Today Special Historical Events In Tamil | 03-12 | December 01
December 03 Today Special | December 03 What Happened Today In History. December 03 Today Whose Birthday (born) | December-3rd Important Famous Deaths In History On This Day 03/12 | Today Events In History December 3rd | Today Important Incident In History | மார்கழி 03 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 03-12 | மார்கழி மாதம் 03ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 03.12 Varalatril Indru Nadanthathu Enna| December 03 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 03/12 | Famous People Born Today 03.12 | Famous People died Today 03-12.
Today Special in Tamil 03-12
Today Events in Tamil 03-12
Famous People Born Today 03-12
Famous People died Today 03-12
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 04-12 | December 04
மருத்துவர் நாளாக கொண்டாடப்படுகிறது. (கியூபா)
பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாளாக கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 04-12 | December 04
915ல் இத்தாலியின் முதலாம் பெரிங்கார் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
1592ல் முதலாவது ஆங்கிலேயக் கப்பல் எட்வேர்ட் பொனவென்ச்சர் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது.
1795ல் ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
1799ல் வீசுலொக் சமரில் ஆஸ்திரியப் படை பிரெஞ்சுப் படைகளை வென்றது.
1800ல் மியூனிக்கு அருகில் ஓகன்லிண்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தன.
1818ல் இலினொய் அமெரிக்காவின் 21-வது மாநிலமாக இணைந்தது.
1854ல் அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் பல்லராட் என்ற இடத்தில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
1903ல் சேர் என்றி பிளேக் பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக நியமனம் பெற்று கொழும்பு வந்து சேர்ந்தார்.
1904ல் வியாழனின் நிலா இமாலியா கலிபோர்னியாவின் லிக் வான்காணகத்தில் சார்ல்சு பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1910ல் நவீனகால நியான் ஒளி முதற்தடவையாக பாரிசில் காட்சிப்படுத்தப்பட்டது.
1912ல் பால்கன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல்காரியா, கிரேக்கம், மொண்டெனேகுரோ, செர்பியா ஆகியன உதுமானியப் பேரரசுடன் போர் நிறுத்த உடன்பாடு கண்டன. 1913 பெப்ரவரி 3 இல் போர் மீண்டும் தொடங்கியது.
1919ல் 20 ஆண்டுகள் கட்டுமானப் பணியின் பின்னர் கியூபெக் பாலம் திறக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் இரு தடவைகள் பாலம் இடிந்து வீழ்ந்து 89 பேர் உயிரிழந்திருந்தனர்.
1927ல் முதலாவது லாரல் மற்றும் ஹார்டி திரைப்படம் வெளியிடப்பட்டது.
1944ல் கிரேக்கத்தில் ஏதென்சு நகரில் கம்யூனிஸ்டுக்களுக்கும் அரச படைக்கும் இடையில் உள்நாட்டுப் போர் வெடித்தது.
1959ல் சிங்கப்பூர் பிரித்தானியப் பேரரசின் கீழ் சுயாட்சி பெற்று ஆறு மாதத்தின் பின்னர் சிங்கப்பூரின் தற்போதைய கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1967ல் தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் கிறித்தியான் பார்னார்டு தலைமையில் உலகின் முதலாவது இதய மாற்று அறுவை சிகிச்சை 53 வயது லூயிசு வாசுகான்சுக்கி என்பவர் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
1971ல் 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தான் செங்கிசுகான் நடவடிக்கை என்ற பெயரில் இந்தியா மீது போர் தொடுத்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் முழுமையான போர் வெடித்தது.
1973ல் வியாழனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.
1976ல் ரெகே பாடகர் பொப் மார்லி இரு தடவைகள் சுடப்பட்டுக் காயமடைந்தார். ஆனாலும் இவர் இரு நாட்களின் பின்னர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
1978ல் வர்ஜீனியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டு 60 பேர் காயமடைந்தனர்.
1979ல் அயத்தொல்லா ரூகொல்லா கொமெய்னி இரானின் உயர் தலைவரானார்.
1984ல் போபால் பேரழிவு: இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.
1989ல் பனிப்போர்: மால்ட்டாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ், சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் ஆகியோர் பனிப்போர் முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக அறிவித்தனர்.
1992ல் 80,000 தொன் பாறை எண்ணெயுடன் சென்ற கிரேக்கக் கப்பல் எசுப்பானியா அருகில் மூழ்கியதில் எண்ணெய் முழுவதும் கடலில் கசிந்தது.
1992ல் உலகின் முதலாவது குறுஞ்செய்தி தனி மேசைக் கணினியில் இருந்து வோடபோன் தொலைபேசி ஒன்றுக்கு அனுப்பப்பட்டது.
1994ல் பிளேஸ்டேசன் சப்பானில் வெளியிடப்பட்டது.
