Today Special Historical Events In Tamil | 16-12 | December 16
December 16 Today Special | December 16 What Happened Today In History. December 16 Today Whose Birthday (born) | December-16th Important Famous Deaths In History On This Day 16/12 | Today Events In History December 16th | Today Important Incident In History | மார்கழி 16 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 16-12 | மார்கழி மாதம் 16ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 16.12 Varalatril Indru Nadanthathu Enna| December 16 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 16/12 | Famous People Born Today 16.12 | Famous People died Today 16-12.
Today Special in Tamil 16-12
Today Events in Tamil 16-12
Famous People Born Today 16-12
Famous People died Today 16-12
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 16-12 | December 16
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (பகுரைன், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1971)
குடியரசு நாளாக கொண்டாடப்படுகிறது. (கசக்கஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)
வங்காளதேச வெற்றி நாளாக கொண்டாடப்படுகிறது.
வெற்றி நாளாக கொண்டாடப்படுகிறது. (இந்தியா)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 16-12 | December 16
1431ல் நூறாண்டுப் போர்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பிரான்சின் மன்னராக பாரிசு, நோட்ரே டேமில் முடிசூடினார்.
1497ல் வாஸ்கோ ட காமா முன்னர் பார்த்தலோமியோ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார்.
1575ல் சிலியின் வால்டீவியா நகரில் 8.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
1598ல் கொரிய, சப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற நோர்யாங் சமரில் கொரியா வெற்றி பெற்றது.
1653ல் சேர் ஆலிவர் கிராம்வெல் பொதுநலவாய இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, அயர்லாந்து நாடுகளின் தலைவரானார்.
1707ல் சப்பானின் பூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது.
1761ல் ஏழாண்டுப் போர்: நான்கு மாதங்கள் முற்றுகையின் பின்னர் உருசியா புருசியாவின் கொலோபிர்செக் கோட்டையைக் கைப்பற்றியது.
1773ல் அமெரிக்கப் புரட்சி: பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் – அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர்.
1811ல் அமெரிக்காவின் மிசூரியில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.
1835ல் நியூயோர்க் நகரத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் 530 கட்டிடங்கள் சேதமடைந்தன.
1857ல் இத்தாலியின் நேப்பில்சில் இடம்பெற்ற 6.9 நிலநடுக்கத்தில் 10,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1880ல் முதல் பூவர் போர்: தென்னாப்பிரிக்காவின் பூவர்களுக்கும் பிரித்தானியப் பேரரசுக்கும் இடையில் போர் மூண்டது.
1918ல் இலித்துவேனிய சோவியத் சோசலிசக் குடியரசு அமைக்கப்பட்டது. இது 1919 இல் கலைந்தது.
1920ல் சீனாவில் கான்சு நகரில் 8.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200,000 பேர் கொல்லப்பட்டனர்.
1922ல் போலந்து அரசுத்தலைவர் கேப்ரியல் நருடோவிச் வார்சாவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1925ல் இலங்கை வானொலியின் ஒலிபரப்பு சேவை கொழும்பில் ஆரம்பமானது.
1941ல் இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினர் மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் மீரி நகரைக் கைப்பற்றினர்.
1942ல் பெரும் இன அழிப்பு: சுத்ஸ்டாப்பெல் தலைவர் ஐன்ரிக் இம்லர் ரோமா மக்களை அவுசுவிட்சு வதை முகாமுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
1944ல் இரண்டாம் உலகப் போர்: பல்ஜ் சண்டை ஆரம்பமானது. ஆர்டென் காட்டில் மூன்று செருமனிய இராணுவப் படைப்பிரிவுகள் திடீர்த் தாக்குதலை நடத்தின.
1947ல் வில்லியம் ஷாக்லி, ஜான் பார்டீன், வால்டர் பிராட்டன் ஆகியோர் இணைந்து உலகின் முதலாவது செயல் முறை திரிதடையத்தை உருவாக்கினர்.
1950ல் கொரியப் போர்: சீனப் படைகள் வட கொரியாவின் கம்யூனிச அரசுக்கு ஆதரவாக போரிட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவர் டுரூமன் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
1960ல் அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று திரான்சு-வர்ல்ட் ஏர்லைன்சு விமானம் ஒன்றுடன் நியூ யோர்க், இசுட்டேட்டன் தீவின் மேலாக ஒன்றுடன் ஒன்று இரண்டு விமானங்களிலும் இருந்த அனைத்து 128 பேரும், தரையில் 6 பேரும் உயிரிழந்தனர்.
1971ல் வங்காளதேச விடுதலைப் போர், 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தானிய இராணுவம் சரணடைந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது. இந்நாள் வங்காள தேசத்திலும், இந்தியாவிலும் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
1971ல் பகுரைன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1991ல் கசக்ஸ்தான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
2000ல் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தை சூறாவளி தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்,
2013ல் பிலிப்பீன்சு தலைநகர் மணிலாவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 18 பேர் உயிரிழந்தனர்.
2014ல் பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான் போராளிகள் பெசாவர் நகரில் இராணுவப் பள்ளுக்கூடம் ஒன்றில் தாக்குதல் நடத்தியதில் 145 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பாடசாலைச் சிறுவர்கள் ஆவர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 16-12 | December 16
1485ல் எசுப்பானிய இளவரசியும் இங்கிலாந்து அரசியுமான அராகனின் கத்தரீன் பிறந்த நாள். (இறப்பு-1536)
1770ல் செருமானிய மேற்கத்தைய இசையமைப்பாளரான லுடுவிக் ஃவான் பேத்தோவன் பிறந்த நாள். (இறப்பு-1827)
1775ல் ஆங்கிலேய எழுத்தாளரான ஜேன் ஆஸ்டின் பிறந்த நாள். (இறப்பு-1817)
1857ல் அமெரிக்க வானியலாளரான எட்வார்டு எமர்சன் பர்னார்டு பிறந்த நாள். (இறப்பு-1923)
1866ல் உருசிய-பிரான்சிய ஓவியரான வசீலி கண்டீன்ஸ்கி பிறந்த நாள். (இறப்பு-1944)
1879ல் இந்தியத் தொல்லியலாளரான தயாராம் சகானி பிறந்த நாள். (இறப்பு-1939)
1900ல் தமிழறிஞரும் எழுத்தாளருமான மயிலை சீனி. வேங்கடசாமி பிறந்த நாள். (இறப்பு-1980)
1901ல் அமெரிக்க மானிடவியலாளரான மார்கரெட் மீட் பிறந்த நாள். (இறப்பு-1978)
1916ல் தமிழக-ஈழக் கவிஞரான பரமஹம்சதாசன் பிறந்த நாள். (இறப்பு-1965)
1917ல் பாக்கித்தானியக் கல்வியாளரும் நூலாசிரியருமான நபி பக்சு கான் பலோசு பிறந்த நாள். (இறப்பு-2011)
1917ல் ஆங்கிலேய-இலங்கை எழுத்தாளரான ஆர்தர் சி. கிளார்க் பிறந்த நாள். (இறப்பு-2008)
1930ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான லலிதா பிறந்த நாள். (இறப்பு-1982)
1933ல் பரதநாட்டியக் கலைஞரும் நடன ஆசிரியருமான அடையார் கே. லட்சுமணன் பிறந்த நாள். (இறப்பு-2014)
1957ல் கருநாடகாவின் 18வது முதலமைச்சரான எச். டி. குமாரசாமி பிறந்த நாள்.
1967ல் ஆத்திரேலிய நடிகையான மிராண்டா ஓட்டோ பிறந்த நாள்.
1969ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வானியலாளரும் இயற்பியலாளருமான ஆடம் இரீசு பிறந்த நாள்.
1969ல் ஆங்கிலேயத் துடுப்பாளரும் பயிற்சியாளருமான கிரேக் வைட் பிறந்த நாள்.
1983ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான ஹர்ஷவர்தன் ராணே பிறந்த நாள்.
1984ல் ஆங்கிலேய நடிகரான தியோ ஜேம்ஸ் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 16-12 | December 16
1515ல் போர்த்துகேய இந்தியாவின் 3வது ஆளுநரான அபோன்சோ டி அல்புகெர்க்கே இறப்பு நாள். (பிறப்பு-1453)
1859ல் செருமனிய மொழியியலாளரான வில்லெம் கிரிம் இறப்பு நாள். (பிறப்பு-1786)
1928ல் தென்னிந்திய அரசியல்வாதியும் சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சருமான பனகல் அரசர் இறப்பு நாள். (பிறப்பு-1866)
1981ல் அயர்லாந்து-அமெரிக்க எழுத்தாளரும் இறை அறிவியலாளருமான ஜோசப் மர்பி இறப்பு நாள். (பிறப்பு-1898)
2003ல் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான பி. மாதவன் இறப்பு நாள். (பிறப்பு-1928)
2005ல் இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப் பெண்ணான இளையதம்பி தர்சினி இறப்பு நாள். (பிறப்பு-1985)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan