இண்டன் நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 23 பேர் உயிரிழந்தனர்.
1989ல் போர்த்துக்கலில் போயிங் 707 விமானம் ஒன்று சாண்டா மரியா மலையில் மோதியதில் 144 பேர் இறந்தனர்.
2005ல் இசுரேலும் பாலஸ்தீனமும் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டன.
2005ல் ஈழப் போர்: முதல் நாள் இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த இலங்கைத் தமிழ் அரசியல்வாதி அரியநாயகம் சந்திரநேரு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
2010ல் ஆப்கானித்தானின் இந்து குஷ் மலைகளில் இடம்பெற்ற தொடர் பனிச்சரிவுகளில் சிக்கி 172 பேர் உயிரிழந்தனர்.
2014ல் மதீனாவில் உணவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 15 எகிப்தியர்கள் உயிரிழந்தனர், 130 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 08-02 | February 08

1641ல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய கப்பல் மீகாமனான‌ ரொபர்ட் நொக்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1720)
1700ல் டச்சு-சுவிட்சர்லாந்து கணிதவியலாளரும் இயற்பியலாளருமான‌ டேனியல் பெர்னூலி பிறந்த நாள். (இறப்பு-1782)
1819ல் ஆங்கிலேய எழுத்தாளரும் ஓவியருமான‌ ஜான் ரஸ்கின் பிறந்த நாள். (இறப்பு-1900)
1825ல் ஆங்கிலேய புவியியலாளரும் உயிரியலாளரும் நாடுகாண் பயணியுமான‌ என்றி வால்டர் பேட்ஃசு பிறந்த நாள். (இறப்பு-1892)
1828ல் பிரான்சியக் கவிஞரும் எழுத்தாளருமான‌ ழூல் வேர்ண் பிறந்த நாள். (இறப்பு-1905)
1834ல் உருசிய வேதியியலாளரான‌ திமீத்ரி மெண்டெலீவ் பிறந்த நாள். (இறப்பு-1907)
1850ல் அமெரிக்க எழுத்தாளரான‌ கேட் சோப்பின் பிறந்த நாள். (இறப்பு-1904)
1897ல் இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவரான‌ சாகீர் உசேன் பிறந்த நாள். (இறப்பு-1969)
1903ல் மலேசியாவின் முதலாவது பிரதமரான‌ துங்கு அப்துல் ரகுமான் பிறந்த நாள். (இறப்பு-1990)
1921ல் தமிழக நீதியரசரும் தமிழறிஞரும் எழுத்தாளருமான‌ மு. மு. இஸ்மாயில் பிறந்த நாள். (இறப்பு-2005)
1928ல் தமிழ்த் திரைப்பட நடிகரான‌ லூசு மோகன் பிறந்த நாள். (இறப்பு-2012)
1928ல் சோவியத் உருசிய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகரான‌ விச்சிசுலாவ் தீகனொவ் பிறந்த நாள். (இறப்பு-2009)
1937ல் இலங்கை அரசியல்வாதியான‌ ஏ. எச். எம். அஸ்வர் பிறந்த நாள். (இறப்பு-2017)
1941ல் இந்தியப் பாடகரான‌ ஜக்ஜீத் சிங் பிறந்த நாள். (இறப்பு-2011)
1955ல் அமெரிக்க எழுத்தாளரான‌ ஜான் கிரிஷாம் பிறந்த நாள்.
1960ல் பிலிப்பீன்சின் 15வது அரசுத்தலைவரான‌ பெனிக்னோ அக்கீனோ III பிறந்த நாள்.
1963ல் இந்தியத் துடுப்பாளரும் அரசியல்வாதியான‌ முகமது அசாருதீன் பிறந்த நாள்.
1964ல் இந்தியத் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் நடிகருமான‌ சந்தோஷ் சிவன் பிறந்த நாள்.
1968ல் அமெரிக்க நடிகரான‌ கேரி கோல்மன் பிறந்த நாள். (இறப்பு-2010)

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 08-02 | February 08

1265ல் மங்கோலிய ஆட்சியாளரான‌ உலேகு கான் இறப்பு நாள். (பிறப்பு-1218)
1587ல் ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி இறப்பு நாள். (பிறப்பு-1542)
1725ல் உருசியப் பேரரசரான‌ முதலாம் பேதுரு இறப்பு நாள். (பிறப்பு-1672)
1957ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளரான‌ வால்தெர் பொதே இறப்பு நாள். (பிறப்பு-1891)
1957ல் அங்கேரிய-அமெரிக்க கணிதவியலாளரும் இயற்பியலாளருமான‌ ஜான் வான் நியுமேன் இறப்பு நாள். (பிறப்பு-1903)
1971ல் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதியும் எழுத்தாளருமான‌ கே. எம். முன்ஷி இறப்பு நாள். (பிறப்பு-1887)
1974ல் சுவீடன் வானியலாளரான‌ பிரிட்சு சுவிக்கி இறப்பு நாள். (பிறப்பு-1898)
1979ல் நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-ஆங்கிலேய இயற்பியலாளரான‌ டென்னிஸ் கபார் இறப்பு நாள். (பிறப்பு-1900)
1993ல் ஈழத்தமிழ்த் தொழிற்சங்கவாதியும் இடதுசாரி மாவோயிச அரசியல்வாதியுமான‌ நா. சண்முகதாசன் இறப்பு நாள். (பிறப்பு-1920)
1998ல் நோபல் பரிசு பெற்ற ஐசுலாந்து எழுத்தாளரான‌ ஹால்டார் லேக்ஸ்நஸ்ஸின் இறப்பு நாள். (பிறப்பு-1902)
2005ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் மனித உரிமை ஆர்வலருமான‌ அரியநாயகம் சந்திரநேரு இறப்பு நாள்.
2007ல் அமெரிக்க நடிகையான‌ ஆன்னா நிக்கோல் இசுமித் இறப்பு நாள். (பிறப்பு-1967)
2007ல் கனடிய-அமெரிக்க உளவியல் மருத்துவரான‌ இயான் ஸ்டீவன்சன் இறப்பு நாள். (பிறப்பு-1918)
2014ல் இலங்கை முற்போக்கு எழுத்தாளரும் பத்திரிகையாளரும் பதிப்பாளருமான‌ பிரேம்ஜி ஞானசுந்தரம் இறப்பு நாள். (பிறப்பு-1930)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleFebruary 07 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 07
Next articleFebruary 09 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 09