1997ல் நிலக் கண்ணிவெடிகளைத் தயாரிப்பது, மற்றும் பயன்படுத்துவதத் தடை செய்யும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா, உருசியா, சீனா தவிர்ந்த 121 நாடுகள் ஒட்டாவாவில் கையெழுத்திட்டன.
1999ல் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்ட மார்சு தரையிறங்கியின் தொடர்புகளை நாசா நிறுவனம் அவ்விண்கலம் செவ்வாயின் வளிமண்டலத்தை அணுகிய போது இழந்தது.
2007ல் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.
2009ல் சோமாலியா, முக்தீசூவில் உணவு விடுதி ஒன்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் மூன்று அமைச்சர்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர்.
2012ல் பிலிப்பீன்சில் போபா சூறாவளி தாக்கியதில் 475 பேர் உயிரிழந்தனர்.
2014ல் சப்பான் (162173) 1999 ஜேயூ3 என்ற சிறுகோளை நோக்கி ஆறு-ஆண்டுகள் திட்டமாக ஹயபுசா 2 என்ற விண்கலத்தை தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ஏவியது.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 04-12 | December 04
1753ல் ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளரும் நெசவுத் துறையின் முன்னோடியுமான சாமுவேல் கிராம்டன் பிறந்த நாள். (இறப்பு-1827)
1795ல் நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்த ஆங்கிலேயரான ரோலண்ட் ஹில் பிறந்த நாள். (இறப்பு-1879)
1833ல் கியூபா மருத்துவரான கார்லோஸ் பின்லே பிறந்த நாள். (இறப்பு-1915)
1857ல் போலந்து-ஆங்கிலேய எழுத்தாளரும் போர்வீரருமான ஜோசப் கொன்ராட் பிறந்த நாள். (இறப்பு-1924)
1884ல் இந்தியாவின் 1வது குடியரசுத் தலைவரான இராசேந்திர பிரசாத் பிறந்த நாள். (இறப்பு-1963)
1886ல் நோபல் பரிசு பெற்ற சுவீடிய இயற்பியலாளரான மன்னே சீகுபான் பிறந்த நாள். (இறப்பு-1978)
1889ல் வங்காளப் புரட்சியாளரான குதிராம் போஸ் பிறந்த நாள். (இறப்பு-1908)
1900ல் நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-செருமன் வேதியியலாளரான ரிச்சர்ட் குன் பிறந்த நாள். (இறப்பு-1967)
1909ல் இலங்கையின் மலையக அரசியல்வாதியும் தொழிற்சங்கத்தலைவருமான கே. ராஜலிங்கம் பிறந்த நாள். (இறப்பு-1963)
1925ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்கொரிய அரசுத்தலைவரான கிம் டாய் ஜுங் பிறந்த நாள். (இறப்பு-2009)
1931ல் இந்திய அரசியல்வாதியான விஜய்குமார் மல்கோத்திரா பிறந்த நாள்.
1933ல் டச்சு வேதியலாளரான பால் சோசப் கிரட்சன் பிறந்த நாள்.
1935ல் தமிழக சிறுவர் புதின எழுத்தாளரான நெல்லை ஆ. கணபதி பிறந்த நாள்.
1948ல் ஈழத்துக் கவிஞரான புதுவை இரத்தினதுரை பிறந்த நாள்.
1960ல் அமெரிக்க நடிகையும் எழுத்தாளருமான ஜூலியானா மூரே பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 04-12 | December 04
1154ல் திருத்தந்தையான நான்காம் அனஸ்தாசியுஸ் இறப்பு நாள். (பிறப்பு-1073)
1552ல் எசுப்பானிய மதப்பரப்புனரும் புனிதருமான பிரான்சிஸ் சவேரியார் இறப்பு நாள். (பிறப்பு-1506)
1882ல் ஆங்கிலேய வானியலாளரான ஜேம்ஸ் சால்லிஸ் இறப்பு நாள். (பிறப்பு-1803)
1894ல் இசுக்கொட்டிய எழுத்தாளரான ஆர். எல். இசுட்டீவன்சன் இறப்பு நாள். (பிறப்பு-1850)
1969ல் தமிழகத் தமிழறிஞரும் வழக்கறிஞருமான கோவைக்கிழார் இறப்பு நாள். (பிறப்பு-1888)
1979ல் இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரரும் தியான் சந்த் இறப்பு நாள். (பிறப்பு-1905)
1998ல் தமிழகக் கவிஞருமான முடியரசன் இறப்பு நாள். (பிறப்பு-1920)
2000ல் அமெரிக்கக் கவிஞரான குவெண்டலின் புரூக்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1917)
2010ல் தமிழக எழுத்தாளரான அநுத்தமா இறப்பு நாள். (பிறப்பு-1922)
2011ல் இந்திய நடிகரும் இயக்குநருமான தேவ் ஆனந்த் இறப்பு நாள். (பிறப்பு-1923)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan