September 26 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 26

0

Today Special Historical Events In Tamil | 26-09 | September 26

September 26 Today Special | September 26 What Happened Today In History. September 26 Today Whose Birthday (born) | September-26th Important Famous Deaths In History On This Day 26/09 | Today Events In History September-26th | Today Important Incident In History | புரட்டாதி 26 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 26-09 | புரட்டாதி மாதம் 26ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 26.09 Varalatril Indru Nadanthathu Enna| September 26 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 26/09 | Famous People Born Today September 26 | Famous People died Today 26-09.

  • Today Special in Tamil 26-09
  • Today Events in Tamil 26-09
  • Famous People Born Today 26-09
  • Famous People died Today 26-09
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 26-09 | September 26

    டொமினியன் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (நியூசிலாந்து)
    புரட்சி நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (யெமன்)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 26-09 | September 26

    கிமு 46ல் யூலியசு சீசர் தனது தொன்மக் கடவுள் வீனசுக்குக் கோயில் ஒன்றைக் கட்டினான்.
    1087ல் இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் முடிசூடி 1100 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தான்.
    1255ல் அசிசியின் புனித கிலாராவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
    1371ல் செர்பிய-துருக்கியப் போர்கள்: உதுமானிய சுல்தான் முதலாம் முராடின் படைகள் செர்பியப் படைகளுடன் மாரித்சா என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன.
    1580ல் சேர் பிரான்சிஸ் டிரேக் உலகைச் சுற்றி வந்தார்.
    1687ல் மாண்புமிகு புரட்சி: இங்கிலாந்து மீதான வில்லியமின் முற்றுகையை ஆம்ஸ்டர்டம் நகரசபை ஆதரித்து வாக்களித்தது.
    1687ல் ஏதென்சு நகரத்தை முற்றுகையிட்ட உதுமானியரிடம் இருந்து நகரைக் கைப்பற்ற மரோசினி தலைமையிலான வெனிசியப் படையினர் குண்டுத் தாக்குதலை நடத்தியதில் ஏத்தன்சின் பார்த்தினன் நகரம் பகுதியாக அழிந்தது.
    1777ல் அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் பிலடெல்பியா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றின.
    1799ல் சூரிக்கில் அலெக்சாந்தர் கொர்சக்கோவ் தலைமையில் இடம்பெற்ற இரண்டாவது சமரில் ஆஸ்திரிய-உருசியப் படைகள் பிரான்சிய-சுவிட்சர்லாந்து படைகளிடம் தோற்றன.
    1905ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்புச் சார்புக் கோட்பாடு தொடர்பான முதலாவது ஆய்வை வெளியிட்டார்.
    1907ல் நியூசிலாந்து, நியூபவுண்லாந்து இரண்டும் பிரித்தானியப் பேரரசின் டொமினியன்களாயின.
    1918ல் முதலாம் உலகப் போர்: அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இரத்தம் சிந்திய போர் மியூஸ்-ஆர்கன் தாக்குதல் பிரான்சில் ஆரம்பம். 1.2 மில்லியம் அமெரிக்கப் போர் வீரர்கள் பங்குபெற்றனர்.
    1944ல் இரண்டாம் உலகப் போர்: மார்கெட் கார்டன் நடவடிக்கை தோல்வியடைந்தது.
    1950ல் கொரியப் போர்: ஐநா ஐக்கிய நாடுகள் படைகள் வட கொரியாவிடமிருந்து சியோல் நகரை மீண்டும் கைப்பற்றின.
    1953ல் ஐக்கிய இராச்சியத்தில் சீனி மீதான பங்கீட்டு முறை நிறுத்தப்பட்டது.
    1954ல் சப்பானின் தொடருந்துப் படகு டோயா மாரு சூறாவளியில் சிக்கி மூழ்கியதில் 1,172 பேர் உயிரிழந்தனர்.
    1959ல் முதல் நாளில் சுடப்பட்டுப் படுகாயமடைந்த இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இறந்தார்.
    1959ல் சப்பானை சூறாவளி வேரா தாக்கியதில் 4,580 பேர் உயிரிழந்தனர், 1.6 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.
    1960ல் ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக அரசுத்தலைவருக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களின் தொலைக்காட்சி நேரடி விவாதம் ரிச்சார்ட் நிக்சனுக்கும், ஜோன் எஃப். கென்னடிக்கும் இடையில் சிகாகோவில் இடம்பெற்றது.
    1960ல் பிடெல் காஸ்ட்ரோ சோவியத் ஒன்றியத்துக்கான தமது ஒத்துழைப்பை அறிவித்தார்.
    1973ல் அத்திலாந்திக் மேலான தனது முதலாவது இடைநிறுத்தல் இல்லாத பயணத்தை கொன்கோர்ட் விமானம் மிகக் குறைந்த நேரத்தில் பறந்து சாதனை நிலைநாட்டியது.
    1980ல் மியூனிக் நகரில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர், 211 பேர் காயமடைந்தனர்.
    1983ல் அணுவாயுதம் ஒன்று ஏவப்பட்டது என்ற அறிக்கை ஒரு கணினித் தவறு என்பதை சோவியத் இராணுவ அதிகாரி ஸ்டானிசுலாவ் பெத்ரோவ் கண்டுபிடித்து அணுவாயுதப் போரொன்று இடம்பெறுவதைத் தவிர்த்தார்.
    1984ல் ஐக்கிய இராச்சியம் ஆங்காங்கை சீனாவிடம் 1997 இல் கையளிக்க ஒப்புக் கொண்டது.
    1987ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்டினன் கேணல் திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் நீரும் அருந்தா உண்ணா நோன்பு இருந்து உயிர்துறந்தார்.
    1997ல் இந்தோனேசியாவின் கருடா விமானம் மேடான் அருகே விபத்துக்குள்ளாகியதில் 234 பேர் உயிரிழந்தனர்.
    1997ல் இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கம் அசிசியின் பிரான்சிசு தேவாலயத்தின் ஒரு பகுதியைச் சேதப்படுத்தியது.
    2002ல் செனிகல் நாட்டு கப்பல் ஒன்று காம்பியாவில் மூழ்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
    2007ல் வியட்நாமில் பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 60 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
    2008ல் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இவெசு ரொசி ஆங்கிலக் கால்வாயை ஜெட் இயந்திரம் பூட்டப்பட்ட இறக்கை மூலம் கடந்த முதலாவது மனிதர் என்ற சாதனை படைத்தார்.
    2009ல் பிலிப்பீன்சு, சீனா, வியட்நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து நாடுகளை கெத்சானா சூறாவளி தாக்கியதில் 700 பேர் உயிரிழந்தனர்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 26-09 | September 26

    1820ல் இந்திய மெய்யியலாளரும் ஓவியருமான‌ ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பிறந்த நாள். (இறப்பு-1891)
    1833ல் ஆங்கில அரசியல்வாதியான‌ சார்ல்ஸ் பிராட்லா பிறந்த நாள். (இறப்பு-1891)
    1849ல் நோபல் பரிசு பெற்ற உருசிய மருத்துவரான‌ இவான் பாவ்லோவ் பிறந்த நாள். (இறப்பு-1936)
    1867ல் அமெரிக்க இயங்குபடக் கலைஞரான‌ வின்சர் மெக்கே பிறந்த நாள். (இறப்பு-1934)
    1876ல் அமெரிக்க பொருளியலாளரும் சமூக சேவையாளருமான‌ எடித் அப்போட் பிறந்த நாள். (இறப்பு-1957)
    1878ல் உருசிய வானியலாளரான‌ பியதோசி நிகோலயேவிச் கிரசோவ்சுகி பிறந்த நாள். (இறப்பு-1948)
    1886ல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவரான‌ ஆர்ச்சிபால்ட் ஹில் பிறந்த நாள். (இறப்பு-1977)
    1888ல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயக் கவிஞரும் எழுத்தாளருமான‌ திறனாய்வாளருமான‌ தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட் பிறந்த நாள். (இறப்பு-1965)
    1890ல் கருநாடக இசை அறிஞரான‌ பாபநாசம் சிவன் பிறந்த நாள். (இறப்பு-1973)
    1894ல் தமிழக அரசியல்வாதியும் தொழிலதிபருமான‌ ஜே. எல். பி. ரோச் விக்டோரியா பிறந்த நாள். (இறப்பு-1962)
    1897ல் திருத்தந்தையான‌ ஆறாம் பவுல் பிறந்த நாள். (இறப்பு-1978)
    1908ல் கருநாடக இசை அறிஞரான‌ பெரியசாமி தூரன் பிறந்த நாள். (இறப்பு-1987)
    1913ல் தமிழறிஞரான‌ திருக்குறள் வீ. முனிசாமி பிறந்த நாள். (இறப்பு-1994)
    1923ல் இந்திய நடிகரும் இயக்குநருமான‌ தேவ் ஆனந்த் பிறந்த நாள். (இறப்பு-2011)
    1926ல் நேபாள பிரதமரான‌ துளசி கிரி பிறந்த நாள். (இறப்பு-2018)
    1926ல் தமிழக இதழாசிரியரும் எழுத்தாளருமான‌ வ. விஜயபாஸ்கரன் பிறந்த நாள். (இறப்பு-2011)
    1932ல் இந்தியாவின் 13வது பிரதமரான‌ மன்மோகன் சிங் பிறந்த நாள்.
    1934ல் இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் ஆங்கில நாடகாசிரியரான‌ ஏர்னெஸ்ட் மக்கின்டயர் பிறந்த நாள்.
    1936ல் தென்னாப்பிரிக்க அரசியல்வாதியான‌ வின்னி மண்டேலா பிறந்த நாள். (இறப்பு-2018)
    1944ல் தமிழக எழுத்தாளரான‌ தோப்பில் முகமது மீரான் பிறந்த நாள். (இறப்பு-2019)
    1965ல் உக்ரைனின் 5வது அரசுத்தலைவரான‌ பெத்ரோ பொரொசென்கோ பிறந்த நாள்.
    1966ல் இந்தியத் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான‌ பூரி ஜெகன்நாத் பிறந்த நாள்.
    1979ல் எசுத்தோனியாவின் 16வது பிரதமரான‌ டாவி ரோயிவாசு பிறந்த நாள்.
    1981ல் அமெரிக்க டென்னிசு வீராங்கனையான‌ செரீனா வில்லியம்ஸ் பிறந்த நாள்.
    1985ல் இந்திய கருநாடக இசைப் பாடகருமான‌ அபிசேக் ரகுராம் பிறந்த நாள்.
    1989ல் தென்னிந்திய நடிகையான‌ சந்தியா பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 26-09 | September 26

    1842ல் பிரித்தானிய அரசியல்வாதியும் இந்தியத் தலைமை ஆளுநருமான‌ ரிச்சர்டு வெல்லசுலி இறப்பு நாள். (பிறப்பு-1760)
    1915ல் இசுக்கொட்டிய இடதுசாரி அரசியல்வாதியும் தொழிற்சங்கவாதியுமான‌ கீர் ஹார்டி இறப்பு நாள். (பிறப்பு-1856)
    1922ல் உருசிய வேதியியலாளரான‌ இலெவ் அலெக்சாண்ட்ரோவிக் சுகேவ் இறப்பு நாள். (பிறப்பு-1873)
    1954ல் தமிழகக் கவிஞரான‌ தேசிக விநாயகம்பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1876)
    1959ல் இலங்கையின் 4வது பிரதமரான‌ எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இறப்பு நாள். (பிறப்பு-1899)
    1966ல் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆளுநருமான‌ சே. ப. இராமசுவாமி இறப்பு நாள். (பிறப்பு-1879)
    1978ல் நோபல் பரிசு பெற்ற சுவீடிய இயற்பியலாளரான‌ மன்னே சீகுபான் இறப்பு நாள். (பிறப்பு-1886)
    1987ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரான‌ திலீபன் இறப்பு நாள். (பிறப்பு-1963)
    2010ல் அமெரிக்க நடிகையான‌ குளோரியா ஸ்டுவர்ட் இறப்பு நாள். (பிறப்பு-1910)
    2014ல் அமெரிக்க வானியலாளரும் இயற்பியலாளருமான‌ ஜெரால்டு ஜெர்ரி நியூகெபௌவேர் இறப்பு நாள். (பிறப்பு-1932)
    2019ல் பிரான்சின் 22வது அரசுத்தலைவரான‌ ஜாக் சிராக் இறப்பு நாள். (பிறப்பு-1932)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleSeptember 27 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 27
    Next articleSeptember 28 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 28