Today Special Historical Events In Tamil | 05-12 | December 05
December 05 Today Special | December 05 What Happened Today In History. December 05 Today Whose Birthday (born) | December-5th Important Famous Deaths In History On This Day 05/12 | Today Events In History December 5th | Today Important Incident In History | மார்கழி 05 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 05-12 | மார்கழி மாதம் 05ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 05.12 Varalatril Indru Nadanthathu Enna| December 05 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 05/12 | Famous People Born Today 05.12 | Famous People died Today 05-12.
Today Special in Tamil 05-12
Today Events in Tamil 05-12
Famous People Born Today 05-12
Famous People died Today 05-12
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 05-12 | December 05
குழந்தைகள் நாளான கொண்டாடப்படுகிறது. (சுரிநாம்)
உலக மண் நாளான கொண்டாடப்படுகிறது.
பன்னாட்டுத் தன்னார்வலர் நாளான கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 05-12 | December 05
1082ல் பார்சிலோனா மன்னர் இரண்டாம் ரமோன் பெரெங்கெர் கொல்லப்பட்டார்.
1492ல் கிறித்தோபர் கொலம்பசு லா எசுப்பானியோலா தீவில் (இன்றைய எயிட்டி, டொமினிக்கன் குடியரசு) கால் வைத்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே.
1496ல் போர்த்துகல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறித்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான்.
1560ல் ஒன்பதாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
1746ல் எசுப்பானியாவின் ஆட்சிக்கெதிராக ஜெனோவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது.
1757ல் ஏழாண்டுப் போர்: இரண்டாம் பிரெடெரிக் புருசியப் படைகளுக்குத் தலைமை தாங்கி ஆஸ்திரியப் படைகளை லெயூத்தன் சமரில் வென்றார்.
1837ல் இலங்கையில் முதலாவது சீனித் தொழிற்சாலை தூம்பறை என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
1848ல் கலிபோர்னியா தங்க வேட்டை: கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் போக் அறிவித்தார்.
1896ல் சென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.
1931ல் மாஸ்கோவில் கிறிஸ்து மீட்பர் பேராலயம் இசுட்டாலினின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது.
1934ல் இத்தாலியப் படையினர் அபிசீனியாவின் வால் வால் என்ற நகரைத் தாக்கினர். நான்கு நாட்களின் பின்னர் நகரைக் கைப்பற்றினர்.
1936ல் சோவியத் ஒன்றியம் தனது புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. கிர்கிஸ்தான் சோவியத் ஒன்றியத்திற்குள் முழுமையான குடியரசாக அறிவிக்கப்பட்டது.
1941ல் இரண்டாம் உலகப் போர்: மாஸ்கோ சண்டையில், கியோர்கி சூக்கொவ் செருமனிய இராணுவத்துக்கு எதிராகப் பெரும் சோவியத் எதிர்த்தாக்குதலை ஆரம்பித்தார்.
1941ல் இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, அங்கேரி, உருமேனியா நாடுகளின் மீது பிரித்தானியா போரை அறிவித்தது.
1952ல் இலண்டனில் ஏற்பட்ட பெரும் புகைமாசுப் பேரிடர் காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் 12,000 பேர் வரை உயிரிழந்தனர், 200,000 பேர் வரை பாதிக்கப்பட்டனர்.
1957ல் இந்தோனேசியாவில் இருந்து அனைத்து 326,000 டச்சு மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
1958ல் பங்களிப்போர் தொலை சுழற்சி முறை (எஸ்ரிடி) தொலைபேசி இணைப்பு சேவை ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் ஆரம்பிக்கப்பட்டது.
1969ல் மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது.
1977ல் சிரியா, லிபியா, அல்சீரியா, ஈராக்கு, தெற்கு யேமன் ஆகிய நாடுகளுடன் எகிப்து தூதரக உறவைத் துண்டித்தது.
1978ல் சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானுடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
1983ல் அர்கெந்தீனாவில் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது.
1995ல் ஈழப் போர்: இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து தாம் முழுமையாகக் கைப்பற்றியதாக அறிவித்தது.
2003ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர்திரவ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்தது.
2005ல் தங்கனீக்கா ஏரியில் 6.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் காங்கோவில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
2006ல் பிஜியில் இராணுவப் புரட்சி மூலம் அதன் இராணுவத் தளபதி பிராங்க் பைனிமரமா அரசைக் கைப்பற்றினார்.
2006ல் இந்திய நடுவண் அரசில் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த சிபு சோரன் 1994 இல் அவரது உதவியாளரைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்றார்.
2013ல் யெமன், சனா நகரில் போராளிகள் தாக்கியதில் 56 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.
2017ல் 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக 2018 குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியிட உருசியாவுக்கு பன்னாட்டு ஒலிம்பிக் குழு தடை விதித்தது.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 05-12 | December 05
1782ல் அமெரிக்காவின் 8வது அரசுத்தலைவருரான மார்ட்டின் வான் பியூரன் பிறந்த நாள். (இறப்பு-1862)
1879ல் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் போராளியான பாகாஜதீன் பிறந்த நாள். (இறப்பு-1915)
1890ல் ஆத்திரிய-அமெரிக்க இயக்குநரான பிரிட்ஸ் லாங் பிறந்த நாள். (இறப்பு-1976)
1896ல் நோபல் பரிசு பெற்ற செக்-அமெரிக்க மருத்துவரான கார்ல் பெர்டினான்ட் கோரி பிறந்த நாள். (இறப்பு-1984)
1901ல் அமெரிக்க இயக்குநரான வால்ட் டிஸ்னி பிறந்த நாள். (இறப்பு-1966)
1901ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளரான வெர்னர் ஐசன்பர்க் பிறந்த நாள். (இறப்பு-1976)
1905ல் இந்திய அரசியல்வாதியான சேக் அப்துல்லா பிறந்த நாள். (இறப்பு-1982)
1919ல் இலங்கைத் திரைப்படப் பின்னணிப் பாடகரான மொகிதீன் பேக் பிறந்த நாள். (இறப்பு-1991)
1927ல் சிங்களப் பாடகரும் இசையமைப்பாளருமான டபிள்யூ. டி. அமரதேவா பிறந்த நாள். (இறப்பு-2016)
1927ல் தாய்லாந்து மன்னரான பூமிபால் அதுல்யாதெச் பிறந்த நாள். (இறப்பு-2016)
1930ல் தமிழக அரசியல்வாதியான எஸ். டி. சோமசுந்தரம் பிறந்த நாள். (இறப்பு-2001)
1960ல் இந்தியத் திரைப்பட நடிகையான சரிகா பிறந்த நாள்.
1966ல் இந்தியத் தொழிலதிபரும் அரசியல்வாதியுமான தயாநிதி மாறன் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 05-12 | December 05
1784ல் செனிகலில் பிறந்த அடிமையும் அமெரிக்கக் கவிஞருமான பில்லிஸ் வீட்லி இறப்பு நாள். (பிறப்பு-1753)
1791ல் ஆத்திரிய செவ்விசையமைப்பாளரான வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட் இறப்பு நாள். (பிறப்பு-1756)
1870ல் பிரான்சிய எழுத்தாளரான அலெக்சாண்டர் டூமா இறப்பு நாள். (பிறப்பு-1802)
1879ல் ஈழத்தின் சைவ ஆன்மீகவாதியும் பதிப்பாளருமான ஆறுமுக நாவலர் இறப்பு நாள். (பிறப்பு-1822)
1926ல் பிரான்சிய ஓவியரான கிளாடு மோனெ இறப்பு நாள். (பிறப்பு-1840)
1930ல் பிரித்தானியக் கணிதவியலாளரான ஆல்பிரட் பார்னார்டு பாசெட் இறப்பு நாள். (பிறப்பு-1854)
1941ல் அங்கேரி-பாக்கித்தானிய ஓவியரான அம்ரிதா சேர்கில் இறப்பு நாள். (பிறப்பு-1913)
1950ல் இந்திய ஆன்மீகத் துறவியான அரவிந்தர் இறப்பு நாள். (பிறப்பு-1872)
1954ல் தமிழக எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கி கிருஷ்ணமூர்த்தி இறப்பு நாள். (பிறப்பு-1899)
1963ல் பாக்கித்தானின் 5வது பிரதமரான உசைன் சகீத் சுராவர்தி இறப்பு நாள். (பிறப்பு-1892)
1964ல் இலங்கை அரசியல்வாதியான வி. வீரசிங்கம் இறப்பு நாள். (பிறப்பு-1892)
1969ல் பாட்டன்பேர்க்கின் இளவரசியான அலிஸ் இறப்பு நாள். (பிறப்பு-1885)
1980ல் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரான சுருளி ராஜன் இறப்பு நாள். (பிறப்பு-1938)
2009ல் யாழ்ப்பாண கருநாடக இசைப் பாடகரான திலகநாயகம் போல் இறப்பு நாள்.
2012ல் பிரேசில் கட்டிடக்கலைஞரான ஒசுக்கார் நிமேயெர் இறப்பு நாள். (பிறப்பு-1907)
2013ல் தென்னாப்பிரிக்காவின் 1வது அரசுத்தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான நெல்சன் மண்டேலா இறப்பு நாள். (பிறப்பு-1918)
2016ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் அரசியல்வாதியும் தமிழக முதலமைச்சருமான ஜெ. ஜெயலலிதா இறப்பு நாள். (பிறப்பு-1948)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan