Today Special Historical Events In Tamil | 14-12 | December 14
December 14 Today Special | December 14 What Happened Today In History. December 14 Today Whose Birthday (born) | December-14th Important Famous Deaths In History On This Day 14/12 | Today Events In History December 14th | Today Important Incident In History | மார்கழி 14 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 14-12 | மார்கழி மாதம் 14ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 14.12 Varalatril Indru Nadanthathu Enna| December 14 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 14/12 | Famous People Born Today 14.12 | Famous People died Today 14-12.
Today Special in Tamil 14-12
Today Events in Tamil 14-12
Famous People Born Today 14-12
Famous People died Today 14-12
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 14-12 | December 14
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 14-12 | December 14
557ல் கான்ஸ்டண்டினோபில் நகரம் நிலநடுக்கத்தினால் பெரும் சேதத்துக்குள்ளானது.
1287ல் நெதர்லாந்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் சூடர்சே கடல் தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1542ல் இளவரசி மேரி ஸ்டுவர்ட் பிறந்த ஒரே வாரத்தில் முதலாம் மேரி என்ற பெயரில் இசுக்கொட்லாந்தின் அரசியாக முடிசூனாள்.
1782ல் மொண்ட்கோல்பியர் சகோதரர்கள் ஆளில்லா வெப்பக்காற்று பலூனை முதன் முதலில் பிரான்சில் சோதித்தனர். 2 கிமீ உயரம் வரை இது பறந்தது.
1812ல் உருசியா மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
1814ல் பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: பிரித்தானிய அரச கடற்படை லூசியானாவின் புரோக்னி ஆறுப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
1819ல் அலபாமா அமெரிக்காவின் 22-வது மாநிலமாக இணைந்தது.
1845ல் ஆங்கிலேய-சீக்கியப் போர் ஆரம்பமானது.
1884ல் இலங்கையில் இடம்பெற்ற பெரும் சூறாவளி காரணமாக யாழ்ப்பாணத்தில் பெரும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன.
1899ல் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது.
1900ல் குவாண்டம் இயங்கியல்: மேக்ஸ் பிளாங்க் கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய தனது பிளாங்கின் விதியை நிறுவினார்.
1902ல் சான் பிரான்சிஸ்கோ முதல் ஒனலுலு வரையான முதலாவது பசிபிக் தந்திக் கம்பிகள் அமைக்கப்பட்டன.
1903ல் அமெரிக்காவின் வட கரொலைனா மாநிலத்தில் ரைட் சகோதரர்கள் தமது ரைட் பிளையர் வானூர்தியை முதல் தடவையாக சோதித்தனர்.
1907ல் அமெரிக்காவின் தாமசு லோசன் என்ற கப்பல் சில்லி தீவுகளில் மூழ்கியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
1909ல் ஆத்திரேலியத் தலைநகரை அமைப்பதற்கான நிலத்தை நியூ சவுத் வேல்சு மாநிலம் ஆத்திரேலிய பொதுநலவாய அரசுக்கு வழங்கியது.
1911ல் ருவால் அமுன்சென் தலைமையிலான 5 பேரடங்கிய குழு தென் முனையை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றது.
1918ல் செருமனிய இளவரசர் பிரீட்ரிக்கு கார்ல் வொன் எசென் முதலாம் வைனோ என்ற பெயரில் பின்லாந்து மன்னராக அந்நாட்டு நாடாளுமன்றம் தெரிவு செய்தது.
1918ல் போர்த்துகல் அரசுத்தலைவர் சிதோனியோ பாயிசு கொல்லப்பட்டார்.
1918ல் ஐக்கிய இராச்சியத்தில் முதல் தடவையாக பெண்கள் நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
1939ல் பனிக்காலப் போர்: பின்லாந்தை சோவியத் ஒன்றியம் ஆக்கிரமித்ததை அடுத்து நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது.
1940ல் கலிபோர்னியா, பெர்க்லியில் புளுட்டோனியம் (Pu-238) முதல் தடவையாகப் பிரித்தெடுக்கப்பட்டது.
1941ல் இரண்டாம் உலகப் போர்: சப்பான் தாய்லாந்துடன் இணைந்து போரிட உடன்பட்டது.
1941ல் உக்ரைனின் கார்க்கிவ் நகரின் நாசி ஜேர்மனியத் தளபதி யூதர்கள் அனைவரும் நகரை விட்டு 2 நாட்களில் வெளியேற உத்தரவிட்டான். அடுத்த இரு நாட்களில் சுமார் 15,000 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1946ல் ஐநாவின் தலைமையகத்தை நியூயோர்க் நகரில் அமைக்க முடிவாகியது.
1955ல் அல்பேனியா, ஆஸ்திரியா, பல்காரியா, கம்போடியா, இலங்கை, பின்லாந்து, அங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, யோர்தான், லாவோசு, லிபியா, நேபாளம், போர்த்துகல், உருமேனியா, எசுப்பானியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தன.
1962ல் நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளிக் கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.
1963ல் கலிபோர்னியா, லாசு ஏஞ்சலசு நகரில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் ஐவர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.
1971ல் வங்காளதேச விடுதலைப் போர்: கிழக்குப் பாக்கித்தானைச் சேர்ந்த 200 இற்கும் அதிகமான அறிவாளிகள் பாக்கித்தான் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1981ல் அரபு-இசுரேல் முரண்பாடு: இசுரேலின் நாடாளுமன்றம் ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் குன்றுகளில் இசுரேலியச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
1992ல் சியார்சியாவில் துகுவார்செலி என்ற இடத்தில் இருந்து அப்காசியா: அகதிகளை ஏற்றிச் சென்ற உலங்குவானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் 25 குழந்தைகள் உட்பட 52 பேர் கொல்லப்பட்டனர்.
2003ல் சதாம் உசேன் கைப்பற்றப்பட்ட செய்தியை அமெரிக்கத் தலைவர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
2003ல் பாக்கித்தான் அரசுத்தலைவர் பெர்வேஸ் முசாரப் கொலை முயற்சி ஒன்றிலிருந்து உயிர் தப்பினார்.
2004ல் தெற்கு பிரான்சில் வான் வீதி என அழைக்கப்படும் மில்லோ என்ற உலகின் மிகு உயர் பாலம் திறக்கப்பட்டது.
2012ல் அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் சாண்டி ஊக் தொடக்கப்பள்ளியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 14-12 | December 14
1503ல் சிறந்த குறி சொல்லும் பதிப்பாளரான நோஸ்ராடாமஸ் பிறந்த நாள். (இறப்பு-1566)
1546ல் தென்மார்க்கு வானியலாளரும் வேதியியலாளருமான டைக்கோ பிராகி பிறந்த நாள். (இறப்பு-1601)
1895ல் ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் பிறந்த நாள். (இறப்பு-1952)
1895ல் பிரான்சியக் கவிஞரான போல் எல்யூவார் பிறந்த நாள். (இறப்பு-1952)
1896ல் தமிழக அரசியல்வாதியான எம். அழகப்ப மாணிக்கவேலு பிறந்த நாள். (இறப்பு-1996)
1908ல் தமிழறிஞரும் எழுத்தாளரும் உரையாசிரியருமான பாலூர் து. கண்ணப்பர் பிறந்த நாள். (இறப்பு-1971)
1918ல் இந்திய யோகா பயிற்சியாளரும் எழுத்தாளரும் பி. கே. எஸ். அய்யங்கார் பிறந்த நாள். (இறப்பு-2014)
1924ல் பாக்கித்தானிய-இந்திய நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜ்கபூர் பிறந்த நாள். (இறப்பு-1988)
1932ல் ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான நாவேந்தன் பிறந்த நாள். (இறப்பு-2000)
1934ல் இந்திய இயக்குநரும் சியாம் பெனகல் பிறந்த நாள்.
1934ல் மலேசியக் கலைஞரும் கவிஞருமான ரெ. சண்முகம் பிறந்த நாள். (இறப்பு-2010)
1946ல் தமிழ்ப் பேராசிரியரும் இலக்கியத் திறனாய்வாளரும் நூலாசிரியருமான மறைமலை இலக்குவனார் பிறந்த நாள்.
1946ல் இந்திய அரசியல்வாதியான சஞ்சய் காந்தி பிறந்த நாள். (இறப்பு-1980)
1947ல் பிரேசிலின் 36வது அரசுத்தலைவரான டில்மா ரூசெஃப் பிறந்த நாள்.
1953ல் இந்திய தென்னிசு வீரரான விஜய் அமிர்தராஜ் பிறந்த நாள்.
1960ல் அமெரிக்கப் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியக இயக்குநரான ஜேம்ஸ் கோமி பிறந்த நாள்.
1965ல் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமான வசந்த் பிறந்த நாள்.
1966ல் தென்மார்க்கின் 41வது பிரதமரான எல் தோர்னிங் இசுமிட் பிறந்த நாள்.
1982ல் இந்திய நடிகையான சமீரா ரெட்டி பிறந்த நாள்.
1982ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான ஆதி பிறந்த நாள்.
1984ல் இந்திய நடிகரும் தயாரிப்பாளருமான ரானா தக்குபாடி பிறந்த நாள்.
1988ல் அமெரிக்க நடிகை மற்றும் பாடகியுமான வனேசா ஹட்ஜன்ஸ் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 14-12 | December 14
1332ல் மங்கோலியப் பேரரசரான ரிஞ்சின்பால் கான் இறப்பு நாள். (பிறப்பு-1326)
1591ல் எசுப்பானிய மதகுருவும் புனிதருமான சிலுவையின் புனித யோவான் இறப்பு நாள். (பிறப்பு-1542)
1799ல் அமெரிக்காவின் 1வது அரசுத்தலைவரான சியார்ச் வாசிங்டன் இறப்பு நாள். (பிறப்பு-1732)
1953ல் தமிழக அரசியல்வாதியான வி. ஐ. முனுசாமி பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1889)
1959ல் தமிழறிஞரான சோமசுந்தர பாரதியார் இறப்பு நாள். (பிறப்பு-1879)
1989ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற உருசிய இயற்பியலாளரான ஆந்திரே சாகரவ் இறப்பு நாள். (பிறப்பு-1921)
2006ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்ரன் பாலசிங்கம் இறப்பு நாள். (பிறப்பு-1938)
2011ல் இலங்கைக் கட்டிடக் கலைஞரும் திரைப்படத் தயாரிப்பாளருமான வி. எஸ். துரைராஜா இறப்பு நாள். (பிறப்பு-1927)
2013ல் பிரித்தானிய-ஐரிய நடிகரான பீட்டர் ஓ டூல் இறப்பு நாள். (பிறப்பு-1932)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan