December 15 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 15

0

Today Special Historical Events In Tamil | 15-12 | December 15

December 15 Today Special | December 15 What Happened Today In History. December 15 Today Whose Birthday (born) | December-15th Important Famous Deaths In History On This Day 15/12 | Today Events In History December 15th | Today Important Incident In History | மார்கழி 15 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 15-12 | மார்கழி மாதம் 15ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 15.12 Varalatril Indru Nadanthathu Enna| December 15 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 15/12 | Famous People Born Today 15.12 | Famous People died Today 15-12.

Today Special in Tamil 15-12
Today Events in Tamil 15-12
Famous People Born Today 15-12
Famous People died Today 15-12

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 15-12 | December 15

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 15-12 | December 15

687ல் முதலாம் செர்கியசு திருத்தந்தையாகத் தெரிவு செய்யப்பட்டார்.
1025ல் எட்டாம் கான்சுடண்டைன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.
1256ல் மங்கோலியப் படைகள் உலாகு கான் தலைமையில் அலாமுட் (இன்றைய ஈரானில்) கோட்டையைக் கைப்பற்றி அழித்தன.
1778ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுக் கடற்படைகள் செயிண்ட் லூசியா சமரில் மோதின.
1799ல் முற்றிலும் உள்ளூர் மக்களைக்கொண்ட இலங்கையின் முதலாவது ஆங்கில மதப்பள்ளி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.
1864ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளை டென்னசியில் முற்றாகத் தோற்கடித்தனர்.
1891ல் ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
1905ல் அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது.
1914ல் முதலாம் உலகப் போர்: சேர்பிய இராணுவம் பெல்கிரேடை மீண்டும் கைப்பற்றியது.
1914ல் சப்பானில் மிட்சுபிசி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 687 பேர் கொல்லப்பட்டனர்.
1917ல் முதலாம் உலகப் போர்: உருசியாவுக்கும் மைய நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்த உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.
1941ல் பெரும் இன அழிப்பு: உக்ரேனின் கார்கீவ் நகரில் 15,000 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.
1960ல் மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
1961ல் நாட்சி செருமனியின் இராணுவத்தலைவர் அடோல்வ் ஏச்மென் யூத மக்களுக்கு எதிராகப் புரிந்த குற்றங்களுக்காக மரண தண்டனை பெற்றார்.
1967ல் ஒகையோவில் ஒகையோ ஆற்றிற்கு மேலே செல்லும் வெள்ளிப் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 46 பேர் உயிரிழந்தனர்.
1970ல் சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் இறங்கியது. இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.
1970ல் தென் கொரியப் பயணிகள் கப்பல் கொரிய நீரிணையில் மூழ்கியதில் 308 பேர் உயிரிழந்தனர்.
1978ல் மக்கள் சீனக் குடியரசை அங்கீகரிப்பதாகவும் தாய்வானுடனான உறவுகளைத் துண்டிப்பதாகவும் அமெரிக்க அரசுத்தலைவர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.
1981ல் லெபனான், பெய்ரூத் நகரில் ஈராக்க்கியத் தூதரகம் வாகனத் தற்கொலைக் குண்டுக்கு இலக்காகியதில் ஈராக்கியத் தூதர் உட்பட 61 பேர் கொல்லப்பட்டனர். இதுவே நவீன முறையில் அமைந்த முதலாவது தற்கொலைத் தாக்குதல் எனக் கருதப்படுகிறது.
1994ல் இணைய உலாவி நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 வெளியிடப்பட்டது.
1995ல் ஈழப் போர்: ஈழத்தமிழருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் “அப்துல் ரவூஃப்” என்பவர் தீக்குளித்து இறந்தார்.
1997ல் தஜிகிஸ்தான் விமானம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா விமானநிலையத்திற்கு அருகில் வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் உயிரிழந்தனர்.
1997ல் தென் கிழக்கு ஆசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் உடன்படிக்கை பாங்கொக்கில் கையெழுத்திடப்பட்டது.
2001ல் பீசாவின் சாயும் கோபுரம் 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.
2006ல் இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுக் காணாமல் போனார்.
2010ல் 90 ஏதிலிகளை ஏற்றிச் சென்ற படகு கிறிஸ்துமசு தீவுக்கருகில் பாறைகளுடன் மோதியதில் 48 பேர் உயிரிழந்தனர்.
2013ல் தெற்கு சூடான் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
2014ல் சிட்னியின் மையப் பகுதியில் உணவகம் ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவன் 18 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தான். 16 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது, இரண்டு பணயக் கைதிகளும், துப்பாக்கிதாரியும் கொல்லப்பட்டனர்.
2017ல் சாவகத் தீவில், தசிக்மலாயா நகரை 6.5 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர், 36 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 15-12 | December 15

37ல் உரோமைப் பேரரசரான‌ நீரோ பிறந்த நாள். (இறப்பு-68)
1832ல் ஈபெல் கோபுரத்தை வடிவமைத்த பிரான்சியக் கட்டிடக் கலைஞரான‌ அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் பிறந்த நாள். (இறப்பு-1923)
1834ல் அமெரிக்கச் சூரியக் கதிர்நிரலியல் வானியலாளரான‌ சார்லசு அகத்தசு யங் பிறந்த நாள். (இறப்பு-1908)
1852ல் நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளரான‌ என்றி பெக்கெரல் பிறந்த நாள். (இறப்பு-1908)
1860ல் நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு மருத்துவரான‌ நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென் பிறந்த நாள். (இறப்பு-1904)
1865ல் பிரித்தானிய கீழ்த்திசை மொழிப்புலமையாளரான‌ ஜான் வுட்ரோஃப் பிறந்த நாள். (இறப்பு-1936)
1869ல் தமிழக நாதசுவரக் கலைஞரான‌ திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1938)
1889ல் அடையாறு பிரம்மஞான சபையின் தலைவரான‌ நீலகண்ட ஸ்ரீராம் பிறந்த நாள். (இறப்பு-1973)
1894ல் கனடிய வானியலாளரான‌ வைபர்த் தவுகிளாசு பிறந்த நாள். (இறப்பு-1988)
1907ல் ஐநா தலைமையகத்தை வடிவமைத்தவ பிரேசில் கட்டிடக் கலைஞரான‌ ஒசுக்கார் நிமேயெர் பிறந்த நாள். (இறப்பு-2012)
1908ல் இந்திய மதகுருவான‌ இரங்கநாதானந்தர் பிறந்த நாள். (இறப்பு-2005)
1913ல் தமிழக எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான‌ கா. ஸ்ரீ. ஸ்ரீ பிறந்த நாள்.
1932ல் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரான‌ டி. என். சேஷன் பிறந்த நாள். (இறப்பு-2019)
1933ல் ஆந்திர இயக்குநரான‌ பாப்பு பிறந்த நாள். (இறப்பு-2014)
1936ல் தமிழகத் தமிழறிஞரான‌ சோ. ந. கந்தசாமி பிறந்த நாள்.
1942ல் தமிழக எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான‌ மகிபை பாவிசைக்கோ பிறந்த நாள். (இறப்பு-2016)
1944ல் பிரேசில் தொழிற்சங்கத் தலைவரான‌ சிகோ மெண்டிஸ் பிறந்த நாள். (இறப்பு-1988)
1945ல் தமிழ்த் திரைப்பட நடிகரான‌ வினு சக்ரவர்த்தி பிறந்த நாள். (இறப்பு-2017)
1953ல் இலங்கை அரசியல்வாதியும் ஊடகவியலாளருமான‌ ஈ. சரவணபவன் பிறந்த நாள்.
1978ல் டச்சு இசைக்கலைஞரான‌ மாற்கு யான்சேன் பிறந்த நாள்.
1982ல் ஆங்கிலேய நடிகரான‌ சார்லி சாக்ஸ் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 15-12 | December 15

1675ல் டச்சு ஓவியரான‌ யொகான்னசு வெர்மிர் இறப்பு நாள். (பிறப்பு-1632)
1857ல் ஆங்கிலப் பொறியாளரான‌ ஜார்ஜ் கேலி இறப்பு நாள். (பிறப்பு-1773)
1890ல் அமெரிக்கப் பழங்குடித் தலைவரான‌ வீற்றிருக்கும் எருது இறப்பு நாள். (பிறப்பு-1831)
1950ல் இந்திய அரசியல்வாதியான‌ வல்லபாய் பட்டேல் இறப்பு நாள். (பிறப்பு-1875)
1952ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான‌ பொட்டி சிறீராமுலு இறப்பு நாள். (பிறப்பு-1901)
1965ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான‌ மு. பாலசுந்தரம் இறப்பு நாள். (பிறப்பு-1903)
1966ல் அமெரிக்க இயக்குநரும் தயாரிப்பாளருமான‌ வால்ட் டிஸ்னி இறப்பு நாள். (பிறப்பு-1901)
1987ல் இந்திய இடதுசாரி அரசியல்வாதியான‌ ப. ராமமூர்த்தி இறப்பு நாள். (பிறப்பு-1908)
2011ல் இலங்கை மெல்லிசை மற்றும் திரைப்படப் பின்னணிப் பாடகரான எஸ். வி. ஆர். கணபதிப்பிள்ளை இறப்பு நாள்.
2011ல் ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளரான‌ கிறித்தோபர் இட்சன்சு இறப்பு நாள். (பிறப்பு-1949)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleDecember 14 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 14
Next articleDecember 16 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 16