December 04 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 04

0

Today Special Historical Events In Tamil | 04-12 | December 04

December 04 Today Special | December 04 What Happened Today In History. December 04 Today Whose Birthday (born) | December-1st Important Famous Deaths In History On This Day 04/12 | Today Events In History December 4th | Today Important Incident In History | மார்கழி 04 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 04-12 | மார்கழி மாதம் 04ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 04.12 Varalatril Indru Nadanthathu Enna| December 04 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 04/12 | Famous People Born Today 04.12 | Famous People died Today 04-12.

Today Special in Tamil 04-12
Today Events in Tamil 04-12
Famous People Born Today 04-12
Famous People died Today 04-12

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 04-12 | December 04

கடற்படையினர் தினமாக கொண்டாடப்படுகிறது. (இந்தியா)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 04-12 | December 04

1259ல் பிரான்சின் ஒன்பதாம் லூயி, இங்கிலாந்தின் மூன்றாம் என்றி ஆகியோர் பாரிசில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, நார்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு இங்கிலாந்து உரிமை கோருவதில்லை எனவும் ஆங்கிலேயப் புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது.
1619ல் 38 குடியேறிகள் வர்ஜீனியாவின் பெர்க்லியில் தரையிறங்கினர்.
1639ல் ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
1791ல் உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி அப்சர்வர் வெளிவந்தது.
1829ல் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த வங்காளத்தில் உடன்கட்டை ஏறல் முறையை ஒழிக்கும் சட்டத்தை தலைமை ஆளுநர் வில்லியம் பென்டிங்கு பிரபு கொண்டு வந்தார்.
1865ல் வட கரொலைனா, ஜார்ஜியா ஆகிய அமெரிக்க மாநிலங்கள் இரு வாரங்களில் அடிமைகள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என அறிவித்தன.
1918ல் முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அரசுத்தலைவர் ஊட்ரோ வில்சன் பிரான்சு சென்றார். பதவியில் உள்ள அமெரிக்கத் தலைவர் ஒருவர் ஐரோப்பா சென்றது இதுவே முதற் தடவையாகும்.
1939ல் இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியக் கப்பல் நெல்சன் இசுக்காட்லாந்து கரையில் கண்ணி வெடியில் சிக்கி சேதமடைந்தது.
1943ல் இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியாவின் எதிர்ப்புத் தலைவர் யோசிப் டீட்டோ “சனநாயக யூகொசுலாவிய அரசு” ஒன்றை தற்காலிகமாக அமைத்தார்.
1945ல் ஐக்கிய அமெரிக்கா ஐநாவில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து செனட் அவை வாக்களித்தது.
1957ல் ஐக்கிய இராச்சியத்தில் லூவிசாம் என்னுமிடத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 92 பேர் உயிரிழந்தனர்.
1958ல் பிரெஞ்சு அதிகாரத்தின் கீழ் பெனின் சுயாட்சி உரிமை பெற்றது.
1959ல் ஐக்கிய அமெரிக்காவின் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் சாம் என்ற குரங்கு 55 மைல்கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் பூமி திரும்பியது.
1967ல் வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா, மற்றும் தெற்கு வியட்நாமியப் படைகள் மேக்கொங் டெல்ட்டா பகுதியில் வியட் கொங் படைகளுடன் மோதின.
1971ல் இந்தியக் கடற்படை பாக்கித்தானியக் கடற்படையையும் கராச்சியையும் தாக்கியது.
1971ல் பாக்கித்தான் கடற்படைக்குச் சொந்தமான காசி என்ற நீர்மூழ்கிக் கப்பல் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
1971ல் இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய ஐநா பாதுகாப்பு அவை அவசரமாகக் கூடியது.
1977ல் மலேசியா எயர்லைன்சு வானூர்தி 653 கடத்தப்பட்டு ஜொகூரில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100 பேர் உயிரிழந்தனர்.
1984ல் குவைத் விமானம் ஒன்றை ஹெஸ்புல்லா அமைப்பினர் கடத்தியதில் நான்கு பயணிகள் கொல்லப்பட்டனர்.
1984ல் 1984 மன்னார் படுகொலைகள்: இலங்கைப் படையினர் மன்னாரில் 107-150 பொதுமக்களை படுகொலை செய்தனர்.
1991ல் டெரி ஆண்டர்சன் என்ற அமெரிக்க ஊடகவியலாளர் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் பெய்ரூட்டில் விடுவிக்கப்பட்டார்.
1991ல் ஐக்கிய அமெரிக்காவின் பான் ஆம் விமான சேவை தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.
1992ல் அமெரிக்கா சோமாலியாவுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்ப அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் உத்தரவிட்டார்.
2005ல் ஆங்காங்கில் பல்லாயிரக்கணக்கானோர் மக்களாட்சி வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 04-12 | December 04

1866ல் உருசிய-செருமானிய ஓவியரான‌ வசீலி கண்டீன்ஸ்கி பிறந்த நாள். (இறப்பு-1944)
1875ல் ஆத்திரிய-சுவிட்சர்லாந்து கவிஞரான‌ ரெய்னர் மரியா ரில்கே பிறந்த நாள். (இறப்பு-1926)
1888ல் ஆத்திரிய-சுவிட்சர்லாந்து கவிஞரான‌ ரமேஷ் சந்திர மஜும்தார் பிறந்த நாள். (இறப்பு-1980)
1889ல் இந்திய விடுதலைப் போராட்ட வீரரான‌ நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த நாள். (இறப்பு-1978)
1892ல் எசுப்பானியாவின் பிரதமரான‌ பிரான்சிஸ்கோ பிராங்கோ பிறந்த நாள். (இறப்பு-1975)
1893ல் இந்திய அரசியல்வாதியான‌ ஹச். பி. அரி கௌடர் பிறந்த நாள். (இறப்பு-1971)
1898ல் இந்திய இயற்பியலாளரான‌ க. சீ. கிருட்டிணன் பிறந்த நாள். (இறப்பு-1961)
1910ல் 6வது இந்தியக் குடியரசுத் தலைவரான‌ ரா. வெங்கட்ராமன் பிறந்த நாள். (இறப்பு-2009)
1919ல் 12வது இந்தியப் பிரதமரான‌ ஐ. கே. குஜரால் பிறந்த நாள். (இறப்பு-2012)
1922ல் தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரான‌ கண்டசாலா பிறந்த நாள். (இறப்பு-1974)
1925ல் கனடிய-அமெரிக்க உளவியலாளரான ஆல்பர்ட் பாண்டுரா பிறந்த நாள்.
1930ல் மலையாளப் பின்னணிப் பாடகரான கமுகறை புருஷோத்தமன் நாயர் பிறந்த நாள். (இறப்பு-1995)
1949ல் அமெரிக்க நடிகரான‌ ஜெப் பிரிட்ஜஸ் பிறந்த நாள்.
1949ல் இலங்கை மெல்லிசை மற்றும் பொப் இசைப் பாடகர் எஸ். இராமச்சந்திரன் பிறந்த நாள். (இறப்பு-2020)
1963ல் உக்ரைனிய தடியூண்டித் தாண்டும் வீரரான‌ செர்கய் புப்கா பிறந்த நாள்.
1964ல் அமெரிக்க நடிகையான‌ மரிசா டோமீய் பிறந்த நாள்.
1969ல் அமெரிக்க ராப் இசைக்கலைஞரான‌ ஜெய்‍சி பிறந்த நாள்.
1974ல் தமிழகத் திரைப்பட நடிகையான‌ அனுபமா குமார் பிறந்த நாள்.
1979ல் தமிழகப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான‌ சமஸ் பிறந்த நாள்.
1982ல் ஆத்திரேலிய மதப்போதகரான‌ நிக் வோய்ச்சிச் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 04-12 | December 04

கிமு 530ல் பாரசீக மன்னரான‌ சைரசு இறப்பு நாள். (பிறப்பு-கிமு 600)
749ல் சிரிய மதகுருவும் புனிதருமான‌ தமாஸ்கஸ் நகர யோவான் இறப்பு நாள். (பிறப்பு-676)
1131ல் பாரசீகக் கவிஞரும் வானியலாளருமான‌ ஓமர் கய்யாம் இறப்பு நாள். (பிறப்பு-1048)
1576ல் ஆத்திரிய-சிலோவாக்கிய கணிதவியலாளரான‌ நிலவைரையாளருமான‌ இரேடிக்கசு இறப்பு நாள். (பிறப்பு-1514)
1679ல் ஆங்கிலேய மெய்யியலாளரான‌ தாமசு ஆபிசு இறப்பு நாள். (பிறப்பு-1588)
1850ல் மின்சார இயக்கியைக் கண்டுபிடித்த ஆங்கிலேய இயற்பியலாளரான‌ வில்லியம் ஸ்டர்ஜியன் இறப்பு நாள். (பிறப்பு-1783)
1953ல் தமிழகத் தமிழறிஞரான‌ அ. வேங்கடாசலம் பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1886)
1976ல் தமிழக எழுத்தாளரான‌ ந. பிச்சமூர்த்தி இறப்பு நாள். (பிறப்பு-1900)
2009ல் சோவியத், உருசிய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகரான‌ விச்சிசுலாவ் தீகனொவ் இறப்பு நாள். (பிறப்பு-1928)
2014ல் இந்திய நீதிபதியும் அரசியல்வாதியுமான‌ வி. ஆர். கிருஷ்ணய்யர் இறப்பு நாள். (பிறப்பு-1914)
2015ல் இலங்கை அரசியல்வாதியான‌ மசூர் மௌலானா இறப்பு நாள். (பிறப்பு-1932)
2017ல் இந்திய நடிகரான‌ சசி கபூர் இறப்பு நாள். (பிறப்பு-1938)
2021ல் ஈழத்து இடதுசாரி எழுத்தாளரும் பதிப்பாளருமான‌ செ. கணேசலிங்கன் இறப்பு நாள். (பிறப்பு-1928)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 03.10.2022 Today Rasi Palan 03-10-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleDecember 05 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 05