September 28 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 28

0

Today Special Historical Events In Tamil | 28-09 | September 28

September 28 Today Special | September 28 What Happened Today In History. September 28 Today Whose Birthday (born) | September-28th Important Famous Deaths In History On This Day 28/09 | Today Events In History September-28th | Today Important Incident In History | புரட்டாதி 28 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 28-09 | புரட்டாதி மாதம் 28ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 28.09 Varalatril Indru Nadanthathu Enna| September 28 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 28/09 | Famous People Born Today September 28 | Famous People died Today 28-09.

  • Today Special in Tamil 28-09
  • Today Events in Tamil 28-09
  • Famous People Born Today 28-09
  • Famous People died Today 28-09
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 28-09 | September 28

    ஆசிரியர் நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (சீனக் குடியரசு)
    உலக வெறிநாய்க்கடி நோய் நாளாக‌ கொண்டாடப்படுகிறது.

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 28-09 | September 28

    கிமு 48ல் எகிப்திய மன்னன் பதின்மூன்றாம் தொலெமியின் ஆணையை அடுத்து மாவீரன் பாம்பீ படுகொலை செய்யப்பட்டான்.
    235ல் போந்தியன் திருத்தந்தை பதவியைத் துறந்தார்.
    935ல் பொகீமியாவின் கோமகன் வென்செசுலாசு அவரது சகோதரனால் படுகொலை செய்யப்பட்டார்.
    1066ல் நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: முதலாம் வில்லியம் இங்கிலாந்தில் தரையிறங்கினான்.
    1238ல் அரகொன் மன்னர் முதலாம் யேம்சு வாலேன்சியாவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினான்.
    1322ல் புனித உரோமைப் பேரரசர் நான்காம் லூயிசு ஆஸ்திரியாவின் முதலாம் பிரெடெரிக்கை மூல்டோர்ஃப் சமரில் வென்றார்.
    1781ல் அமெரிக்கப் புரட்சி: அமெரிக்கப் படைகள் பிரெஞ்சுக் கடற்படைகளின் உதவியுடன் வர்ஜீனியா, யோர்க்டவுன் நகரை முற்றுகையிட்டன.
    1795ல் யாழ்ப்பாணத்தை ஜெனரல் ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படைகள் கைப்பற்றின.
    1844ல் முதலாம் ஒஸ்கார் சுவீடன் மன்னராக முடிசூடினார்.
    1867ல் டொரோண்டோ ஒண்டாரியோவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.
    1868ல் சல்கொலேயா போரை அடுத்து எசுப்பானியாவின் அரசி இரன்டாம் இசபெல்லா பிரான்சுக்குத் தப்பி ஓடினார்.
    1871ல் அடிமைகளுக்குப் பிறக்கவிருக்கும் பிள்ளைகள் அனைவருக்கும் விடுதலை அளிக்கும் தீர்மானத்தை பிரேசில் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
    1889ல் நிறை மற்றும் அளவைகளுக்கான பொது மாநாட்டில் மீட்டரின் நீளமானது பனிக்கட்டியின் உருகுநிலையில் 10 விழுக்காடு இரிடியம் கலந்த பிளாட்டினம் கலவையின் கோல் ஒன்றின் இரண்டு கோடுகளிற்கிடையேயான நீளத்துக்கு சமனாக அறிவிக்கப்பட்டது.
    1895ல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தற்போதைய கட்டிடம் கட்டப்பட்டது.
    1901ல் பிலிப்பீனியத் தீவிரவாதிகள் கிழக்கு சமார் பகுதியில் நடத்திய தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமான அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர்.
    1919ல் அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் ஒமாகா நகரில் கறுப்பினத்தவருக்கு எதிராக இடம்பெற்ற இனக்கலவரங்களில் மூவர் இறந்தனர்.
    1928ல் அலெக்சாண்டர் பிளெமிங் தனது ஆய்வுகூடத்தில் பாக்டீரியாக் கொல்லி ஒன்று வளருவதை அவதானித்தார். இது பின்னர் பெனிசிலின் எனப் பெயர் பெற்றது.
    1939ல் இரண்டாம் உலகப் போர்: செருமனியும் சோவியத் ஒன்றியமும் போலந்து நாட்டை தமக்குள் பங்கு போட உடன்பட்டன.
    1939ல் இரண்டாம் உலகப் போர்: போலந்தின் தலைநகர் வார்சாவா செருமனியிடம் வீழ்ந்தது.
    1944ல் இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவப் படைகள் எஸ்தோனியாவில் இருந்த நாட்சிகளின் குளூகா வதைமுகாமை விடுவித்தனர்.
    1950ல் இந்தோனேசியா ஐநாவில் இணைந்தது.
    1951ல் சிபிஎசு நிறுவனம் முதலாவது வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பொது மக்களுக்கு விற்பனைக்கு விட்டது. ஆனாலும், ஒரு மாதத்தினுள் இப்பெட்டிகள் விற்பனையில் இருந்து எடுக்கப்பட்டன.
    1960ல் மாலி, செனிகல் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
    1961ல் டமாசுகசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் எகிப்து, சிரியா இணைந்த ஐக்கிய அரபுக் குடியரசு முடிவுக்கு வந்தது
    1970ல் எகிப்தியத் தலைவர் ஜமால் அப்துல் நாசிர் மாரடைப்பினால் காலமானார்.
    1992ல் பாக்கித்தானின் பன்னாட்டு விமானம் ஒன்று நேப்பாளத்தில் மலையில் மோதியதை அடுத்து, அதில் பயணம் செய்த அனைத்து 167 பேரும் உயிரிழந்தனர்.
    1993ல் யாழ்ப்பாணத்தில் கிளாலிப் பாதையை மூடும் இலக்குக் கொண்ட “யாழ்தேவி இராணுவ நடவடிக்கை” விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.
    1994ல் பால்ட்டிக் கடலில் சென்று கொண்டிருந்த எஸ்தோனியா என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 852 பேர் உயிரிழந்தனர்.
    1995ல் இசுரேல் பிரதமர் இட்சாக் ரபீன், பலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசிர் அரஃபாத் காசாக் கரை தொடர்பான இடைக்கால உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
    1995ல் பாப் டெனார்டு என்ற பிரெஞ்சு போர் வீரன் தனது கூலிப் படைகளுடன் சேர்ந்து கொமரோஸ் தீவுகளைக் கைப்பற்றினான்.
    2005ல் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடை செய்தது.
    2009ல் கினியின் இராணுவ அரசு ஆர்ப்பாடக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 1400 கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்.
    2018ல் இந்தோனேசியாவின் சுலாவெசி தீவுகளில் இடம்பெற்ற 7.5 Mw அளவு நிலநடுக்கம் பெரும் ஆழிப்பேரலையை ஏற்படுத்தியதில் 4,340 பேர் உயிரிழந்தனர், 10,679 பேர் காயமடைந்தனர்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 28-09 | September 28

    கிமு 551ல் சீன மெய்யியலாளரான‌ கன்பூசியஸ் பிறந்த நாள். (இறப்பு-கிமு 479)
    1852ல் நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளரான‌ ஆன்றி முவாசான் பிறந்த நாள். (இறப்பு-1907)
    1852ல் பிரித்தானிய வானியலாளரான‌ இசிசு போகுசன் பிறந்த நாள். (இறப்பு-1945)
    1907ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் புரட்சியாளருமான‌ பகத் சிங் பிறந்த நாள். (இறப்பு-1931)
    1918ல் உக்ரைனியக் கல்வியாளரான‌ வசீலி சுகோம்லின்சுக்கி பிறந்த நாள். (இறப்பு-1970)
    1920ல் ஈழத்து ஓவியரும் எழுத்தாளருமான‌ வீ.கே பிறந்த நாள்.
    1929ல் இந்தியப் பின்னணிப் பாடகியான‌ லதா மங்கேஷ்கர் பிறந்த நாள். (இறப்பு-2022)
    1932ல் சிலி நாட்டுப் பாடகரும் இயக்குநரான‌ விக்டர் அரா பிறந்த நாள். (இறப்பு-1973)
    1934ல் பிரான்சிய நடிகையான‌ பிரிஜிட் பார்டோ பிறந்த நாள்.
    1947ல் ஈழத்து எழுத்தாளரும் கல்வியாளருமான‌ துரை. மனோகரன் பிறந்த நாள்.
    1947ல் வங்காளதேசத்தின் 10வது பிரதமருமான‌ சேக் அசீனா பிறந்த நாள்.
    1955ல் கனடிய அரசியல்வாதியான‌ ஸ்ரொபோன் டியோன் பிறந்த நாள்.
    1966ல் இந்தியத் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான‌ பூரி ஜெகன்நாத் பிறந்த நாள்.
    1968ல் ஆங்கிலேய-ஆத்திரேலிய நடிகையான‌ நவோமி வாட்ஸ் பிறந்த நாள்.
    1974ல் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகரும் தயாரிப்பாளருமான‌ சசிகுமார் பிறந்த நாள்.
    1975ல் ஆத்திரேலியத் துடுப்பாளரான‌ இசுட்டீவ் கிளார்க் பிறந்த நாள்.
    1982ல் இந்திய நடிகரான‌ ரன்பீர் கபூர் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 28-09 | September 28

    935ல் செக் நாட்டுப் புனிதரான‌ முதலாம் வென்செஸ்லாஸ் இறப்பு நாள். (பிறப்பு-907)
    1694ல் பிரான்சியக் கணிதவியலாளரும் இறையியலாளருமான‌ காப்ரியல் மௌடன் இறப்பு நாள். (பிறப்பு-1618)
    1891ல் அமெரிக்கக் கவிஞரும் எழுத்தாளருமான‌ ஏர்மன் மெல்வில் இறப்பு நாள். (பிறப்பு-1819)
    1895ல் பிரான்சிய இயற்பியலாளரும் நுண்ணுயிரியலாளருமான‌ லூயி பாஸ்ச்சர் இறப்பு நாள். (பிறப்பு-1822)
    1953ல் அமெரிக்க வானியலாளரான‌ எட்வின் ஹபிள் இறப்பு நாள். (பிறப்பு-1889)
    1970ல் எகிப்தின் 2வது அரசுத்தலைவரான‌ ஜமால் அப்துல் நாசிர் இறப்பு நாள். (பிறப்பு-1918)
    1978ல் திருத்தந்தையான‌ முதலாம் ஜான் பால் இறப்பு நாள். (பிறப்பு-1912)
    1989ல் பிலிப்பீன்சின் 10வது அரசுத்தலைவரான‌ பேர்டினண்ட் மார்க்கோஸ் இறப்பு நாள். (பிறப்பு-1917)
    1991ல் இந்திய-சத்தீசுக்கர் தொழிற்சங்கத் தலைவரான‌ சங்கர் குஹா நியோகி இறப்பு நாள். (பிறப்பு-1943)
    1994ல் நகைச்சுவை நடிகரான‌ கே. ஏ. தங்கவேலு இறப்பு நாள். (பிறப்பு-1917)
    1998ல் ஈழத்துக் கவிஞரான‌ சாருமதி இறப்பு நாள். (பிறப்பு-1947)
    2004ல் இந்திய எழுத்தாளரான‌ முல்க் ராஜ் ஆனந்த் இறப்பு நாள். (பிறப்பு-1906)
    2012ல் இந்திய அரசியல்வாதியும் 1வது தேசியப் பாதுகாப்பு ஆலோசகருமான‌ பிரிஜேஷ் மிஸ்ரா இறப்பு நாள். (பிறப்பு-1928)
    2016ல் இசுரேல் பிரதமரும் அரசுத்தலைவருமான‌ சிமோன் பெரெஸ் இறப்பு நாள். (பிறப்பு-1923)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleSeptember 26 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 26
    Next articleSeptember 29 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 29